Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்­ல­ரசு நாடு­க­ளி­டையே வான் மேலா­திக்கப் போட்டி

Featured Replies

வல்­ல­ரசு நாடு­க­ளி­டையே வான் மேலா­திக்கப் போட்டி

samakalamairforce25-03-2018-1d4b107398740d3b5a0d8f0a4d326dbdc959496f.jpg

 

வேல் தர்மா

 

ரஷ்யா தனது மிக நவீன ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­ன­மான SU-57ஐ முதற்­த­ட­வை­யாக சிரி­யாவில் பறக்­க­விட்­டுள்­ளது. இன்னும் போதிய அளவு பரீட்­சார்த்தப் பறப்­புக்­களை மேற்­கொள்­ளாத SU-57 ஐ ஒரு போர்­மு­னையில் இறக்­கி­யது மிகவும் துணிச்­ச­லான நட­வ­டிக்கை எனப்­பல போரியல் நிபு­ணர்கள் வியந்­தனர். SU-57 இரு இயந்­தி­ரங்­களும் ஒற்றை இருக்­கையும் கொண்ட ஐந்தாம் தலை­முறைப் புலப்­படாப் போர் விமா­ன­மாகும். ஏற்­க­னவே அமெ­ரிக்­காவின் F-22 போர்­வி­மா­னங்கள் சிரி­யாவில் செயற்­ப­டு­கின்­றன.

அமெ­ரிக்­காவின் வான் மேலா­திக்கம்-2030 

அமெ­ரிக்­காவின் வானா­திக்­கத்­துக்கு முன்பு எப்­போதும் இல்­லா­த­வ­கையில் சவால்கள் ரஷ்­யா­வி­ட­மி­ருந்தும் சீனா­வி­ட­மி­ருந்தும் எழுந்­துள்­ளன. இதனால் ஐக்­கிய அமெ­ரிக்கா தனது வான்­மே­லா­திக்­கத்தை 2030ஆம் ஆண்டு நிலை நிறுத்­து­வ­தற்கு என Air Superiority 2030 என்னும் பெயரில் ஒரு திட்­டத்தை வரைந்­துள்­ளது. வானி­லி­ருந்து வானுக்கு, வானி­லி­ருந்து நிலத்­திற்கு, வானில் இருந்து கட­லுக்கு, விண்­வெ­ளி­யி­லி­ருந்து வானுக்கு, இணை­ய­வெ­ளி­யி­லி­ருந்து வானிற்கு என ஒரு பாரிய வலைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வதும் இத்­திட்­டத்தில் அடங்கும்.

2030ஆம் ஆண்டு வானில் எதி­ரிகள் உரு­வாக்கும் சூழல் எப்­படி அமையும் என்­பதை எதிர்­வு­கண்டு அதற்­கேற்ப தமது தாக்­குதல், வேவு, உளவு தகை­மை­களை உரு­வாக்­கு­வதும் எதி­ரியின் பாது­காப்­புக்­களை ஊட­றுத்து எதி­ரியின் வான்­ப­ரப்பை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு வழி வகுப்­பதும் Anti-Access/Area Denial (A2/AD) என்னும் நுழைவு எதிர்ப்பும் பரப்பு மறுப்பும் உபா­யத்தை வானில் அமெ­ரிக்கா சரி­யாக நிலை நிறுத்­து­வதும் இத்­திட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களின் பணி­யாகும். உன்­ன­த­மான தொடர்­பா­டலும் வானி­லி­ருந்து கொண்டு இணை­ய­வெளிப் போர் புரி­தலும் Air Superiority 2030 என்னும் திட்­டத்தில் அடங்கும். 

