Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகளின் விடுதலையின் அவசியம்

Featured Replies

அரசியல் கைதிகளின் விடுதலையின் அவசியம்

 

அர­சியல் கைதி ஆனந்தசுதா­க­ரனை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பூதா­க­ர­மாக எழுந்­தி­ருக்­கின்­றது. நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு தரப்­பி­னரும் அவ­ரு­டைய விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்து வரு­கின்­றனர். அர­சியல் தலை­வர்கள் மட்­டு­மல்­லாமல் சமூ­கத்தின் பல மட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­களும் அவரை மனி­தா­பி­மான முறையில் விடு­தலை செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

ஆயுட்­காலச் சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்ள ஆனந்தசுதா­க­ரனின் குடும்ப நிலை­மையைக் கவ­னத்திற் கொண்டு அவரை விடு­தலை செய்ய வேண்டும் என் ­பது இந்தக் கோரிக்­கையின் அடிப்­படை நிலைப்­பா­டாகும். ஆனந்த சுதா­க­ர­னுக்கு ஆணும் பெண்­ணு­மாக இரண்டு குழந்­தை கள். மக­னுக்குப் பதி­னைந்து வயது. மக­ ளுக்கு வயது பத்து. 

அந்தக் குழந்­தை­களை வளர்த்து வந்த தாயார் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த நிலையில் மர­ண­ம­டைந்­துள்ளார். பத்து வரு­டங்­க­ளா கக் கண­வனின் துணை­யின்றி, பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் தனி­மையில் தனது இரு குழந்­தை­க­ளையும் அவர் வளர்த்து வந்­துள்ளார். எதிர்­பா­ராத வித­மாக மரணம் அந்தத் தாயா­ரையும் பிள்­ளை­க­ளையும் பிரித்­து­விட்­டது. இதனால் தாயாரின் அர­வ­ணைப்பை இழந்து தவிக்கும் அந்தப் பிள்­ளை­க­ளுக்குத் தந்­தையின் பரா­ம­ரிப்பும் பாது­காப்பும் அவ­சி­ய­மாகி உள்­ளது. இந்த மனி­தா­பி­மானத் தேவை, ஆனந்தசுதா­க­ரனை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையில் அழுத்­த­மாகச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தாயை இழந்து தவிக்கும் அந்தக் குழந்­தைகள் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளி­டமும் செல்­வாக்கு மிக்­க­வர்­க­ளி­டமும் தமது தந்­தை­யாரை விடு­தலை செய்ய வேண்டும் என்று எழுத்து மூல­மா­கவும் நேர­டி­யா­கவும் கோரி­யி­ருக்­கின்­றார்கள். நாட்டின் உயர் தலை­வ­ரா­கிய நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்­டுள்ள ஜனா­தி­ப­தி­யையும் அவர்கள் நேர­டி­யாகச் சந்­தித்து தந்­தை­யாரை விடு­தலை செய்­யு­மாறு உருக்­க­மாக வேண்­டி­யி­ருக்­கின்­றார்கள். 

இந்தச் சந்­திப்பு ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் நடை­பெற்­றது. இந்தப் பிள்­ளை­களைச் சந்­திப்­ப­தற்­கான நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், குறிப்­பிட்ட நேரத்­திற்கு அவர்­களால் அங்கு செல்ல முடி­ய­வில்லை. சுமார் ஒரு மணித்­தி­யாலம் தாம­த­மா­கவே அவர்கள் அங்கு சென்­ற­டைந்­தார்கள். எனினும் ஆனந்தசுதா­க­ரனை விடு­தலை செய்ய வேண்டும் என்ற பூதா­க­ர­மான கோரிக்கை கார­ண­மாக ஜனா­தி­பதி தங்­க­ளுக்­காகக் காத்­தி­ருந்­த­தாக அந்தப் பிள்­ளை­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்தச் சந்­திப்பு குறு­கிய நேரமே இடம்­பெற்­றி­ருந்த போதிலும், தந்­தையை விடு­தலை செய்­வ­தாக பிள்­ளை­க­ளிடம் ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார். அதே­நேரம், அவர்­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி திரட்­டப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யி­லான கையெ­ழுத்­துக்கள் அடங்­கிய மகஜர் மற்றும் தாயார் மன அழுத்தம் கார­ண­மா­கவே மர­ண­ம­டைந்தார் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான மருத்­துவ சான்­றிதழ் என்­ப­னவும் இந்தச் சந்­திப்பின் போது ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உற­வி­னர்கள் கூறி­யுள்­ளனர்.

