Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மாவையின் கருத்து

Featured Replies

  • கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மாவையின் கருத்து
 
 

கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மாவையின் கருத்து

 

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­மைப்பு பின்­ன­டை­வைச் சந்­தித்­த­மைக்கு வடக்கு மாகாண சபை­யும் ஒரு கார­ண­மென தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா அண்மை யில் தெரி­வித்­துள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது.

வடக்கு மாகாண சபை­யில் கூட்­ட­மைப்­பின் ஆட்சி இடம்­பெ­று­வ­தன் கார­ண­மா­கவே அவர் இவ்­வாறு தெரிவித்தி ருக்கலாம் எனக் கொள்ள முடி­கி­றது.

அர­சி­ய­லுக்­குப் புதி­ய­வ­ரான விக்­னேஸ்­வ­ரன் வடக்கு மாகாண சபை­யின்
முத­ல­மைச்­ச­ரா­னார்

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் அமோக வெற்­றி­பெற்ற கூட்­ட­ மைப்பு, ஆட்­சி­யை­யும் அமைத்­துக் கொண்­டது. முன்­னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரான சீ. வி. விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்ந்து கொண்­டார்.

அர­சி­யல்­வா­தி­யல்­லாத அவர், அதற்கு முன்­னர் தமி­ழர் அர­சி­ய­லில் எவ்­வித பங்­க­ளிப்­பை­யும் வழங்­கி­யி­ருக்­காத நிலை­யில் ஒரு மாகாண முத­ல­மைச்­சர் என்ற உயர்ந்த பத­வி­யில் அமர்த்­தப்­பட்­டமை, அப்­போது பல­ருக்­கும் வியப்பை அளித்­தது.

அவர் உயர்­மன்ற நீதி­ய­ர­ச­ராக இருந்­த­வர் என்­ப­தால் அவர்­மீ­தான எதிர்­பார்ப்பு மக்­க­ளி­டம் அதி­க­மா­கக் காணப்­பட்­டது. இதன் கார­ண­மா­கவே மிகப்­பெ­ரிய எண்­ணிக்­கை­யான விருப்பு வாக்­கு­களை அவ­ரால் பெற­மு­டிந்­தது.

அப்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில், தமி­ழ­ர­சுக் கட்சி, ரெலோ, ஈபி ஆர் எல் எப், புளட் ஆகிய கட்­சி­கள் அங்­கம் வகித்­தன. வேட்­பா­ளர் தெரி­வின்­போ­தும், அமைச்­ச­ர­வையை அமைக்­கும் போதும் கூட்­ட­ணிக்­கட்­சி­க­ளுக்­கி­டையே குழப்­பங்­கள் ஏற்­பட்­ட­போ­தி­லும், பின்­னர் நிலமை ஓர­ளவு கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இந்த நிலை­யில் வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வை­யின் அமைச்­சர்­கள் சிலர் மீதான ஊழல் முறைப்பாடுகள் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டன.

இது தொடர்­பாக முத­ல­ மைச்­ச­ரால் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை எதிர்த்­துத் தமி­ழ் அரசுக் கட்­சி­யி­ன­ரால் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. கூட்­ட­ மைப்­பில் அங்­கம் வகித்த சில கட்­சி­கள் இதற்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் இதைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். விக்­னேஸ்­வ­ ர­னுக்கு ஆத­ரவு என்ற போர்­வை­யில் கூட்­ட­ மைப்­புக்கு எதி­ராக அவர்­கள் அணி­தி­ரண்­ட­னர். விக்னே­ஸ் வர­னும், இதைக் கண்டு மனம் குளிர்ந்து போனா­ராம்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ ரன் பத­வி­யில் தொடர்ந்­தி­ருப்­ப­தற்­கான காய்­க­ளைத் தற்­போது நகர்த்­திக் கொண்­டி­ருக்­கின்­றார். இத­னால் கூட்­ட­ மைப்­பை­ யும் தாம் சார்ந்த கட்­சி­யை­யும் ஒரு­பொ­ருட்­டாக அவர் மதிப்­ப­தில்லை.

