Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு

Featured Replies

தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு

 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்

http://www.newsuthanthiran.com/2018/03/29/தந்தை-செல்வாவின்-120வது-ஜனன/

  • தொடங்கியவர்
  • தந்தை செல்வாவின் பிறந்த தினம் வவுனியாவில் கடைப்பிடிப்பு!!
தந்தை செல்வாவின் பிறந்த தினம் வவுனியாவில் கடைப்பிடிப்பு!!
 
 

தந்தை செல்வாவின் பிறந்த தினம் வவுனியாவில் கடைப்பிடிப்பு!!

 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த தினம் இன்று வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்துக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் கடைப்பிடிக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம், தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0478-300x200.jpg DSC_0477-300x200.jpgDSC_0476-300x200.jpg

DSC_0475-300x200.jpgDSC_0474-300x200.jpg 

DSC_0471-1-300x200.jpg DSC_0470-300x200.jpgDSC_0469-300x200.jpg

DSC_0468-300x200.jpgDSC_0467-300x200.jpgDSC_0466-300x200.jpg

DSC_0461-300x200.jpg

DSC_0460-300x200.jpg

http://newuthayan.com/story/80020.html

  • தொடங்கியவர்
  • தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிப்பு!!
 
 

தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிப்பு!!

 

தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மாவை சேனாதிராஜா மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இ.ஆனோல்ட்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி,கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

DZmPpeiVAAAOr9A-180x300.jpgDZmPl8_UQAAQnso-300x180.jpgDZmPkhMV4AIDh70-180x300.jpg

http://newuthayan.com/story/80145.html

  • தொடங்கியவர்

மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த தினம் அனுஸ்டிப்பு

DSC_0012.jpg?resize=800%2C534

தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும், தமிழரசுக் கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம், இன்று சனிக்கிழமை (31) மன்னார் நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நினைவு கூறப்பட்டது.

 

மன்னார் மாவட்ட தந்தை செல்வநாயகம் அரங்காவல் சபை தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர், மன்னார் தமிழரசுக்கட்சியின் தலைவர் பரஞ்சோதி,உற்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பொது மன்னார் நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து அவரது 121 ஆவது பிறந்ததினம் நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0014.jpg?resize=800%2C534DSC_0018.jpg?resize=800%2C534DSC_0021.jpg?resize=800%2C534  DSC_0025.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/72976/

  • தொடங்கியவர்

தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு…

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின அனுஷ்டிப்பு சனிக்கிழமை (31) மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர். கி.துரைராசங்களம், சிரேஷ்ட உபதலைவர் பொ.செல்வராசா, பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா..அரியநேத்திரன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

20180331_103904.jpg20180331_105200.jpg20180331_110637.jpg20180331_111626.jpg20180331_114134.jpg20180331_120654.jpg20180331_122055.jpgBBC-1.jpgBBC-2.jpgBBC-3.jpgBBC-4.jpgBBC-5.jpgBBC-6.jpgBBC-7.jpg

 
 

http://www.newsuthanthiran.com/2018/03/31/தந்தை-செல்வாவின்-120வது-ஜனன-2/

  • தொடங்கியவர்

”தமிழிற்காய் தன் உதிரம் கொடுத்த உத்தமர்” தந்தை செல்வாவின் 120 ஆவது ஐனனதினம்

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=

மகிழையாள்

இலங்கை அரசியலில் தந்தை செல்வா

தமிழிற்காய் தன் உதிரம் கொடுத்த உத்தமரே

உம் அரசியல் மகத்தானது…………..

இன்று 120 ஆவது ஐனனதினம்.

தந்தை செல்வா என்று அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898.3.31 ம் திகதி மலேசியாவில் ஈப்போ நகரில் ஜேம்ஸ் விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாக பிறந்தார். பின் யாழ்ப்பாணம் வந்த இவர் தனது ஆரம்பக் கல்வியினை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பின்னர் யாழ் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். அறிவியலில் இளங்கலைமாணிப் பட்டம் பெற்ற இவர் பின்னர் சட்டக்கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார்.

