Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில்

Featured Replies

இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில்

2020 இன் வெற்றி தற்­போதே உறுதி

01-474cf1d469b00439b06ce932ffc7c8af01786468.jpg

 

பிர­தமர் அறி­விப்பு; உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றும் பய­ணத்தை ஆரம்­பித்­து­விட்டோம் என்­கிறார்

(இரா­ஜ­துரை ஹஷான்)

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு அர­சியல் வெற்றி இலக்கை அடை­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை முக்­கிய திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை ஒருபோதும் மறக்­கப்­போ­வ­தில்லை.

அவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை காரி­யா­ல­ய­மான சிறி­கொத்­தாவில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் வெற்­றி­யினை கொண்­டாடும் வகையில் நேற்று இடம்­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்­றிய போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசிய கட்சி பலம் வாய்ந்த கட்சி என்­பதை பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் நிரூ­பித்து விட்­டனர். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் வெற்றி கூட்டு எதிர்க்­கட்­சிக்கு பாரிய பதி­ல­டி­யாக காணப்­ப­டு­கின்­றது. தேசிய அர­சாங்கம் மக்­க­ளுக்கு முன்­வைத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மறக்­கப்­போ­வ­தில்லை. உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் நாட்டு மக்கள் தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை. எப்­படி செயற்­பட வேண்டும் என நினை­வுப்­ப­டுத்­தினர். மக்­க­ளுக்­காக பாரிய மாற்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி ஏற்­ப­டுத்தும்.

எனக்கு எதி­ராக கூட்டு எதிர்­கட்­ச­யினர் கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எனக்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல தேசிய அர­சாங்­கத்­திற்கும் நல்­லாட்­சிக்கும் எதி­ரா­ன­தா­கவே காணப்­பட்­டது. கட்­சியில் காணப்­பட்ட ஒரு சில குறை­களை மையப்­ப­டுத்தி சில விச­மிிகள் கட்­சிக்குள் பிள வினை ஏற்­ப­டுத்த முற்­பட்­டனர். அவர்­களின் முயற்­சிகள் தற்­போது தோல்­வி­ய­டைந்­துள்­ளன.

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் மறு­சீ­ர­மைப்­பினை மேற்­கொள்­வது தற்­போது பெற்றுக் கொண்ட வெற்­றியின் பிர­தான தேவை­யாக காணப்­ப­டு­கின்­றது. கட்சி உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்டால் எதிர்­வரும் 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரிய வெற்­றி­யினை பெற­மு­டியும். தேசிய அர­சாங்­கத்­தினை முழு­மை­யாக அழிப்­பதே கூட்டு எதிர்க்­கட்­சியின் பிர­தான நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாட்டு மக்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்சி முன்­வைத்த வாக்­கு­று­தி­களை கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் ஒரு­போதும் மறக்­க­போ­வ­தில்லை. இரண்டு பிர­தான கட்­சி­களும் தேசிய அர­சாங்­க­மாக இணைந்து செயற்­படும். தேசிய அர­சாங்­கத்தில் காணப்­ப­டு­கின்ற சில குறை பாடு­களை எதிர்­த­ரப்­பினர் தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து அழுத்­தங்­களை பிர­யோ­கித்து தேசிய கொள்­கை­க­ளுக்கு இழுக்­கினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்த கிழ­மைக்குள் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­பினை மேற்­கொண்டு மக்­களின் அபி­லா­சை­க­ளுக்கு ஏற்ப நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டின் நிர்­வா­கத்­தினை மேற்­கொள்ளும்.. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வந்­த­மைக்கு கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கு நன்­றி­களை கூற வேண்டும் ஏனெனில் பெறப்­பட்ட வெற்­றியின் பின்­னரே கட்சி மேலும் வலு­வ­டைந்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு வரை தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் செயற்­படும். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த உறுப்­பி­னர்­களை ் நீக்­கு­மாறு கட்­சியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ் கலந்துரையாடலினை மேற்கொண்டதன் பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

பெறப்பட்டுள்ள வெற்றியினை நாட்டுமக்கள் கொண்டாடி வருகின்றனர். மக்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், கட்சி பேதமின்றி ஆதரவினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பிணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.   

