Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளுக்கு காது கூர்மை – மா. இளஞ்செழியன்

Featured Replies

கடவுளுக்கு காது கூர்மை – மா. இளஞ்செழியன்

Elanchelian_CI.jpg?resize=300%2C225
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்,

கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம் , நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அயலில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது.

 

அதன் போது குறித்த மனுதாரர் , அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுவதனால் இருதய வருத்தம் உள்ள தான் பாதிக்கப்படுவதாகவும் , தனது சிறு பிள்ளைகளும் பாதிக்கப்படுவதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில் , கடவுள் நல்ல காது கூர்மை உடையவர். அவரை அமைதியான முறையில் வழிபடலாம். எங்கள் உரிமை மத வழிப்பாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது.

தற்போது ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனைகள் கணிசமான அளவு குறைந்து உள்ளது. கடவுளை அமைதியாக மற்றவர்களுக்கு . மற்ற மதத்தினருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் வணங்குங்கள் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/73318/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கடவுளுக்கும் காது கூர்மை!!
 
 

கடவுளுக்கும் காது கூர்மை!!

யாழ்ப்­பா­ணத்­தைப் பிறப்­பி­ட­மா­கக் கொண்ட ஓர் அம்­மை­யார் தனது பிள்­ளை­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லிய நாட்­டில் வாழ்ந்து வரு­கி­றார். அவர் தனது வரு­மா­னத்­துக்­கா­க­வும் ஆரோக்­கி­ய­மான உண­வுக்­கா­க­வும், பொழு­து­போக்­கா­க­வும் அங்கு கொல்­லைப்­பு­றத்­தில் கோழி வளர்க்­கி­றார். அவர் அண்­மை­யில் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்தபோது தனது கோழி வளர்ப்­புப் பற்­றித் தனது ஊர்ப் பெண்களுக்­குக் கூறி­யி­ருக்­கி­றார்.

‘‘அங்கு கோழி வளர்ப்­பது மிக­வும் சிர­மம். சட்ட இறுக்­கம் அதி­கம். அதி­கா­லை­யில் சேவல், கோழி கூவும் சத்­தம் கேட்­டால் அதற்கு தண்­டப்­ப­ணம் செலுத்­த­வேண்­டும். அதற்­கா­கச் சேவல், கோழி­கள் கூவ ஆரம்­பிக்­கும் காலத்­தில் அதற்கு ஓர் ஊசி ஏற்றி, சேவலை நிரந்­த­ர­மா­கக் கூவாது தடுக்­கின்­ற­னர்’’. சத்­தத்­தால் ஏற்­ப­டு­கின்ற சூழல் பாதிப்­புக்­கா­கவே இந்­தக் கடப்­பாடு அங்கு நில­வு­கி­றது.

ஆனால் இங்கு…?
2.4.2018 அன்று நாயன்­மார்­கட்­டுக் கோவி­லொன்­றில் அதிக சத்­த­மாக ஒலி­பெ­ருக்­கி­கள் பாவிக்­கப்­ப­டு­கின்­றன என யாழ். மேல் நீதி­மன்­றில் தொட­ரப்­பட்ட வழக்கை விசா­ரித்த நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் ‘‘கட­வு­ளுக்கு காது நல்ல கூர்மை. அத­னால் சத்­த­மாக வழி­பாடு செய்­ய­வேண்­டிய அவ­சிய மில்லை’’ என்று குறிப்­பிட்டு அந்த ஒலி­பெ­ருக்­கிப் பாவனை களைக் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டுத்­து­மாறு குறிப்­பிட்­டார்.