இவருடைய அரசியலானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமானதாகும். தமிழர் தாயகம் என்ற பதத்தை எம் தமிழ் மக்கள் மத்தியில் முதலில் பயன்படுத்தியவர் தந்தை செல்வநாயகமே ஆவார். தமிழினம் ஓர் தேசிய இனம் சுயாட்சியுடன் வாழத் தகுதியுடைய தமிழர்கள் சுயஉரிமை பெற்ற இந்தநாட்டில் வாழுகின்ற ஏனைய மக்களோடு சரி சமமாக வாழவேண்டுமென்பதை 1950களிலே தந்தை செல்வா எடுத்துரைத்தார்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஐP.ஐP பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். 1948 டிசம்பர் மாதம் இந்தியக் குடியிருப்போர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது ஐP.ஐP.பொன்னம்பலம் சட்டத்திற்கு சார்பாக வாக்களித்த போதும் எஸ்.Nஐ.வி செல்வநாயகம் எதிராக வாக்களித்ததுடன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியைத் ஸ்தாபித்தார்.

1947 தேர்தல் 8ம் மாதம் தொடக்கம் 9ம் மாதம் பிற்பகுதி வரை நடைபெற்றது. யாழ் குடாநாட்டுத் தேர்தல் முடிவுகள் 19 செப்டம்பர 1947 இல் வெளியிடப்பட்டன. தனது தேர்தல் வெற்றி அறிவி;க்கப்பட்டதும் தந்தை அவர்கள் உரையாற்றினார். “ நான் அரசியலுக்கு வர முதலில் விரும்பவில்லை. தமிழ் மக்கள் பிரதிநிதியாக அரசாங்க சட்டசபையில் இருந்த சிலர் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்து விட்டனர். அவ்;வாறு துரோகம் செய்தவர்களை அரசியலிலிருந்து அகற்றி தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தலைமைத்துவத்தை அளிப்பதற்காகவே அரசியலில் இறங்கினேன்” என்றார். தேர்தலை அடுத்து தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு யாழில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் தந்தை செல்வா கூறியது “ஒற்றையாட்சியில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய இணைப்பாட்சி முறையைத் தமிழ்மக்கள் கோரவேண்டி வரும்” என்றார்.

தந்தை செல்வா அவர்கள் சுயாட்சித் தமிழை நிறுவவேண்டுமென தான் கோருவதற்கான காரணத்தையும் எடுத்துரைத்தார். “தமிழ் மக்கள் தாம் இலங்கையின் சமனான பிரஜைகள் என்ற உணர்வை, மனோபாவத்தைப் பெறுவது மற்றது தமிழ்பேசும் பிரதேசங்களை மற்றப் பகுதிகளுக்கு இணைய அபிவிருத்தி செய்வது” என்பதாகும்.

தந்தை செல்வாவினுடைய மூன்று தசாப்த கால இயங்கு அரசியல் 1947 இல் இருந்து 1977 வரையாகும். தந்தை செல்வாவின் காலத்தில் அவர் அனுபவித்த இன்னல்கள் பெரிது. குற்றவியல் வழக்கறிஞராக தன்னிகரற்ற தனிப்பெரும் வழக்கறிஞர், மகான் என்று இன்னும் பேசப்படுகின்றார். அதற்கேற்றமாதிரித்தான் சிவில் வழக்குகளில் வாதிடுவதில் தந்தை செல்வா புகழ்பூத்தவராக இருந்தார் என்பது மாத்திரமில்லை, இரண்டு தடவைகள் உயர்நீதிமன்றத்தில் நீதியரசராக வரவேண்டுமென அன்றிருந்த ஆங்கில பிரதம நீதியரசர் அழைத்ததும் அதற்கு இணங்காமல் அரசியலில் தனது வாழ்நாளை அற்பணித்தார்.

பரஸ்பர விட்டுக்கொடுப்புடனான புரிந்துணர்வுக்கு வழிகோலுகின்ற சாமர்த்தியமான வார்த்தைப் பிரயோகங்களை திருமலைப் பிரகடனத்திலே காணலாம். அரசியல் என்பது சாத்தியமற்றவை சாதிக்கின்ற கலை என்பதாகும். சாத்தியமற்றதை சாதிக்கின்ற கலையாக அரசியலை செய்து காட்டிய உதார புருஷர் தந்தை செல்வா.

தந்தை அவர்களின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் அவரது வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. அவர் ஈடுபட்டிருந்த அரசியல் அவரது வாழ்க்கை ஓட்டத்தினுள்ளே நிலைகொண்டு விடுகிறது. இத்தகைய இணைவு அசாதாரணமானது அல்லாமல் வரலாற்றில் ஓர் தனியாள் வகிக்கும் இடம்பற்றிய அடிப்படையிலான வரலாறாக அமைகின்றது.