 

 

சுதந்திரக் கட்சி எம்.பி.க்களை சந்­தித்த ஜனா­தி­பதி

 

(ரொபட் அன்­டனி)

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை நேற்று முன்­தினம் தோற்­க­டிக்­கப்­பட்ட நிலை யில் நேற்று காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.   

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்­பின்­போது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தொடர்பில் விரி­வாக ஆராய்ப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­திரி தரப்பில் அங்கம் வகிக்­கின்ற 41 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் 25 பேர் வாக்­க­ளிக்கும் நேரத்தில் சமு­க­ம­ளிக்­காமல் மற்றும் 16 எம்.பி.க்கள் பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளித்­தமை தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

 இதன்­போது இந்த 16 எம்.பி.க்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்க எடுத்த முடிவு தொடர்பில் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. மறு­புறம் 25 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு சம­க­ம­ளிக்­காமை குறித்து மாற்­றுத்­த­ரப்பால் விசனம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

விசே­ட­மாக பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த 16 பேரின் தீர்­மானம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது அது­மட்­டு­மன்றி எதிர்­வரும் மே மாதம் 7ஆம் திகதி சிறி­லங்கா சுதந்திரக்கட்சி மே தினக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டிருக்கிறது

 

 

 

16 சு.க. எம்.பி.க்களுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை

03-8b16c0b911eda502e9510a35286d3a35acb527db.jpg

 

சபா­நா­ய­க­ரிடம் இன்று சமர்ப்­பிக்­க­வுள்­ளது ஐக்­கிய தேசிய கட்சி

(எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி)

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால உட்­பட அமைச்­சர்கள்,

இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பத­வி­களை வகிக்கும் சுதந்­திரக் கட்­சி­யினர் 16 பேருக்கு எதி­ராக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர­வுள்­ளனர். இதன்­படி இன்­றைய தினம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் குறித்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளையும் கைச்­சாத்து வேட்­டை­க­ளையும் ஐக்­கிய தேசியக் கட்சி நேற்று முன்­னெ­டுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கடந்த 21 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கைய­ளித்­தனர். அதன்­பின்னர் கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னித்­திற்கு அமை­வாக கடந்த நான்காம் திகதி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்­கெ­டுப்­புக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. 

 வாக்­கெ­டுப்பின் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கும ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 பேர் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். அத்­துடன் 23 பேர் வாக்­கெ­டுப்­புக்கு வருகை தர­வில்லை. இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் கூட்டு பொறுப்­பினை மீறி செயற்­பட்­ட­மையை அடிப்­ப­டை­யாக கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால உட்­பட 16 பேருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர். 

 அதற்­கான கைச்­சாத்­து­களை ஐக்­கிய தேசியக் கட்சி நேற்­றைய பெற்­ற­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­நி­லையில் இன்­றைய தினம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் குறித்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளிக்­க­வுள்­ளது. 

இது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டா­ர­விடம் வின­விய போது அவர் கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் மீதான வாக்­கெ­டுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் 16 பேர் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். அத்­துடன் 23 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு வருகை தர­வில்லை. 

இந்­நி­லையில் இது அர­சாங்­கத்தின் கூட்டு பொறுப்பை மீறும் செயற்­ப­டாகும். சுதந்­திரக் கட்­சி­யினர் கார­ண­மா­கவே இக்­கட்­ட­ன­மான நிலை­மைக்கு நாம் முகங்­கொ­டுக்க வேண்­டி­ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இவர்கள் உடன் அர­சாங்­கத்­தினுள் வகிக்கும் பத­வி­களை துறந்து விட்டு உடன் வெளியேற வேண்டும்.