இந்­தத் தீர்ப்பு எல்­லாக் கோயில்­க­ளுக்­கும் பொது­வா­னது என்று கொள்­வோ­மாக. ஆஸ்திரேலியாவில் ஒலிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இங்கு நாம் (இந்­துக்­கள், கிறிஸ்­த­வர்­கள், முஸ்­லிம்­கள், பௌத்­தர்­கள்) கோயில்­க­ளின் எல்லை தாண்டி அள­வுக்கு மிஞ்­சிய சத்­தத்தை ஏற்­ப­டுத்தி விடு­கி­றோம். அதிலும் நாலா­ பு­ற­மும் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்டி நாதஸ்­வ­ரம் பக்­திப் பாடல், பிரா­ம­ணர்­க­ளின் மந்­தி­ரம் என உச்­ச­மான சத்­தத்தை எழுப்பி மகி­ழும் பழக்­கம் எமக்கு மாத்­தி­ரமே இருக்­கி­றது.

365 நாள்­க­ளில் 10 – 20 நாள்­கள் வரை­யில் திரு­வி­ழா­வுக்­கா­கக் கோயி­லைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். அதை­விட சூழலை ரண­க­ள­மாக்கி வரு­கின்­ற­னர். கோயில் எல்­லையை விட்டு வெளி­யில் ஒலி­ பெருக்­கி­யைக் கட்­டு­வது, சட்­டத்­துக்­குப் புறம்­பான வகை­யில் அதிக டெசி­பல் உள்ள ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்டி ஒலிக்­க­வி­டு­கி­றார்­கள். ஒரு வகை­யில் சமூக விரோத செயற்­பாடு. ஓர் எல்­லை­தாண்­டிய பயங்­க­ர­வா­த­மும் ஆகும் .

பலர் சூழ்ந்து வாழும் சூழல்

ஒரு மதத்­த­வ­ரின் ஆல­யத்­தைச் சுற்றி வாழ்­ப­வர்­கள் அந்த மதத்­த­வர்­க­ளாக மாத்­தி­ரம் இருப்­ப­தில்லை. இந்தக் கோயில் திரு­வி­ழாக்­க­ளின் சத்­தத்­தால் பாதிக்­கப்­ப­டு­வது அனை­வ­ரும் தான். ஓர் இனம் தன்­னைத்­தானே அழித்­துக்­கொள்­ளும் முயற்­சி­யில் இறங்­கி­யி­ருக்­கும்­போது எதி­ரி­க­ளுக்கு அது மிக­வும் மகிழ்­வைக் கொடுக்­கும்.

தமி­ழர் இனப்­பெ­ருக்­கம் குறைந்த ஓர் இன­மாக இருப்­ப­தால், இருக்­கின்ற இளை­ஞர்­க­ளை­யும் பிள்­ளை­க­ளை­யும் நல்­ல­வர்­க­ளாக உரு­வாக்கி­ விடு­வது அனை­வ­ரது கடப்­பா­டா­கும். பௌத்­தம், இஸ்­லாம், கிறிஸ்­த­வம் ஆகிய மதங்­க­ளில் இருக்­கும் மதத் துற­வி­கள் மக்­க­ளுக்­குப் போத­னை­களை நடத்­து­கின்­ற­னர்.

அவர்­க­ளின் சமூக விட­யங்­கள், பொரு­ளா­தா­ரம், கல்வி, பண்­பா­டாக வாழ்­வது தொடர்­பில் போத­னை­கள் மூலம் வழிப்­ப­டுத்­து­கின்­ற­னர். மக்­க­ளும் அவற்­றைப் பின்­பற்­று­கின்­ற­னர். மற்றைய சமயத்தவருடன் ஒப்பிடுகையில் இந்து இளம் சந்ததி ஆலயத்தை நாடுவது குறைவு.

இந்­துக்­க­ளி­ட­மும், சைவர்­க­ளி­ட­மும் துற­வி­கள் இல்லை. துற­வி­களை உரு­வாக்க எந்த ஏற்­பா­டும் இல்லை. ஏனைய மதங்­க­ளில் தமது குடும்­பங்க ­ளிலி­ருந்து துற­வி­க­ளைத் தத்­த­மது மதங்­க­ளுக்­குச் சேவை­யாற்ற அனுப்பி வைக்­கின்­ற­னர். ஒரு கிறிஸ்­தவ துறவி குரு­ம­டத்­தில் பல வரு­டங்­கள் படித்­துப் பட்­டம் பெற­வேண்­டும்.

