Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்­பின் 10 கட்­டளைகள்!!

Featured Replies

  •  
  • கூட்­ட­மைப்­பின் 10 கட்­டளைகள்!!
 
 

கூட்­ட­மைப்­பின் 10 கட்­டளைகள்!!

 

தமிழ் மக்­க­ளின் நீண்ட கால அவ­ல­மும் உட­ன­டித் தேவை­க­ளா­க­வும் உள்ள 10 விட­யங்­களை எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­தல் அறி­விப்­பிற்கு முன்­னர் நிறை­வேற்றி வழங்­கு­வ­தாக எழுத்­தில் உறு­தி­ய­ளித்­தால் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்­லாத தீர்­மா­னத்தை எதிர்க்­க­லாம் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிபந்­தனை விதித்­துள்­ளது.

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின்­போது கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ள­வேண்­டிய நிலைப்­பாடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டம் எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில்­கூ­டி­யது. நீண்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளு­டன் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்­தின் இறு­தி­யில் ரணி­லு­டன் பேரம் பேசு­வது என்ற முடிவு எடுக்­கப்­பட்­டது.

அதற்­க­மைய 10 கோரிக்­கை­கள் அடங்­கிய நிபந்­த­னைப் பட்­டி­யல் ஒன்­றும் தயா­ரிக்­கப்­பட்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது. அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள கோரிக்­கை­க­ளா­வன,

 புதிய அர­ச­மைப்பு முயற்­சியை எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்­பா­கப் பூர்த்­தி­செய்து நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யு­டன் அதனை நிறை­வேற்­று­தல்.

 வடக்கு கிழக்­கில் தமிழ் மக்­கள் பிர­தே­சத்­தில் படை­கள் வசம் தொடர்ந்ம் உள்ள நிலப்­ப­ரப்­புக்­களை விடு­வித்­தல்.

 இதே­கா­லத்­தில் சிறை­யில் வாடும்­அ­ர­சி­யல் கைதி­களை மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்­தல்.

 காணா­மல்­போ­னோ­ரின் உற­வு­கள் கடந்த ஓராண்­டாக வீதி­யில் உள்ள நிலை­யில் காணா­மல்­போ­னோர் செய­ல­கம் என்ற ஒன்­றைத் தவிர வேறு எந்த உருப்­ப­டி­யான முன்­னேற்­ற­மும் இல்­லா­த­மை­யி­னால் அதற்­கான பொறுப்­புக்­கூ­ற­லு­டன் உரிய தீர்­வி­னைக் கூறு­தல்.

 வடக்கு கிழக்­குப் பகு­தி­க­ளில் தொழில் முயற்சி என்­னும் பெய­ரில் குடி­யேற்ற முயற்­சி­யோடு அந்­தப் பகுதி மக்­க­ளின் உரிமை மறுக்­கப்­ப­டு­வது தொடர்­பில் நீண்­ட­கா­ல­மா­கச் சுட்­டிக்­காட்­டும் விட­யத்­திற்கு உரிய தீர்வு வழங்­கு­தல்.

வடக்கு கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர், யுவ­தி­கள் வேலை வாய்ப்­பின்­றி­யுள்ள நிலை­யில் சிறப்பாகவேலை­வாய்ப்பு வழங்கி அதற்­கான தீர்வை வழங்­கு­வ­தோடு வடக்கு கிழக்கு பகு­திக்­குத் தெற்­கில் இருந்து நிய­ம­னம் வழங்­கு­வ­தனை நிறுத்­து­தல்.

 வடக்கு கிழக்கு மாகா­ணத்­தின் 8 மாவட்­டங்­க­ளிற்­கும் தமிழ் அரச அதி­பரை நிய­மித்­தல்.

