பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விடயத்தில் பிரதமருக்கு ஆதரவாக செயற்படும் விடயத்தில் சாத்தியம் இருப்பதாகவும் ஆனால் சில நிபந்தணைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான விவாதத்தின் போது யார் நம்பிக்கையற்றவர்கள் என்பது தெரிய வருமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவதற்கான பெரும்பான்மை உள்ளது என்பதில் எமக்கு பாரிய நம்பிக்கையுள்ளது. பிரதமருக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளது. அதனை எம்மால் பாராளுமன்றத்தில் நிரூபிக்க முடியும். ஜனநாயக நாட்டில் அமைச்சு பதவிகளை வகித்து சுகபோகங்களை அனுபவித்து கொண்டு அரசாங்கத்திற்குள்ளேயே இவ்வாறு செயற்படுவதை நான் கடுமையாக எதிர்கின்றேன். அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்து விட்டு இச்செயலில் ஈடுபடுமாறு நான் பணிவாக கேட்டுக்கொள்கிறேன். ஐந்தாம் திகதி காலை எமது கணக்கு வழக்குகளை முடித்துக்கொள்வோம். தமது தொகுதியில் வாக்குகளால் வெற்றிபெற முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த பிரேரணையை கொண்டு வருகின்றனர். மேலோட்டமாக ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் அடிமட்டத்தில் வேறு ஒரு நோக்கமே உள்ளது என அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் நான்காம் திகதி நம்பிக்;கையில்லா பிரேரணை தோல்வியடைவதை எம்மால் அவதானிக்க முடியும். இதுவரை தேவையான உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்படவில்லை. ஒருசில உறுப்பினர்களே கைச்சாத்திட்டுள்ளனர். நான்காம் திகதி பிரதமரை நீக்குவதற்கு முயற்சிக்கின்றனர். ஒரு பிரதான காரணத்திற்காகவே பிரதமரை நீக்க முயற்சிக்கின்றனர். அவர் சர்வதேச ஆதரவை பெற்று நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்கின்றார். கூட்டு எதிரணியில் பல்வேறு தவறுகள் உள்ளன. அவர்கள் செய்த கொள்ளைகளை மூடிமறைப்பதற்கு பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க இருந்தால் சாத்திமாகாது. வழக்குகளில் இருந்து தப்புவதற்காக அவர்களுக்கு சாதகமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

ஐதேகவை சேர்ந்த நாங்கள் அனைவரும் நம்பிக்கையில்ல பிரேரணையை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். மேலும் பலர்எமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சி அரசாச்ஙகமும் நல்லாட்சி அரசாங்கமும் இவ்விடயத்தில் வெற்று பெறுவர் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

 

http://www.itnnews.lk/tamil/local/2018/03/27/32462