அவர்கள் வெளியேறாவிட்டால் நாம் வெளியேற்றுவோம். இதன்பிரகாரமே சுதந்திரக் கட்சியின் 16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளோம். இதன்படி அதற்கான கையொப்பங்கள‍ை பெற்று வருகின்றோம். 

 

இதன்படி இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளோம் என்றார்.  

 

 

 

எம்மை வெளி­யேற்றுவதற்கு பிர­த­ம­ருக்கு உரி­மை­யில்லை

05-2772cb239e90dd753fd183615cfe869e863aa2d5.jpg

 

முது­கெ­லும்­பு­ட­னேயே ஆத­ரித்தோம் - டிலான், தயா­சிறி, திலங்க கூட்­டாக சூளுரை

(இரோஷா வேலு)

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த எம்மை அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கூறு­வ­தற்கு பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அதி­காரம் கிடை­யாது என  தெரி­வித்­துள்ள அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா, தயா­சிறி ஜய­சே­கர மற்றும் திலங்க சும­தி­பால ஆகியோர் முது­கெ­லும்­பு­ட­னேயே பிர­த­மரை எதிர்த்­த­தா­கவும் இத­னை­யிட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மகிழ்ச்சி அடைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.  

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

இங்கு இவர்கள் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த எம்மை அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கூறு­வ­தற்கு பிர­த­ம­ருக்கு அதி­காரம் கிடை­யாது. அதனைப் போல் முன்னால் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­சவை எதிர்க்க முது­கெ­லும்­புடன் துணிந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இம்­முறை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை எதிர்க்க துணிந்த ஸ்ரீலங்கா சுதந்தி கட்­சியின் 16 எம்.பி.க்களை கண்டு மகிழ்ச்சி அடைந்­துள்ளார்.

அவற்­றுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ள­தாக பல இடங்­களில் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரும் சில­ருக்கும், நாட்டின் பொது மக்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பிள­வு­ப­ட­வில்லை என்ற உண்­மையை தெரி­வித்­துக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

அவற்­றுடன் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி 13 கார­ணங்­களை முன்­வைத்­துள்­ளது. அதனை கொண்டே இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்பு நடந்­தது. எனவே இதில் எங்கும் கூட்டு எதிர்­கட்­சிக்கு ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்ற இட­மில்லை.

தயா­சிறி ஜய­சே­கர

நாங்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராண நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வர கூட்டு எதிர்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்­டாலும் எப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நாமத்தின் கீழேயே செயற்­ப­டுவோம்.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சார்­பாக வாக்­க­ளித்த எம்மை பதவி விலக கூற பிர­த­ம­ருக்கு அதி­காரம் இல்லை. இது வெறும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வெற்­றி­யே­யாகும். நாட்டின் ஆட்சி அதி­கா­ரத்தை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­ற­வில்லை.

அரசின் அனைத்து தரப்­பிலும் ஸ்ரீ.சு.க வின் அமைச்­சர்கள் உள்­ளார்கள். இதனால் எடுத்­ததும் எம்மை வெளியே போக சொல்ல ஐ.தே.க. யின­ருக்கும் அதி­காரம் கிடை­யாது என்றார்.

சந்­திம வீர­கொடி குறிப்­பி­டு­கையில்

ஜனா­தி­ப­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் பின்னர் நேற்­று­முன்­தினம் காலை 9.30 மணி­ய­ளவில் மீண்டும் மகிந்த அம­ர­வீ­ரவின் வீட்டில் கூடி இப்­பி­ரே­ரணை தொடர்பில் கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போது நாம் யாரையும் தனிப்­பட்ட ரீதியில் தாக்­கு­வ­தற்­காக நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை.

எமது மக்கள் வழங்­கிய ஆணை­யையே நாம் நிறை­வேற்­றினோம். யாரும் பக்­கச்­சார்­பா­கவும் செயற்­ப­ட­வில்லை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சார்­பாக வாக்­க­ளித்த 16 பேரும் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாத 26 பேரும் இந்த பிரே­ர­ணையை சார்ந்தே செயற்­பட்­டுள்­ளனர்.