செய்­ம­தி­க­ளு­டனும் தரை மற்றும் கடலில் உள்ள தாக்­கு­த­ல­ணி­க­ளு­டனும் சிறந்த தொடர்­பா­ட­லையும் ஒருங்­கி­ணைப்­பையும் வானி­லி­ருந்து விமா­னங்­க­ளுக்கு எரி­பொருள் மீள்­நி­ரப்பல் செய்­வ­தையும் மேம்­ப­டுத்­தவும் அமெ­ரிக்கா முனைப்புக் காட்­டு­கின்­றது. இன்னும் ஓரிரு ஆண்­டு­க­ளுக்குள் பாவ­னைக்கு வர­வி­ருக்கும் தொலை­தூர தாக்­குதல் விமா­ன­மான B-21 Air Superiority 2030 திட்­டத்தில் முக்­கிய பங்கு வகிக்­க­வி­ருக்­கின்­றது. விமா­னங்­களில் ஒலி­யிலும் பார்க்க பல­ம­டங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்­பர்­சோனிக் ஏவு­க­ணைகள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. 

அத்­துடன் எதிரியின் ஹைப்­பர்­சோனிக் ஏவு­க­ணை­களை வானில் வைத்தே கருக்கி அழிக்கக் கூடிய லேசர் மற்றும் மைக்­கு­ரோவேவ் படைக்­க­லன்­களும் 2030இல் அமெ­ரிக்கா பாவனை செய்­ய­வுள்­ளது. தற்­போது அமெ­ரிக்­காவில் தேர்ந்த விமா­னி­க­ளுக்குத் தட்­டுப்­பாடு இருப்­பதால் ஆளில்லாப் போர்­வி­மா­னங்­களின் பாவனை அதி­க­ரிக்­கப்­ப­டலாம். ரஷ்­யாவின் விமா­னி­களின் திறன் அதன் வான்­ப­டையில் பெரும் பங்கு வகிப்­பதை அமெ­ரிக்கா நன்கு உணர்ந்­துள்­ளது.

அவ­ச­ர­மாகக் கள­மி­றங்­கிய ரஷ்­யாவின் SU-57 

பெப்­ர­வரி 7ஆம் திகதி ரஷ்­யாவின் தனியார் படை­யினர் பலர் சிரிய ஜனா­தி­பதி அல் அசாத்தின் படை­க­ளுடன் இணைந்து அமெ­ரிக்க ஆத­ரவுப் படைகள் மீது தாக்­குதல் நடத்த முயன்ற போது கொல்­லப்­பட்­டனர். கொல்­லப்­பட்­ட­வர்­களின் தொகை நூறு முதல் முந்­நூ­று­வரை இருக்­கலாம் எனச் செய்­திகள் வந்­தி­ருந்­தன. அதைத் தொடர்ந்து இரு வாரங்­க­ளுக்குள் ரஷ்யா அவ­சரம் அவ­ச­ர­மாக தனது SU-57 போர்­வி­மா­னங்­களை சிரியப் போர்க்­க­ளத்தில் இறக்­கி­யது. அவற்றின் பறப்­புக்­களின் காணொளி­களும் இணை­யத்­த­ளத்தில் வெளி­யா­கின. SU-57 வான் மேன்­மைக்கும் (Air superiority) தரைத் தாக்­கு­த­லுக்கும் என வடி­வ­மைக்­கப்­பட்ட போர்­வி­மா­ன­மாகும்.

ஐந்தாம் தலை­முறை

இது­வரை காலமும் அமெ­ரிக்­காவின் F-22உம் F-35உம் மட்­டுமே உலகில் பாவ­னையில் உள்ள ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­னங்­க­ளாக இருந்­தன. F-22 போர்­வி­மா­னங்கள் பல போர்­மு­னை­களில் வெற்­றி­க­ர­மாகப் பாவிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. F-35இன் பாவனை இப்­போ­துதான் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பல ஆரம்பப் பிரச்­சி­னைகள் சீர் செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றை ஓட்­டிய விமா­னி­க­ளுக்கு அவற்றை மிகவும் பிடித்­துள்­ளது. போர்­வி­மானத் துறையில் ஒரு Swiss army knife என F-35 விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது. பல்­பணி (Multi-rile) போர்­வி­மா­ன­மான F35, Swiss army knife போல் பல­வி­த­மான செயற்­பா­டு­க­ளுக்கு ஏற்­றவை. F-117, B-2, F-22 ஆகிய விமா­னங்­களில் புலப்­ப­டாத்­தன்­மையைப் பாவித்­த­மை­யினால் கிடைத்த அனு­ப­வங்­களை வைத்து அமெ­ரிக்கா F-35ஐ உரு­வாக்­கி­யது. இதனால் F-35இல் உள்ள புலப்­படாத் தொழில்­நுட்பம் ரஷ்­யாவின் SU-57இலும் பார்க்க மிகவும் சிறப்­பாக உள்­ளது.

