Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்தினால் சவால்களை சமாளிக்கலாம் !

Featured Replies

கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்தினால் சவால்களை சமாளிக்கலாம் !

 

இந்­நாட்டில் வாழும் முஸ்­லி­ம்­களின் இருப்­புக்கும், உரி­மை­க­ளுக்கும் திரை­ம­றை­விலும், நேர­டி­யா­கவும் வர­லாற்று நெடுங்­கிலும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்த நிலையில், அண்­மைய தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரி­மைக்­கான பாது­காப்­பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறை­சாற்றி­யி­ருக்­கி­றது.

அவ­சர காலச்­சட்­டமும், ஊர­டங்­குச்­சட்­டமும், அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த வேளை­யில்தான் இன­வெ­றி­யர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் பொரு­ளா­தார அழிவை முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தினர். சட்­டத்தைப் புறந்­தள்ளி அழிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட வன்­மு­றை­யா­ளர்­களை நோக்கி சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் படைத்­த­ரப்பின் ஆயு­தங்­க­ளி­லி­ருந்து குண்­டுகள் பாய­வில்லை. மாறாக அப்­பாவி முஸ்­லிம்கள் படை­க­ளினால் தாக்­கப்­பட்­டார்கள் என்­பது பல்­வேறு தரப்­புக்­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளாக உள்­ளதைக் காணலாம்.

அம்­பா­றை­யிலும் கண்டிப் பிர­தே­சங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் சம­கால முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பை மாத்­தி­ர­மின்றி சமூக, அர­சியல், கல்வி, சமய, கலா­சாரம் உட்­பட அத்­த­னை­யையும் சிதைத்­தி­ருக்­கி­றது. அத்­துடன் எதிர்­கால முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரி­மையை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யு­முள்­ளது. மறு­புறம் முஸ்­லிம்­களின் அர­சியல் முதல் பல்­வேறு விட­யங்­களில் காணப்­படும் பல­வீ­னத்தை பல­மாக்­கு­வ­தற்­கா­ன­தொரு சந்­தர்ப்­பத்­தையும் ஏற்­ப­டுத்தித் தந்­தி­ருக்­கி­றது.

இவ்­வன்­முறை அழிப்­புக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு பல­கோடி நஷ்­டங்­களை இழக்கச் செய்து ஓர் உயி­ரையும் பிரியச் செய்­தி­ருந்­தாலும், சமூ­கத்­தி­லுள்ள பலர் மத்­தியில் ஒரு வகை எழுச்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வெ­ழுச்சி ஆரோக்­கி­ய­மா­ன­தாக கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வ­தற்கு வழி­ந­டத்தக் கூடிய தலை­மைத்­து­வத்தின் தேவை அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

நாட்டின் அபி­வி­ருத்தி முதல் பல்­வேறு விட­யங்­களில் இந்­நாட்டு பிர­ஜைகள் என்ற வகையில் முஸ்­லிம்கள் அன்று முதல் இன்று வரை தங்­க­ளது வகி­பா­கத்தைச் செலுத்தி வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில், பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள இன­வாத அர­சி­யல்­வா­தி­க­ளி­னாலும், பௌத்த தேரர்­க­ளி­னாலும் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற பிர­சா­ரங்கள் பௌத்த சிங்­கள மக்­களின் ஒரு சாராரை மூளைச்­ச­லவை செய்து வரு­கி­றது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் அண்­மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை இப்­பி­ர­சா­ரங்­களை தெளிவு­ ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. நாட்டின் பொது­வான சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமல் அவர்­க­ளுக்­கென்று ஷரீஆ சட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தனி­யான பாட­சாலைக் கட்­ட­மைப்­பொன்று செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஹலால் ஊடாக முஸ்லிம் அல்­லாத நுகர்­வோ­ருக்கும் வரி சுமத்­தப்­ப­டு­கி­றது என பல்­வேறு விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள தேரர் இந்­நாட்டில் வாழும் பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுக்­குள்ள சலு­கை­களை விட அதிக சலு­கைகள் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை சிங்­கள மக்­க­ளி­டையே ஆழ­மாகப் பதிந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

 சிங்­கள மக்­களால் அதி­க­மாக வாசிக்­கப்­படும் சகோ­தர மொழிப் பத்­தி­ரிகை ஒன்றில் அவ­ரது இவ்­வ­றிக்கை வெளிவந்­தமை சிங்­

கள மக்கள் மத்­தி­யி­லுள்ள முஸ்லிம் எதிர்ப்­பா­ளர்­களின் உணர்­வு­களை மேலும் வலுப்­ப­டுத்­தி­யி­ருக்கும். இவ்­வா­றான நிலையில், இவ­ரது அறிக்­கைக்கு முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து பதில்கள் வழங்­கப்­பட்­டுள்ள போதி­லும் அப்­ப­தில்கள் எந்­த­ளவு தூரம் சிங்­கள மக்­க­ளி­டையே சென்­ற­டைந்­தி­ருக்கும் என்­பது கேள்­விக்­கு­றி­யா­னது.

