Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம்

Featured Replies

பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம்

 

இலங்­கையின் பொறுப்புக் கூறுதல் தொடர்­பாக உரிய நீதிப் பொறி­மு­றைக ைள உரு­வாக்கிச் செயற்­ப­டா­விட்டால், சர்­வ­தேச நீதி­மன்றம் ஒன்றை அமைப்­பது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடுகள் சிந்­திக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பிரதி ஆணை­யாளர் கேட் கில்மோர் அம்­மையார் கோரி­யி­ருக்­கின்றார். 

இது, அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் ஏற்­பட்­டுள்ள தாமதம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் அடைந்­துள்ள கடும் அதி­ருப்­தியின் வெளிப்­பாடாகும்.  

இலங்கை தொடர்­பாக ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளரின் அடுத்த அறிக்கை வர­வுள்ள 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இன்னும் எஞ்­சி­யுள்ள ஒரு வருட காலத்­திற்குள் ஐ.நா.பிரே­ர­ணையின் முக்­கிய அம்­சங்­க­ளா­கிய நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான நான்கு பொறி­மு­றை­க­ளையும் செயற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் துரி­த­ நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளுமா என்­பது குறித்து ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யாளர் ராட் செய்ட் அல் ஹுசைன்  எழுத்து மூல­மான தனது அறிக்­கையில் ஆழ்ந்த சந்­தே­கத்தை  வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

அர­சாங்­கத்தின் சில செயற்­பா­டு­களை வர­வேற்­றுள்ள போதிலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கப்­பட வேண்­டிய முக்­கி­ய­மான விட­யங்­களில் அர­சாங்கம் உரிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதை அவ­ரு­டைய அறிக்கை அழுத்தம் திருத்­த­மாக சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. 

அது மட்­டு­மல்­லாமல் இலங்கை அர­சாங்கம் பொறுப்புக்கூறும் விட­யங்­களில் பொறுப்­போடு நடந்து கொள்­ள­மாட்­டாதோ என்ற ஐயப்­பா­டு­டைய எதிர்­பார்ப்­பையும் அவர் மறை­மு­க­மாக வெளி­யிட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. இலங்கை அர­சாங்­கத்தின் மீது மாற்றுவழி­களில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­பது குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்­கையை அவர் விடுத்­தி­ருப்­பது இதனை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.    

மனித உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டமீறல்கள் தொடர்பில் நடந்­தி­ருப்­பவை என்ன என்ற உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­குதல், இத்­த­கைய நிலை­மைகள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் உறுதி செய்தல் ஆகி­ய­வற்­றுக்­கான நான்கு பொறி­மு­றை­களை உரு­வாக்கிச் செயற்­ப­டு­வ­தற்கு ஒப்­புக்­கொண்டு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. 

யுத்­தத்தின் பின்னர் யுத்த வெற்றிப் பெரு­மிதப் போக்கில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் செயற்­பட்­டி­ருந்­த­தால் சிறு­பான்மை தேசிய இனங்கள் அர­சியல் ரீதி­யாகப் பெரும் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தன. பொறுப்புக்கூறும் விட­யத்தில் தட்­டிக்­க­ழித்து காலம் கடத்தும் உத்­தி­யையே அந்த அர­சாங்கம் கைக்­கொண்­டி­ருந்­தது. மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அவற்­றுக்குப் பொறுப்­பேற்க வேண்டும் என்ற ஐ.நா. மற்றும் சர்­வ­தேச அள­வி­லான கோரிக்­கை­களை அந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வெளிப்­ப­டை­யா­கவே அதற்கு அது மறுப்பு தெரி­வித்­தி­ருந்­தது. அத்­துடன் மேற்­கத்­தேய நாடு­க­ளி­னதும் அண்டை நாடா­கிய இந­தி­யா­வி­னதும் ஜன­நா­யகப் போக்­கி­லான எதிர்­பார்ப்­பு­களுக்கு மாறான செயற்­பா­டு­க­ளையே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்­தி­ருந்தார். 

மேற்­கு­லக நாடு­களின் பிராந்­திய அர­சியல், பாது­காப்பு மட்­டு­மல்­லாமல், பிராந்­திய பொரு­ள­ாதார நிலை­மை­க­ளிலும் பாத­க­மான ஒரு போக்­கையே அவர் கடைப்­பி­டித்­தி­ருந்தார். குறிப்­பாக சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடு­களின் பொரு­ளா­தார அர­சியல் நலன்­களின் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு இசை­வான நகர்­வு­களை அவர் மேற்­கொண்­டி­ருந்தார். இதுவே, யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வெளிச்­சக்­தி­களின் தாக்­கத்­துடன் இலங்­கையில் புரட்­சி­க­ர­மான முறை­யி­லா­னதோர் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்­கான வழியைத் திறந்­து­விட்­டி­ருந்­தது. 

