Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா? - அருஸ்

Featured Replies

அண்மைய காலங்களில் சிறிலங்காவின் தென்பகுதி ஊடகங்களின் சூடான செய்திகள் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பானவை தான். அணிவகுத்து வரும் ஆயுதக்கப்பல்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுகிறது சிங்களக் கடற்படை. பின்னர் படங்களும் வெளியிடப்படுவதுண்டு. அதில் அழகான நீல வண்ணக் கடலில் கப்பல் கொழுந்து விட்டு எரிவதையும் பின்னர் மூழ்குவதையும் காண்டு தென்னிலங்கை பேரானந்தம் அடைவதுண்டு.

அதிலும் கடந்த 18 ஆம் நாள் அம்;பாறை பொத்துவிலுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இரண்டு கப்பல்களை ஒன்றாக மூழ்கடித்துள்ளது கடற்படை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட படங்களுக்கும் குறைவில்லை.

கடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாளில் இருந்து பார்ப்போமாயின் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 6 கப்பல்களையும் றோலர்களையும் சிறிலங்கா கடற்படையினர் அழித்துள்ளதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

- செப்ரம்பர் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் கல்முனைப் பொயின்றில் வைத்து சந்தேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- ஒக்ரோபர், 31 ஆம் நாள் 2006 மாலை மன்னார் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- நவம்பர், 14 ஆம் நாள் 2006 மாலை 4.30 மணியளவில் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- பெப்ரவரி, 27 ஆம் நாள் 2007 காலை 6.30 மணியளவில் தெற்;கு கடலின் தேவினுவர கடற்பகுதியில்; வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- மார்ச், 18 ஆம் நாள் 2007 காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் அறுகம்குடாவிற்கு அண்மையாக உள்ள பொத்துவில் கடற்பரப்பில் வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் வைத்து அன்று மதியம் மற்றுமொரு கப்பலும் அழிக்கப்பட்டது.

இந்த கப்பல் அழிப்புக்களின் போது ஒரே மாதிரியான கதைகள் தான் கூறப்படுகின்றன. அதாவது பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இந்த கப்பல்கள் சுமந்து வந்ததாகவும். கடற்படையினர் வழிமறித்த போது தமது அடையாளங்களை நீருபிக்கத் தவறியதாகவும் அதன் பின்னர் கலிபர் மற்றும் பீரங்கிகள் மூலம் படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் தாக்குதலில் அது தீப்பற்றி எரிந்து மூழ்கியதாகவும் மூழ்கடிக்கப்பட்ட எல்லா கப்பல்களினதும் கதைகள் நீண்டு செல்கின்றன.

சிறிலங்காவின் புனைக்கதைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தை கவனித்தால் இது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்குமா? அப்படியானால் விடுதலைப் புலிகளிடம் உள்ள கப்பல்களின் பலம் என்ன? ஆயுதங்களை தருவிக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எவை? அவர்களின் முன்னேற்பாடுகள் எவை என்பவை தான் எம்முன்னால் உள்ள முக்கிய வினாக்கள்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து இலகுவில் அறிந்து கொள்ள முடியாதது உண்மை. அதுவே அவர்களின் பலத்தின் மற்றுமொரு வடிவம்.

அனைத்துலக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் (டுடழலன?ள டுளைவ) தகவல்களின் படி விடுதலைப் புலிகளிடம் 12 - 15 கப்பல்கள் உள்ளதாகவும் அவை Pயயெஅயஇ ர்ழனெரசயள யனெ டுiடிநசயை போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல். ஆனால் அவர்களால் அடிக்கடி கப்பல்களையும், பதிவு செய்யப்பட்ட நாடுகளையும், முகவர்களையும் மாற்ற முடியும்.

எனினும் அந்த கப்பல்களுடனான புலிகளின் தொடர்புகள் நீரூபிக்கப்பட முடியாதவை. இந்த கப்பல்கள் சட்டபூர்வமான நிறுவனங்களின் ஊடாகவே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. தமது வர்த்தக நடவடிக்கைகளின் நடுவே சில சமயங்களில் ஆயுதத் தளபாடங்களை விடுதலைப் புலிகளுக்கு இந்த கப்பல்கள் வழங்குவதாகவும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்து வருகின்றது. மேலும் புலிகளால் உலகில் உள்ள நூற்றுக்கணக்கான கப்பல் நிறுவனங்களிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு அமர்த்தவும் முடியும்.

ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல்கள் சிறிலங்கா அரசு கூறுவது போன்று மக்கள் காரியாலயங்களுக்கு செல்வது போல காலை வேளைகளிலோ அல்லது மாலை வேளைகளிலோ சிறிலங்காவின் கடற்பரப்பினுள் பிரவேசிப்பது இல்லை. பொதுவாக கூறப்போனால் பகல் வேளைகளில் பொருட்களுடன் வரும் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பை அண்மிப்பது இல்லை.

சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள கண்காணிப்புக் கப்பல்களின் பலம், ரடார்களின் தூர வீச்சுக்கள், வேவு விமானங்களின் வலிமை, அந்நிய நாடுகளின் புலனாய்வு உதவிகள் என்பன புலிகளுக்கு தெரிந்த விடயங்கள்.

கப்பல் மீண்டும் பயன்படுத்த தேவை எனில் அது அனைத்துலக கடற்பரப்பில் தான் பயணிக்கும். நள்ளிரவு வேளைகளில் புலிகளின் தளப்பகுதியை அண்மித்து சரக்குகளை இறக்கிவிட்டு பின்னர் பொழுது புலரும் போது மீண்டும் அனைத்துலக கடற்பரப்பை அடைந்துவிடும்.

அதிலும் குறிப்பாக அவை கரைப்பகுதிக்கு மிக அண்மையாக வருவதில்லை. ஆழ்கடல் பகுதியில் வைத்து கடற்புலிகளின் படகுகளில் தான் அதிக சரக்குகள் இறக்கப்படுவதுண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் கடற்புலிகளின் பாதுகாப்பு வியூகங்கள் மிகவும் பலமானதாக இருக்கும். கப்பலை அண்மிக்கும் கடற்படைப் படகுகள் கடுமையான மோதல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முன்னர் புலிகளின் சில கப்பல்கள் தாக்கப்பட்ட போது கடற்படையினரும் இழப்புக்களை சந்தித்திருந்தனர்.

1996 ஆம் ஆண்டு முல்லைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருந்த புலிகளின் கப்பலை தாக்கி அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைப் கப்பல்கள் ஈடுபட்டதும் அந்த தாக்குதலில் இந்திய மற்றும் சிறிலங்கா படகுகள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள் கொண்டு வரப்படும் கப்பல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில், கப்பல் இரவோடு இரவாக புலிகளின் முக்கிய தளப்பகுதியின் கடற்கரையை அடைந்து தரைதட்டி விடும். அங்கு ஆயத்த நிலையில் இருக்கும் போராளிகளும் மக்களும் பொழுது புலர்வதற்கு முன்னர் கப்பலை வெறுமையாக்கி விடுவார்கள். 1997 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் தரைதட்டி நின்ற கப்பலை சிறிலங்காவின் விமானப்படை பல நாட்களின் பின்னர் தாக்கி அழித்துவிட்டு புகைப்படங்களை வெளியிட்டது உங்களுக்கு நினைவு இருக்லாம். அப்போது சிறிலங்கா அரசு கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்குவதற்கு முன்னர் அதனை தகர்த்துவிட்டதாக கூறியிருந்தது.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இருபது வருடங்களாக ஒரே உத்தியை கையாள்வது கிடையாது. அவர்கள் தமக்கு தேவையான ஆயுதங்களை தருவிப்பதில் பயன்படுத்தும் உத்திகளை அடிக்கடி மாற்றியபடியே இருப்பார்கள். மேலும் சமரை ஆரம்பித்து விட்டு ஆயுதம் வாங்க அவர்கள் திரிவதில்லை என்பதுடன் களத்தில் ஓய்வாக இருக்கும் போது படுத்து உறங்குவதும் இல்லை.

விடுதலைப் போரில் ஓய்வுகள் என்பது கிடைப்பதில்லை அது போராளிகளானாலும் சரி போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களானாலும் சரி அதனால் தான் அதில் தோல்விகளும் அரிது.