தந்தை செல்வா இவர்கள் அடிப்படையில் அஹிம்சை முறையினையே தனது அரசியல் ஆயுதமாகக் கொண்டவர். ஆயுதப்போராட்டம் அவர் சிந்தனைப் போக்கினுள் இடம்பெறாதிருந்த ஒன்று. ஆனால் 1959 முதல் ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழ் உரிமை பற்றிய தமது இலக்கு நேரியபாதையில் இந்த இரண்டு நிலைகளும் தவிர்க்கப்படமுடியாத அரசியல் நடைமுறைகளாக மாறுவதை அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

தனது அரசியல் பயணத்திலே பிரதம மந்திரிகள் மூவரோடு 1957இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவுடன் பண்டா-செல்வா ஒப்பந்தம், 1960இல் எழுத்தில் இல்லாத ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடனான ஒப்பந்தம், 1965இல் டட்லி-செல்வா ஒப்பந்தம் என்ற இந்த மூன்று ஒப்பந்தங்களிலும் அவற்றின் முன்னோடியான பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இன்று தமிழ்பேசும் இனங்களுக்கான தீர்வின் வரையறைகள் அனைத்தும் அமைந்திருந்தன.

1951 ஏப்ரல் 13,14,15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் கட்சியின் முதலாவது மகாநாடு இடம்பெற்றது. இதில் மேலும் ஓராண்டுக்கு தந்தை செல்வா தெரிவுசெய்யப்பட்டார். திருமலை மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை

· தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனமென கணிக்கப் பெறுவதற்கு மறுக்கவொண்ணா உரித்தை எடுத்துரைப்பதோடு அரசியல் சுயாதீனம் பெறுவதற்கு அவர்களுக்குள்ள உரிமையும் சிங்களவர்களுடன் சமஷ்டியமைப்பு முறையில் இணைவதற்கு அவர்களுக்குள்ள விருப்பையும் பிரகடனப்படுத்தியது.

· சோல்பரி அரசியலமைப்பு நிராகரிப்பு.

· இந்தியத் தமிழர் பிரஐவுரிமை பற்றியது.

· தமிழ் மொழிக்கு ஏற்படப்போகும் பேராபத்தைக் கூறியது.

· அரசாங்கத்தின் காணி அபிவிருத்திக் கொள்கையும் குடியேற்றத் திட்டக்கொள்கையும் இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்களின் நிலைபேறான வாழ்வுக்கே அச்சுறுத்தலாக அமைவதனைக் காட்டுகிறது.

· இலங்கை தேசியக்கொடி பற்றியது.

· தமிழரசு நிறுவப்படும் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள்,சிங்களவர்கள் ஆகியோரின் தனித்துவமும் உரிமைகளும் மதிக்கப்படுவதற்கான உத்தரவாதத்தை அளிப்பதோடு அதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளையும் செய்தல்.

போன்றனவாகும.;

1957 இல் சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. இந்த ஊர்வலத்தில் தமிழ்காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இப்போராட்டமானது மக்கள் உணர்வினைத் தூண்டி, பிரதேசவேறுபாடுகளையும் மீறி மக்களை ஒற்றுமைப்படுத்துவதை உணர்ந்த தமிழரசுக் கட்சியினர் 1957.2.4 சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்க முடிவுசெய்தனர்.

