Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ன நடக்கப் ‍போகிறது?

Featured Replies

நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ன நடக்கப் ‍போகிறது?

 

பிர­த­ம­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ர­ணையை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த புதன்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்த நிலையில் இலங்கை அர­சி­யலின் போக்கு ஒரு பர­ப­ரப்­பான திசையை நோக்கி நகர்ந்­தி­ருப்­பது ஜெனிவா பர­ப­ரப்பை விட வேக­மு­டை­ய­தாக மாறி­யுள்­ளது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரேரணை பாராளு மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டுமா? அது தோற்­க­டிக்­கப்­ப­டுமா என்­றெல்லாம் பேசப்­பட்டும் சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் கடந்த புதன்­கி­ழமை பிர­தமர் மற்­றும்­ அ­ர­சாங்­கத்­துக்­கெ­தி­ரா­ன­ நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணை ­முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் கையினால் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டுள்­ளது. 

 ஒன்­றி­ணைந்த எதிர்க்­க­ட­்சியைச் சேர்ந்த 51 உறுப்­பி­னர்­களும் ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்களில் 4 சுதந்­தி­ரக் ­க­ட்சி உறுப்­பி­னர்­களும் உட்­பட மொத்தம் 55 உறுப்­பி­னர்கள் இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணையில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ இப்­ பி­ரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­தி­ருந்­தாலும் அவர் அப்­ பி­ரே­ர­ணையில் கையெ­ழுத்­தி­ட ­வில்லை. இந்த தந்­தி­ரோ­பாயம் எதற்­கா­க­ வென்று யாருக்கும் விளங்­க­வில்லை. சில­வே­ளை­களில் நன்­றிக்­ க­ட­னாக இருக்­க­லா­மெ­னவும் பேசப்­ப­டு­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவு­க்­கெ­தி­ராக கூட்டு எதிர்­க­்கட்­சியால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பி­க­்கை­யில்­லாப் ­பி­ரே­ரணை விவ­காரம் தேசிய அர­சி­யலில் சில­ முக்­கி­யப்­பா­டான விட­யங்­களை உணர்த்­து­வ­தாக தெரி­கி­றது. தேசிய அர­சி­ய­லுக்கு குழப்­பத்தை உண்டு பண்­ணிக்­கொண்­டி­ருக்கும் நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை விவ­காரம் இவ்­வாரம் சூடு பிடித்­தி­ருக்கும் நிலையில் நாட்­டுக்கு அப்­பா­லுள்ள சர்­வ­தேச சக்­திகள் தொடர்­பான மனி­த ­உ­ரி­மைப்­பே­ரவை தீர்­மான மற்றும் விவா­தப்­போக்­குகள் ஜெனி­வாவில் கடு­மை­ நிலை பெற்­றுக்­கொண்­டி­ருப்­பதும் தேசிய அர­சாங்­கத்தை ஆட்டம் காண வைத்­துள்­ளது. ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா,

 ஜேர்மன்,சுவீஸ் ஆகிய நாடுகள் கட்­டிய கடுந்­தன்மை இலங்கை தேசிய அர­சி­ய­லுக்கு எச்­ச­ரிக்கை மணி­யா­கவும் காணப்­ப­டு­கி­றது.

எப்­ப­டி­யா­வது பிர­த­மரை பதவி விலக்­கியே தீருவோம் என்ற ஆவே­சத்­துடன் கூட்டு எதிர்க்­க­ட்­சி­யினர் கையெ­ழுத்து வேட்­டையில் ஈடுபட்­டதும் இந்த முயற்­சியை எப்­ப­டி­யா­வது முறிய­டித்தே தீரு­வோ­மென்ற தீவி­ரத்­துடன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் வியூகங்­களை வகுத்து வரு­வதும் இவ்­வா­ரத்தின் சூடு­பி­டித்­தி­ருக்கும் செய்­தி­க­ளாகும்.