மேலும் தமது ஒரு கப்பல் தாக்கப்பட்டால் மற்றய கப்பலின் வரவிலும், பொருட்களின் தரையிறக்கத்திலும் அதிக கவனங்கள் வெலுத்தப்படுவதுடன். அதற்கான சூழ்நிலைகளும் சரியாக கணிப்பிடப்படுவதுண்டு.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை களமுனைப் போரை விட பிரச்சாரப் போரையே அது தற்போது முதன்மைப்படுத்தி வருகின்றது. மகிந்தவின் வாகரைப்பயணம், கிபீரில் நின்று நேர்காணல் வழங்கியது, டோராவில் ஏறி திருமகோணமலையை வலம் வந்தது என்பன இதற்கு மிகச்சில உதாரணங்கள் (எதிர்வரும் காலங்களில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதக்கப்பல் என்று கூறி ஒரு கப்பலில் நின்று மகிந்த புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

களமுனைகளில் தொய்வு ஏற்படும் போதோ அல்லது அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டிய சந்தர்ப்பங்களிலோ அரசு இவ்வாறான கடல் நாடகங்களை அரங்கேற்றுவதுண்டு.

உதாரணமாக காலியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டிற்கு முன்னர் கொழும்பு துறைமுகம் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இறுதியில் அதன் உண்மைத் தன்மையை நீர்கொழும்பு மீனவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் கப்பல்களின் கதைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்பது தான் அரசிற்கு உள்ள அனுகூலம்.

விடுதலைப் புலிகளின் எந்தக் கப்பல்களும் இதுவரையான காலத்தில் அழிக்கப்படவி;ல்லை என்பது இதன் கருத்தல்ல. சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படையினரின் தாக்குதல்களால் ஏறத்தாழ 5 கப்பல்களை புலிகள் முன்னர் இழந்துள்ளனர். ஆனால் ஆறு மாதத்தில் ஆறு கப்பல்கள் என்ற அரசின் கணக்கு தான் மிகவும் தவறானது. அதிலும் ஓரே இடத்தில் வைத்து ஒரே நாளில் இரு கப்பல்களை அழித்தது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமாகும்.

அரசின் இந்த பிரச்சாரங்களில் உள்ள வலிமையற்ற ஆதாரங்களாக பின்வருவனவற்றை கொள்ளலாம்.

- எல்லா கப்பல்களும் பகல் வேளைகளில் அழிக்கப்பட்டன.

- பட்டப்பகலில் புலிகளின் கப்பல்கள் எல்லாம் சிறிலங்காவின் கடற்பரப்பில் சுற்றித்திரிந்தது.

- புலிகளின் தளப்பகுதிகளுடன் தொடர்பில்லாத கடற்பிரதேசங்களில் பொரும்பாலான கப்பல்களை சிறிலங்கா அரசு அழித்தாக கூறுவது.

- காலியில் அழிக்கப்பட்ட கப்பல் வெடித்துச் சிதறி எரிந்த பின்னரும் ஆட்டிலறி எறிகணைகள் வெடிக்காது மிதந்து வந்ததாக கடற்படைத்தளபதி கூறியது.

- தமது கூற்றுக்களுக்கு வலுச்சேர்க்கும் ஆர்வத்தில் தமக்கு புலனாய்வுத் தகவல்களை தந்தவர்கள் என சில நாடுகளின் பெயர்களை கூறியது.

- எல்லா கப்பல்களும் கடற்படையினர் மீது கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது.

இந்த கருத்துக்கள் தான் சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள மிகவும் பலவீனமான அம்சங்கள். எனினும் அரசின் இந்த நாடகங்களுக்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?

- தாம் மிகவும் உசார் நிலையில் இருப்பது போலவும் தமக்கு அனைத்துலக புலனாய்வு அமைப்புக்களிடம் இருந்து ஒத்துழைப்புக்கள் கிடைப்பது போலவும் காண்பித்து புலிகளின் ஆயுதக்கப்பலின் வரவுகளை முன்கூட்டியே தடுக்கும் முயற்சி

- அனைத்துலகத்தில் புலிகளின் கப்பல்துறை வலையமைப்பு தொடர்பாக ஒரு பெரும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அவர்களை அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் முடக்கும் தந்திரம்.

- கடலில் தமது ஆதிக்கம் இழக்கப்படவில்லை என்றும், நடந்துவரும் போரில் புலிகள் அழிந்து போகிறார்கள் என்ற தமது வாதத்திற்கு வலுச்சேர்க்கவும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.

