Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்

Featured Replies

ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்
 
 

image_a0120c555b.gif

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று (29) இரவு நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் இடம்பெற்றதாகவும், இரவு 11.30 மணியளவில் இது நிறைவுப்பெற்றதாவும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஜனாதிபதி-பிரதமருக்கிடையில்-கலந்துரையாடல்/150-213609

  • தொடங்கியவர்

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை; ஜனா­தி­பதி – பிர­தமர் தீவிர மந்­தி­ரா­லோ­சனை

 

ரொபட் அன்­டனி

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது­ தொ­டர்­பாக ஜனா­தி­பதிமைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நேற்று முன்­தினம் இரவு

 நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இதன்­போது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது எவ்­வாறு நடந்து கொள்­வது, மற்றும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது.

குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது தனக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென பிர­தமர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யி­ருக்­கலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றெ­னினும் நீண்­ட­நேரம் இடம்­பெற்ற இந்­தக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது எது­வித முடி­வு­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தனது கட்­சி­சார்­பான விட­யங்­களை இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ருக்கு தெளி­வு­ப­டுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கி­டை­யி­லான இந்த சந்­திப்பு தொடர்பில் நேற்று நடை­பெற்ற இரண்டு செய்­தி­யாளர் மாநா­டு­களில் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது. கொழும்பில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேற்று முன்­தினம் இரவு சந்­திக்­க­வில்லை என தெரி­வித்­தனர்.

 இதே­போன்று நேற்­றைய தினம் சிறி­கொத்­தவில் நடை­பெற்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேற்று முன்­தினம் சந்­தித்­தா­கவும் அதன்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவா­தத்தில் பிர­த­மரைக் காப்­பாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி முன்­வந்­த­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எவ்­வா­றெ­னினும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேற்று முன்­தினம் இரவு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யமை தொடர்பில் இது­வரை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான தக­வல்கள் எதுவும் வெளி­வ­ர­வில்லை.

இதே­வேளை ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் வலு­வ­டைந்­து­கொண்டே செல்­கின்­றன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மித்­தி­ருந்த பொரு­ள­தார மறு­சீ­ர­மைப்பு குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்ததுடன் பிரதமரின் கீழ் இருந்த மத்திய வங்கியையும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவந்தார்.

 பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. ஆனால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதாக ஐக்கியதேசியக்கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜனா­தி­பதி–பிர­த­மரை சந்­திக்­கவேயில்லை; அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த

 

ஆர்.யசி

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து இறுதிமுடிவை அறி­விக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் நாளை மறு­தினம் 2ஆம் திகதி கூடு­கின்­றது. பிர­த­ம­ரு­டனோ ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளு­டனோ ஜனா­தி­ப­தியோ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ சந்­திப்­புகள் நடத்­த­வில்லை என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் தெரி­வித்­தனர்.

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு என்­ன­வென்­பதை கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்­பு­களில் அவர்கள் வெளி­ப­டுத்தி வரு­கின்ற நிலையில் எதிர்­வரும் 2ஆம் திகதி ஜனா­தி­பதி தலை­மையில் கூடும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் இறுதி முடிவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வுள்­ள­தாக கூறு­கின்­றனர்.   

மத்­திய வங்கி ஊழல் கார­ணி­களை உள்­ள­டக்கி கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்க்க முடி­யாது எனவும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு முன்­ன­தாக பிர­தமர் பதவி வில­கினால் தாம் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு நடத்த முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். இந்­நி­லையில் நாளை மறு­தினம் 2ஆம் திகதி கூடும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மற்றும் கட்­சியின் மத்­திய குழு உறுப்­பி­னர்கள் தமது நிலைப்­பாட்­டினை மக்­க­ளுக்கு வெளி­ப­டுத்­த­வுள்­ள­தாக கூறி­யுள்­ளனர்.

இது குறித்து நேற்று இடம்­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட அமைச்சர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த கூறு­கையில்.

எமது நிலைப்­பாடு என்­ன­வென்­பது தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. நாம் முன்­வைத்த கார­ணி­களை உள்­ள­டக்­கிய வகையில் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் அதனை எம்மால் ஒரு­போதும் நிரா­க­ரிக்க முடி­யாது. இதுவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் முடி­வாகும் உள்­ளது. எதிர்­வரும் 2ஆம் திகதி கூடும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் இந்த தீர்­மானம் மாறப்­போ­வ­து­மில்லை. எனினும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு முன்னர் பிர­த­மரே தீர்­மானம் எடுத்து தனது பத­வியை துறந்தால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடும் மாற்றம் பெரும். தேசிய அர­சாங்­கத்தை பாது­காத்து செல்ல முடியும். இல்­லையே நல்­லாட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

அதேபோல் நேற்று இரவு பிர­த­மரை ஜனா­தி­பதி சந்­தித்­த­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னார்­க­ளுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியினர் இரகசிய சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவையாகும். ஜனாதிபதி பிரதமரை சந்திக்கவில்லை முக்கிய நபர்களை சந்திக்கவும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-31#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.