Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணி­லைக் காப்­பாற்­று­வ­தால் தீர்­வைப் பெற­மு­டி­யுமா?

Featured Replies

ரணி­லைக் காப்­பாற்­று­வ­தால் தீர்­வைப் பெற­மு­டி­யுமா?

 

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் இன்­னும் நான்கு நாள் களில் வாக்­கெ­டுப்­புக்கு வர­வுள்­ளது. இந்­தத் தரு­ணத்­தில் தமி­ழர் தரப்பு அதனை ஆத­ரிப்­பதா இல்­லையா என்­கிற கேள்வி பல­மாக எழுந்து நிற்­கி­றது.

ரணி­லைக் காப்­பாற்றி விடும் இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது நன்­மை­களை அவ­ரி­டம் இருந்து பெற்­றுக் கொள்­ளும் வகை­யில் பேரம் பேச­வேண்­டும் தமி­ழர் தரப்பு, அதா­வது தமிழ்த் தேசி­யக் கூட்­மைப்பு என்­கிற ஒரு கருத்­தும் பகி­ரப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

ஆட்­சி­யில் ரணில் தொடர்­வ­தற்­குக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு தரு­வ­தற்­குப் பதி­லாக இரா­ணு­வம் வசம் உள்ள காணி­களை விடு­விப்­பது, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, அர­சி­யல் தீர்வு ஆகி­ய­வற்றை அவர் சாத்­தி­ய­மாக்க வேண்­டும் என்­பதே இந்­தக் கருத்தை முன்­வைப்­ப­வர்­க­ளின் வாதம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே இது விட­யத்­தில் இந்­தக் கருத்­தைக் கொண்ட ஒரு தரப்­பி­ன­ரும் ஆட்­சிக்கு வரு­வ­ தற்­குத் தமி­ழர்­கள் முழு­மை­யான ஆத­ர­வைத் தந்­த­போ­தும் அவர் களுக்­காக எதை­யும் செய்து கொடுக்­காத ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­ய­தில்லை என்­கிற ஒரு தரப்­பி­ன­ரும் உள்­ள­னர்.

இப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலை­யில் இந்­தத் தரு­ணத்­தில் ரணிலை ஆத­ரிப்­ப­தற்­கா­கப் பேரம் பேசு­வ­தன் மூலம் உண்­மை­யி­லேயே தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது கிடைக்­குமா என்று பார்த்­தால், அத­னூ­டா­கக் கிடைக்­கப்­போ­வது கடை­சி­யில் ஏமாற்­றம் மட்­டுமே என்­பது தெளி­வா­கும்.
அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பு விட­யத்தை முத­லில் பார்க்­க­லாம். சிறை­க­ளில் இப்­போ­துள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு சில நூறு.

அவர்­க­ளி­லும் கிட்­டத்­தட்ட மூன்­றி­லொரு பகு­தி­யி­னர் தண்­ட­னைக் கைதி­கள். அவர்­கள் விடு­விக்­க­ப்ப­ட­வேண்­டும் என்­றால் அவர்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­தான் மன்­னித்­தாக வேண்­டும். மற்­றொரு மூன்­றி­லொரு பகு­திக்­கும் மேலா­ன­வர்­கள் தொடர்­பில் வழக்­கு­கள் நடந்து வரு­கின்­றன.

இவர்­கள் மீதான வழக்­கு­களை நீக்­கு­வ­தற்­கும் வழக்­கு­களே தாக்­கல் செய்­யப்­ப­டா­மல் இருக்­கக்­கூ­டிய மிகச் சொற்­பத் தொகை­யி­னரை விடு­விப்­ப­தற்­கும் ரணி­லுக்கு இனி­மேல் முடி­யு­ மாக இருந்­தால், அதனை அவர் ஏன் இது­வரை செய்­ய­வில்லை என்­கிற கேள்­விக்­கான பதிலே அவர் அதனை இனி­மே­லும் செய்­ய­மு­டி­யாது என்­கிற உண்­மையை உண­ரப் போது­மா­னது. எனவே ரணி­லைக் காப்­பாற்­று­வ­தன் மூலம் அர­சி­யல் கைதி­களை உட­ன­டி­யா­கக்­கூட விடு­விக்­க­மு­டி­யாது.