மௌல­விகள் மத­ர­சாக்­க­ளில் கற்­றுத் தேறு­கின்­ற­னர். பௌத்த துற­வி­கள் பிரி­வே­னாக்­க­ ளில் கற்­கின்­ற­னர். இந்­தப்­ப­டிப்­புப் பின்­ன­ணி­யி­லேயே அவர்­க­ளின் போத­னை­கள் நடை­பெ­று­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு சூழல் இந்­துக்­க­ளுக்­கும், சைவர்­க­ளுக்­கும் இருப்­ப­தில்லை.

திரு­வி­ழா­வின்­ போது நிகழ்த்­தப்­ப­டும் சொற்­பொ­ழி­வு­க­ளில் பேசு­கின்றவர்கள் சில சம­யங்­க­ளில் மாண­வர்­க­ளின் கல்வி வளர்ச்சி பற்­றி­யும் பேசு­கின்­ற­னர். அதை­யும் ஒலி­பெ­ருக்கி ஊடா­கவே பேசு­கின்­ற­னர். இவர்­கள் படிப்­பைப் பற்றி பேசு­வதை விடுத்து, ஒலி­பெ­ருக்­கி­களைக் கோவி­லுக்கு வெளி­யில் யாரும் பாவிக்­கக்­கூ­டாது என கோயில் நிர்­வா­கத்­துக்­கும் திரு­ விழாக்­கா­ரர்­க­ளுக்­கும் காதுக்­குள் சொன்­னால் அந்­தச் சூழ­லில் உள்ள மாண­வர்­கள் நன்­றா­கப் படிப்­பார்­கள். அவர்­க­ளின் படிப்­புக்­கும் கோயில்­கள் வேறு வகை­யில் உதவ முடி­யும்.

கட­வுள்­மீது பக்­தி­யுள்ள மக்­கள் 24 மணி­நே­ர­மும் கோயில்­க­ளில் தங்கி, இறை­பு­கழ் பாடி இன்­புற்­றி­ருப்­பது தவ­றல்ல. தாங்­கள் விழித்­தி­ருக்­கி­றோம் என்­ப­தற்­காக மற்­ற­வர்­க­ளும் துன்­பப்­ப­ட­வேண்­டும் என்று நினைப்­பது­ தான் கட­வு­ளின் பெய­ரால் செய்­யப்­ப­டு­கின்ற அத்­து­மீ­றல் ஆகும்.

ஒலி பரப்புவதில் பெருமை!
இந்­துக் கட­வு­ளர்­க­ளுக்­குக் காது செவி­டாக இருக்­க­வேண்­டும் அல்­லது இந்த ஒலி­பெ­ருக்கிச் சத்­தத்­துக்கு அவர்­கள் எங்கோ ஓடி­யி­ருக்­க­வேண்­டும். இந்து மதத்­து­டன் ஒலி­பெ­ருக்கி சேர்ந்து பிறந்த ஒன்­றல்ல. இந்­து­ம­தம் மிகப் பழை­யது என்று கூறு­வ­தன் அர்த்­தம் இந்த ஒலி­பெ­ருக்­கிச் சத்­தத்தை வைத்­துப் பார்க்­கும்­போது சரி­யென்றே ஏற்றுக்கொள்ள வேண்­டி­யுள்­ளது.

ஒரு வளர்ச்­சி­ய­டை­யாத இனத்­துக்­கு­ரிய தன்­மை ஆஸ்திரேலியாவில் இப்படியிருக்கிறது. வளர்ச்­சி­ய­டைந்த ஆஸ்­ரே­லிய சமூ­கம் சேவல் கூவு­வது மற்­ற­வர்­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­கும் என அது கூவுவதைக் கட்டுப்படுத்திச் சட்­ட­மாக்­கி­யுள்­ள­னர். ஆனால், இங்குள்ள கோயில்­க­ளின் ஒலி­பெ­ருக்கி விட­யத்­தில் இன்­னொ­ரு­படி முன்­னேற்­றம் காணப்­ப­டு­கி­றது. கோயில் திரு­வி­ழாக்­க­ளின்­போது ஒவ்­வொரு திரு­வி­ழா­வுக்கும் ஒவ்­வொ­ரு­வர் பொறுப்­பாக இருப்­பார்.