பிர­தமர் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யா­னது 14 பிர­தான கார­ணி­களை அடிப்­ப­டை­யா­கக் ­கொண்டு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்கப்­ப­டு­கி­றது. இப்­பி­ரே­ரணை கையெ­ழுத்­தி­டலில் கூட்டு எதிர்க்­க­ட்சி,ஐக்­கிய தேசி­யக்­ கட்சி அதி­ருப்தி­யா­ளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்க­ளா­கிய மூன்று தரப்­பி­னர் கையெ­ழுத்­திட முயற்­சி­களும் ஏற்­பா­டு­களும் இடம்பெற்று வந்த போதிலும் இறுதி நேரத்தில் நிலை­மைகள் மாற்­ற­மாகி கூட்டு எதிர்க்­க­ட்­சி­யி­னரும் சுதந்­தி­ரக் ­கட்சி உறுப்­பி­னர்­களும் மாத்­த­ிரமே கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

பிர­த­ம­ருக்­கெ­தி­ரான நம்­பி­க்­கை­யில்­லாப்­பி­ரே­ர­ணையை தோற்­க­டித்தே தீரு­வோ­மென ஐக்­கிய தேசி­யக்­ க­ட்­சி சூளு­ரைத்­தாலும் அதை தடுப்­ப­தற்­கான வியூகங்­களை வகுத்­தாலும் இந்த கெடு­பி­டி­யா­னது ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் எதிர்­கால நல­னுக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­து­கி­றதோ என்­னவோ பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் எதிர்கால நகர்­வு­க­ளுக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் என்­பது தவிர்க்­கப்­ப­ட­ மு­டி­யா­தது. ஒரு­வேளை மேற்­படி பிரே­ரணை பாரா­ளு­மன்றில் திட்­ட­மிட்ட வகையில் தோற்­க­டிக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இருந்­தாலும் கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தாக பேசப்­ப­டு­கிற பிரே­ர­ணை­யென்­பது பாரிய பின்­ன­டைவை பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்­கவுக்கும் அவர் தலைமை தாங்கும் ஐக்­கிய தேசி­யக்­ கட்­சிக்கும் உண்டுபண்­ணு­மென்­பது தவிர்க்கப்­ப­ட­மு­டி­யா­த உண்மை. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கான நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை கொண்டு வரு­வ­தற்­கான பின்­னணி எவ்­வாறு ஏற்­பட்­டது என்று ஆராய்ந்தால் கடந்த உள்­ளூ­ரா­ட்சி மன்றத் தேர்தலில் ஐக்­கி­ய ­தே­சி­யக் ­க­ட்­சியும் சுதந்­தி­ரக்­ க­ட்­சியும் கடும் பின்­ன­டைவை சந்­தித்­த­துடன் பொது­ஜ­ன ­பெ­ர­முன காத்­தி­ர­மான வெற்றி அடைந்­த­மையைத் தொடர்ந்தே இந்­நிலை கருக்­கட்­டி­யது. எனவே எப்­போது சந்­தர்ப்பம் வரு­மென்று பார்த்­துக்­கொண்­டி­ருந்த எதிர்த்தரப்­பி­ன­ருக்கு இது வாய்ப்­பாக போய்­விட்­டது.

எனவே பிணைமுறி­ வி­வ­கா­ரத்தில் பூசி மெழுகி பிர­தமர் தப்­பித்துக் கொண்­டாலும் உள்­மு­க­மாக பிணை­மு­றி­ வி­வ­கா­ரத்தின் சூத்­தி­ர­­தா­ரி­யான அர்ஜுன மகேந்­தி­ரனை இறக்­கு­மதி செய்து கோடிக்­க­ணக்­கான ரூபா ஊழ­லுக்கு வித்­திட்­டவர் பிர­தமர் என்ற வடுவை அவரால் துடைத்­தெ­றிய முடி­யாத சூழ்­நி­லை­யில்தான் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலை ­தொ­டர்ந்து பிர­த­ம­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நாடகம் தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

  இன்னும் சில வாரங்­க­ளிலோ மாதங்­க­ளிலோ மாகா­ண­சபை தேர்தல் நடக்கப் போகி­றது. இந்த தேர்தலைத் ­தொ­டர்ந்து நடை­பெ­ற­வி­ருப்­பது ஜனா­தி­பதித் தேர்தல். 2020 ஆம் ஆண்டு நடை­பெறும் தேர்தலாக இருந்­தாலும் இந்த தேர்தலில் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­வேண்­டி­யவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. இவ­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அப்­பி­ரே­ரணை தோற்­றா­லும் ­சரி வென்­றா­லும்­ சரி பிர­த­மரின் 'இமேஜை' அது பாதிக்கும் என்­பது தர்க்­க­ரீ­தி­யான உண்மை.