பிணை­முறி மோசடி தொடர்­பான எதிர்ப்பே இந்த பிரே­ர­ணைக்­கான காரணம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எமக்கும் சிறந்த நண்­பரே ஆனாலும் நாம் மக்கள் ஆணையை நிறை­வேற்ற வேண்டும். இத­னையே நாம் செய்­து­காட்­டி­யுள்ளோம் என்றார்.

டிலான் பெரேரா குறிப்­பி­டு­கையில்

பாரா­ளு­மன்­றத்­தி­னதும், நாட்­டி­னதும், அமைச்­ச­ர­வை­யி­னதும் மற்றும் ஸ்ரீ.சு.க.வினதும் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வே­யாவார். அவரின் தீர்­மா­னத்­திற்கும் நாம் அடி­ப­ணிவோம். ஆனால், ஏனைய கட்­சி­களின் நலன்­க­ளுக்­காக செயற்­பட நாம் தயா­ரில்லை. எனவே இது வெறும் ஓர் பிரே­ரணை வெற்­றியே தவிற ஆட்சி கதிரை அவர்கள் கையி­லில்லை.

எமது கட்­சி­யி­னரை பதவி விலக்க பிர­த­ம­ருக்கு அதி­கா­ர­மில்லை. அத­னுடன் எமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த யாரும் எம்மை வற்­பு­றுத்­த­வில்லை. சுய­மான தீர்­மா­னங்­களை முது­கெ­லும்­புடன் நாம் எடுத்­துள்ளோம். அதனை விமர்­சிக்க யாருக்கும் உரிமை கிடை­யாது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெற்­றிக்கு பின்னர் பிர­பல ஊடகம் ஒன்­றுக்கு முன்னாள் பிர­த­மரை சார்ந்த சிலர் சென்று அரா­ஜகம் பண்­ணி­யி­ருப்­ப­தா­னது . ஆட்சி கதி­ரையை ஐ.தே.கவிடம் வழங்­கினால் என்ன ஆகும் என்­பதை நேற்று நடந்த சம்­பவம் வெளிச்சம் போட்டு காட்­டி­யுள்­ளது.

அத­னைபோல் அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­தின அவரின் அமைச்சுப் பத­விக்­கான பணி­களை மாத்­திரம் செய்­யாமல், பொலிஸ் மா அதி­பரின், ஜனா­தி­ப­தியின் , பிர­மரின் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பணி­களை செய்ய முன்­வ­ரு­வது சிலரின் மந்­தி­ரத்­தி­னா­லேயே என்­பது நாட­றிந்த உண்­மை­யாகும்.

அவற்­றுடன் ஸ்ரீ.சு.க. கட்சி பிளவு பட்­டி­ருப்­ப­தாக கூறும் கருத்து மிகவும் தவ­றா­னது. நாம் ஒற்­று­மை­யா­கவே உள்ளோம்.

 பிர­த­மரின் வெற்­றிக்­காக அவர்கள் பல கோடி­களை செல­வ­ழித்­தி­ருப்­ப­தாக எமது காது­க­ளுக்கு கேட்க கிடைத்­தது. இது உண்­மை­யா­கவும் இருக்­கலாம். அதேபோல் இந்த வெற்­றிக்­காக பிர­தமர் தமிழ் கூட்­ட­மைப்­புக்கு ஆட்­சி­ய­மைக்க அதி­காரம் வழங்­கப்­ப­டு­வ­தாக ஓர் வாக்­கு­றுதி அறிக்கை வழங்­கி­யுள்ளார். எனவே தன் வெற்­றிக்­காக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எந்த எல்­லைக்கும் செல்வார் என்­பதை வெளிக்­காட்­டி­யுள்­ளது.