அடிப்­ப­டைக் கொள்­கை­யையே கைவிட்­டது தமிழ்­மக்­கள் பேரவை

ஆரம்­பத்­தில் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற கொள்­கை­யு­டன் அமைக்­கப்­பட்ட தமிழ் மக்­கள் பேர­வை­யின் உண்­மை­யான நோக்­கம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது வௌிப்­பட்­டது. அதன் ஆத­ரவு பெற்­ற­வர்­கள் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கத் தேர்­த­லில் நிறுத்­தப்­பட்­ட­ னர்.

இதற்­குக்­கூட விக்னேஸ்­வ­ரன் புதி­ய­தொரு விளக்­கத்­தைக் கொடுத்­தார். கூட்­ட­மைப்­பின் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளி­லும் அவர் பங்­கேற்­க­வில்லை. கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளுக்கு அவ­ரது மறை­முக ஆத­ரவு கிடைத்­து­வந்­தது.

பெரும் எதிர்­பார்ப்­பு­டன் உரு­வாக்­கப்­பட்ட வடக்கு மாகா­ண­சபை, மக்­க­ளின் விருப்­பத்தை நிறை­வேற்­று­வ­தில் முற்­றா­கவே தவ­றி­விட்­டது.

தமக்­கு­ரிய அதி­கா­ரங்­களை வழங்­கா­மை­யால் தம்­மால் எதை­யும் செய்­ய­மு­டி­ய­வில்­லை­யென மாகா­ண­சபை நிர்­வா­கம் தொடர்ந்து கூறிக் கொண்டி ருப்­ப­தைத் தொடர்ந்­தும் அனு­ம­திக்க முடி­யாது.

மாதாந்த ஊதி­யத்­தை­யும், ஏனைய சலு­கை­க­ளை­யும் அனு­ப­விப்­ப­தற்­காக மக்­கள் இவர்­க­ளைத் தெரி­வு­செய்து அனுப்­ப­வில்லை.

தமக்­குள்ள அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வடக்கு மாகா­ண­ச­பை­யால்தமிழ்­மக்­க­ளது பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண இய­லும் பொது­மக்­க­ளுக்கு எவ்­வ­ளவோ பிரச்­சி­னை­கள் உள்­ளன.

இவற்­றுக்­குச் சிறிய தீர்­வொன்­றை­யா­வது காண்­ப­தற்கு மாகா­ண­சபை முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டும். முல்­லைத்­தீ­வில் கொக்­கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி ஆகிய கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக மிகப்­பெ­ரிய சிங்­க­ளக் குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது.

இதை ஆரம்­பத்­தி­லேயே தடுத்து நிறுத்­து­ வ­தில் மாகா­ண­சபை முக்­கிய பங்கை வகிக்க வேண்­டும். காணா­மல் போன­வர்­க­ளின் உற­வு­கள் மேற்­கொண்­டு­வ­ரும் போராட்­டம், கேப்­பாபி­லவு மக்­க­ளின் நில மீட்­புக்­கான போராட்­டம் ஆகி­ய­வற்­றி­லும் கூட மாகா­ண­சபை முக்­கிய பங்கை வகிக்க முடி­யும். இதை­விட மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­ க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தி­லும் பங்­க­ளிக்க முடி­யும்.

இவற்­றை­யெல்­லாம் விடுத்து பெரும் நிதி­யைச் செல­வ­ழித்து இடம்­பெ­று­கின்ற மாகா­ண­ச­பை­யின் அமர்­வு­க­ளில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி உறுப்­பி­னர்­கள் ஒரு­வ­ரோடு ஒரு­வர் முரண்­ப­டு­வ­தும், தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி அடுக்கி வைப்­ப­தும் மக்­க­ளால் ஏற்க முடி­யா­தவை.

மாகா­ண­ச­பை­யில் கூட்­ட­மைப்­பின் ஆட்­சியே இடம்­பெ­று­வ­தால், அதன் தவ­றான செயற்­பா­டு­க­ளுக்கு கூட்­ட­மைப்பே பொறுப்­புக் கூற வேண்­டும். இது­வும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­ மைப்­பின் பின்­ன­டை­ வுக்கு ஒரு கார­ண­மாக அமைந்­து­விட்­டமை உண்­மை­யா­னதே.

http://newuthayan.com/story/80865.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.