அந்தக் குழந்­தை­களின் அத்­தி­யா­வ­சியத் தேவை என்­பது அவர்­க­ளு­டைய உயிர்­வாழ்­த­லுடன் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­டது. எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரா­கிய அவர்கள் அப்­பா­விகள், அதனால், அவர்­க­ளு­டைய நிலைமை மிகுந்த பொறுப்­போடு அணு­கப்­பட வேண்­டி­யது. மனி­தா­பி­மானத் தேவை என்­ப­தனால், மனி­தா­பி­மா­னத்­து­ட னும் அதனைக் கடந்த ஒரு நிலை­யிலும் அவர்­க­ளு­டைய நிலைமை அரச தலை­வ­ரினால் பரி­சீ­லிக்­கப்­பட வேண்டும். அந்த அடிப்­ப­டை­யில அவர்­க­ளு­டைய பிரச்சி­னைக்கு முடிவு காணப்­பட வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

வெளி­நாட்­டுக்குச் செல்­வ­தற்­காக கொழு ம்பு சென்­றி­ருந்த வேளையில் கைது செய்­யப்­பட்ட ஆனந்தசுதா­கரன், தடுத்து வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, இரண்டு குழந்­தை­க­ளையும் அவ­ரு­டைய மனை­வியே பரா­ம­ரித்து வந்­துள்ளார். இரண்­டா­வது குழந்­தை­யா­கிய மகள் சங்­கீ­தா­, ஆ­னந்தசுதா­கரன் சிறையில் இருந்­த­போதே பிறந்­துள்ளார். அந்தக் குழந்­தைக்கு தனது தந்­தையை நேர­டி­யாகத் தெரி­யாது. இந்த நிலை­யி­லேயே தாயார் இறந்­த­போது, இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்­காக வீட்­டிற்கு அழைத்து வரப்­பட்ட தந்­தை­யா­ருடன் செல்­வ­தற்­காக அந்தக் குழந்தை அவரைப் பின்­தொ­ட ர்ந்து சிறைச்­சாலை வாக­னத்தில் ஏறி­யது. வாக­னத்தின் ஆச­னத்தில் அமர்ந்த தந்­தை­யாரின் மடியில் அவ­ரு­டைய அர­ வ­ணைப்பை நாடி அந்தக் குழந்தை அமர்ந்து கொண்­டது. 

தாயை இழந்த அந்தக் குழந்தை தந்­தையின் ஆத­ர­வையும் பாது­காப்­பையும் நாடிய அந்தச் செயல், அங்­கி­ருந்த சிறைக்­கா­வ­லர்­களை நெகிழச் செய்­தி­ருந்­தது. அங்கு பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸாரின் கண்­க­ளையும் அது கலங்கச் செய்­தி­ருந்­தது.

பிறப்பில் இருந்தே தந்­தையைப் பிரிந்­தி­ருந்த பத்து வயது நிரம்­பிய அந்தப் பிஞ்சுக் குழந்­தைக்கு தந்­தையின் பாசம் கிட்­டி­யி­ருக்­க­வில்லை. ஒரு குழந்­தைக்கு உள­வியல் ரீதி­யா­கவும், உடல் ரீதி­யா­கவும் அகப் புற நிலை­மை­களில் தந்­தை­யாரின் ஆத­ரவும், அன்பும் அவ­சியம். ஒரு குழந்­தையின் வளர்ச்சி வெறு­மனே தாயாரின் தொடர்ச்­சி­யான அன்புப் பரா­ம­ரிப்­பிலும் வளர்ப்­பிலும் மட்டும் தங்­கி­யி­ருப்­ப­தில்லை. தந்­தை­யாரின் பாது­காப்பும் அர­வ­ணைப்பும் வழி­காட்­டலும் ஒரு குழந்­தையின் முழு­மை­யான வளர்ச்­சிக்கு இன்­றி­ய­மை­யாத தேவை­யாகும். இது இயற்­கையின் நியதி. அந்த நிய­தியை இல்­லாமல் செய்­வ­தற்கு அல்­லது ஒரு குழந்­தையின் அந்த இயற்கை உரி­மையைத் தட்டிப் பறிப்­ப­தற்கு எவ­ருக்கும் அனு­மதி கிடை­யாது. அந்த இயற்கை உரிமை மதிக்­கப்­பட வேண்­டி­யது. 

சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­டது

அரச படை­க­ளையும் அர­சாங்­கத்­தையும் எதிர்த்து ஆயு­த­மேந்திப் போரா­டிய விடு­த­லைப்­பு­லி­களை அரசாங்கம் பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­த­ிரித்­தி­ருந்­தது. தொடர்ச்­சி­யாக மறுக்­கப்­பட்டு வந்த தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைகளுக்­கா­கவே தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­தார்கள். ஆனால், முன்­னைய அர­சாங்­கங்­களின் ஆட்சிக் காலத்தில் உல­க­ளா­விய ரீதியில் நில­விய பயங்­க­ர­வாதம் தொடர்­பி­லான நிலை­மையை வாய்­ப­்பாகப் பயன்­ப­டுத்தி, விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­தி­ரிக்­கப்­பட்டு, விடு­த­லைப்­பு­லி­களும் பயங்­க­ர­வா­தி­க­ளாக நோக்­கப்­பட்­டார்கள். 

இறுக்­க­மான கட்­டுக்­கோப்­புடன் தமிழ் மக்­களின் அர­சியல் உரிமை மறுப்­புக்கு எதி­ராகப் போரா­டிய விடு­த­லைப்­பு­லி­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்­காக அரசு தனது இரா­ணுவ இயந்­திரப் பொறி­மு­றையை முழு­மை­யான அளவில் அர­சாங்­கத்­திற்­கு­ரிய கடப்­பா­டு­களை மீறிய வகையில் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதனால், அர­சியல் உரி­மைக்­காகப் போரா­டி­ய­வர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­தி­ரிக்­கப்­பட்ட அதே­வேளை, தேசிய பாது­காப்­புக்­கான இரா­ணுவ இயந்­திரப் பொறி­முறை அதி­கா­ர­பூர்­வ­மான நிலையில் பயங்­க­ர­வா­தத்­திற்கு ஒப்­பான காரி­யங்­களில் ஈடு­பட்­ட­தாக மனித உரிமை அமைப்­புக்கள் மட்­டு­மல்­லாமல், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­காகக் குரல் கொடுத்­த­வர்­க­ளும்­ கூட அர­சாங்­கத்தின் மீது குற்றம் சுமத்தி வந்­தார்கள். 

பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­தி­ரிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளையும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டார்கள் என்று கரு­தப்­பட்­ட­வர்­க­ளையும் அடக்கி ஒடுக்­கு­வ­தற் ­காக அரசு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­தை­யும் அவ­ச­ர­காலச் சட்­ட­வி­தி­க­ளையும் பயன்­ப­டுத்தி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அவ­ச­ர­காலச் சட்­ட­வி­தி­களும் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இரா­ணு­வத்­திற்கும் பொலி­ஸா­ருக்கும் அள­வற்ற அதி­கா­ரங்­களை அள்ளி  வழங்­கி­யி­ருந்­தன. பயங்­க­ர­வாதம் என அர­சாங்­கத்­தினால் வகைப்­ப­டுத்­தப்­பட்ட செயல்கள் இடம்­பெ­றாத போதிலும், அத்­த­கைய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முயன்­றார்கள் அல்­லது தயா­ரா­கி­யி­ருந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் எவ­ரையும் கைது செய்து தடுத்து வைப்­ப­தற்கும், அவர்கள் மீது கடு­மை­யான விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கும் இந்த அதி­கா­ரங்கள் பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் நேர­டி­யாகக் குற்றம் இழைக்­கா­விட்­டாலும், (பயங்­க­ர­வாதச் செயல்கள் என அர­சாங்­கத்­தினால் குறித்துக் காட்­டப்­பட்ட) இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்­தார்கள், உத­வி­யி­ருந்­தார்கள் அல்­லது உறு­து­ணையாகச் செயற்­பட்­டி­ருந்­தார்கள் என சந்­தேகம் தெரி­வித்து அந்தக் குற்றச் செயல்­களை நிரூ­பிப்­ப­தற்­கான ஆதா­ரங்­களைத் தேடும் வரையில் நீண்ட கால­மாகச் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். 

அவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து விடு­த­லைப்­பு­லிகள் பற்­றிய பல்­வேறு தக­வல்­களைப் பெறு­வ­தற்கு முயன்ற புல­னாய்­வா­ளர்கள், அவர்­க­ளுக்கு எதி­ராக ஆக்­க­பூர்­வ­மான ஆதா­ரங்­களைத் திரட்டி, வழக்குத் தாக்கல் செய்து சட்­ட­ரீ­தி­யாகத் தண்­டிப்­ப­தற்கு முயற்­சிக்­க­வில்லை. இதனால் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களின் தடுப்­புக்­காவல் காலம் நீண்டு சென்­ற­தே­யொ­ழிய அவர்கள் உரிய முறையில் உரிய காலத்தில் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. 

இதன் கார­ண­மா­கவே யுத்தம் முடி­வுக்கு வந்து கிட்­டத்­தட்ட ஒரு தசாப்த கால­மாகப் போகின்ற நிலை­யிலும் அர­சியல் கைதி­களின் பிரச்­சினை முடி­வுக்கு வராமல் பூதா­க­ர­மாக எழுந்து நிற்­கின்­றது. அந்த வகை­யி­லேயே அர­சியல் கைதி­யா­கிய ஆனந்த சுதா­க­ரனின் விவ­காரம் இன்று நாட­ளா­விய ஒரு முக்­கிய பிரச்­சி­னை­யாக விஸ்­வ­ரூபம் எடுத்­துள்­ளது.

இது சட்ட ரீதி­யான ஒரு பிரச்­சினை என்­ப­தற்கும் அப்பால், மனி­தா­பி­மான பிரச்­சி­னை­யாக, அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னை­யாக எழுந்­துள்­ளது. அது மட்­டு­மல்­லாமல், மனித உரிமை மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீற­லாக உரு­வ­கப்­ப­டுத்தக் கூடிய பிரச்­சி­னை­யாக உருமாறி­யி­ருக்­கின்­றது.

அர­சியல் கைதிகள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்

ஆனந்த சுதா­க­ரனின் குடும்ப நிலையை குறிப்­பாக அவ­ரு­டைய இரண்டு குழந்­தை­களின் நிலை­மை­யையும் கருத்திற் கொண்டு மனி­தா­பி­மான ரீதியில் அவரை விடு­தலை செய்ய வேண்டும் என்று பலரும் கோரி­யி­ருக்­கின்­றார்கள். அவ­ருக்கு மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்ய வேண்டும்.பொது மன்­னிப்பின் கீழ் அவரை விடு­தலை செய்ய வேண்டும் என்ற வேண்­டு­கோள்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் அடக்கம். 

அர­சியல் கைதி என்ற ரீதியில் மனி­தா­பி­மானம், மன்­னிப்பு, பொது மன்­னிப்பு என்­ப­வற்­றுக்கு அப்பால் அர­சியல் ரீதி­யாக அவர் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்­பதே தர்க்க ரீதி­யான நிலைப்­பாடு. ஆனந்தசுதா­கரன் மட்­டு­மல்ல. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களும், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு, குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூல சாட்­சி­யத்தின் அடிப்­ப­டையில் தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்­களும் இந்த நிலைப்­பாட்­டிற்கு அமை­வாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும். 

அந்த வகையில் விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தற்குப் போதிய கார­ணங்கள் இருக்­கின்­றன. முன் உதா­ர­ணங்­களும் காணப்­ப­டு­கின்­றன. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களும், அந்தச் சட்­டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு தண்­டனை பெற்­றி­ருப்­ப­வர்­களும் முதலில் அர­சியல் ரீதி­யான கார­ணத்­திற்­கா­கவே கைது செய்­யப்­பட்­டார்கள். அர­சியல் ரீதி­யான கார­ணத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது என்­பதே யதார்த்தம். ஆனால் அந்த உண்மை இப்­போது மறைந்து கிடக்­கின்­றது. மறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை அர­சாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அவர்­களைப் பயங்­க­ர­வா­தி­க­ளாக நோக்­கு­வதை அரசு கைவிட வேண்டும். அவர்கள் அர­சியல் கைதிகள் என்ற உண்­மை­யான நிலைப்­பாட்டை அர­சாங்கம் ஒப்­புக்­கொண்டு அதன் அடிப்­ப­டையில் அவர்­களை விடு­தலை செய்­வ­தற்கு அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முன் வர  வேண்டும். 