எனவே 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்தலில் கள­மி­றங்­க­வி­ருந்­தவர் இப்­போ­தைய பிர­தமர். ஆனால் மஹிந்த­வென்னும் அச­காய சூரனை தோற்­க­டிக்­க ­வேண்­டு­மாயின் ரணில் எனும் சக்­தியால் அது முடி­யாது என்ற உண்­மையை சிறு­பான்மை கட்­சிகள் உணர்ந்து கொண்­டதன் கார­ண­மா­கவே மைத்­தி­ரி­யெனும் பொது­வேட்­பாளர் தேடி கண்­டு­பி­டிக்­கப்­பட்டார். நாட்­டின்­ பி­ர­தான கட்­சி­க­ளுடன் சிறு­பான்­மைக்­ கட்­சிகள் தீர்க்க தரி­ச­ன­மாக எடுத்த ஒட்­டு­மொத்த விளைவின் அறு­வ­டையே மைத்­தி­ரி­பால சிறி­சேன.

  2005 ஆம்­ ஆண்டு ஜனா­தி­பதித் தேர்த லின்­போது ரணி­லுக்கு வெல்லும் வாய்ப்பு இருப்­ப­தாக ஆருடம் கூறப்­பட்­ட­போதும் விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டாய நிபந்­த­னைகள் கார­ண­மாக வாய்ப்பு கைந­ழு­விப்­போ­ன­தாக கூறப்­ப­டு­கி­றது. 2010 ஆண்டு தேர்தலில் என்ன வியூகம் வகுக்­கப்­பட்­ட­போதும் மஹிந்­தவை தோற்­க­டிக்க முடி­ய­வில்லை. 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்தலின் வியூ­கத்தின் நாயக நாய­கி­க­ளாக இரா .சம்­பந்தன், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மையார், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பேசப்­ப­டு­கி­றார்கள். இவ்­வா­றான சூழ்­நி­லையில் அடுத்த ஜனா­தி­பதி தேர்தலை இன்­னொ­ரு­வ­ருக்கு விட்­டுக்­கொ­டுக்க பிர­தமர் ரணில் தயா­ரா­க­வி­ருப்பார் என்று யாரும் எதிர்­பார்க்க முடி­யாது.

அடுத்த ஜனா­தி­பதி தேர்தலின் வேட்­பாளர் என்ற நிலைக்கு வரக்­கூ­டி­யவர் பிர­தமர் ரணில் தவிர்ந்த யாரையும் கூற­ மு­டி­யாது. இதே­வேளை கூட்டு எதி­ர­ணியின் சார்பில் போட்­டி­யிட தயா­ரா­கிக்­கொண்­டி­ருப்­பவர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ. இது­தொ­டர்­பான பகி­ரங்க அறி­வித்­தல்­களை அவரே விடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். இவ்­வாறு எல்லா சூழ்­நி­லையும் தமக்­கெ­தி­ராக மாறி­வரும் கார­ணத்தை பிர­தமர் உணர்ந்­தி­ருப்­ப­த­னால்தான் என்­னவோ தனக்­கெ­தி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பி­க்கை­யில்­லாப்­பி­ரே­ரணை தொடர்பில் தந்­தி­ரோ­பா­யத்­து­டனும் ராஜ­தந்­தி­ரத்­து­டனும் செயற்­பட முய­லு­கிறார் என்­பதை அவரின் அண­்மைக்­கால நகர்­வுகள் எடுத்­துக்­காட்­டு­கின்றன.

