Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் யாழில் சந்திப்பு

Featured Replies

வடக்கு முதல்வருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் யாழில் சந்திப்பு

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இந்த சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நிதி மூலக் கூற்றுகள் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/politics/01/178459?ref=home-latest

  • தொடங்கியவர்

அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள்; நிதி அமைச்­ச­ரிடம் முத­ல­மைச்சர் சி.வி.வலி­யு­றுத்தல்

cvwigneswaranp1-044a16e20ea43b79cf4f116775e412301442f8be.jpg

 

எம். நியூட்டன்

உண்­மை­யா­கவே அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்கி திட்டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று ஊட­கத்­துறை மற்றும் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் எடுத்துக் கூறி­யுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி ஆகி­யோ­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் உள்ள விடு­தியில் நடை­பெற்­ற ­பின்னர் வட­மா­காண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,  

2018 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­லவுத் திட்­டத்தின் ஒதுக்­கீட்டின் கீழ் 1000 மில்­லி­ய­னுக்­கான செயற்­றிட்­டத்தை விளக்­கவும், எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பாக தெளிவு படுத்­தவும், அறிந்­து­கொள்­ளவும் நிதி அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் வருகை தந்­தி­ருந்­தனர்.

குறித்த திட்­டத்தில் எங்­க­ளையும் பங்­கு­தா­ரர்­க­ளாக சேர்க்க வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தேன். மேலும் மத்­திய வங்­கி­யினால் மக்­க­ளுக்கு செய்த நன்­மைகள் தொடர்­பாக குறிப்­பிட்­டி­ருந்தார். குறிப்­பாக வங்­கி­யி­லி­ருந்து 50 ஆயிரம் ரூபா­வுக்குள் கடன் பெற்­றி­ருந்தால் அதனை 6 மாதத்­திற்குப் பின்­னரே முதல் மற்றும் வட்­டியை கட்­ட­மு­டியும் என்ற சட்டம் வந்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

அந்தச் சட்­டத்தின் பிர­காரம் 6 மாதத்­திற்கு பின்பே தமது வரு­மா­னத்தை அதி­க­ரித்த பின் செலுத்தக் கூடி­ய­தாக அந்தச் சட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளார்கள். இது­போல பல திட்­டங்கள் மத்­திய வங்­கி­யினால் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் அத்­த­கைய திட்­டங்­களை மக்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறும் நிதி அமைச்சர் கூறி­யி­ருந்தார். இதன் போது நான் எந்­த­வொரு செயல்­திட்­டங்­க­ளையும் தயா­ரிக்­கும்­போது எங்­க­ளு­டைய உள்­ளீட்­டையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். குறிப்­பாக மத்­திய அர­சாங்கம் செயல்­திட்­டங்­களை தயா­ரித்­து­விட்டு நாங்கள் இவ்­வாறு செய்­கிறோம் அதனை ஏற்­றுக்­கொள்­ளுங்கள் என்று கூறு­வது பிழை என்று கூறி­யுள்ளேன்.

 மேலும் உண்­மை­யி­லேயே அதி­கார பர­வ­லாக்கம் இருப்­ப­தாக ஏற்­றுக்­கொண்டால் எங்­க­ளையும் பங்­கு­தா­ரர்­க­ளாக ஏற்று அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், தயா­ரிக்க வேண்டும். அதன் பின்னர் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இதனை அமைச்சர் கொள்கை அளவில் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அமைச்சர் அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு தன்­னு­டைய முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­வ­ரு­பவர் என்­பதால் அதனை ஏற்­றுக்­கொண்டார்.

மேலும் மகா­வலி அதி­கா­ர­ச­பையின் அதி­கா­ரங்கள் முழு நாட்­டிற்கும் பர­வி­யுள்­ளதால் 1987ஆம் ஆண்டில் இல் கொண்­டு­வ­ரப்­பட்ட அதி­கார பர­வ­லாக்கம் குறித்த கருத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன் கார­ணத்­தினால் தான்­தோன்­றித்­த­ன­மாக மகா­வலி அதி­கா­ர­சபை தனக்­கேற்­ற­துபோல் செயற்­பட்டு வரு­கின்­றது. இதனை நிறுத்த வேண்டும் ஏன் என்றால் மகா­வலி அதி­கார சபை அதி­கா­ரங்கள் மீளப்­பெற்று அதற்குப் பதி­லாக வேறு அதி­காரம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.

 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு தரப்பட்ட உரித்துக்களை எடுத்து அரசாங்க அதிபருக்கும், கிராமசேவையாளர்களுக்கும் கொடுத்து எங்களுடைய அதிகாரங்களை குறைத்துள்ளது. இவற்றை குறைக்காது அதனை மீளப்பெறப்படல் வேண்டும்.

1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் முழு அதிகாரமும் எங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தேன் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-31#page-1

  • தொடங்கியவர்
  • வடக்கு மாகாணத்தில் 50 தொழிற்சாலைகள்
 

வடக்கு மாகாணத்தில் 50 தொழிற்சாலைகள்

 

வடக்கு மாகா­ணத்­தில் ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா நிதியில், உற்­பத்­தி­யா­ளர் கூட்­டு­ற­வுத் திட்­டத்­தின் ஊடாக 50 தொழிற்­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்டு வேலை வாய்ப்­புக்­கள் வழங்கப்­ப­ட­வுள்­ளன. நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, இலங்கை மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சு­வாமி ஆகி­யோர் இந்த விட­யத்தை யாழ்ப்­பா­ணத்­தில் தெரி­வித்­த­னர்.