எனவே இந்த வெற்­றியில் எமக்கு எந்த நம்­பிக்­கையும் இல்லை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் பிணை­முறி தொடர்பான வாதமே அதிகமாக முன்வைக்கப்பட்டது. ஆயினும் சிலர் இதனையறியாமலே பிரதமருக்கு ஆதரவாக வாக்குறுதி வழங்கியுள்ளனர். இவை பொது மக்கள் வழங்கிய அதிகாரத்தை வெறும் துச்சமாக மதிப்பிட்டதற்கான ஓர் வெளிப்பாடாகும்.

எது எவ்வாறாயினும் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றவில்லை. இது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி மாத்திரமே என்றார்.

இந்நிலையில் எதிர்கால அரசாங்கம் எந்த நிலைப்பாட்டில் காணப்படும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர்கள் மூவரும் புன்னகைத்து அது குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுப்பார் என கூறி சென்றனர்.  

 

 

 

தேசிய அர­சாங்­கத்தில் சுதந்­தி­ரக்­கட்சி நீடிக்கும்

04-f004eac0af1a1337010429095126312e8ac49899.jpg

 

எமது தீர்­மா­னத்தில் ஜனா­தி­பதி தலை­யி­ட­வில்லை

(ரொபட் அன்­டனி)

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ந்து தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்கும். அதா­வது எமது தரப்பில் 16 எம்.பி.க்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்­ள­போ­திலும்  சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ந்து தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­கவே விரும்­பு­கின்­றது. குறித்த இந்த 16 எம்.பி.க்களை அர­சாங்­கத்தில் வைத்­தி­ருப்­பதா அல்­லது பதவி விலக்­கு­வதா என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி நேற்ற உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­வித்­தது.  

அத்­துடன் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யா­னது அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவே கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் ஜனா­தி­ப­தியை பல­வீ­னப்­ப­டுத்தி அவ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் பிரே­ர­ணையை கொண்­டு­வரும் முயற்­சியே இருந்­தி­ருக்­கி­றது. என­வேதான் சுதந்­தி­ரக்­கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் வாக்­க­ளிக்­காமல் இருக்க தீர்­மா­னித்­தனர் என்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி குறிப்­பிட்­டது. 

கொழும்­பி­லுள்ள கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட அமைச்­சர்­க­ளான மஹிந்த சம­ர­சிங்க, மற்றும் விஜித் விஜி­ய­முனி சொய்சா ஆகியோர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டனர் அமைச்சர் மஹிந்த சம­ர­சங்க முதலில் குறிப்­பி­டு­கையில்: பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கூட்டு எதி­ரணி கொண்­டு­வ­ரும்­போது எமது பாரா­ளு­மன்­றக்­கு­ழுவில் ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை. அதில் எமது கட்­சியின் நான்கு உறுப்­பி­னர்­களும் கைச்­சாத்­திட்­டி­ருந்­தனர். 

எவ்­வா­றெ­னினும் தற்­போது இந்த பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்சி எடுத்த தீர்­மா­னத்தில் ஜனா­தி­ப­திக்கு எவ்­வா­றான தொடர்பும் இருக்­க­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் எடுக்கும் தீர்­மா­னத்­திற்கு சுதந்­தி­ர­மாக இட­ம­ளிப்­ப­தாக கூறினார். மாறாக ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வேண்­டு­மென்றோ, எதி­ராக வாக்­க­ளிக்­க­வேண்­டு­மென்றோ நடு­நிலை வக்­க­வேண்­டு­மென்றோ ஜனா­தி­பதி கூற­வில்லை. குறிப்­பாக ஜனா­தி­ப­திக்கு எமது கட்­சி­யினர் எடுத்த தீர்­மா­னத்­திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