என்பன தான் அரசின் நாடகங்களுக்கான காரணங்களாக கொள்ளப்படலாம். எனினும் இந்த நாடகத்தில் அழிந்து போகும் கப்பல்கள் எவை என்பதும் முக்கிய விடையம்.

- மீனவர்களின் சிறு படகுகளோ அல்லது றோலர்களோ கப்பல்களாக கணணியின் உதவியுடன் காண்பிக்கப்படலாம்.

- ஆட்களை கடத்தும் அல்லது சட்டரீதியற்ற வர்த்தகங்களில் ஈடுபடும் அல்லது போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் கப்பல்களவோ, றோலர்களாகவே இவை இருக்காலம்.

- சிறிலங்கா படைகளின் கற்பனைக் கப்பல்களாகவும் அவை இருக்காலம்.

இவை தான் இந்த நாடகத்தின் சுருக்கம்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் கருத்துக்களையோ அல்லது மறுப்பு அறிக்கைகளையோ தெரிவிப்பதில்லை என்பதும் எங்களி;ல் ஒரு சிலரின் ஆதங்கம். ஆனால் தென்னிலங்கையில் மாடு களவு போனாலோ அல்லது அமெரிக்காவில் கணணி ஒன்று பழுதடைந்து விட்டாலோ விடுதலைப் புலிகள் தான் அதற்கு காரணம் என தம்நிலை அறியாது கூறுவது சிறிலங்கா அரசினதும் அதன் பேச்சாளர்களினதும் தொன்று தொட்ட வழக்கம்.

எனவே அவர்களின் இத்தகைய பெறுமதியற்ற கூற்றுக்களுக்கு எல்லாம் பதிலளிப்பதற்கு புலிகளுக்கு நேரம் இருப்பதில்லை. அரச தரப்பினரை போல வெட்டியாக பேசுவதற்கு அவர்களுக்கு ஓய்வுகளும் கிடைப்பதில்லை. மேலும் சிங்கள அரசுகள் தமது சொந்த மக்களையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்ற முனையும் இந்த நடவடிக்கைகளை அவர்கள் தான் தமது பகுத்தறிவின் மூலம் இனங்காண வேண்டுமே தவிர தமிழ் மக்களல்ல.

அரசின் இந்த பொய்யான பிரச்சாரங்களால் விடுதலைப்பலிகளுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இருக்கப்போவதில்லை. மாறாக சிங்களப்படைகளுக்கு தான் அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக தென்னிலங்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் தமது சொந்த பிரச்சாரங்களை தாமே நம்பும் பழக்கம் கொண்டவர்கள் சிங்களப்படைகள். அதனால் தான் இராணுவத்தின் கண்களுக்கு புலிகள் சிலசமயம் சிறு குன்றுகள் போலவும் பலசமயம் பெரும் மலைகள் போலவும் பிரமிப்பூட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தமிழ்நாதம்

  • தொடங்கியவர்

உதாரணமாக காலியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டிற்கு முன்னர் கொழும்பு துறைமுகம் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இறுதியில் அதன் உண்மைத் தன்மையை நீர்கொழும்பு மீனவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் கப்பல்களின் கதைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்பது தான் அரசிற்கு உள்ள அனுகூலம்.

அரூஸ் அவர்களின் இந்த உதாரணம் சரியானதல்ல.

சிறிலங்கா அரசு கொழும்புத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்த வந்த படகுகளை அழித்ததாக அறிவித்த அதேநாளில் சிறிலங்கா கடற்பரப்பில் பல கடற்கலங்களை அழித்து வீரச்சாவடைந்ததகத் தெரிவித்து சில கடற்கரும்புலிகளின் பெயர்களை தமிழீழ விடுதலைப் புலிள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குறித்த நாளில் சிறிலங்காவின் வேறு எந்தக் கடற்பரப்பிலும் மோதல்கள் நடைபெறவில்லை. ஆனால் கொழும்புத் துறை முகத்தில் நடைபெற்ற தாக்குதலில் கடற்படையின் சில கலங்கள் அழிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருந்து. இதன்மூலம் புலிகள் அறிவித்த சிறிலங்கா கடற்பரப்பு என்பது கொழும்புத் துறை முகக்கடற்பரப்புத்தான் என்பது உறுதியாகிறது. (அழிக்கப்பட்டது இரு மீனவர்களின் படகுகளே, ஆனால் நான்கிற்கும் மேற்பட்ட பாரிய வெடிப்புக்களை கரையோரப் பகுதி மக்கள் செவிமடுத்துள்ளனர்)

மீனவர்களின் படகுகள் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் நிறைவடைந்த பின்னரே தாக்கப்படதாகவும் அப்போது சொல்லப்பட்டது.