நிதி அமைச்­சர் மற்­றும் இலங்கை வங்கி ஆளு­நர் ஆகி­யோர் நேற்று யாழ்ப்­பா­ணம் வருகை தந்­த­னர். யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில், வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.

போரி­னால் பாதிக்­கப்­பட்ட வடக்கு வர்த்­தக சமூ­கத்­துக்கு இலகு கடன் அல்­லது மானி­யங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை அவர்­க­ளி­டம் முன்­வைக்­கப்­பட்­டது. வடக்­கில் இருந்து 300 தொழில் முயற்­சி­யா­ளர்­கள், ஒவ்­வொ­ரு­வ­ரும் 3 தொடக்­கம் 5 லட்­சம் ரூபா செலவு செய்து திட்­டங்­க­ளைச் சமர்­பித்­த­போ­தும் யு.எஸ்.எயிட் ஊடான உத­வித் திட்­டம் வடக்­கைச் சேர்ந்த எவ­ருக்­கும் கிடைக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

அந்­தத் திட்­டத்­தைப் பெற்­றுக் கொண்ட தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இங்கு வந்து தொழில்­து­றை­யினை ஆரம்­பித்­துள்­ள­னர் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

நிதி நிறு­வ­னங்­கள், மக்­க­ளுக்கு கடன் வழங்கி அவர்­களை கட­னா­ளி­க­ளாக்­கி­யுள்­ள­னர். அவர்­கள் வரை­ய­றை­யில்­லா­மல் செயற்­பட்டு இங்கு பல­ரைக் கட­னா­ளி­யு­மாக்­கி­யுள்­ள­னர் என்­றும் அமைச்­ச­ருக்­கும் ஆளு­ந­ருக்­கும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. பலர் கடன்­களை திருப்­பிச் செலுத்த முடி­யா­மல் உயிரை மாய்த்­துள்­ள­னர் என்­கிற விவ­ர­மும் தெரி­விக்­கப்­பட்­டது.

வடக்­கில் தொழில் துறை­யி­னர், சுய­தொ­ழில் முயற்சி செய்­வோர் பெற்­றுக் கொண்ட வங்­கிக் கடனை இல்­லா­மல் செய்­ய­வேண்­டும், ஆகக் குறைந்­தது அதற்­கான வட்­டி­யை­யா­வது இல்­லா­மல் செய்­ய­வேண்­டும் என்­றும் கேட்­கப்­பட்­டது.

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­துக்கு இப்­போ­தும் 3 ஆயி­ரம் மெற்­றிக் தொன்­னு­டன் கப்­பல் வர­மு­டி­யும். துறை­மு­கத்­தைப் பயன்­பாட்­டுக்கு அனு­ம­தித்­தால் வடக்­கில் வர்த்­த­கம் விரி­வா­கும் என்­ப­தும் சந்­திப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கூட்­டு­ற­வுத் துறை

போரி­னால் கூட்­டு­ற­வுத்­துறை வலு­வி­ழந்­து­விட்­டது, எனவே வங்­கி­கள் ஊடாக வழங்­கப்­ப­டும் வாழ்­வா­தா­ரக் கடன்­களை, கூட்­டு­றவு வங்­கி­கள் ஊடாக வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­கிற கோரிக்கை நிதி அமைச்­ச­ரி­டம் நேரில் முன்­வைக்­கப்­பட்­டது.

கடற்­தொ­ழில் கூட்­டு­றவு அமைப்­புக்­கள் கட­லில் பல நாள்­கள் தங்­கி­யி­ருந்து மீன்­பி­டி­யில் ஈடு­ப­டத்­தக்க கப்­பல்­கள் தமக்­குத் தேவை என்று கோரிக்கை முன்­வைத்­தன. அதற்கு நிதி அமைச்­சர், தமது அமைச்­சின் ஊடாக மீன்­பிடி அமைச்­சுக்கு விண்­ணப்­பங்­களை அனுப்­பு­மா­றும், பல­நாள் கப்­பல்­களை 50 வீத மானி­யத்­து­டன் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்­றும் பதி­ல­ளித்­துள்­ளார்.

வடக்­கில் ஒரு நாளைக்கு 6 ஆயி­ரம் லீற்­றல் பால் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும், மேலும் உற்­பத்­தியை அதி­க­ரிக்க முடி­யும் என்­றும், பாலைச் சேமிப்­ப­தற்­கும், பால் உற்­பத்­திப் பொருள்­க­ளைச் செய்­வ­தற்­கு­மான உத­வி­கள் தேவை என்­றும் பால் உற்­பத்தி கூட்­டு­றவு அமைப்­புக்­கள் கோரிக்கை முன்­வைத்­துள்­ளன. அதற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.

முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு உதவி

முன்­னாள் போரா­ளி­க­ளுக்­குத் தொழில் வழங்­கு­மாறு கூட்­டு­ற­வுத்­து­றை­யி­னர் மற்­றும் வர்த்­த­கர்­க­ளி­டம் இந்­தச் சந்­திப்­பில் அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார். அப்­படி முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சம்­ப­ளத்­தின் அரை­வா­சித் தொகையை நிதி அமைச்சு தொழில் தரு­ந­ருக்கு திருப்­பித் தரும் என்று அமைச்­சர் உத்­த­ர­வா­தம் அளித்­தார். வரவு – செல­வுத் திட்­டத்­தில் ஏற்­பா­டு­கள் உள்­ள­தை­யும் விளக்­கி­னார். இந்த நிதியை மாவட்­டச் செய­லர் ஊடாக தொழில் தரு­நர்­கள் பெற்­றுக் கொள்ள முடி­யும்.

http://newuthayan.com/story/79978.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.