படை­யி­னரை அதி­க­ரிக்கும் ரஷ்யா

2015ஆம் ஆண்டு ரஷ்யா முன்­னூ­றா­யிரம் பேரை தனது படைத்­து­றையில் இணைத்­துக்­கொண்­டது. அதன் மூலம் ரஷ்யப் படை­யி­னரின் மொத்த எண்­ணிக்கை எண்­ணூ­றா­யி­ர­மாக உயர்த்­தப்­பட்­டது. ரஷ்­யாவில் தமது படை­யி­னரின் எண்­ணிக்கை ஒரு மில்­லி­யனை விரைவில் எட்டும் எனப் பேசத் தொடங்­கி­விட்­டார்கள்.

வானா­திக்­கமும்(Air Dominance) வான் மேன்­மையும்  ( Air superiority) 

வானா­திக்­கத்­துக்கு என வடி­வ­மைக்­கப்­பட்ட விமா­னங்கள், அவை பறக்கும் வான் பரப்பில் வேறு எதிரி விமா­னங்­களை பறக்க அனு­ம­திக்­காது. 1972ஆம் ஆண்டு F-15A விமானம் வானா­திக்­கத்­திற்கு என உரு­வாக்­கப்­பட்­டது. வானா­திக்­கத்­திற்கு என்று ஒரு சரி­யான வரை­வி­லக்­கணம் படைத்­து­றையில் இல்லை. வான்­மேன்மை என்­பது குறித்த வான்­ப­ரப்பில் மற்ற விமா­னங்­க­ளிலும் பார்க்க மேன்­மை­யாகச் செயற்­படும் தன்­மையால் அந்த வான்­ப­ரப்பை தனது கட்­டுப்­பாட்டில் ஒரு விமானம் வைத்­தி­ருப்­ப­தாகும். இந்த இரண்டு வகை­யாலும் ஒரு குறித்த வான்­ப­ரப்பில் வரக்­கூ­டிய மற்ற விமா­னங்­களை அழித்த பின்னர் உள்ள நிலை­மையை வான் தனி­மு­தன்மை (air supremacy) என அழைப்பர்.

விற்­ப­னையில் SU-57இற்கு  முன்­னிற்கும் F-35 

பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா, இத்­தாலி, துருக்கி, நெதர்­லாந்து, டென்மார்க், நோர்வே, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அமெ­ரிக்­காவின் F-35 போர்­வி­மா­னங்­களை வாங்க ஒப்­பந்­த­மிட்­டுள்­ளன. தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளும் வாங்க விருப்பம் தெரி­வித்­துள்­ளன. துருக்கிக்கு விற்­பனை செய்­வ­தை­யிட்டு பல எதிர்ப்­புக்­கு­ரல்­களும் எழுந்­துள்­ளன. இனி­வரும் ஆண்­டு­களில் அமெ­ரிக்­காவின் நட்பு நாடுகள் 3100 F-35 போர்­வி­மா­னங்­களை வாங்­க­வி­ருக்­கின்­றன. ஐக்­கிய அமெ­ரிக்கா 1763 F-35களை வாங்­க­வுள்­ளது.