தன்னை சுதா­க­ரித்­துக்­கொள்­வ­தற்­காக பிர­தமர் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை புதி­ய­வர்க­ளுக்கு வழங்க தயா­ரா­க­வி­ருப்­ப­தாக கூறி­யி­ருப்­ப­துடன் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பிலும் அவர் தீவிர கவனம் செலுத்தி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க தனக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தற்­காக கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான இர­க­சிய பேச்சுவார்த்­தைகளை மும்­முரப்படுத்தி வரு­வ­தா­கவும் பேசப்­ப­டு­கி­றது.

நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணையை கூட்டு எதிர்க்­க­ட்சி ஐ.தே.க. அதி­ருப்­தி­யா­ளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ க­ட்சி ஆகிய மூன்று தரப்­பி­னராலும் கையெ­ழுத்­திட்டு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தீவி­ர­மாக வெளிவந்­த­போதும் கண்­டிக்­க­ல­வரம் கார­ண­மாக அது தாம­த­மாக்­கப்­பட்­ட­தென்று கூறப்­ப­டு­கி­றது. இந்த கண்­டிக்­க­ல­வ­ரத்தின் பின்­ன­ணியில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யுள்­ள­து­ என்ற கருத்தும் கசிந்துள்­ளது.

நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை தொடர் பில் கட்சிக­ளுக்­கி­டையே மாறுபட்ட கருத்­துக்கள் அல்­லது உடன்­பாடு, எதிர்­ம­றை­யான கருத்­துக்கள் இருந்­து­ வ­ரு­கி­ற ­போ­திலும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தீவி­ர­மா­க­வுள்­ளனர் என்­ப­தற்கு அப்பால் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­ க­ட்­சி­யினர் உள்­ளிட்ட ஐக்­கிய மக்கள் சுதந்திர கூட்­ட­மைப்­பினர் எப்­ப­டி­யா­வது பிர­த­மரை பதவி விலக்கியே ஆக­வேண்டும் என்கிற தீவிர முயற்­சி­களை மேற்கொண்­டு ­வ­ரு­கின்­றார்கள் என்­பது நாளாந்தம் பேசப்­ப­டு­கிற விடயம்.

இப்­ பி­ரே­ர­ணையில் கடந்த 16 ஆம் திகதி தினேஷ்­ கு­ண­வர்த்­தன, வாசுதேவ­ நா­ண­யக்­கார, சமல்­ ரா­ஜ­பக் ஷ, விமல் வீர­வன்ச, உத­ய­கம்­மன்­பில, டலஸ்­ அ­ழ­கப்­பெ­ரும, மஹிந்த யாப்பா, சாலிந்த திஸா­நா­யக்க, ரஞ்­சித் ­சொய்சா, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, ஜான­க­வக்­கும்­புர பால­சூ­ரிய, பந்­து­ல­கு­ண­வர்த்­தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்­க­நா­யக்­க­ போன்­றோர் கையெழுத்­திட்­டுள்­ள­தா­கவும் இதே­வேளை ஐ. தே. கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளா­கிய ரங்­க­ ப­ண­்டார ,சுஜீ­வ­ சே­ன­சிங்க போன்­றோர் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு அளிக்­கப்­போ­வ­தாக வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­தி­ருந்­தார்கள். சுமார் 16 ஐ.தே. கட்சி உறுப்­பி­னர்கள் ரணி­லுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கப்­போ­வ­தா­கவும் மறை­மு­க­மாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும் செய்­திகள் கசிந்­த­போ­திலும் அவை உண்­மை­யா­க­வில்லை.

இருந்­த­போ­திலும் கடந்த புதன் கைய­ளிக் கப்­பட்ட பிரே­ர­ணையில் முன்பு குறிப்­பிட்­ட­துபோல் ஏக்க நாயக்க, பிரதி அமைச்­சர்­க­ளான நிஷாந்­த­முத்­து­ஹெட்­டி­கம, சுசந்த புஞ்­சி­நி­லமே மற்றும் காதர் ­மஸ்தான் ஆகியோர் உட்­பட மொத்­த­மாக 55 பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதே­வேளை கையெ­ழுத்­தி­டுவோம் ஆத­ரவு தரு­வோ­மென்று வாக்­கு­று­திகள் வழங்­கிய ஐ. தே. கட்­சி­யினர் கடைசி நேரத்தில் கைவி­ரித்­து­விட்­டார்கள் என்று கூறப்­ப­டு­கி­றது.   

