Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரபரப்பான சூழ்நிலையில் கூடிய கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு!

Featured Replies

பரபரப்பான சூழ்நிலையில் கூடிய கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு!

 
 

பரபரப்பான சூழ்நிலையில் கூடிய கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு!

அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று(2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இச்சபைக்கு 9 கட்சிகளும் 2 சுயேட்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன. இருந்தும் 2சுயேட்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4 சுயேட்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.

இதில் ஜக்கியதேசியக்கட்சி (மு.கா) 12 ஆசனங்கள், சுயேச்சைக்குழு 4 (சாய்நதமருது) 9ஆசனங்கள், தமிழரசுக்கட்சி (த.தே.கூ) 7ஆசனங்கள், அ.இ.ம.கா 5 ஆசனங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி 3ஆசனங்கள், தேசியகாங்கிரஸ் 1ஆசனம், நல்லாட்சிக்கான தேசியமுன்னணி 1ஆசனம், ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம், சுயேச்சைக்குழு இரண்டு 1ஆசனம், சுயேச்சைக்குழு மூன்று 1 ஆசனம், என அமைந்துள்ளது.

கல்முனை மாநகர சபையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 31 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மேயர் பதவிக்கு .எம்.றகீம் சட்டத்தரணி மற்றும் த.தே.கூட்டமைப்பு சார்பில் கென்றி மகேந்திரனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டது இருவருக்குமான. தெரிவு திறந்தவெளி வாக்கெடுப்பில் விடப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தெரிவான ஏ. எம். றகீப் 27 வாக்குகளைப்பெற்று கல்முனை மாநகரசபையின் மேயராக தெரிசெய்யப்பட்டார். அவருடன் போட்டியிட்ட கென்றி மகேந்திரன் 7 வாக்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதி மேயர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அந்தவகையில் அ.இ. மக்கள் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக்கூட்டனி ஆகிய மூன்று கட்சிகளிலும் இருந்து பரிந்துரைக்கப் பட்டார்கள். இந்த திறந்தவெளி வாக்கெடுப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பாக போட்டியிட்ட காத்தமுத்து கோணேஸ் 15 திறந்தவெளி வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-first-session-of-the-Municipal-Council-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.