இதனால் உலக வானா­திக்கம் அமெ­ரிக்­கா­வுக்கு சாத­க­மாக மாறலாம். F-35 விற்­ப­னைக்கு தயா­ராக உள்ள நிலையில் ரஷ்­யாவின் SU-57 இன்னும் விற்­ப­னைக்குத் தயா­ரா­க­வில்லை. ஆரம்­பத்தில் இருந்தே ரஷ்­யா­வி­ட­மி­ருந்து SU-57 போர்­வி­மா­னங்­களை வாங்க விரும்பி அதன் உற்­பத்­தியில் ஈடு­பட்ட இந்­தியா அதன் புலப்­படாத் தன்­மையில் ஐயம் கொண்­டுள்­ளது. தனது முத­லா­வது ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­ன­மான F-22ஐ நேட்டோ நாடுகள் உட்­பட எந்த ஒரு நாட்­டுக்கும் விற்­பனை செய்­யாத அமெ­ரிக்கா அதிலும் மேம்­பட்ட விமா­ன­மான F-35ஐ தனது நட்பு நாடு­க­ளுக்கு விற்­பனை செய்­வது பொரு­ளா­தாரக் கார­ணங்­க­ளாக இருக்­கலாம். 

பொது­வாக ஒரு MIG-35 about $35மில்­லியன், ஒரு ரபேல் $100மில்­லியன், ஒரு F-35 $130 மில்­லியன், ஒரு F-22 $340 மில்­லியன் விலைகள் கொண்­டவை எனச் சொல்­லப்­ப­டு­கின்­றது. இந்­தியா பிரான்­ஸி­ட­மி­ருந்து விமானம் வாங்­கி­யதில் ஊழல் நடந்­த­தாகக் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் எதி­ரி­க­ளான சீனா­வு­டனும், பாகிஸ்­தா­னு­டனும் நடக்கும் போரில் தரைப்­ப­டை­யி­ன­ருக்கு நெருங்­கிய நிலையில் வான்­ப­டையின் ஆத­ரவு அவ­சி­ய­மாகும். அதற்கு பாரிய போர்­வி­மாங்­க­ளிலும் பார்க்க உலங்கு வானூர்­திகள் உகந்­தவை என்­பதால் இந்­தியா அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து Apache Attack Helicoptersகளை வாங்­கி­யது.

ரஷ்ய –- இந்­திய -– அமெ­ரிக்க முக்­கோணப் பிரச்­சினை 

ரஷ்­யாவின் வானா­திக்­கத்­திற்கு அதன் விமான உற்­பத்தி முக்­கி­ய­மாகும். அதற்கு இந்­தி­யா­விற்கு விமா­னங்­களை விற்­பனை செய்­வது இன்­றி­ய­மை­யா­தது. ரஷ்­யாவின் உற்­பத்­தியில் இருந்து இந்­தியா வில­கி­யது பொரு­ளா­தார ரீதியில் ரஷ்­யா­வுக்கு பெரும் இழப்­பாகும். இந்­தி­யா­விற்கு F-35 போர்­வி­மா­னங்­களை விற்கும் முயற்­சியில் அதன் உற்­பத்­தி­யா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். அதற்கு அமெ­ரிக்­காவின் பாது­காப்புத் துறை அனு­மதி கொடுக்கத் தயங்­கு­கின்­றது. இந்­தி­யாவின் படைத்­துறை இறக்­கு­மதி விதி­களும் தடை­யாக இருக்­கின்­றன. இந்த இரு தடை­களும் நீக்­கப்­பட்டு F-35 இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­யப்­பட்டால் அது ர­ஷ்ய விமான உற்­பத்தித் துறைக்கும் அதன் வானா­திக்­கத்­துக்கும் பாதிப்பை உண்­டாக்கும்.

சீனாவின் வான்­படை

சீனா அமெ­ரிக்­காவின் F-22 போர்­வி­மா­னங்­களின் தொழில்­நுட்­பத்தை இணை­ய­வெளி ஊடு­ருவல் மூலம் திருடி J-20 போர்­வி­மா­னங்­களை உரு­வாக்­கி­யது. அவை ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­னங்கள் என சீனா சொல்­லு­வதை வான்­ப­டைத்­துறை வல்­லு­நர்கள் ஏற்க மறுக்­கின்­றார்கள். J-20 அதன் ஆரம்­பப்­ப­றப்­பு­களில் பல சிக்­கல்­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இதனால் சீனா ரஷ்­யா­வி­ட­மி­ருந்து SU-35 போர்­வி­மா­னங்­களை வாங்­கு­கின்­றது.