எமது ஆய்வாளர்கள் கொஞ்சம் புலிகளின் குரல்செய்திகளையும் காதில் வாங்கிக் கொண்டால் இது போன்ற தவறுகளைத் தவிற்க முடியும்.

Edited by மின்னல்

"கப்பல் மீண்டும் பயன்படுத்த தேவை எனில் அது அனைத்துலக கடற்பரப்பில் தான் பயணிக்கும். நள்ளிரவு வேளைகளில் புலிகளின் தளப்பகுதியை அண்மித்து சரக்குகளை இறக்கிவிட்டு பின்னர் பொழுது புலரும் போது மீண்டும் அனைத்துலக கடற்பரப்பை அடைந்துவிடும்."

???

உந்த வித்துவான் ஆராய்ச்சியாளர் இப்ப என்னா சொல்ல வாரார்?

ஏதோ தான் தன்ர சொந்த கப்பலில முல்லைத்தீவுக்கு போய் புலிகளிற்கு சாமானை பறிச்சுப் போட்டு வந்த மாதிரி எழுதுறார்.

அங்கால ஒரு பக்கத்தால சிங்கிள பேப்பர்காரங்கள், ஒரு பக்கத்தால தங்கள் கற்பனை குதிரையைத் தட்டி நாசமாப் போன ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுறாங்கள் என்று பார்த்தால், இங்காளப் பக்கத்தால நம்மட ஆட்களும் அவங்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பறைசாற்றும் வகையில், நன்னாத்தான் தங்கட கண்களால நேரில் பார்த்தமாதிரி கதைகள் சொல்லுறாங்கள்.

இவங்கள ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுறதை விட்டிட்டு அமெரிக்காவின் ஹொலிவூட் பக்கம் போனால், ஒளிமயமான, நல்ல வளமான எதிர்காலம் இவனுகளுக்கு இருக்கு! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

"கப்பல் மீண்டும் பயன்படுத்த தேவை எனில் அது அனைத்துலக கடற்பரப்பில் தான் பயணிக்கும். நள்ளிரவு வேளைகளில் புலிகளின் தளப்பகுதியை அண்மித்து சரக்குகளை இறக்கிவிட்டு பின்னர் பொழுது புலரும் போது மீண்டும் அனைத்துலக கடற்பரப்பை அடைந்துவிடும்."

???

உந்த வித்துவான் ஆராய்ச்சியாளர் இப்ப என்னா சொல்ல வாரார்?

ஏதோ தான் தன்ர சொந்த கப்பலில முல்லைத்தீவுக்கு போய் புலிகளிற்கு சாமானை பறிச்சுப் போட்டு வந்த மாதிரி எழுதுறார்.

அங்கால ஒரு பக்கத்தால சிங்கிள பேப்பர்காரங்கள், ஒரு பக்கத்தால தங்கள் கற்பனை குதிரையைத் தட்டி நாசமாப் போன ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுறாங்கள் என்று பார்த்தால், இங்காளப் பக்கத்தால நம்மட ஆட்களும் அவங்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பறைசாற்றும் வகையில், நன்னாத்தான் தங்கட கண்களால நேரில் பார்த்தமாதிரி கதைகள் சொல்லுறாங்கள்.

இவங்கள ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுறதை விட்டிட்டு அமெரிக்காவின் ஹொலிவூட் பக்கம் போனால், ஒளிமயமான, நல்ல வளமான எதிர்காலம் இவனுகளுக்கு இருக்கு! :lol::D

****************************************************************************

சகோதரா மாப்பிளை அவர்களே நீங்கள் கொஞ்சம் சலிப்புடன் இருப்பது போல் தெரிகிறது என்ன செய்வது என்னும் கொஞ்சம் பொறுமை தேவை.