4ஆம் திகதி என்ன நடந்­தாலும் 5ஆம் திகதி அர­சாங்­கத்தை கொண்­டு­ந­டத்­து­வது நாட்டின் தலைவர் என்ற வகையில் தனது கடமை என ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார். முதலில் எமது கட்சி இது­தொ­டர்பில் தீர்­மா­னித்து பிர­த­மரை பதவி விலக கோரி­யது. ஆனால் அதனை அவர் மறுத்­து­விட்டார். அத்­துடன் அந்த செயற்­பாடு முடிந்­து­விட்­டது. அதன்­பின்னர் கட்­சி­யி­ன­ருக்கு சுதந்­தி­ர­மான முறையில் தீர்­மானம் எடுக்க சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. எமது தரப்பில் 41 எம்.பி.க்கள் உள்­ளனர். இதில் இ.தொ.கா.வின் 2 உறுப்­பி­னர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அந்­த­வ­கையில் இ.தொ.கா.வின் இரண்டு உருப்­பி­னர்­க­ளையும் சேர்த்து 25 பேர் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் தவிர்த்­துக்­கொண்­டனர். 16 ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர் என்றார். 

 அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா குறிப்­பி­டு­கையில்; இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக எதிர்­பார்க்­கப்­பட்­டது என்ன என்­பது குறித்து இங்கு ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. இந்தப் பிரே­ரணை ஊடாக பிர­த­ம­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக மத்­திய அர­சாங்­கத்தின் அதி­கா­ரத்தை கைப்­பற்றி அதன் ஊடாக சுதந்­தி­ரக்­கட்­சியை கைப்­பற்றி ஜனா­தி­ப­தியை பல­வீ­னப்­ப­டுத்தி அவ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் பிரே­ர­ணையைக் கொண்­டு­வரும் நோக்­கமே இதி­லி­ருந்­தது. கடந்த தேர்­தலில் மஹிந்த தரப்பு இன­வா­தத்தைக் கக்­கி­விட்டே கிராம அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யது. அதன்­படி இந்தப் பிரே­ரணை ஊடாக ரணிலை தோற்­க­டிக்கும் நோக்கம் இருக்­க­வில்லை. இதனை நாங்கள் புரிந்­து­கொண்­ட­தா­லேயே வாக்­க­ளிப்­பதில் கலந்­து­கொள்ள கூடாது என்று முடி­வெ­டுத்தோம். ஆரம்­பத்தில் எஸ்.பி. திஸா­நா­யக்க, திலங்க சுமத்­திப்­பால போன்­றோரும் வாக்­க­ளிக்­காமல் இருக்­கவே தீர்­மா­னித்­தனர். ஆனால் இறு­தியில் பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளித்­தனர். 

கேள்வி: பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 எம்.பி.க்களுக்கு எதி­ராக என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்?

பதில்: கட்சி என்ற ரீதியில் அவ்­வாறு யாருக்கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. கட்­சியின் 23 பேர் வாக்­க­ளிக்­காமல் விட்­டனர். 16 பேர் பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளித்­தனர். இதில் யாருக்கு எதி­ரா­கவும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. 

கேள்வி: குறித்த 16 பேரும் அர­சாங்­கத்தில் நீடிப்­ப­தற்கும் அமைச்சுப் பதவி வகிப்­ப­தற்கு அரு­க­தை­யுள்­ள­வர்­களா?

பதில்: அது குறித்து ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும். ஆனால் நாங்கள் 41 பேரும் இணைந்து ஒரு­மித்தப் பய­ணத்தை முன்­னெ­டுக்­கவே எதிர்­பார்க்­கின்றோம். 

கேள்வி: நீங்கள் அங்கம் வகிக்கும் அர­சாங்­கத்தின் பிர­த­மரை எதிர்த்து 16 பேர் வாக்­க­ளித்­துள்­ளனர். இந்த நிலையில் சுய­ம­ரி­யா­தை­யுடன் சுதந்­தி­ரக்­கட்சி அரசில் நீடிக்க முடி­யுமா? 

பதில்: அது குறித்து ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும். 

கேள்வி: அப்­ப­டி­யாயின் தேசிய அர­சாங்­கத்தை நீடிக்க புதிய உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­டுமா?