 முஸ்­லிம்­களின் சமூக, சமய, கலா­சார, விழு­மிய, பொரு­ளா­தார, கல்விக் கட்­ட­மைப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து கடந்த மூன்று அல்­லது நான்கு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்த சமூகப் பார்வை போன்று, சம­கா­லத்­தி­லில்லை. முஸ்­லிம்­களின் செயற்­பாடு குறித்த அவர்­களின் சமூகப் பார்­வையை இவ்­வா­றான விச­மப்­பி­ர­சா­ரங்கள் திசை­மாற்­றி­யி­ருக்­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டாமல் இருக்க முடி­யாது.

ஜன­நா­யகத் தேச­மொன்றில் வாழும் ஒரு தனித்­துவ இன­மென்ற ரீதியில் முஸ்­லிம்கள் குறித்த ஏனைய சமூ­கத்­தி­லுள்ள தவ­றான சமூ­கப்­பார்வை களை­யப்­பட வேண்­டு­மென்­ப­தோடு, தனித்­துவ அடை­யா­ளத்­துடன் வாழ்­வ­தற்கும், அவ்­வாழ்­வு­ரி­மைக்கு எதி­ரான சவால்கள் வரு­கின்­ற­போது அவற்றை ஒன்­றி­ணைந்து முறி­ய­டிப்­ப­தற்­கு­மான முறை­யான பொறி­மு­றையின் கீழ் முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்­டிய தேவை­யுள்­ள­தாகக் கருத்­துக்கள் பரி­மா­றப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்­டு­மாயின், முஸ்­லிம்கள் குறித்த தவ­றான வாதப்­பி­ர­தி­வா­தங்­களும், போலிப்­பி­ர­சா­ரங்­களும் களை­யப்­பட வேண்­டு­மாயின், முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கு­கின்ற சவால்கள் இரா­ஜதந்­திர ரீதி­யாக முறை­யான பொறி­மு­றை­க­ளி­னூ­டாக வெற்றி கொள்­ளப்­பட வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் சக்­தி­மிக்­க­தாக்­கப்­பட வேண்டும்.

பல்­லின சமூகத்தில் வாழும் ஒரு தனித்­துவ இனம் தலை­நி­மிர்ந்து வாழ வேண்­டு­மா­யின் அச்­ச­மூ­கத்­திற்­கான அர­சியல் பலம் உறு­தி­யாக இருக்க வேண்டும் என்­பது வர­லா­றுகள் கற்­றுத்­தரும் பாட­மா­க­வுள்­ளது. இதற்கு உதா­ரண­மாக, முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் அர­சியல் நகர்­வு­க­ளையும், சமூகம் சார்பில் அர­சியல் அதி­கா­ரத்­தி­னூ­டாக பெற்­றுக்­கொண்ட உரி­மை­க­ளையும் சுட்­டிக்­காட்­டலாம்.

இருப்­பினும், தற்­போதைய முஸ்லிம் சமூ­கத்­திற்­கான அர­சியல் பலம் பல­வீ­ன­ம­டைந்­தி­ருப்­ப­தனால் முஸ்­லிம்கள் பல்­வேறு முனை­க­ளிலும் வஞ்­சிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்

முஸ்லிம் அர­சி­யலின் பலமும் பல­வீ­னமும்

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றை சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலம், பிற்­பட்ட காலம் என வகுத்­துக்­கொண்டால், இவ்­விரு வர­லாற்றுக் காலங்­க­ளிலும் முஸ்­லிம்கள் நெருக்­க­டி­க­ளுக்கும், பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம்­கொ­டுத்­தி­ருக்­கி­றார்கள். பல்­லின சமூகக் கட்­ட­மைப்பைக் கொண்ட இந்­நாட்டில் ஒரு இனம் பிறி­தொரு இனத்தின் சில குழுக்­க­ளினால் ஏதோ ஒரு வகையில் காலத்­திற்குக் காலம் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றது. வன்­மு­றைகள் ஏவி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. உயிர், உட­மைகள், வாழ்­வி­டங்கள் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. உரி­மை­களை இழந்­தி­ருக்­கின்­றன.