அவரே தெப்பை அணிந்து பூசை­யைச் செய்­விப்­பார். இவ்­வா­றான திரு­வி­ழாக் காரர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் அல்­லது அவ­ருக்கு ஆத­ர­வாக வேறு சிலர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பணம் அனுப்பி ஒலி­பெ­ருக்­கிக்­கா­ரர்­களை ஒலி­பெ­ருக்­கி­களை ஒலிக்­கச் செய்­கின்­ற­னர்.

இதன்­மூ­லம் ஒலி­பெ­ருக்கி வைத்­தி­ருப்­ப­வ­ருக்கு வரு­மா­ன­மும், வெளி­நாட்­டி­லி­ருந்து பணம் அனுப்­பு­ப­வ­ருக்கு பெரு­மை­யும் சேர்­கி­றது.
ஒரு திரு­விழா சங்­கை­யாக நடந்­தது என்­றால் ‘‘எத்­தனை கூட்­டம் மேளம் அடித்­தது? எத்­தனை ஒலி­பெ­ருக்­கி­கள் பாடின? எவ்­வ­ளவு தூரம் வர்ண பல்ப்­பு­கள் பூட்­டி­னார்­கள்? எவ்­வ­ளவு வான வெடி­கள் போட்­டார்­கள்?’’ என்றே கேட்­கின்­ற­னர். இதுவே தமி­ழ­ரின் பெரு­மை­யாக உள்­ளது.

ஒரே இடத்­தில் போட்­டிக்கு 2 அல்­லது 3 ஒலி­பெ­ருக்­கி­கள் கட்­டப்­ப­டு­வ­தால் அதிக சத்­த­மும் நாதஸ்­வ­ரம் போன்ற இனிய வாத்­திய இசை­கள் அல­றும் சத்­த­முமே கேட்­கின்­றன. இதை இனிமையான இசையாக எப்படி இரசிக்கமுடியும்? பரீட்­சைக்­குத் தயார்­ப­டுத்­து­கின்ற மாண­வர்­க­ளுக்கு இது மிக­வும் தொல்­லை­யாக இருக்­கும். இந்த விட­யத்­தில் யாரும் கவ­னிப்­ப­தாக இல்லை. ஒரு சில­ரின் பெரு­மைக்­காக ஏழைப்­பிள்­ளை­கள் அழிந்து போக­வேண்டி உள்­ளது.

‘‘10 நாளும் சகித்­துக்­கொள்­ளுங்கோ என்ன செய்­வது? லவுட்ஸ்­பீக்­கரை கழற்­றச் சொன்­னால் திரு­வி­ழாக்­கா­ரர் கோவிப்­பி­னம்’’ என்­கி­றார்­கள்.
இதை­விட ஒலி­பெ­ருக்­கி­யைக் கட்­டு­ப­வர்­கள் அல்­லது அதை ஒரு தொழி­லா­கச் செய்­ப­வர்­க­ளுக்கு ஒலி அலை­கள் எவ்­வாறு பய­ணிக்­கும் என்ற தொழில்­நுட்ப அறிவு இருப்­ப­தில்லை. இத­னால் சூழல் அதி­கம் மாச­டை­வ­து­டன், சந்­தி­க­ளில் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்­டு­வ­தால் விபத்­துக்­க­ளும் ஏற்­ப­டு­கின்­றன.