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அவ­ச­ர­காலச் சட்­டமும் பயங்­க­ர­வாதம் என சித்­தி­ரிக்­கப்­பட்ட அர­சியல் உரி­மைக்­கான போராட்ட நட­வ­டிக்­கை­களை அடித்து நொறுக்கிக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக விசே­ட­மாகக் கொண்டு வரப்­பட்­டன. மிகவும் இறுக்­க­மாக அந்தச் சட்­டங்கள்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன.உரி­மைக்­காகப் போரா­டு­வதும், அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காகப் போரா­டு­வதும் ஜன­நா­யக உரிமை சார்ந்­தது. அது குற்றச் செய­லல்ல. அதனை ஒட்­டு­மொத்­த­மாகப் பயங்­க­ர­வாதச் செயல் என்று வரை­யறை செய்­து­வி­டவும் முடி­யாது.

உரி­மைக்­கான போராட்­டமும், அர­சியல் உரி­மைக்­கான போராட்­டமும் தனி­ம­னித நன்­மைகள், தனி மனித இலா­பங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­டது, அது சமூகம் சார்ந்­தது. இனம், மொழி, மதம் என்­ப­வற்­றையும் சார்ந்­தது. தனி மனித நிலை­மை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட அக்­க­றை­யையும் நோக்­கத்­தையும் கொண்­டி­ருப்­பதன் கார­ண­மா­கவே அது அர­சியல் சார்ந்­த­தாக, அர­சியல் விவ­காரம் என்ற அந்­தஸ்தைப் பெறு­கின்­றது. 

அர­சியல் என்று வரும்­பொ­ழுது, நாட்டின் சாதா­ரண சட்­டங்­க­ளையும், விசேட சட்­டங்­க­ளை­யும்­கூட அது கடந்து விடு­கின்­றது. அத்­த­கைய ஒரு நிலை­மையில் அது மன்­னிப்­பா­கலாம். பொது­மன்­னிப்­பா­கவும் அமை­யலாம். இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக தண்­டனைக் கைதி­யா­கவும், அதே­வேளை வழக்­கொன்றில் தீர்ப்பை எதிர்­நோக்­கி­யி­ருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­ன­ரா­கிய செல்­வ­ராஜா ஜெனி­பனின் விடு­த­லையைக் கொள்­ளலாம். 

மிகவும் நெருக்­க­டி­யான ஓர் அர­சியல் சூழலில் 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் உயி­ரா­பத்­துக்­க­ளுக்கு மத்­தியில் பொது வேட்­பா­ள­ராகக் களம் இறங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நாட்டு மக்கள் அமோ­க­மாக ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தார்கள். அந்த ஆத­ரவின் மூலம் ஜனா­தி­பதி பத­வியைப் பொறுப்­பேற்­றதன் பின்னர், ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட ஆண்டு விழா நிகழ்­வின்­போது, பகி­ரங்க மேடையில் வைத்து செல்­வ­ராஜா ஜெனிபன் மன்­னிப்பு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கையா­லேயே அவரை அவ­ரு­டைய குடும்ப உற­வி­னர்­க­ளிடம் கைய­ளித்து அவ­ருக்கு விடு­தலை வழங்­கி­யி­ருந்தார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராகப் பதவி வகித்த காலத்தில், அவரைக் கொலை செய்­வ­தற்­காக சதித்திட்டம் தீட்­டினார் என்ற சந்­தே­கத்தின் பேரி­லேயே செல்­வ­ராஜா ஜெனிபன் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். தன்னைக் கொலை செய்ய முற்­பட்ட முன்னாள் போராளி ஒரு­வ­ரையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்தார் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாடே போற்­றி­யது. ஜெனிபன் விடு­தலை செய்­யப்­பட்­டதை எந்­த­வொரு பௌத்த சிங்­கள தீவி­ர­வாத அமைப்போ அல்­லது எந்­த­வொரு பௌத்த சிங்­களத் தீவிரச் செயற்­பாட்­டா­ளரோ எதிர்த்து, அந்த நட­வ­டிக்கைக்காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கண்­டித்து போர்க்­கொடி உயர்த்­தவும் இல்லை போராடத் துணி­யவும் இல்லை. 