1814, 1915, 1983, 1990, 2014, 2017 மற்றும் கடந்த மாதம் ஏற்­பட்ட இன­மோ­தல்கள் மற்றும் அட்­டூ­ழி­யங்­களை இவற்­றிற்கு உதா­ர­ணங்­க­ளாகக் குறிப்­பி­டலாம். இக்­கா­லங்­களில் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்த ஒரு சிலர் ஆட்­சி­யா­ளர்­களின் செல்லப் பிள்­ளை­க­ளாகச் செயற்­பட்டு இனத்­து­வத்தை அட­மானம் வைத்­து­மி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் பல­வீ­ன­மான அர­சியல் செயற்­பா­டுகள் ஒரு தனித்­துவ சமூ­கத்தின் வாக்­குப்­ப­லத்தைப் பல­வீ­ன­ம­டையச் செய்­தி­ருக்­கி­றது. உரி­மை­களைக் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

சுதந்­தி­ரத்­திற்கு முன்னும் பின்னும் உரு­வான சில சூழ்­நி­லைத்­தாக்கங்களின் விளை­வு­களால் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அமைப்­புக்கள் மற்றும் அர­சியல் கட்­சிகள் உத­ய­மா­கி­யி­ருக்­கின்­றன. இவ்­வ­கையில், 1944 ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய அர­சியல் சங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்­லா­மிய முற்­போக்கு முன்­னணி ஆரம்­பிக்­கப்­பட்­டது. முஸ்லிம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி 1964 இல் தோற்றம் பெற்­றது. அவ்­வாறு அஸீஸ் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ், ஐக்­கிய முஸ்லிம் மக்கள் முன்­னணி போன்ற கட்­சி­களும் உரு­வா­கின.

ஆனால், இக்­கட்­சி­க­ளினால் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு முழு­மை­யான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக கூட்­டாக இணைந்து செயற்­ப­டவும் முடி­ய­வில்லை. இதனால் முஸ்லிம் அர­சியல் பல­வீ­னம­டைந்­தது. அத்­துடன் கால ஓட்­டத்தில் இக்­கட்­சிகள் மக்கள் செல்­வாக்கை இழந்­தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களை ஒன்­றி­ணைக்கும் பல­மிக்­க­தொரு அர­சியல் கட்சி உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான முயற்­சி­களும் ஆரோக்­கி­ய­மாக இத­ய­சுத்­தி­யோடு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை இக்­கட்­சி­களின் செல்­வாக்­கி­ழப்­பையும் அதனால் ஏற்­பட்ட பல­வீ­னத்­தையும் முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் நோக்க முடி­கி­றது.

 இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றுக் காயங்­க­ளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்­டு­மாயின் தன்­மா­னத்தை இழக்­காத, உறு­தி­யான கொள்கைப் பிடிப்­போடு கூடிய, தனித்­து­வ­மிக்க, பல­மான அர­சியல் கட்சி ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்ற சிந்­தனை பெரும் தலைவர் மறைந்த அஷ்­ரப்­பிடம் உதித்­தது. இந்த உணர்வின் வழியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் கட்சி 1982 ஆம் ஆண்டு கிழக்கில் ஆரம்­பிக்­கப்­பட்டு, 1986இல் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­பட்­டது.

அது­வரை, முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யிலும் மாற்றுச் சமூ­கத்­திலும் தங்­களை சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு அர­சியல் செய்­த­வர்கள் அஷ்ரப் எனும் ஆளு­மை­யினால் உரு­வாக்­கப்­பட்ட முஸ்லிம் காங்­கி­ரஸின் வர­வை­ய­டுத்து அவர்­க­ளது செல்­வாக்கு குறிப்­பாக கிழக்கு அர­சி­யல்­வா­தி­களின் செல்­வாக்குச் சரியத் தொடங்­கி­யது.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் இன்னும் ஓரிரு தேசியக் கட்­சி­க­ளி­னதும் உறுப்­பி­னர்­க­ளாக அங்­கத்துவம் பெற்று, மக்கள் அர­சியல் மயப்­ப­டு­வதை தடுத்­துக்­கொண்டு, தங்­க­ளின்பால் மக்­களை இணைத்­துக்­கொண்­ட­வர்­க­ளாக ஒவ்­வொரு தேர்தலிலும் போட்­டி­யிட்டு, சமூகம் தோல்­வி­யுற்று, அவர்கள் மட்டும் வெற்­றி­பெற்ற வர­லாற்றைக் காண முடி­கி­றது.