Thrust Vectoring தொழில்­நுட்பம் இல்­லாத MiG-35

பாகிஸ்­தா­னையும் தனது வானா­திக்­கத்தால் கட்­டுப்­ப­டுத்த இந்­தியா முனை­கின்­றது. சீனாவின் J-20ஐ சமா­ளிக்க முதலில் இந்­தியா ரஷ்­யா­வி­ட­மி­ருந்து MiG-35 போர்­வி­மா­னங்­களை வாங்கத் திட்­ட­மிட்­டது. பின்னர் அதில் இருந்து பின்­வாங்கி பிரான்­ஸி­ட­மி­ருந்து ரபேல் போர்­வி­மா­னங்­களை வாங்­கி­யது. ரஷ்­யாவின் MiG-35 போர்­வி­மா­னங்­களில் Thrust Vectoring என்னும் தொழில்­நுட்பம் இல்­லா­த­ப­டியால் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது. Thrust Vectoring விமா­னத்தின் திசை­தி­ருப்பும் வகையை அதன் விமா­னிக்குக் கொடுக்­கின்­றது. வானில் எதிரி விமா­னத்­துடன் போரிடும் போது Thrust Vectoring தொழில்­நுட்பம் மிகவும் அவ­சி­ய­மாகும். Su-30MKI போர்­வி­மா­னங்­க­ளையும் பிரான்­ஸி­ட­மி­ருந்து ரஃபேல் போர்­வி­மா­னங்­க­ளையும் வாங்­கி­யது. அது MiG-35 போர்­வி­மா­னங்­களை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து வாங்­காமல் விட்­ட­மைக்கு தொழில்­நுட்பக் குறை­பா­டுகள் கார­ண­மல்ல என்­கின்­றனர் ரஷ்­யர்கள். MiG-35 மணிக்கு 1700மைல் வேகத்தில் 2175 மைல்கள் பறக்கக் கூடி­யது 620மைல் சுற்­று­வட்­டத்­துக்குள் தாக்­குதல் செய்யக் கூடி­யது.

அமெ­ரிக்­காவின் B-21 என்னும் ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­னங்­களின் உற்­பத்தி இறுதி நிலையில் இருக்­கின்­றது. B-21 போர்­வி­மா­னங்கள் அமெ­ரிக்­காவில் இருந்து கிளம்பி உலகின் எப்­ப­கு­தி­யிலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பக் கூடிய அளவிற்கு தொலைதூரப் பறப்பை நாற்பதினாயிரம் இறாத்தல் எடையுள்ள குண்டுகளுடன் செய்யக் கூடியது.

ராடர்களும் (கதுவிகள்) புலப்படாத்தன்மையும்

வானாதிக்கப் போட்டியில் ராடர்களும் அவற்றைத் தவிர்க்க ஸ்ரெல்த் எனப்படும் புலப்படாத்தன்மையும் போட்டி போடுகின்றன. ராடர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது அதி-அகல அலைவரிசை (ultra-broadband) ராடர்களை உருவாக்கியுள்ளது. இதனால் தற்போது புலப்படாத்தன்மை கொண்ட விமானம் என ஒன்று இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலைமை மாறியுள்ளது. புலப்படாத்தன்மைக்குப் பதிலாக குறை-அவதானிப்புத்திறன்(low-observability) என்ற பதம் பரவலாகப் பாவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் F-35 ஆரம்பத்தில் ஸ்ரெல்த் போர்விமானம் என அழைக்கப்பட்டாலும் அது இப்போது குறை-அவதானிப்புத்திறன் விமானமாகவே விமர்சிக்கப்படுகின்றது.

அமெரிக்கா தொடர்ந்து பேணிவரும் தனது வான்படையின் மேன்மையை ரஷ்யா தனது தரையில் இருந்து வானிற்கு வீசும் ஏவுகணைகள் மூலமும் சீனா தனது வானிலிருந்து வானிற்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலமும் சமாளிக்க முயல்கின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.