அர­சியல் ரீதி­யான கடந்­த­காலச் செயற்­பா­டுகள் 

நல்­லாட்சி அர­சாங்கம் மட்­டு­மல்ல. கடும்­போக்கைக் கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்­கத்­திலும் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களும், விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் முக்­கி­யஸ்­தர்­களும் அர­சியல் ரீதி­யான கார­ணங்­க­ளுக்­காக விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து, சர­ண­டை­யு­மாறு அர­சாங்கம் விடுத்த வேண்­டு­கோளை ஏற்று இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்­களில் 11 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்­களை முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விடு­தலை செய்­தி­ருந்தார்.. ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக் ஷவும் அவ­ரு­டைய முக்­கிய அமைச்­சர்­களும் முக்­கிய உயர் அதி­கா­ரி­களும் விடு­த­லைப்­பு­லி­களின் அமைப்பில் முக்­கி­யஸ்­தர்­க­ளாக இருந்­த­வர்­களை, பகி­ரங்­க­மாக பொது மேடை­களில் வைத்து அவர்­க­ளு­டைய குடும்­பத்­தி­ன­ரிடம் கைய­ளித்து விடு­தலை செய்த நிகழ்­வு­களும் பர­வ­லாக இடம்­பெற்­றி­ருந்­தன.

அர­சாங்­க­த்­தினால் பயங்­க­ர­வா­திகள் என சித்­த­ரிக்­கப்­பட்டு, சிங்­கள மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் மிகவும் பயங்­க­ர­மா­ன­வர்கள் என வெளிச்சம் போட்டு காட்­டப்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் உறுப்­பி­னர்­களை இவ்­வாறு விடு­தலை செய்­த­போது,பயங்­க­ர­வாதச் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்று கூறப்­ப­டு­கின்ற பெரும்­பான்மை இனத்­த­வர்கள் எவரும் அதனைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு முற்­ப­ட­வில்லை. சிங்­களத் தேசி­ய­வா­தி­க­ளும்­கூட அதற்கு எதி­ராகக் குரல் எழுப்­பவோ போரா­டவோ முற்­ப­ட­வில்லை. 

அது மட்­டு­மல்­லாமல், விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் வலது கர­மாக இருந்து செயற்­பட்­ட­வ­ரா­கிய கருணா அம்மான் என்று அழைக்­கப்­பட்ட விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உப­த­லை­வர்­களில் ஒரு­வ­ராக்கி, அவரை தனது அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக்கி அர­சியல் ரீதி­யாக அழகு பார்த்­தி­ருந்தார். 

முர­ளி­தரன் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் முக்­கிய தலை­வர்­களில் ஒருவர். அவர் ஒரு பயங்­க­ர­வா­தி­யாக நோக்­கப்­ப­ட­வில்லை. விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் முக்­கிய பொறுப்­புக்­களை ஏற்­றி­ருந்த அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மாறாக அவ­ருக்கும் பிள்­ளையான் என்­ற­ழைக்­கப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் மற்றும் ஏனை­யோ­ருக்கும்  தண்­டனை விலக்­க­ளிக்­கப்­பட்­டது. அவ்­வாறு அவர்­க­ளுக்கு தண்­டனை விலக்­க­ளித்த முன்­னைய அர­சாங்­கத்­தையோ அல்­லது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவையோ சிங்­களத் தீவி­ர­வா­தி­கள்­கூட, எதிர்க்க முற்­ப­ட­வில்லை. அவரைக் கண்­டிப்­ப­தற்கு முயற்­சிக்­கவும் இல்லை. அவ­ரு­டைய செயல் அர­சியல் ரீதி­யாக நியா­ய­மா­னது என்று ஏற்று அமை­தி­யாக இருந்­தார்கள். 