பிணை­மு­றி­ மோ­சடி, பொரு­ளா­தார வீழ்ச்சி, அர­சியல் சாசன முன்­னெ­டுப்பு , 9 முறை சட்ட விதி­மு­றை­களை மீறி சட்­டங்­களை நிறை­வேற்­றி­யமை போன்ற 14 குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை இலங்கை அர­சி­யலின் இன்­றைய போக்கை மாறு திசைக்கு கொண்டு செல்­ல­லா­மென விமர்சிக்­கப்­ப­டு­கி­ற­போதும் எந்த நிலை­யிலும் பிரே­ர­ணையை தோற்­க­டித்து காட்­டு­வோ­மென ஐ. தே. கட்­சி­யினர் சூளு­ரைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் தெரி­யப்­ப­டு­கி­ற­ வி­டயம்.

இவை­யெல்லாம் சரிப்­ப­டுத்­தப்­பட்­டாலும் பிர­த­ம­ருக்­கெ­தி­ரான அலை­யொன்று கட்­சிக்­குள்ளும் வெளியேயும் சூழலுகி­ற­தென்­பது வெளிப்­ப­டை­யாக தெரியவரு­கி­றது. ஒட்­டு­மொத்­த­மாக கூட்டு எதிர்க்­கட்சி ஐ. தே.கட்சி அதி­ருப்­தி­யா­ளர்கள், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியென்ற முத்­த­ரப்­பினர் பிரே­ர­ணையை கொண்­டு­வர கையெ­ழுத்து வேட்­டையில் ஈடு­பட்டு வந்­தார்கள் என்­பது தெரி­யவே வரு­கி­றது. பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்கும் உறுப்­பி­னர்கள் வெவ்­வேறு ஆவ­ணங்­களில் அதா­வது ஐ. தே. கட்சி வேறு ஆவ­ணத்­தி­லும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சி வேறு ஆவ­ணத்­திலும் கூட்டு எதிர்த்­த­ரப்­பினர் வேறு ஆவ­ணத்­திலும் கைச்­சாத்­திட இருந்­தனர் என்ற தகவல் தெரி­விக்­கப்­பட்­ட­போதும் இறுதி நேரத்தில் மாற்­றங்கள் நிகழ்ந்­துள்­ள­மையின் வெளிப்பாடே 55 பேரின் கையெ­ழுத்­திடல் ஆகும். இந்த மாற்­றங்கள் எதைக்­காட்­டு­கி­ற­தென்றால் எதிர்ப்பை தெரி­விப்­ப­திலும் ஒரு­மித்த தன்மை காணப்­ப­ட­வில்­லை­யென்­பதைக் காட்­டு­கி­றது.

 இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டுமா? சமர்ப்­பிக்­கப்­பட்­டாலும் வெற்­றி­பெ­றுமா? அல்­லது தோற்­க­டிக்­கப்­ப­டுமா? இல்லை பார­ாளு­மன் றில் சமர்ப்­பிக்­கப்­ப­டா­ம­லே­ போய்­வி­டுமா என்ற சந்­தே­கங்­களும் அவநம்­பிக்­கை­களும் பலர் மத்­தியில் ஏலவே இருக்­கத்தான் செய்­கிறன.இ­ருந்­த­போ­திலும் அந்த சந்­தே­கங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு கடந்த புதன் சமர்ப்­பிக்­கப்­பட்­டமை ஆச்­ச­ரி­யத்­தையும் பர­ப­ரப்­பையும் கொண்­டு­வந்­துள்­ளது.

   இவ்­வா­றான பர­ப­ரப்­பான சூழ்நிலை யில் மேற்­கூ­றப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை பாராளுமன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கிற சூழ்­நி­லையில் எந்தக்கட்சி? எந்த தரப்­பினர் ஆத­ரிப்­பார்கள்? பிர­த­ம­ருக்கு ஆத­ரவு வழங்கி தோற்­க­டிக்க யார் உத­வு­வார்கள்? எந்தக் கட்சி என்ன முடி­வு­களை எடுக்­கு­வுள்­ளது ?என்ற விவ­கா­ரங்கள் அவ­ச­ரங்­களை ஏற்­ப­டுத்­திக் கொள்கிறது.