தமிழ்பேசும் மக்களின் வரலாற்றைப் பொறுத்தவரை முதலாவது பாராளுமன்றம் முக்கியமானதாகும். தமிழ் மக்களின் சுயாட்சிக்கோரிக்கையை தந்தை செல்வா அவர்கள் மிகவும் தெளிவாக “தமிழ்மக்கள் ஓர்தேசிய இனம், தேசிய இனத்துக்கு தேவையான மொழி, பாரம்பரிய தாயகம் ஆகியவை அவர்களுக்குண்டு” என எடுத்துரைத்தார். மொழிச்சட்டத்துக்கான முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டதும் செல்வநாயகம் அவர்கள் பிரதம மந்திரி பண்டாரநாயக்காவுக்கு கடிதம் மூலம் தம் கருத்தினைத் தெரிவித்தார். எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 200 சத்தியாக்கிரகிகளுக்கு தலைமை வகித்து சிங்களம் மட்டும் சட்டத்திற்கு தமிழ்மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஜீன் 5ம் திகதி சனப்பிரதினிதிகள் சபையின் மேற்கு வாசல் படிகளில் முழுநாளும் உண்ணாவிரதம் இருப்பர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது இதில் அரசாங்கத்தின் முடிவை எதிர்க்க ஏதாவது முயற்சி எடுப்பின் அதை அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் சத்தியாக்கிரகம் 1956 ஜீன் 5ம் திகதி இடம்பெற்றது. தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். தமிழ்மக்களின் அஹிம்சை முறையிலான சாத்வீகப்போராட்டம் சிங்கள வகுப்புவாத குண்டர்களாலும் காடையர்களாலும் குழப்பப்பட்டது. இதனால் தமிழத்;தலைவர்களும் தொண்டர்களும் தாக்கப்பட்டனர்.

திருமலை மாநாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒருவருடமாகியும் பண்டாரநாயக்கா அரசாங்;கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழரசுக் கட்சி சாத்வீகப்போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் பண்டாரநாயக்கா தந்தை செல்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே சமஷ்டி அரசியலமைப்பையோ சிங்களம் உத்தியோக மொழச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவிக்கப்பட்டது. எனினும் இடைக்கால ஒழுங்காக பின்வரும் அடிப்படையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் 1957 யூலை 7ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

பண்டா – செல்வா ஒப்பந்தம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது.

· வடக்கு கிழக்கு மாகாணத்தில் பிராந்திய சபையமைத்தல், வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு சபையாகவும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளைக் கொண்டிருக்கும்.

· மாகாண எல்லைகளையும் தாண்டி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் இணைவதற்கும் இணைந்தவை பிரிவதற்கும் சட்ட ஏற்பாடு செய்தல்.

· பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுவார்கள். பிராந்திய சபைகளுக்கு விவசாயம், கூட்டுறவுகாணியும், காணி அபிவிருத்தி குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடி, வீடமைப்பு, சமூகசேவை, மின்சாரம், நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள் போன்ற விடயங்கள் பிராந்திய சபைகளின் பொறுப்பில் ஒப்படைத்தல்.

· குடியேற்றத் திட்டங்கள் பிராந்திய சபைகளின் பொறுப்பில் இருக்கவேண்டும். முதலில் அந்தந்த மாவட்டமக்களுக்கும் பின்னர் அயல்மாவட்ட அதேயின மக்களுக்கும் இரண்டாவது இடமும் தேசியமட்ட குடியேற்றத்திற்கு மூன்றாவது இடமுமளித்தல்.

· பிராந்திய சபைகளுக்கு மத்திய அரசு நிதிவழங்கவும் வரிவிதிக்கவும் கடன்வாங்கவும் அதிகாரம் அளிக்கப்படும்.

என ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது 1958 ஏப்ரல் 8ம் திகதி பௌத்த பெரமுன ஒப்பந்தத்திற்கு எதிராக கிளர்ச்;சி செய்ததனை அடுத்து ஒப்பந்தம் கிளித்தெறியப்பட்டது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட சாத்வீகப்போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மாதம் இடைவிடாது சத்தியாக்கிரகம் நடைபெற்றது. அதனை அடுத்து பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதில் எமது கோரிக்கைகள் அமுல்செய்யப்படும் வரை சத்தியாக்கிரகமும் தொடரும் என்று கூறினார். மேலும் அவர் அங்கு நாலு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தார். அது அரசாங்கத்தினால் ஏற்கமுடியாததால் மீண்டும் இவர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

சாத்வீகபோராட்டத்தை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்த தமிழரசு 1961 ஏப்ரல் 14ம் திகதி தமிழரசு தபால் சேவையை ஆரம்பித்து சட்டமறுப்பு போராட்டத்தை மேற்கொண்டது. இதனை தந்தை செல்வா ஆரம்பித்து வைத்தார். தபால் பெட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கடிதங்கள் விநியோகப்பட்டன.

1965.2.4 டட்லி – செல்வா ஒப்பந்தம் இடம் பெற்றது.