மற்றதாக, மின்னல் நீங்கள் ஒரு உதாரணத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு, அருஸ் அவர்களின் கருத்துக்களை நிராகரித்து விடமுடியாது. அருஸ் அவர்களினால் முன்வைக்கப் பட்ட கருத்துக்கள் பெரும்பான்மையானவை நடை முறைச் சாத்தியங்கள் இருக்கின்றன, இந்த விடயங்களை தளத்தில் விவாதிப்பது சிறந்ததோ எனக்குத் தெரியாது.

Edited by Valvai Mainthan

:)

யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற திட்டம்

[23 - March - 2007]

அரச படையினர் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமன்றி, வடக்குப் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்கள் மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ளவோ அல்லது பதில் தாக்குதல்களை நடத்தவோ முடியாதவாறு புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் பெரும் ஆயுதத் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் தற்போது புலிகள் இயக்கத்தினரிடையே எழுந்துள்ள முக்கிய பிரச்சினை ஆயுதங்கள் இல்லாமையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் அண்மைக் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவருடைய நெருங்கிய சகாக்களும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டமையே எனவும், இவ்வாறு ஷ்ரீலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக எஸ்.ஏ.17 மற்றும் ஸ்ரிஞ்சர் வகை விமான எதிர்ப்பு மிசைல்ஸ் ஏவுகணைகளை வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டு வர புலிகள் இயக்கத் தலைவர்கள் எடுத்த பல முயற்சிகள் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டு விட்டன எனவும் மேலும், பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியாக அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்து அந்த சந்தர்ப்பத்தைப் பிரயோகித்து 11 கப்பல்களில் ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்க்க புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். இதற்கு வசதியாக சமாதானப் பேச்சுகளை முடிந்தவரை இழுத்தடிப்பதே பிரபாகரனின் உபாயமாக இருந்தது. மேலும், இவ்வாறு திட்டமிட்டபடி ஆயுதங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஒரே நேரத்தில் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் கைப்பற்றுவதற்குத் திட்டமிட்டிருந்தார் பிரபாகரன். பிரபாகரனின் இந்தத் திட்டம் பற்றிய தகவல் அண்மையில் அவருடைய நெருங்கிய சகாவாகிய வீ. பாலகுமார் விடுத்துள்ள ஒரு அறிக்கையிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அந்த அறிக்கையில் பாலகுமார் தெரிவித்துள்ளதற்கேற்ப, புலிகள் இயக்கத் தலைவரின் திட்டங்களுக்கேற்ப களநிலைமை சீர்செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் பூகம்பத்துக்கு முகம் கொடுப்பர் எனவும் அதற்கேற்ப ஒரே நேரத்தில் அதிரடியாகச் செயற்படுவதே பிரபாகரனின் நோக்கம் எனவும் கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதல் திட்டம் ஒன்றை பிரபாகரன் நடைமுறைப்படுத்துவார் என்பது கடந்த காலங்களில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதே தெரிந்து விட்டிருந்தது. ஏனெனில், அவ்வாறு சமாதானப் பேச்சுகள் நடைபெறவிருந்த சிறிது காலத்துக்கு முன்னரே அதாவது,கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை மன்னார்க் கடல்பிராந்தியத்தை அண்டிய அரிப்பு கடல்பகுதியில் வைத்து கடற்படையினர் தாக்கி அழித்தனர். இந்தச் சந்தர்ப்பத்தின் பின்னரே புலிகள் இயக்கத் தலைவரின் மேற்படி தாக்குதல் திட்டம் பற்றி ஷ்ரீலங்கா அரச பாதுகாப்புத்துறையும் தெரிந்துகொண்டது.

இதைத் தொடர்ந்து கிழக்கில் சம்பூர் மற்றும் வாகரைப் பிரதேசங்களில் தீவிர தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களின் போதும் புலிகள் இயக்கத்தினரிடையே உருவாகியுள்ள ஆயுதத் தட்டுப்பாடு பற்றி மேலும் பாதுகாப்புத்துறை தெளிவாகத் தெரிந்து கொண்டது. இதனை உறுதிப்படுத்திய மற்றுமொரு விடயம் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு (எவ்.பி.ஐ.) புலிகள் அமைப்பு பற்றி வெளியிட்ட புலனாய்வு அறிக்கையாகும். இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வுப் பிரிவு ஆயுதக் கடத்தல் சம்பந்தமாக புலிகள் அமைப்பினர் ஆயுத முகவர் ஒருவரைக் கைது செய்த பின்னர் வெளியிட்டது. மேற்படி புலிகளின் ஆயுத முகவரிடம் எவ்.பி.ஐ. உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்ட மேற்படி அறிக்கையை எவ்.பி.ஐ. வெளியிட்டிருந்தது.