பதில்: அது பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யி­லான செயற்­பாடு, அது தொடர்பில் உரிய தரப்­பினர் ஆராய்வர். 

கேள்வி: ஐ.தே.க.வும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதே?

பதில்: அது அந்தந்த கட்சிகளின் செயற்பாடுகள் அது குறித்து நாம் கருத்து வெளியிட முடியாது. ஆனால் சிறுபான்மை கட்சிகளை இதில் வித்தியாசமான முறையில் தோற்றுவித்து விட்டு நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்படவேண்டாமென கோரிக்கை விடுக்கின்றோம். 

கேள்வி: அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாமல் போய்விட்டதே?

 

பதில்: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பெரும்பான்மை பலம் இருக்கிறது. அதனை தேவையான நேரத்தில் ரகசியமான முறையில் வெளிப்படுத்த நாங்கள் தயராக உள்ளோம். 

 

 

 

சம்­பந்தன் இரா­ஜி­னாமா செய்ய வேண்டும்

08-de20e8dda648ae5574057ec4eaabcebcd7762433.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

நம்­பிக்­கை­யில் லாப் பிரே­ர­ணை­யின்­போது பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவை உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்­சி­யாக உள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே  பாது­காத்­தது. எதிர்க்­கட்சி பிர­த­மரைப் பாது­காப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மா­ன­தாகும். ஆகவே எதிர்க்­கட்சித் தலை­மை­யி­லி­ருந்து இரா.சம்­பந்தன் உட­ன­டி­யாக இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்சி கேட்­டுக்­கொண்­டுள்­ளது.  

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­யா­லாளர் சந்­திப்பு நேற்று பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதில் கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற பாரிய மோச­டிக்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி பல்­வே­று­பட்ட நட­வ­டிக்­கை­களை கடந்த காலங்­களில் மேற்­கொண்டு வந்­தது. அதன் மற்­று­மொரு நட­வ­டிக்­கை­யா­கவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எத­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை முன்­வைத்தோம். அதனைத் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்­குள்ளும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்ளும் பூதா­க­ர­மான நிலை ஏற்­பட்­டது

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லுள்ள ஒரு தரப்பும் எம்­முடன் இணைந்து வாக்­க­ளித்­தனர். அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்­துக்­கொண்டு பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். ஏனெனில் கடந்த காலங்­களில் பிர­த­ம­ருடன் பிணக்­குகள் ஏற்­ப­டு­கின்ற வேளை­களில் அமைச்­ச­ர­வையில் இந்த உறுப்­பி­னர்கள் வில­கிய சந்­தர்ப்­பங்­களே நடந்­தே­றி­யுள்­ளன.

மேலும் சிலர் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­காது, வாக்­க­ளிப்­பி­லி­ருந்து வில­கி­யி­ருந்­தனர். ஆகவே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வாக்­கெ­டுப்பில் பிர­தமர் வெற்­றி­ய­டைந்­தாலும் அவர் மீது பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கை­யீ­னமே நில­வு­கி­றது. எனினும் பிர­த­மரை உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்­சி­யாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே பாது­காத்­தது.

 உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்சி பிர­த­மரைப் பாது­காப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மா­ன­தாகும். ஆகவே எதர்க்­கட்சித் தலை­மை­யி­லி­ருந்து இரா.சம்­பந்தன் உட­ன­டி­யாக இரா­ஜி­னாமாச் செய்ய வேண்டும். அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குழுவை எதிர்க்­கட்­சி­யாக ஏற்­றுக்­கொள்ள சபா­நா­யகர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் அக்­கு­ழு­வி­லுள்ள ஒரு­வரை எதிர்­கட்சித் தலை­வ­ரா­கவும் நிய­மிக்க வேண்டும்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 76 பேர் வாக்­க­ளித்தன் மூலம் அர­சாங்­கத்­திற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாதுபோயுள்ளது. அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரையில் அவ்வாக்குறுதி நறைவேற்றப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.