இந்த வகை­யி­லேயே மைத்­திரி – ரணில் – சந்­தி­ரிகா ஆகி­யோரை உள்­ள­டக்­கிய முக்­கூட்டில் 2015 ஆம் ஆண்டு நாட்டில் நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­யது. அதே ஆண்டில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்கி பொறுப்புக்கூறும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. ஆனால் உறு­தி­ய­ளித்­த­வாறு பொறுப்புக்கூறும் செயற்­பா­டுகள் உரிய காலக்­கி­ர­மத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 

ஆயினும் பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் புதிய அர­சாங்­கத்தின் இருப்­பையே கேள்­விக்குள்­ளாக்கத் தக்க வகையில் உள்­நாட்டு அர­சியல் சூழல் நில­வி­ய­தால், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் மேலும் நீடிக்­கப்­பட்­டி­ருந்த நீண்ட கால அவ­கா­சத்­திலும் எதிர்­பார்க்­கப்­பட்ட முன்­னேற்­றத்தை அரசு காட்­ட­வில்லை. இதன் கார­ண­மா­கவே, குறிப்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அதி­ருப்­தியை அரசு சம்­பா­தித்­துள்­ளது. அத்­துடன் இலங்கை தொடர்பில் மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­க­ளிடம் கோரிக்கை விடுக்க வேண்­டிய நிலை­மைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரை நிர்­ப்பந்­தித்­துள்­ளது. இதனால் ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யிலும், சர்­வ­தேச அள­விலும் நெருக்­க­டி­யான ஒரு நிலை­மையை எதிர்­கொள்ள வேண்­டிய சூழ­லுக்குள் நல்­லாட்சி அர­சாங்கம் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

மந்த கதி­யி­லான போக்கு 

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் மனித உரிமை ஆணை­யாளர் இம்­முறை நேர­டி­யாகத் தனது அறிக்­கையை முன்­வைக்­க­வில்லை. பிரதி ஆணை­யா­ள­ரா­கிய கேட் கில்மோர் அம்­மை­யாரே பேர­வையின் அமர்வில் பிர­சன்­ன­மாகி அவ­ரு­டைய அறிக்­கையை முன் வைத்­துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­துடன் நெருக்­க­மா­கவும் ஆக்­க­பூர்­வ­மான முறை­யிலும் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­வ­தாகக் குறிப்­பிட்டு அதனை வர­வேற்­ப­தாக கேட் கில்மோர் பேர­வையில் உரை­யாற்­று­கையில் கூறி­யுள்ளார். 

மனித உரி­மைகள், பயங்­க­ர­வாதம், உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி, இழப்­பீடு, மீள் நிக­ழா­மைக்­கான உறு­திப்­பாடு என்­ப­வற்­றுக்­கான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் விசேட பிர­தி­நி­திகள் மற்றும் விதி­மு­றை­யி­லான கட்­டுப்­பா­டு­க­ளற்ற வகையில் தன்­னிச்­சை­யாக மனம்­போன போக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற கைது­க­ளுக்­கான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் செயற்­பாட்­டுக்­கு­ழுவின் அதி­கா­ரி­களின் இலங்கை விஜ­யத்­துக்கு அர­சாங்கம் வழங்­கிய ஒத்­து­ழைப்­பையும் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டாக அவர் சுட்­டிக்­காட்டி வர­வேற்­றுள்ளார். 

சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. சம­வா­யத்­திற்­க­மை­வாக இலங்­கையின் மனித உரிமை நிலை­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டத்­தையும் ஐ.நா. மனித உரி­மைக்­கான அலு­வ­லகம் வர­வேற்­றுள்­ளது.  

ஆயினும் நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் காணப்­ப­டு­கின்ற அர­சாங்­கத்தின் மந்தகதி­யி­லான போக்கை கவ­லை­யுடன் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யி­ருக்­கின்­றது என்றும் கேட் கில்மோர் தெரி­வித்­துள்ளார். 

