Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ள போராளிகளுக்கு உதவும் திட்டம்;அமைச்சரவை பத்திரம் நிராகரிப்பு

Featured Replies

காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ள போராளிகளுக்கு உதவும் திட்டம்;அமைச்சரவை பத்திரம் நிராகரிப்பு

Untitled-1.jpg

டக்ளஸின் கேள்விக்கு சுவாமிநாதன் பதில்

காயமடைந்து சிகிச்சை பெற்ற போராளிகளுக்கு உதவும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்ட

காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ள போராளிகளுக்கு...

ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்த யுத்த காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு அதிகார சபையினால் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியிருந்தும் புனர்வாழ்வு அதிகார சபையின் சில நிபந்தனைகள் காரணமாக முன்னாள் இயக்க உறுப்பினர்களால் மேற்படி நஷ்ட ஈடுகளைப் பெற இயலாதுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்ற மருத்துவச் சான்றிதழ்கள் கோரப்படுவதாகத் தெரிய வருகின்றது.

யுத்தம் இடம்பெற்றிருந்த காலப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அப்போது அந்தந்தப் பகுதிகளில் இயங்கியிருந்த மற்றும் புலிகள் இயக்கத்தினரால் செயற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது.

அந்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நஷ்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது கேள்வியில் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவது 1990ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி சட்ட ஏற்பாட்டின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், 2016ஆம் ஆண்டு உதவியளிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடுமாறும் கேட்டுக் கொண்டார். ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்த யுத்த காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு அதிகார சபையினால் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியிருந்தும் புனர்வாழ்வு அதிகார சபையின் சில நிபந்தனைகள் காரணமாக முன்னாள் இயக்க உறுப்பினர்களால் மேற்படி நஷ்ட ஈடுகளைப் பெற இயலாதுள்ளதாகத் தெரிய வருகின்றது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்ற மருத்துவச் சான்றிதழ்கள் கோரப்படுவதாகத் தெரிய வருகின்றது.

யுத்தம் இடம்பெற்றிருந்த காலப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அப்போது அந்தந்தப் பகுதிகளில் இயங்கியிருந்த மற்றும் புலிகள் இயக்கத்தினரால் செயற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது.

அந்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நஷ்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது கேள்வியில் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவது 1990ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி சட்ட ஏற்பாட்டின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், 2016ஆம் ஆண்டு உதவியளிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடுமாறும் கேட்டுக் கொண்டார்.

http://www.thinakaran.lk/2018/03/22/அரசியல்/23283/காயமடைந்து-சிகிச்சை-பெற்றுள்ள-போராளிகளுக்கு-உதவும்-திட்டம்அமைச்சரவை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

அந்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நஷ்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது கேள்வியில் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வு தவிர்ந்த இப்படியான சிறிய பிரச்சனைகளைக் கூட எமது அரசியல்வாதிகளால் தீர்த்து வைக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடுமாறும் கேட்டுக் கொண்டார். 
இலங்கையின் ஜனநாயக ஆட்சி இப்படித்தான் இருக்கும் இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை

18 hours ago, நவீனன் said:

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவது 1990ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி சட்ட ஏற்பாட்டின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், 2016ஆம் ஆண்டு உதவியளிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.

யாழ் நூலகத்தை எரித்த, பல இனக்கலவரங்களுக்கு காரணமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி எனப்படும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் ஒரு உறுப்பினராக இருக்கும் சுவாமிநாதனிடமிருந்து இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.