அதே­போன்று, அர­சாங்­கங்­க­ளுக்கு சிம்ம சொப்­ப­ன­மாக விளங்­கிய விடு­த­லைப்­பு­லி­களின் இரா­ணு­வத்­திற்கு எதி­ரான தாக்­கு­தல்கள்,குண்­டுத்­தாக்­கு­தல்கள் என்­ப­வற்­றுக்கு அவ­சி­ய­மான ஆயு­தங்­களை சர்­வ­தேச ஆயுதச் சந்­தை­களில் உலாவி ஆயு­தங்­களைப் பெற்றுக் கொடுத்தார் என்று பகி­ரங்­க­மாக சர்­வ­தேச அளவில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நாதன் வெளி­நாட்டில் வைத்து கைது செய்­யப்­பட்டார். அவர் உட­ன­டி­யாக நாட்­டுக்குக் கொண்டு வரப்­பட்­ட­போ­திலும், அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்து அவரை முன்­னைய அர­சாங்கம் சட்­ட­ரீ­தி­யாகத் தண்­டிக்­க­வில்லை. நல்­லாட்சி அர­சாங்­க­மும்­கூட அவரை எதுவும் செய்­ய­வில்லை. அவர் மன்­னிக்­கப்­பட்டு சாதா­ரண வாழ்க்கை வாழ்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். அர­சியல் சார்ந்த நிலை­யி­லேயே இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. 

நல்­லி­ணக்க சமிக்­ஞை­யாக விடு­தலை உத்­த­ரவு வர வேண்டும் 

இந்த நிலையில் முன்­னைய அர­சாங்­க­மும் ­சரி, நல்­லாட்சி அர­சாங்­க­மும்­ சரி பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­த­ார்கள் என்ற பொது­வான சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களை அர­சியல் கைதி­க­ளாக ஏற்­றுக்­கொள்ள மறுப்­பது முரண் நிலை சார்ந்த வேடிக்­கை­யாக உள்ளது. 

அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிராக ஆயுதம் ஏந்தி தீவிரமாகப் போராடியவர்களுக்குத் தலைமை ஏற்றிருந்த அல்லது அவர்களுடைய செயற்பாடுகளில் முக்கிய பங்கேற்றிருந்தவர்களை அரசியல் ரீதியாக மன்னித்து, அவர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கங்கள் அனுமதித்துள்ளன. இருப்பினும் விடுதலைப்புலிகளுக்குப் பல்வேறு வழிகளில் உதவினார்கள் என்ற குற்றச்சாட்டிற்கும் அவ்வாறு உதவினார்கள் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்கு  முற்பட்டிருப்பது, நியாயமான, சட்ட ரீதியான செயற்பாடாகத் தெரியவில்லை. அது, உள்நோக்கம் கொண்ட ஓர் அரசியல் பழிவாங்கலாகவே தோன்றுகின்றது.

யுத்தம் முடிவடைந்து, விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான செயற்பாடுகள் முடக்கப்பட்டு 9 வருடங்களாகின்றன. இருப்பினும், யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்ப டுத்தப் போகின்றோம் எனக் கூறி தடுத்து வைத்திருப்பது நியாயமான செயற்பாடாகத் தெரியவில்லை. பயங்கரவாதச் சூழல் அல்லது யுத்தச் சூழல் இல்லாத நிலையிலும், நீண்ட காலமாகச் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்ற அவர்களுடைய சிறைவாச காலத்தைக் கணக்கில் எடுக்காமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி, அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்கு முற்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாகத் தோன்றவில்லை. 

ஏனெனில் யுத்தம் முடிவடைந்த தையடுத்து, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றிச் செல்லவேண்டிய ஒரு கால கட்டத்தில் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளாக ஏற்க மறுத்து, அவர்களை இன்னும் பயங்கரவாதிகளாகக் காட்டி தண்டிக்க முற்பட்டிருப்பது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. 

எனவே, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அதற்கான முயற்சிகளின் முன்னேற்றத்திற்காகவும் நல்லெண்ண சமிக்ஞையாக, அரசியல் ரீதியான நிலைப் பாட்டில் ஆனந்த சுதாகரன் விடுதலை செய் யப்பட வேண்டும். ஆனந்த சுதாகரனின் பிள்ளை களைப் போன்று தமது கணவன்மார், மகன் மார்களின் விடுதலைக்காகவும், அவர்களின் உதவிக்காகவும் ஏங்கிக் கொண்டிருப்பவர் களின் துன்ப நிலைகளைக் கருத்திற் கொண்டு, சிறைச்சாலையில் உள்ள ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதியும் நல்லாட்சி அரசாங்கமும் முன்வர வேண்டும். 

 

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-31#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.