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளில் திட்­டங்­கள் அபி­வி­ருத்­தி­க­ளின்­போது மாகாண அர­சின் கொள்­கை­கள் திட்­டங்­க­ளிற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தோடு திட்­டத்­த­யா­ரிப்­பின்­போதே மாகாண சபை­யின் கருத்­தைப் பெறு­தல்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 13 பேரும் நேற்­றுச் சந்­தித்­துப் பேசி­ய­போது அவ­ரி­டம் இந்­தக் கோரிக்­கை­கள் அடங்­கிய கடி­தம் கொடுக்­கப்­பட்­டது. இதற்கு அவர் எழுத்து மூலம் வழங்­கும் பதி­லைப் பொறுத்து இன்று கூட்­ட­மைப்­பின் முடிவு தெரி­யும் என்று கூறப்­பட்­டது.

http://newuthayan.com/story/81274.html

  • தொடங்கியவர்
  •  
  • கூட்­ட­மைப்­பின் கோரிக்­கைக்கு ரணில் இன்று பதி­ல­ளிப்­பார்!!
 
 

கூட்­ட­மைப்­பின் கோரிக்­கைக்கு ரணில் இன்று பதி­ல­ளிப்­பார்!!

 

அர­சி­யல் தீர்வு உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று நேரில் முன்­வைத்­த­னர்.

இந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு தலைமை அமைச்­சர் ரணில் எழுத்­து­மூ­லம் பதில் வழங்­க­வேண்­டும் என்­றும் கோரி­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேச்சு நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து நாடா­ளு­மன்­றக் குழு­வி­னர், தலைமை அமைச்­சர் ரணிலை நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று மாலை சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர்.

அர­சி­யல் தீர்வு, காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் உள்­ளிட்ட தமி­ழர் தரப்­பி­னர் உட­னடி மற்­றும் நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டும் என்று கோரிக்கை முன்­வைத்­த­னர்.

கூட்­ட­மைப்­பி­ன­ரின் கோரிக்­கை­ளைப் பார்­வை­யிட்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவற்றை நிறை­வேற்­ற­லாம் என்று வாய்­மூ­லம் பதி­ல­ளித்­துள்­ளார். அவற்றை எழுத்­தில் வழங்­க­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

அத்­தோடு தான் நிறை­வேற்­று­வ­தாக ஏற்­றுக்­கொண்ட வாக்­கு­று­தி­களை நாடா­ளு­மன்­றத்­தில் தான் உரை­யாற்­றும்­போது வெளிப்­ப­டை­யா­கவே குறிப்­பி­ட­வேண்­டும் என்­றும் கூட்­ட­மைப்­பி­னர் வலி­யு­றுத்­தி­னார்.

ஆனால், அந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள தலைமை அமைச்­சர் மறுத்­து­விட்­டார். தான் அவ்­வாறு செய்­தால் சிங்­கள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரி­ன­தும் கோபத்­துக்கு ஆளா­க­நே­ரி­டும் என்று அவர் அச்­சம் வெளி­யிட்­டார்.

கூட்­ட­மைப்­பி­ன­ரின் கோரிக்­கைக்­கான பதிலை நாளை (இன்று) வழங்­கு­வ­தாக தலைமை அமைச்­சர் ரணில் குறிப்­பிட்­டார்.

 

http://newuthayan.com/story/81283.html

  • தொடங்கியவர்

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்

 

selvam_adaikalanathan-300x199.jpgதாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

முன்னதாக, நம்பிக்கையில்லா பிரேரரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தது.

இதன்போது, 10 அம்ச கோரிக்கையை கூட்டமைப்பு சிறிலங்கா பிரதமரிடம் கையளித்திருந்ததுடன், இதற்கு எழுத்துமூல உறுதிமொழி தந்தால், பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த 10 அம்ச கோரிக்கையை முன்வைத்த போது, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும்,  அதன் பின்னர் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளாவன.

  1. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண்பது.
  2. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.
  3. பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக விலக வேண்டும்.
  4. அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.
  5. போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.
  6. வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
  7. வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
  8. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்காதவர்களுக்கு இந்த மாகாணங்களில் நியமனங்கள் வழக்கப்படக் கூடாது.
  9. வடக்கு, கிழக்கின் 8 மாகாணங்களுக்கும் மாவட்டச் செயலர்களாக தமிழர்களை நியமிக்க வேண்டும்.
  10. வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, இரண்டு மாகாணசபைகளுடன் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.

ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/04/05/news/30244

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.