பிர­தமர் மற்றும் அர­சாங்­கத்­துக்­கெ­தி­ரான இப்­பி­ரே­ரணை பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­கி­ற­போது தமிழ்த் ­தே­சி­யக் ­கூட்­ட­மைப்பு ,முஸ்லிம் காங்­கிரஸ், மலை­யக கட­்சிகள், ஜே.வி.பி.யினர் என்ன நிலையை காட்­ டப்­போ­கி­றார்கள் என்­பது ஆவ­லுடன் அல்­லது அவ­ச­ர­மாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கிற விட­ய­மாக­ வி­ருக்­கி­றது. இப்­ பி­ரே­ரணை விரை­வாக விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட ­வேண்­டு­ மென்ற அவ­சர கோரிக்­கையை கூட்டு எதிர்க்­க­ட­்சி­யினர் சபா­நா­ய­க­ருக்­கு­ வி­டுத்­துள்­ளனர். 

கூட்­ட­மைப்­பைப் ­பொ­றுத்­த­வரை தீவி­ர­மான முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டிய காலத்தின் கட்­டா­யத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது என்­பது உண்மை. அர­சியல் தீர்வு விட­ய­த்தில் அர­சாங்­கத்தின் அச­மந்த போக்­குக்கு பிர­த­மரும் ஒரு­ கா­ர­ண­மாவார் என்ற உண்மை கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு தெரி­யாமல் இல்லை. அண்­மையில் எதிர்க்­க­ட்­சித்­ த­லைவர் இரா. சம்­பந்தன் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பி­க­்கை­யில்­லாப்­ பி­ரே­ரணை பாரா­ளு­மன்றில் கொண்டு வரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அதற்கு ஆத­ரவு தெரி­விப்­பதா? இல்­லையா என்­பது பற்றி எமது பாரா­ளு­மன்ற குழு கூடி தீர்­மா­னிக்கும் என்று கூறி­யி­ருந்­த­துடன் தமிழ் மக்­க­ளு­டைய நீடித்த பிரச்சி­னை­யான அர­சியல் பிரச்­சினை தீர்­க்கப்­ப­ட வேண்­டு­மாயின் தற்­போ­தைய அரசு தொட­ர­வேண்­டு­மென்ற கருத்­தையும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். எது எவ்­வாறு கூறப்­பட்­ட­போதும் அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் அரசின் அச­மந்த போக்கும் இழுத்­த­டிப்­புக்­களும் வெளிப்­ப­டை­யா­கவே

தெரி­ய­வ­ரு­கிற விட­ய­மாகும். இவ்­வி­டயம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அண்­மையில் அமெ­ரிக்­காவில் வைத்து தனது அதி­ருப்­தியை வெளியிட்­டி­ருந்­தமை அர­சாங்­கத்தை எச்­ச­ரிக்கும் சிவப்பு சுட்­டி­யா­கவே பார்க்­கப்­ப­ட­வேண்டும்.

பிர­தமர் புதிய அர­சியல் யாப்பு அடுத்த ஜனா­தி­பதி தேர்தலுக்கு முன் கொண்­டு­வ­ரப்­ப­டு­மென்று நிகழ்ச்சி நிரலொன்றை வெளியிட்­டமை தமிழ் மக்கள் மத்­தியில் கடு கடுப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறித்த ஆட்­சிக்­கா­ல­த்­துக்குள் அதிலும் 2016 ஆம் ஆண்­டுக்குள் தீர்வை அடைந்தே தீரு­வோ­மென தமிழ் மக்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு வழங்­கி­யி ­ருந்த உத்­தர வாதத்­துக்கு ஆப்பு வைப்­ப­துபோல் பிர­த­மரின் இந்த அறி­வித்தல் அமைந்­தி­ருந்­தது என்ற உண்­மையை யாரும் மறு­த­லிக்­க­மு­டி­யாது.