இரண்­டா­வது விட­யம் இரா­ணு­வம் வசம் உள்ள காணி­களை விடு­விப்­பது. தற்­போது இரா­ணு­வத்­தி­னர் வசம் உள்ள காணி­ க­ளில் அவர்­கள் விடு­விப்­ப­தற்கு எண்­ணி­யுள்ள காணி­களை விடு­ விப்­ப­தற்­கான கால அட்­ட­வணை ஒன்­றைத் தாம் ஏற்­க­னவே தயா­ரித்­துள்­ள­தாக ஏற்­க­னவே இரா­ணு­வத் தள­பதி அறி­வித்­துள்­ளார்.

அந்த நிகழ்ச்சி நிர­லின் கீழேயே இரா­ணு­வம் செயற்­ப­டும். அதற்­கும் மேலாக முப்­ப­டை­க­ளி­ன­தும் தள­பதி என்­கிற வகை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமே இரா­ணு­வத்­தின் மூக்­க­ணாங்­க­யிறு இருக்­கின்­றது. எனவே ரணி­லைக் காப்­பாற்­று­வ­தன் மூலம் இரா­ணு­வத்தை இயக்­கி­வி­ட­மு­டி­யாது.

மூன்­றா­வ­தும் முக்­கி­ய­மா­ன­தும் அர­சி­யல் தீர்வு விவ­கா­ரம். ரணி ­லைக் காப்­பாற்றி ஆட்­சி­யைத் தொடர அனு­ம­திப்­ப­தன் மூலம் இது­வும் சாத்­தி­யப்­ப­டாது. புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­ வ­தற்­கான மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வின்­றிச் சாத்­தி­யப்­ப­டாது. மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இன்றி புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரவே முடி­யாது.

அதற்­கும்­மேல் அத்­த­கை­ய­தொரு அர­ச­மைப்பைப் பொதுக் கருத்­துக் கணிப்பு ஒன்­றின் மூலம் சிங்­கள மக்­கள் அங்­கீ­க­ரிக்­க­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் விடாது வலி­யு­றுத்தி வரு­கின்­றார். சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வின்றி அத்­த­கைய அங்­கீ­கா­ரத்­தைக் கன­வி­லும் நினைத்­துப் பார்க்க முடி­யாது. சுதந்­தி­ரக் கட்சி ஆத­ரித்­தா­லுமே நினைத்­துப் பார்க்க முடி­யுமா என்­ப­து­தான் யதார்த்த நிலை.

இதற்கு மேல் போர்க் குற்ற விசா­ர­ணைக்­கான தனி நீதி­மன்­றத்தை அமைப்­பது போன்ற ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபைத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ரணில் மூலம் முயற்­சிக்­க­லாம் என்­றாலோ, 2015ஆம் ஆண்டு தனது அமைச்­சர் மங்­கள சம­ர­வீர மூலம் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக்கு எல்லா வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­விட்டு, கலப்பு நீதி­மன்­றம் போன்ற விசா­ர­ணைப் பொறி­முறை இலங்­கைக்­குப் பொருந்­தாது என்று சொன்­ன­வர்­தான் ரணில். எனவே இனி­யும் இது­போன்ற வாக்­கு­று­தி­க­ளைத் தந்­து­விட்டு ஏமாற்­றா­மல் இருப்­ப­தற்கு அவர் ஒன்­றும் கன­வான் அர­சி­யல்­வாதி அல்­லர்.

ஆக­மொத்­தத்­தில் தமி­ழர்­க­ளுக்­கா­கப் பேரம் பேசிக்­கொண்டு ரணிலை ஆத­ரிப்­பது என்­பது வெறும் ஏமாற்று வேலை மட்­டுமே.

http://newuthayan.com/story/80610.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.