எல்லா இடங்­க­ளி­லும் ஒலி­ பெருக்கி கட்­டப்­பட்­ட­பின் அவை இயக்­கப்­ப­டும்­போது பேரி­ரைச்­சல் வெளி­வ­ரு­கி­றதே தவிர, இர­சிக்­கக்­கூ­டி­ய­தாக எது­வும் இருப்­ப­தில்லை. அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் வாங்­கிய காசுக்குக் கூவி­னால் போது­மென்ற நிலையே காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான ஒலி­பெ­ருக்­கி­க­ளுக்கு எதி­ராக யாரா­வது கதைத்­தால் அது தெய்வ குற்­ற­மா­கக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

ஒரு பொலிஸ் அதி­கா­ரி­யு­டன் இது விட­ய­மா­கப் பேசி­ய­போது ‘‘இந்த ஒலி­பெ­ருக்­கி­யால் எங்­க­ளுக்­கும் நிம்­ம­தி­யில்லை. என்ன செய்­வது என்று சகித்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். நாங்­கள் போய் அகற்­றி­னால் அர­சி­யல்­வா­தி­க­ளும் மதம் சார்ந்­த­வர்­க­ளும் அதனை ஒரு மதத்­திற்கு எதி­ரான அல்­லது இனத்துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாக எடுத்­து­வி­டு­வார்­கள். பொது­மக்­கள் அது­பற்­றிய முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­தால் நாங்­கள் நிச்­ச­யம் அதற்கு நட­வ­டிக்கை எடுப்­போம்’’ என்­றார்.

முதலமைச்சரின் அணுகுமுறை!
அண்­மை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.கே.விக்­னேஸ்­வ­ரன் பொலிஸ் அதி­கா­ரி­களை யாழ்ப்­பா­ணத்­தில் சந்­தித்து ‘‘குற்­றச் செயல்­கள் குறைந்­துள்­ளன’’ என்று பொலி­ஸா­ரைப் பாராட்­டி­யி­ருந்­தார். ஒலி­பெ­ருக்கி விட­யத்­தில் மதில்­மேல் பூனை என்ற அணுகு­ முறை­யையே கடைப்­பி­டித்­தார்.

அதா­வது, கோயில் திரு­வி­ழாக்­கா­ர­ரை­யும் பகைத்­து­வி­டக்­கூ­டாது. அதே­வேளை, ஒலி­பெ­ருக்­கி­யால் அசௌ­க­ரி­யப்­ப­டு­ப­வர்­க­ளின் மனம் குளி­ரும் வகை­யி­லும் அறிக்கை விட்­டி­ருந்­தார். ஆனால் பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­டம் ‘ஒரு கோயி­லின் எல்லை என்­பதை வரை­ய­றுத்து அய­லி­லுள்ள மக்­க­ளுக்கு இடை­ யூறாக பொருத்­தப்­ப­டு­கின்ற அனைத்து ஒலி­பெ­ருக்­கி­க­ளை­யும் பறி­மு­தல் செய்­யுங்­கள்’ என்ற அறிக்கை விட்­டி­ருந்­தால் மறு­நாளே இந்த விட­யம் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கும்.

வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளால் கோயில்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஒலி­பெ­ருக்­கி­கள் ஒரு சமூ­க­வி­ரோதச் செயற்­பாட்டுக்குப் பயன்­ப­டு­கி­றது என்­பது பற்றி அவர் வாய் திறக்­க­வில்லை. 119 அமர்­வு­களை வட­மா­காண சபை கடந்துவிட்­டது. ஓர் அமர்வை வட­மா­காண சபை இந்த ஒலி­பெ­ருக்கி விட­யத்துக்காகக் கூட்­டி­னால் (வட­மா­காண சபைக்­குள் இருக்­கும் ஒலி­வாங்­கி­கள் பிடுங்­கப்­ப­டா­மல் பாது­காக்­கப்­ப­டல் வேண்­டும்) ஆக்­க­பூர்­வ­மான ஒரு விட­யத்­தை­யா­வது வட­மா­காண சபை செய்­த­தாக இருக்­கும்.

நல்­லூர்க் கோயில், நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் கோயில், மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி அம்­மன் கோயில் போன்ற கோயில்­க­ளில் மிகச் சிறிய சத்­தம் குறைந்த ஒலி­பெ­ருக்­கி­க­ளையே பாவிக்­கின்­ற­னர். இதைமீறும் கோயில் தலை­வர்­கள் மற்­றும் நிர்வாகத்தினர் ஆகி­யோ­ருக்கு நீதி­மன்­றம் தண்­டனை வழங்­கி­னால் மிக இல­கு­வாக இந்­தத் தொல்­லை­யி­லி­ருந்து இந்­துக்­க­ளும், சைவர்­க­ளும் விடு­பட முடி­யும்.