இவ்வாறு அமெரிக்க புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நபர் வோட்டர்லூ சுரேஷ் என்பவராகும். இவர் தெரிவித்த தகவல்களில் அவர் புலிகளின் ஆயுத முகவராக நெடுங்காலம் செயற்பட்டு புலிகள் அமைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக ஆயுதங்களைக் கடத்தி வந்ததும், தற்போது புலிகளின் முகாம்கள் மீது ஷ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் மற்றும் மிக் விமானங்களின் குண்டு வீச்சுகளால் மிக மோசமான பின்னடைவுக்குள்ளாகியிருப்ப

குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஏதாவது தனது கற்பனைக் கதைகளுடன் ஆராய்ச்சி கட்டுரை என்ற பெயரில் தமிழ்நாதத்தில் ஒட்டிவிடுவார்.

தமிழ்நாதத்தில் பிரசுரிக்கப்பட்டது என்பதற்காக உந்த வித்துவான் சொல்வதற்கெல்லாம் நாம் ஆமாம் சாமி போட வேண்டுமா?

முதலில் புலிகள் எப்படி தமது இராணுவ விடயங்களைக் கையாள்கின்றார்கள் என்ற விடயம் எமக்கு தெரிந்துதான் ஆக வேண்டுமா? உந்த வித்துவான் தமிழ் மக்களிற்கு என்ன இராணுவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பாடம் நடத்துகின்றாரா?

உவர் சொல்லியுள்ள விடயத்தை அறிவதால்(உண்மையா பொய்யா என்பது அடுத்த பிரச்சனை) நாம் தமிழீழத்திற்கு ஏதாவது நல்லது செய்து விடவா போகின்றோம்? அல்லது முல்லைத்தீவிற்கு ஆயுதம் வாங்கி எமது கப்பலில் அனுப்பவா போகிறோம்?

புத்தி ஜீவிகள் என்று தம்மை நினைப்பவர்கள், அல்லது சொல்பவர்கள் உப்படி அரைவேட்காட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதை நிறுத்திவிட்டு தமிழ் மக்களிற்கு உபயோகமான, தேவையான விடயங்களைப் பற்றி கதைக்க, எழுத முன்வரவேண்டும்.

தங்களது கப்பலை எப்படி ஓட்டுவது என்று புலிகளிற்கு தெரியும். ஒருவரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை, ஆனால், எங்களுக்குத்தான் தாயக மக்களிற்காக பயனுள்ள காரியங்களை எப்படி செய்வதென்று தெரியவில்லை.

ஆற்றிலே தொலைத்துவிட்டு, குளத்திலே தேடுவதென்பது உதைத்தான்!

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களான எங்கள் கையில் இருக்கும் ஆற்றல்களை மறந்துவிட்டு, நாங்கள் முல்லைத்தீவில் நிற்கின்ற கப்பலைப் பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

எங்களது காரியங்களை, கடமைகளை இங்கு நாம் ஒழுங்காகச் செய்தால், தமிழீழத்தில் கப்பலல்ல, நீர்மூழ்கிக் கப்பலல்ல, ஏரோ பிளேனே பிரச்சனையின்றி ஏறி இறங்கும். :):unsure::o

  • தொடங்கியவர்

****************************************************************************

மின்னல் நீங்கள் ஒரு உதாரணத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு, அருஸ் அவர்களின் கருத்துக்களை நிராகரித்து விடமுடியாது. அருஸ் அவர்களினால் முன்வைக்கப் பட்ட கருத்துக்கள் பெரும்பான்மையானவை நடை முறைச் சாத்தியங்கள் இருக்கின்றன, இந்த விடயங்களை தளத்தில் விவாதிப்பது சிறந்ததோ எனக்குத் தெரியாது.

ஆரூசின் தவறான உதாரணத்தைச் சுட்டிக்காட்டி இறுதியாக எழுதியது.

எமது ஆய்வாளர்கள் கொஞ்சம் புலிகளின் குரல்செய்திகளையும் காதில் வாங்கிக் கொண்டால் இது போன்ற தவறுகளைத் தவிற்க முடியும்.