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­வாறு, நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய சட்­ட­வாக்க நட­வ­டிக்­கை­களோ அல்­லது அவற்­றுக்­கான சட்ட வரை­பு­களோ பகி­ரங்­க­மாக வெளி­யி­டப்­ப­டாத நிலையில் அப் பொறி­மு­றை­க­ளுக்­கான நிகழ்ச்சி நிரலை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அடுத்த அறிக்கை வெளி­வ­ர­வுள்ள 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள் அர­சாங்கம் நிறை­வேற்றி முடிக்­குமா என்ற சந்­தே­கத்தை அவர் நேர­டி­யா­கவே வெளி­யிட்­டுள்ளார். 

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்­துக்­கான சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு 20 மாதங்­களின் பின்­னரே அதற்­கான ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பதில் போதியளவு முன்­னேற்­றத்தைக் காண­வில்லை. காணி­களைக் கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்ந்தால் நம்­பிக்­கையை மீளக்­கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. அத்­துடன் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­க­ளுக்கு நியா­ய­மான இழப்­பீ­டு­களைத் தீர்­மா­னிப்­ப­தற்­கு­ரிய சுதந்­தி­ர­மான பொறி­மு­றைகள் உரு­வாக்கிச் செயற்­ப­டா­விட்­டாலும் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­ப­தையும் ஐ.நா. பிரதி மனித உரிமை ஆணை­யாளர் அழுத்தம் திருத்­த­மாகக் கூறி­யி­ருக்­கின்றார். 

ஒட்­டு­மொத்­த­மாக மீறப்­பட்­டுள்ள சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்குத் தண்­டனை பெறு­வதிலிருந்து தப்பிச் செல்லும் போக்­கைத் தடுப்­ப­திலும் அல்­லது அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய திற­னைக்­காட்­டு­வ­திலும்  சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் தங்­க­ளு­டைய தகை­மை­களை இன்னும் வெளிப்­ப­டுத்­த­வில்லை என்­பதும் மனித உரி­மைகள் பிரதி ஆணை­யா­ள­ரினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

சர்­வ­தேச நீதி­மன்றம்

அனைத்­து­லக நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய விசேட நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டுக்கும் அல்­லது வாதத்­துக்கும் தண்­டனை பெறு­வதிலிருந்து குற்றம் புரிந்­த­வர்கள் தப்பிச் செல்லும் போக்கு வலு­வூட்டி இருக்­கின்­றது என்­பதை ஐ.நா.வின் மனித உரிமை பிரதி ஆணை­யாளர் இந்த அமர்­வின்­போது எடுத்துக் கூறி­யி­ருப்­பது அர­சாங்­கத்­துக்கு மிகவும் பாத­க­மான ஒரு விட­ய­மா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது.   

நீதித்­துறை மற்றும் சட்­டத்­துறை சார்ந்த சர்­வ­தேச நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய விசேட கலப்பு நீதிப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்­பதே ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்­மா­னத்தின் நிலைப்­பா­டாகும். 

முன்­ன­தாக யுத்தம் முடி­வுக்கு வந்த உட­னேயே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு சர்வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யையே ஐ.நா.வின் அப்­போ­தைய செய­லாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விடம் முன்­வைத்­தி­ருந்தார். ஆயினும் அந்த அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 

அவ­ருக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி அதனை நிரா­க­ரித்­த­தை­ய­டுத்து, கலப்பு நீதிப் பொறி­முறை என்ற நிலைக்கு ஐ.நா. இறங்­கி­யி­ருந்­தது. கலப்பு நீதிப் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­தற்கு முதலில் ஒப்­புக்­கொண்ட போதிலும், பின்னர் ஒரு தலைப்­பட்­ச­மாக அர­சாங்கம் அதனை நிரா­க­ரித்து உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யொன்றினூடாக நீதியை நிலை­நாட்ட முடியும் என்று வாதிட்­டது. ஆனால் அர­சாங்­கத்தின் இந்த மறு­த­லிப்பை அதி­கா­ர­பூர்­வ­மாக ஐ.நா. மனித உரி­மைக்­கான அலு­வ­ல­கமோ அல்­லது ஐ.நா. மனித உரிமைப் பேர­வையோ ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஆகவே கலப்பு நீதிப் பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற ஐ.நா.வின் நிலைப்­பாட்டில் எவ்வி­த­ மாற்­றமும் இடம்­பெ­ற­வில்லை. 

இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே ஏற்­க­னவே இழைக்­கப்­பட்­டுள்ள பார­தூ­ர­மான குற்றச்செயல்­களை விசா­ரணை செய்­வ­தற்­கான அனைத்­து­லக நிபு­ணர்­களின் பங்­க­ளிப்­புடன் கூடிய விசேட நீதி­மன்­றத்தை அமைக்க வேண்டும் என்ற பல­ரு­டைய கோரிக்­கை­யையும் வாதத்­தையும் நியா­ய­மா­னது என்­பதை இலங்கை அர­சாங்­கத்தின் மந்தகதி­யி­லான செயற்­பாடும் தண்­டனையை விலக்­க­ளிக்­கின்ற போக்கும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது என மனித உரிமை பிரதி ஆணை­யாளர் கேட் கில்மோர் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்றார்.

சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­ட­னான ஒரு நீதிப்­பொ­றி­முறை உரு­வாக்­கப்­ப­டாத பட்­சத்தில், சர்­வ­தேச நீதி­மன்­றத்தைச் செயற்­ப­டுத்­து­மாறு உறுப்பு நாடு­க­ளுக்கு அழைப்பு விடுக்­கின்றோம் என்று பிரதி ஆணை­யாளர் கேட் கில்மோர் பேர­வையின் இந்த அமர்வில் கூறி­யுள்ளார்.  

இலங்கை அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுக்­கத்­தக்க இந் நிலை­மை­யா­னது கடந்த வரு­டத்­திலும் தொடர்ந்து இவ் வரு­டத்­திலும் மதச் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ராகக் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றை­களின் மூலம் மேலும் மோச­ம­டைந்­துள்­ளது. 

நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்டும் என்ற அடிப்­படை நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றையை உள்­ள­டக்­கிய பொறுப்புக்கூறு­கின்ற கடப்­பாட்டை இவ் வன்­மு­றைகள் கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன. 

மனித உரிமைப் பேர­வையின் அமர்­வுகள் ஆரம்­ப­மா­கிய சந்­தர்ப்­பத்தில் 12 தினங்­க­ளுக்கு அவ­ச­ர­கால நிலையைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டிய அளவில் கண்­டியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றை­களைக் குறித்துக் காட்­டிய மனித உரி­மைகள் பிரதி ஆணை­யாளர் அந் நிலைமை தங்­களைத் தீவி­ர­மான அக்­கறை கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது என்றும் தெரி­வித்­துள்ளார்.  

இலங்­கையின் மோச­மான நிலை­மை­களில் இது­கால வரை­யிலும் முக்­கி­ய­மான பங்­க­ளிப்பை ஆற்றி வந்­துள்ள மனித உரி­மைகள் பேரவை அந் நாட்டு மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்­கத்­திற்கு வழி சமைக்­கின்ற பொறுப்புக்கூறும் விட­யத்தில் பேரவை தொடர்ந்தும் தனது கவ­னத்தைக் குவித்­தி­ருக்கும் என்­ப­தையும் மனித உரி­மைகள் பிரதி ஆணை­யாளர் கேட் கில்மோர் நினை­வூட்டத் தவ­ற­வில்லை. 

அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு

பொறுப்பு கூறும் விட­யத்தில் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ள  வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இலங்­கையின் நீதிப்­பொ­றி­மு­றையும் சட்டம் ஒழுங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தலும் சம்­பந்­தப்­பட்ட அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் நீதி வழங்­கக்­கூ­டிய தகை­மையைக் கொண்­டி­ருக்­கின்­றது என்றும் அதற்குத் தாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­வாறு பாகு­பா­டற்ற வகையில் சமத்­து­வ­மான முறையில் அனைத்து மக்­க­ளி­னதும் சட்டரீதி­யான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாடு ஆழ­மான அர்ப்­ப­ணிப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தையும் குறிப்­பிட்­டுள்ளார்.

நல்­லி­ணக்கச் செயற்­பாடு என்­பது ஒன்றன் பின் ஒன்­றா­கிய குறிப்­பிட்ட விட­யங்­க­ளுக்கு சரி என அடை­யா­ள­மி­டு­கின்ற ஒரு நட­வ­டிக்கையல்ல என்­பதை அமைச்சர் திலக் மாரப்­பன சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் சம­மான சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற ஆழ­மான பொறுப்பை தமது அர­சாங்கம் நன்கு உணர்ந்­தி­ருப்­ப­தாகக் கூறிய அவர், நாட்டில் உரு­வா­கி­யி­ருந்த முரண்­பாட்டு நிலைமை மீண்டும் உரு­வா­காத நிலை­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், இழப்­பீடு வழங்­குதல் ஆகிய விட­யங்­களில் கடந்த வரு­டத்­திலும் பார்க்க முன்­னேற்­ற­க­ர­மான முறையில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்றும் தெரி­வித்­துள்ளார்.

