Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி பெற்றதும் தனித்து ஆட்சி

Featured Replies

வெற்றி பெற்றதும் தனித்து ஆட்சி

03-a56e105310390468f4dd0ee505aa412cc2094d5f.jpg

 

பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.மு. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

(நமது நிருபர்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

யினை ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றிபெறுவது என்றும் அதன்பின்னர் தனித்து ஆட்சி அமைப்பது எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் முன்னணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் ஐக்கியதேசியக்கட்சி எம்.பி.க்களும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினரால் கடந்த 21 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பொது எதிரணியைச் சேர்ந்த 51 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்த நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டுமென்றும் இல்லையேல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் அறிவித்திருந்தனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையினை ஆதரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கப்போவதாக ஜே.வி.பி. அறிவித்திருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் கடந்தவாரம் கூடிய ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற குழுவானது நம்பிக்கையில்லாப் பிரேரணையினை தோற்கடிக்கும் வகையில் செயற்படுவது என முடிவுசெய்திருந்தது. இதேபோன்றே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்திருந்தன.

இந்த நிலையில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் ஒவ்வொரு எம்.பி.க்களினதும் கருத்துக்களை தெரிவிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றிபெறுவது என்று இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொண்டதன் பின்னர் தனியாக ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்கவேண்டும். 5ஆம் திகதி புதிய ஆட்சி அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னணியின் தலைவர்கள் இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார் .

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் பிரதமருக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் எதிர்க்கட்சிப் பக்கம் செல்லவேண்டும். பிரதமருக்கு ஆதரவாக செயற்படும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தனியாட்சியை அமைக்க வேண்டும் என்றும் இங்கு பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை உள்ளடக்கிய குழுவொன்றும் நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.

சதி­கா­ரர்­க­ளுக்கு நாளை பாடம் புகட்­டுவோம்

04-be53373981a4f46d99eff86a7f49b7c10c203692.jpg

 

ஐக்­கிய தேசிய கட்சி கூறு­கி­றது 

(எம்.எம்.மின்ஹாஜ்)

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்ப­தற்கு வேண்­டிய அனைத்­தையும் செய்து விட்டோம். இந்த சதித்­திட்­டத்­திற்கு  நாளைய தினம் நாம் உரிய பாடம் புகட்­டுவோம். இந்த வெற்­றி­யுடன் 2020 ஆம் ஆண்டின் பாரா­ளு­மன்றம் மற்றும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான போராட்­டத்தை ஆரம்­பிப்போம். எனவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வேண்­டி­யது 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையை பெற்ற அனை­வ­ரி­னதும் பாரிய பொறுப்­பாகும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். 

தேசிய பட்­டி­யலில் வந்­த­வர்கள் மக்கள் ஆணைக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வந்து ஆட்­சியை கவிழ்க்க முடி­யுமா என்று பார்க்­கின்­றனர். அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது 2015 மக்கள் ஆணைக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்­களே முன்­னிலை வகித்து செயற்­ப­டு­கின்­றனர். எனவே 2015 ஆம் ஆண்டில் மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­ற­வர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில்

 அதனை தோற்­க­டிக்க வேண்­டிய பாரிய பொறுப்பு உள்­ளது.

எனவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வாக்­கெ­டுப்பின் போது மக்­களை ஆணையை வெற்றி செய்ய வேண்டும். 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணைக்கு எதி­ராக சதி திட்டம் தீட்­டி­ய­வர்­களே பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வந்­துள்­ளனர். தேசிய பட்­டி­யலில் வந்­த­வர்கள் மக்கள் ஆணைக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்டு வந்து ஆட்சி கவிழ்க்க முடி­யுமா என்று பார்க்­கின்­றனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வந்து மீண்டும் அதி­கா­ரத்தை கைப்­பற்ற முயல்­கின்­றனர். எவ்­வா­றா­யினும் 2015 இல் கிடைக்­க­பெற்ற மக்கள் ஆணையை பின்­ந­கர்த்த நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யான தோற்­க­டித்தே தீருவோம். இது உறு­தி­யாகும். இந்த வெற்­றி­யுடன் 2020 ஆம் ஆண்டின் பாரா­ளு­மன்ற மற்றும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான போராட்­டத்தை ஆரம்­பிப்போம்.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தற்கு செய்ய வேண்­டிய அனைத்­தையும் செய்து விட்டோம். ஆகவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தோற்­பது உறு­தி­யாகி விட்­டது. அதில் எந்­த­வொரு சந்­தே­கமும் இல்லை. இந்த பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தற்கு எதிர்­பா­ரா­த­வர்கள் எமக்கு ஆத­ரவு வழங்­கு­வார்கள். எனினும் மக்கள் ஆணையை கூட பெறாமல் தேசி­யப்­பட்­டி­யலின் ஊடாக வந்து அர­சாங்­கத்தில் அமைச்சு பத­வி­களை பெற்­றுக்­கொண்டு ஒரு சிலர் எமக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர். எம்­முடன் இருக்க முடி­யா­விடின் அமைச்சு பத­வி­களை துறந்து விட்டு வெளி­யேற வேண்டும். எனவே இவர்­க­ளுக்கு எதி­ராக நாளைய வாக்­கெ­டுப்பில் நாம் முன்­னிற்போம்.

சதித்­திட்டம் தீட்டி ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்­திரக் கட்­சியில் இணைந்து அர­சியல் செய்ய பார்க்­கின்­றனர். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க முரண்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சதித்திட்டத்திற்கு நாம் நாளைய தினம் உரிய பாடம் புகட்டுவோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமக்கு உரிய சமிக்ஞை கிடைத்துள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் 8,9 திகதிகளில் எடுப்போம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.