· மொழிப்பிரச்சினை

· நீதிமன்ற மொழி

· சட்டசபைகள் நிறுவப்படல்

· குடியேற்றப் பிரச்சினையும் தமிழ் அரசாங்க ஊதியர் பிரச்சினையும்

என்பனவாகும்;.

தந்தையின் தமிழ்நாட்டுப் பயணம் வெற்றியளித்ததாகவே அமைந்திருந்தது. இதில் சில அணுகுமுறைகளைக் கையாண்டார்.

· இலங்கைத் தமிழ்மக்கள் ஆரம்பிக்கப்போவது தர்மயுத்தம் என்பதை தெளிவுபடுத்தியதுடன் ஆதரவினையும் கோரினார்.

· தமிழ் நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளினதும் ஆதரவினையும் கோரினார்.

1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு வரையப்பட்ட போது அதிலிருந்த அத்தனை காப்பீடுகளும் அகற்றப்பட்டு சிறுபான்மையோருக்கு பாதகமாக அமையப்போகின்றது என்பதனை அறிந்து மிகவும் துணிகரமாக தனது காங்கேசந்துறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறந்தார். 1973.3.23ல் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற மொழிகள் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களில் தழிழை உபயோகிப்பதற்கு வழிவகுத்தது.

1975.2.6ல் காங்கேசந்துறை உபதேர்தலில் 25927வாக்குகளைப் பெற்று வரலாறு காணாத பெரும்பாண்மையோடு வெற்றி பெற்றார். வெற்றியிட்ட போது அவரைப் பாராட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற விரும்பினார்கள் இளைஞர்கள். அவர்களை அழைத்து தந்தை கூறினார் “தனிப்பட்ட எவரையும் நீங்கள் போற்ற வேண்டாம.; எமது கட்சியை, எமது இலட்சியங்களைப் போற்றுங்கள், புகழுங்கள் அவைதான் நிலையானவை. தனிப்பட்டவர் எவரும் நிலையானவர் என்று கூறமுடியாது” என்று அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

தந்தை செல்வா அவர்கள் இலங்கை அரசியலிலே தமிழ்பேசும் மக்கள் வாழவழிவகுப்பதே எமது கட்சியின் இலட்சியமாகக் கொண்டவர். சமஷ்டியாட்சி அமைப்பின் கீழேயே தமிழ்பேசும் மக்கள் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் வாழ இலட்சியத்தையடைய முதலில் கிளர்ச்சியரசியலைக் கையாண்டார். சாத்வீகமுறையில் சத்தியாக்கிரக அடிப்படையில் எங்கள் அபிலாஷைகளை சிங்களமக்களுக்கு உணர்த்துவதற்கு நடவடிக்கையெடுத்தார். 1960 முதல் தோன்றிய அரசியல் சூழ்நிலையை உபயோகித்து ஒத்துழைப்பு அரசியல் தந்திரத்தை பரீட்சித்துப்பார்த்தார். இடதுசாரிக்கட்சிகளோடு 1953ம் ஆண்டு நாட்டை அதிரவைத்த ஹர்த்தாலை செய்தார். 1957இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவுடன் பண்டா-செல்வா ஒப்பந்தம், 1960இல் எழுத்தில் இல்லாத ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடனான ஒப்பந்தம், 1965இல் டட்லி-செல்வா ஒப்பந்தம் என்ற இந்த மூன்று ஒப்பந்தங்களையும் செய்தார்.

தந்தை செல்வா அவர்கள் 1977.04.26ம் திகதி 79தாவது வயதில் எம்மைவிட்டுப்பிரிந்து சென்றாலும் அவர் கொள்கைகள் எம்முடனே பயணிக்கின்றன. தந்தையவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்விலே அங்கு தொங்கிய பதாதையில் “உத்தமனார் ஊர்வலத்தில் உயிரோடு போகின்றார் செத்தவராய் நாம் எல்லாம் வீதியிலே நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறுவர்.

தந்தை செல்வா அவர்கள் கூறிச்சென்ற கருத்துக்கள்

“தமிழ்பேசும் மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன்.நான்கொண்ட இலட்சியத்தையும் காட்டிக்கொடுக்கவும் மாட்டேன்”

“எனது இனத்திற்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேற நாங்கள் தயங்கமாட்டோம்”.

மகிழையாள்.

http://www.newsuthanthiran.com/2018/03/31/தமிழிற்காய்-தன்-உதிரம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.