நல்­லி­ணக்கம், நீதி, இழப்­பீடு ஆகி­ய­வற்றின் முன்­னேற்ற நட­வ­டிக்­கை­யா­னது சாதி, சமய, இன வேறு­பா­டின்றி காணாமல் போயுள்ள படை வீரர்­க­ளு­டைய குடும்­பங்கள் உள்­ளிட்ட பாதிக்­கப்­பட்ட அனைத்து மக்­க­ளையும் உள்­ள­டக்­கியிருக்க வேண்டும் என்­பதில் தமது அர­சாங்கம் கவ­னத்தில் கொண்­டி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்­தி­ருந்த அனைத்து இன மக்­களும் நாட்டின் நல்­லி­ணக்கம், பொரு­ள­ாதார முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களில் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டு வரு­கின்­றனர் என்றும் அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்­துள்ளார். 

மொத்­தத்தில் மனித உரிமை ஆணை­யா­ள­ரால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த விட­யங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட விட­யங்­க­ளையே அமைச்­சரின் பதில் உள்­ள­டக்கியிருந்­தது. இதன்மூலம் அர­சாங்கம் பொறுப்பு கூறும் விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தற்­கான அல்­லது செயற்­படப் போவ­தற்­கான அறி­கு­றி­களை இம் மனித உரிமைப் பேரவை அமர்­வின்­போது காண முடி­ய­வில்லை. 

மாறாக உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மிக மோச­மான பின்­ன­டைவை எதிர்­கொண்டு அர­சியல் ஸ்திர­மற்ற நிலையில் சிக்­கி­யுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் மனித உரிமைப் பேரவை அமர்­வின்­போது பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணைக்கு முகம் கொடுத்­தி­ருப்­பதன் மூலம் புதிய நெருக்­க­டி­க­ளுக்கு ஆளாகியிருக்­கின்­றது. 

அர­சாங்­கத்தின் இருப்­புக்கு ஆப்பு வைத்­துள்ள இந்நிலை­மையில் மனித உரி­மைகள் பேர­வையோ சர்­வ­தே­சமோ தன் மீது மோச­மான அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க இட­மி­ருக்­காது என்ற நம்பிக்கையை அரச தரப்பினர் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. 

நல்லாட்சி அரசாங்கம் பதவியில் தொடர வேண்டிய தேவை ஐ.நா.வுக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தமாக உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரச தலைவராகவோ அல்லது அதிகாரம் படைத்தவராகவோ கடும்போக்காளராகிய மஹிந்த ராஜபக் ஷ வருவதை ஐ.நா.வும் சர்வதேசமும் விரும்பமாட்டாது என்பதே பிராந்திய அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமையாகும். 

கானல்நீரான தோற்றமோ......?

இத்தகைய ஒரு பின்னணியில் இலங்கை விவகாரம் மனித உரிமைப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அதேசமயம் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதும்கூட சர்வதேச அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஓர் அரசியல் நாடகமாகவே ஒரு சில தரப்பினரால் நோக்கப்படுகின்றது. 

எது எப்படியிருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தாமதிக்கப்பட்டுள்ள நீதி கிடைப்பதற்கான ஆழமான அர்த்தமுள்ள அரசியல் நிலைமைகளுக்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. ஏனெனில் மனித உரிமைப்பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறும் விடயத்தில் நிகழ்ச்சி நிரலுடன் கூடிய ஒரு கால அட்டவணையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்திருக்கின்றன. இது மந்த கதியில் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கம் துரிதமான நடவடிக்கைளை முன்னெடுப்பதற்குத் தூண்டுதலாக அமைய மாட்டாது. மாறாக அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கான ஒரு வழியைத் திறந்துவிட்டிருப்பதாகவே தெரிகின்றது. 

மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளவாறு சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கி பொறுப்பு கூறும் நடவடிக்கைக்கு பேரவையில் இணக்கப்பாடு எட்டப்படுமா, அது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுமா என்பது நிச்சயமற்ற நிலையில் அரசாங்கத்தின் மீதான நெருக்கடியாகத் தோன்றுகின்ற நிலைமை வெறும் கானல்நீராகவே தெரிகின்றது.  

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.