குறிப்­பாக, வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் வரவு இவர்­களின் இவ்­வா­றான சித்து விளை­யாட்­டுக்கு முற்­றுப்­புள்­ளி­யாக அமைந்­தது. 1989ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்தலி­னூ­டாக 4 ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொண்ட அஷ்ரப் 1994ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­லின்­போது 7 ஆச­னங்­களைப் பெற்று இந்­நாட்டின் தலை­யெ­ழுத்தை மாற்றும் சக்­தியை அன்­றைய பிர­த­ம­ராக இருந்த சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­ண­துங்­க­வுக்கு வழங்­கினார். ஆட்சி மாற்­றத்­திற்கு அவர் வழி நின்றார்.

முஸ்­லிம்கள் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­ப­டாத, நொந்­து­கெட்ட சமூ­க­மாக இருந்து, ஒவ்­வொரு தேர்தல்­க­ளிலும் வாக்­க­ளித்து அவ்­வாக்­கு­க­ளினால் வெற்­றி­பெ­று­ப­வர்கள் தங்­க­ளது தனி­நபர் நலன்­களை அடைந்­து­கொள்­வ­தற்­கான பக­டைக்­காய்­க­ளாக மக்­களைப் பயன்­ப­டுத்­தினர். குறிப்­பாக வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களின் வாக்­குகள் இந்­நாட்டின் ஆட்­சியைத் தீர்­மா­னிக்கும் சக்தி பெற்­றி­ருந்தும் அந்த வாக்குச் சக்­தியை ஒன்­று­தி­ரட்டக் கூடிய ஒரு தலை­மைத்­துவம் அஷ்ரப் எனும் ஆளுமை முஸ்லிம் காங்­கி­ரஸை உரு­வாக்கும் வரை உத­ய­மா­க­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

அஷ்­ரப்பின் ஆரோக்­கி­ய­மிக்க அர­சியல் பயணம் தென்­னி­லங்­கையில் பாரிய அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யது. ஆளு­மையும் அர­சியல் எதிர்­கால வியூக சிந்­த­னையும் நிறைந்த அத்­த­லை­வரின் அர­சியல் பய­ணத்தின் வெற்றி ஒளி இலங்கை முழுதும் பிர­கா­சிக்கத் தொடங்­கி­யதன் விளைவு அவரை நோக்­கிய கருத்­து­வா­தங்­களை அதி­க­ரிக்கச் செய்­தது.

சமூக நலன்­கொண்டும் நாட்டின் நலன் கரு­தியும் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக கூக்­கு­ரல்­களை பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் அதற்கு வெளியிலும் சில்­லறை முஸ்லிம் அர­சியல் நபர்­க­ளைக்­கொண்டே முன்­னெ­டுக்கச் செய்­யப்­பட்­டன. அதன் முடிவு 2000ஆம் ஆண்டில் ஹெலிக்­கொப்டர் விபத்­தி­னூ­டாக முஸ்லிம் சமூ­கத்­திற்­கான அவ­ரது குரல் மௌன­மாக்­கப்­பட்­டது.

அவ­ரது மர­ணத்தின் பின்னர் ஏற்­பட்ட பிள­வு­க­ளினால் உரு­வான கட்­சிகள் தங்­க­ளது பிராந்­திய அர­சி­ய­லுக்கு முன்­னு­ரிமை வழங்­கியும் செயற்­பட ஆரம்­பித்­தன. இதனால் முஸ்லிம் அர­சியல் தேசிய ரீதியில் பல­வீ­ன­ம­டைந்­தது. முஸ்லிம் அர­சி­யலின் பல­வீனம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பல­மாக அமைந்­தது. தற்­போது முஸ்­லிம்­களின் மூக்கின் நுனி­வரை இன­வாதம் வந்து நிற்­கி­றது.

முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மின்றி, இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­க­மான தமிழ் மக்கள் மீதும் கடந்த காலங்­களில் இன­வாதம் அவற்றின் இருப்புக் கரங்­களை நீட்­டி­யது. அதனால் உரு­வான இனப்­பி­ரச்­சி­னைக்கும் அதன் அழி­வு­க­ளுக்கும் தீர்வும், நிவா­ர­ணமும் கிடைக்கப் பெறாத நிலையில் சிறு­பான்மை சமூ­கங்­களின் ஆத­ர­வுடன் 2015 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி என்ற கூட்­டாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களின் மீதான நம்­பிக்கை குறைந்­துள்­ளன.

 இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வைக் காணும் நோக்­கோடு அவற்றை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் அல்­லது அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் அதற்­கான முயற்­சி­கள், இடைக்­கால அறிக்கை இன்று கேள்விக் குறி­யாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஏனெனில், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு நான்கு பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்கள் ஏற்­க­னவே எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். மகா­நா­யக்க தேரர்­களை மீறி அரசி­ய­ல­மைப்பு மாற்­றமோ அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்போ உரு­வா­காது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

ஆட்­டைக்­க­டித்து மாட்டைக் கடித்து மனி­தனைக் கடிக்கும் நிலைக்கு பேரி­ன­வாதம் வந்­துள்­ளது. இந்­நி­லையில் அனைத்துத் துறை­சார்ந்­த­வர்­களும் ஒன்­றி­ணைந்து முஸ்லிம் அர­சி­யலைப் பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது. முஸ்லிம் அர­சியல் தலை­மை­களை ஒன்­றி­ணைப்­பதன் மூலம் அல்­லது அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணை­வதன் மூலம் பலம் பொறுந்திய அர­சியல் சக்­தி­யி­னூ­டாக எமக்­கெ­தி­ரான பேரி­ன­வாதத்தின் முன்­னெ­டுப்­புக்­களை இரா­ஜ­தந்திர ரீதியில் முறி­ய­டிக்க முடியும்.

கூட்டுத் தலை­மைத்­துவம்

கடந்த கால மற்றும் நிகழ்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சதித்­திட்­டங்­களின் விளைவு பல இழப்­புக்­களைச் சந்­திக்கச் செய்­துள்­ளது. இவற்­றுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை இரா­ஜ­தந்­திர ரீதி­யா­க­வும் சாத்­வீ­க­மா­கவும் முன்­னெ­டுக்க வேண்­டு­மாயின் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள பல்­வேறு தரப்­புக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தலை­மைத்­துவ சபை அல்­லது கூட்டுத் தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

அதற்­கான அழைப்­புக்­களும் பல்­வேறு தரப்­புக்­க­ளி­லி­ருந்து விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இருப்­பினும் இக்­கூட்டுத் தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு மணி கட்­டு­வது யார் என்ற கேள்­வியே தற்­போ­துள்­ளது. இந்­ நி­லையில், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளுக்கு 30 நாட்­க­ளுக்குள் தீர்வு தரப்­பட வேண்­டுமென்ற கோரிக்­கையை 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றாக கையொப்­ப­மிட்டு ஜனா­தி­ப­திக்கும், பிர­தம­ருக்கும் கடிதம் எழுதியிருப்­ப­தாக செய்­திகள் வெளியா­கி­யுள்­ளன.

இச் ­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­களின் தலை­வி­தியை தீர்­மா­னிக்க வேண்­டி­யது காலத்தின் அவ­சரத் தேவை எனக் கருதி, மார்க்க அறி­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள், சட்­டத்­த­ர­ணிகள், அர­சியல் செயற்­பா­ட்­டா­ளர்கள், சமூக அமைப்புக்கள், சமூக அக்கறையுடையோர், ஊடகவியலாளர்கள் என பல்வேறு துறைசார்ந்தோரையும் உள்ளடக்கியதான கூட்டுத்தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபை உருவாக்கப்பட வேண்டுமெனவும், அத்தலைமைத்துவத்தினூடாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருவதைக் காணமுடிகிறது.

இருப்பினும், கடந்த காலங்களில் இவ்வாறானதொரு கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் ஊடகவியலாளர்களாலும், சிவில் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டன.

இருந்தபோதிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஏனைய துறைசார்ந்தோரும் தங்களுக்குள் குறைந்தபட்சம் கொள்கையளவில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அக்காலங்களில் முன்னெடுக்க வில்லை. ஊடக அறிக்கைகளினூடாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிக்கை விட்டார்களே தவிர அவை செயல் வடிவம் பெறவில்லை.

முஸ்லிம்களின் தேசிய மற்றும் பிராந்திய ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சித் தலைமைகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மார்க்க அறிஞர்களும் மற்றும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபையை உருவாக்குவார்களாயின், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்க முடி யும்.

அவ்வாறில்லையேல் பட்டம், பதவி, பணத்துக்காக ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக்கொண்டும், தங்களது சுகபோக வாழ்க்கையை மாத்திரம் கவனத்திற்கொண்டும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஏனைய துறைசார் வல்லுனர்களும் செயற்படுவார்களேயானால் சமகால முஸ்லிம்கள் மாத்திரமின்றி எதிர்கால சந்ததியினரும் பாரிய சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமி ல்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-31#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.