குறித்த கட்டுரையைப் பற்றி நான் வேறை ஒண்டையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் காட்டும் உதாரணம் பிழையாக இருந்ததை மட்டும் சொல்லியுள்ளேன்.

Edited by மின்னல்

ஒரு சிறு குறிப்பு: திரு. அருள் வேல்ஸ் ஐ நாம் தனிப்பட்ட முறையாக தாக்குவதாக யாரும் பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். திரு. அருள் வேல்ஸ் அவர்கள் கூட யாழ் இணையத்திற்கு வருகை தந்து எமது கருத்துக்களை படித்திருந்தால், அவற்றைப் பார்த்து சோர்வடைய வேண்டாம்.

நாம் எமது விமர்சனஙகளில் கூறுவதெல்லாம் தேவையில்லாத, புலிகளின் இராணுவச் செயற்பாடுகள் பற்றிய, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதை நிறுத்திவிட்டு, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களிற்கு அல்லது தாயகத்திற்கு, தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுவதில் கட்டுரையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களிற்கு இராணுவப் போரியல் பற்றிய விரிவுரைகளை திரு. அருள் வேல்ஸ் அவர்கள் செய்யத்தான் வேண்டுமா? இதனால் ஏதாவது பயன்கள் யாருக்காவது ஏற்பட வாய்ப்புண்டா?

தமிழ்நாதம் இவ்வாறான கட்டுரைகளைப் பிரசுரிப்பதன் உள் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறு குறிப்பு: திரு. அருள் வேல்ஸ் ஐ நாம் தனிப்பட்ட முறையாக தாக்குவதாக யாரும் பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். திரு. அருள் வேல்ஸ் அவர்கள் கூட யாழ் இணையத்திற்கு வருகை தந்து எமது கருத்துக்களை படித்திருந்தால், அவற்றைப் பார்த்து சோர்வடைய வேண்டாம்.

நாம் எமது விமர்சனஙகளில் கூறுவதெல்லாம் தேவையில்லாத, புலிகளின் இராணுவச் செயற்பாடுகள் பற்றிய, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதை நிறுத்திவிட்டு, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களிற்கு அல்லது தாயகத்திற்கு, தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுவதில் கட்டுரையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான்

ஆம்.

புலிகளின் இராணுவ பலம் பற்றி தேவையில்லாத ஆராய்ச்சி செய்வதை விடுத்து இவர்கள் இன்னும் இரண்டுபடி முன்சென்று நாளைக்கு ஒரு சுதந்திர தமிழீழம் பிரகடனப்படுத்தப் பட்டால் தாயகத்திலும் புலத்திலும் எழப்போகின்ற சிக்கல்களை எதிர்வுகூறி அதனை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்று ஆராய்ந்து கட்டுரை எழுதவேண்டுமென்பதே எங்கள் அவா.

இதை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே (எவ்வாறு திரும்பத் திரும்ப ஒரேவிடயத்தை உங்கள் இராணுவ ஆய்வில் சொல்லுகிறீர்களோ) மக்கள் மனங்களை அவ்வாறான ஒரு வரவிருக்கும் நிஜமான பிரச்சனை பற்றி சிந்திக்கவைக்கமுடியும்.

கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள எங்கள் ஆய்வாளர் நண்பர்களே.

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் மாப்பிளை அவர்களே உங்கள் கருத்தைத் தான் நான் ஆரம்பத்திலிருந்தே வலியுறித்திக்கொண்டு வருகிறேன். அதாவது நாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு, உதாரணமாக சிறைச்சாலையில் வாடும் எங்கள் உறவுகளுக்காக ஏதாவது முயற்சியில் இறங்கியிருக்கலாம். அல்லது எங்களது ஒற்றுமையை பலப்படுத்தலாம், தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படும் ஊடகங்களை இனங்கண்டு மக்களை விழிப்படையப் பண்ணலாம் இதைபுறக்கணித்து விட்டு விடுதலைப்புலிகளின் ராணுவ செயல்பாடுகளை நாங்கள் விமர்சிப்பது ஒரு பொழுது போக்காக நேரத்தை வீணடிப்பது மாதிரி எனக்கு தோன்றுகிறது. ஜயா நான் யாரினதும் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் இந்த கருத்தை கூறவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.