இது விட­யத்­தில் இந்து கலா­சார அமைச்சு, சுற்­றுச்­சூ­ழல் அமைச்சு, மாகாண சபை­கள், பிர­தேச செய­ல­கங்­கள், பிர­தேச அமைப்­புக்­கள், மனித உரி­மை­கள் அமைப்­பு­கள், பாட­சாலை அதி­கா­ரி­கள் சிவ­சேனா போன்ற சமய அமைப்­புக்­கள் இதில் தலை­யி­டு­வது அவ­சி­ய­மா­கும்.

ஒரு பண்­பா­ட­டைந்த சமூ­கம் தனது பேச்­சி­லும், மற்­ற­வர்­க­ளு­டன் பழகுவ­தி­லும், நடை, உடை பாவனை போன்­ற­வற்­றி­லும், மெல்­லிய சத்­தத்­து­ட­னான இசை மற்­றும் பாடல்­களை இர­சிப்­ப­தி­லும், வாசிப்­புப் போன்­ற­வற்­றால் மனதை ஒரு நிலை­யில் வைத்­தி­ருப்­பது என எல்லா விதத்­தி­லும் மேன்­மை­யா­ன­வர்­க­ளாக இருப்­பார்­கள். அவர்­கள் ஏனை­ய­வர்­க­ளின் நிம்­ம­திக்­குப் பாத­க­மாக எதை­யும் செய்­யப்­போ­வ­தில்லை.

http://newuthayan.com/story/84716.html

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நாங்கள் வளர்ந்த போது...இதே ஒலி பெருக்கிகளில் போடப்படும் பாட்டுக்களுக்காகவே கோவிலுக்குப் போவது உண்டு!

ஸ்ரீ தட்சணா மூர்த்தி அவர்களின் மேளக் கச்சேரிகாகவோ, அல்லது வித்துவான் ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக்காகவோ..மட்டுமே கூட்டம் அலை மோதிய காலங்களும் உண்டு! எனது புராணங்கள் பற்றிய அறிவின்...பெரும்பகுதி...இப்படியான இடங்களில்...பொறுக்கிச் சேர்த்ததே ஆகும்!

அவுஸ்திரேலியாவில் கோழி வளர்ப்பதற்குப் பண்ணைகள் உண்டு! அவை மக்கள் அதிகம் இல்லாத இடங்களில் அமைக்கப் பட்டு..மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூறு அல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன!

வீட்டில் கோழி வளர்ப்பது..தொழில் ரீதியில் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை! கிராமப் புறங்களில்...பெரிய காணிகள் உள்ளவர்கள் வளர்க்கலாம்!

அவுசில்...நகரப் பகுதியில் கோழி வளர்ப்பதற்கும்....கோவில்களில்...திருவிழா நடக்கும்போது வரும் சத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை!

அவுசிலும்...சனி..ஞாயிறு போன்ற நாட்களில் வீடுகளில்..உரத்த சத்தத்தில் பாட்டுக்கள் போடலாம்! எனினும் குறுப்பிட்ட நேரத்துக்குள் அவற்றை முடித்துக் கொள்ள வேண்டும்!

மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் உள்ள கோவில்களிலும் இவ்வாறான...அதிக சத்தத்தைக் குறைக்க...கால வரம்புகள் நிச்சயிக்கலாம்!

சைவக் கடவுள்களுக்கு மட்டும் தானா....காது கேட்காது?

இஸ்லாமியக் கடவுள்களுக்கும்...காது கேட்பது குறைவு தானே?

பயணக் களைப்பில்...கொழும்பில் படுத்திருந்த நானே....விடியக் காலமையில் எழும்பிக் குந்திக்கொண்டிருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு!

யாரும் ஏன்....இது பற்றி..அலட்டிக்கொள்வதில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.