  பிர­தான எதிர்க்­ கட்­சி­யான தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு வாக்­கெ­டுப்­பின்­போது நடு­நிலை வகிக்கக் கூடும் என்ற ஆரு­டமும் கூறப்­ப­டு­கி­றது. அண்­மைய உள்­ளூ­ரா­ட்சி தேர்தல் முடி­வு­க­ளா­னது கூட்­ட­மைப்­புக்கு பல செய்­தி­களை பாடமாக ­சொல்­லி யி­ருக்­கின்ற நிலையில் என்ன முடி­வு­களை எடுப்­பார்­க­ளென்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­ வேண்டும். 

இதே­வேளை முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற பிர­தான கட்சி அண்­மையில் அம்­பாறை மற்றும் கண­்டி ­மா­வட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரா­க ­கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களின் பின்­னணி பற்றி பல­யூ­கங்­களும் இர­க­சிய விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன இவ்­வி­வ­காரம் ஜெனி­வா­ ம­னி­த­வு­ரி­மை­ பே­ர­வை­யிலும் பிரதிபலித்­துள்­ளது. இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கிரஸ் எவ்­வா­றான முடிவை, தீர்­மா­னத்தை எடுக்குமென திட்­ட­வட்­ட­மாக கூற­மு­டி­யாது. ஆனால் முஸ்லிம் காங்­கி­ரஸை ­பொ­றுத்­த­வரை ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் நண்பன் என்­பது யாவ­ருக்கும் தெரிந்த விடயம். மறு­புறம் மலையக கட்­சி­களை நோக்­கு­வோ­மாயின் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளிக்க மாட்டோமென திட்டவட்டமாக அறிவித்

துள்ளது. இதில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லையென்பது தெளிவாகவே தெரிந்த விடயம். ஜே.வி. பி.யின் நிலைப்பாடு குறித்து பார்ப்பின் பிரேரணையில் எந்தவொரு உறுப்பினர்களும் கையொப்பம் இடாதபோதிலும் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஜே. வி .பி. யைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி ஜென்மவிரோதி என்பதற்கு அப்பால் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் பாரிய மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பதை அவர்கள் திட்டவட்டமாக விமர்சித்து வருகிறார்கள். மேற்படி பிரேரணையானது தோற்கடிக்கப்படலாம். காரணம் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுமாகவிருந்தால் அரசே தலைகீழாக மாற இடமிருக்கிறது.

 

தேசிய அரசாங்கம் நிலைகுலைந்து போகிற நிலைமை உருவாகும். இது தவிர்க்கப்பட வேண்டுமாகவிருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆளும் தரப்பிலுள்ள அனைவரது எண்ணத்திலும் ஊறிநிற்கிறது. அதற்கு இன்னுமொரு காரணம் தற்போது அமைச்சர்களாக விருப்பவர்கள் பாராளு மன்ற உறுப்பினர்கள். பாராளு மன்றம் உடைந்து போனால் மீண்டும் வர வாய்ப்புள்ளதா என்ற விட யம். பரிசோதித்துபார்க்கப்பட வேண்டிய விடயமாகும். பொதுவாகவே இலங்கையில் கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வெற்றிபெற்றதாக வரலாற்று சான்றுகள் இல்லை. இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது பாராளுமன்றில் 1949 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கெதிராக முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அப்போது சுதந்திரக்கட்சி உருவாக்கப்படவில்லை. அன்று தொட்டு இன்றுவரை மொத்தமாக இலங்கையில் 47 நம்பிக்கை

யில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. இதில் 22 பிரேரணைகள் ஆளும் தரப்புக்கு எதிரானவை. ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் அவர் கட்சியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இம்பீஜ்மன் கொண்டு வர இரகசியமான முயற்சிகளை மேற்கொண்டா ர்கள். அது இரவோடு இரவாக இல்லாது ஆக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் கூட்டு எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணை இலங்கை அரசியலில் எந்த மாற்றத்தை கொண்டுவரப்போகிறதென்பதை இன்னும் சில தினங்களில் அறிந்து விடலாம்.

திருமலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-24#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.