Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியாட்சி சாத்தியமில்லை

Featured Replies

தனியாட்சி சாத்தியமில்லை
 
 

image_2758a807da.jpg
தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் தனியாக ஆட்சியைக் கோரும் அதிகார பலம் எந்தக் கட்சிக்கும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (06) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அச்சந்திப்பில் மேலும் கூறுகையில்,

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலேயே அனைவரும் இப்போது பேசுகின்றனர். நான் அதற்கு ஆதரவு வழங்கியதாகச் சிலரும், ஆதரவு வழங்கவில்லை எனச் சிலரும் கூறுகின்றனர். ஆகையால் என்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.

“பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், சில கட்சிகள் தங்களுக்குப் பலம் கிடைத்துவிட்டதாகக் கருதினர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எந்தவொரு கட்சியும் 40 சதவீதத்துக்கு மேல் வாக்கினைப் பெறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமார் 15 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. எமக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் சுமார் 30 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.

“நிலைமை இவ்வாறிருக்கையில், தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் தாங்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இதேவேளை, பொது எதிரணியில் இருப்பவர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கைக்கிணங்க, அவர்களைச் சந்தித்தபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாகவும், அதனூடாக பிரதமர் பதவியைத் தமக்குத் தரவேண்டும் எனவும் கோரினர்.

“பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா இல்லையா என்று நாடாளுமன்றத்தில் நிரூபியுங்கள் என்று கூறினேன். அதற்கான பிரதிபலன் எவ்வாறு அமைந்தது என்பது யாவரும் அறிவீர்கள்' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்,

“நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிரதமர் வெற்றிகொண்டதன் பின்னர் தனியாட்சி சாத்தியமா எனக் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடையாது. ஆகையால் கூட்டாட்சி ஒன்றே சாத்தியமானது. எனவேதான், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்கின்றோம்.

“நாட்டினுடைய எதிர்காலம் கருதி, வலுவான ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டுமெ என வேண்டிக்கொள்கிறேன்“

உள்ளூராட்சி முறை மாறும்

“நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், சபைகளை யார் ஆள்வது என்பது தொடர்பான போட்டி தொடர்கிறது. அவை அனைத்தும் இன்று நிறைவுக்கு வரும். வெற்றி பெற்ற கட்சிகளைவிட ஏனைய கட்சிகளின் கைகளிலேயே பெரும்பான்மையான சபைகள் சென்றிருக்கின்றன. அதாவது மக்கள் ஆணைக்குப் புறம்பான வகையிலேயே ஆட்சியதிகாரம் கைமாற்றப்பட்டிருக்கிறது. ஆகையால் இந்தத் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாகப் பரிசீலிக்கின்றோம். 8,000 மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களை 4,000 உறுப்பினர்களாக அதாவது 50 சதவீதத்தால் குறைக்கும் திருத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெசாக் வாரம்

ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் மே 06ஆம் திகதிவரை புனித வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும், மே 7ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடணப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வரிவிதிப்பால் பாதிப்பில்லை

“வங்கி வைப்பில் 125,000 ரூபாய்க்கும் அதிகமான வட்டியைப் பெறும் நபர்களுக்கே வருமான வரி அறவிடப்படவுள்ளது. அதாவது 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வைப்பில் வைத்திருக்கும் ஒருவருக்கே ரூ.125,000 வட்டி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக ஏழைகளாக இருக்கமாட்டார்கள். எனவே, பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது“ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சரவையில் மாற்றம்

“அமைச்சரவையில் முழுமையான மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதாவது, சில அமைச்சுகளுக்குக் கீழுள்ள திணைக்களங்களின் தன்மை போன்ற விடயங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் பற்றிய முடிவை கட்சியின் உயர்பீடம் கூடியே தீர்மானிக்கும்“ எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சம்பந்தனுக்கு நன்றி

“சிங்கள மக்களின் மனங்களை வெல்லக்கூடியதும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் திருப்தியையும் கருத்திற்கொண்டே தீர்வைக் கோருகிறார் சம்பந்தன். அந்தவகையில் அவரது எதிர்பார்ப்பை வரவேற்கிறோம். அனைவரையும் திருப்திப்படுத்த நினைக்கும் அவருக்கு எமது நன்றிகள்“ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு எப்போது?

புதிய அரசமைப்பை எப்போது உருவாக்குவீர்கள் என்ற கேள்விக்கு, “நாடாளுமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். இனிமேல் நாடாளுமன்றம்தான் அதற்குப் பதில் கூறவேண்டும்” என, ஜனாதிபதி பதிலளித்தார்.image_c046d5eab9.gif

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தனியாட்சி-சாத்தியமில்லை/150-213982

  • தொடங்கியவர்

பலம்மிக்க அர­சாங்­கத்தை கட்டி எழுப்ப நடவடிக்கை

Sp21-6c7c982f607e1b407b18a40fea3a123dd815feff.jpg

 

தவ­று­களை திருத்தி முன்­செல்ல குழு; ஜனா­தி­பதி மைத்திரி அறிவிப்பு

(நமது நிருபர்)

நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத் தின் பெறு­பேறு தற்­போது கிடைத்­து­விட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் எத்­த­கைய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டாலும் பலம்­மிக்க அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதற்­கான நட­வ­டிக்­கை­யை நான் மேற்­கொள்வேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தின் புதிய வேலைத்­திட்­டங்கள், புதிய அமைச்­ச­ரவை மற்றும் தவ­று­களை திருத்தி முன்­னோக்கி செல்­வது தொடர் பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் ஆலோ­சனை நடத்­தி­யுள்ளேன். இந்த விட­யங்கள் குறித்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இரு­த­ரப்பின் சார்­பிலும் குழு­வினை நிய­மிப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.  

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள் மற்றும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களை நேற்று ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு கருத்து தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது:

பிர­தமர் மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அர­சி­யலில் சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த மாகா­ண­சபைத் தேர்­தலில் எந்­த­வொரு கட்­சியும் 40 வீதத்­திற்கு மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற­மு­டி­யாது போய்­விட்­டது. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது நான்கு சின்­னங்­களில் போட்­டி­யிட்டு 14 வீத­மான வாக்­கு­களை தேசிய ரீதியில் பெற்­றி­ருந்­தது. இந்த தேர்­தலில் தாம் பெற்ற வாக்­கா­னது ஆட்சி அமைப்­ப­தற்கு போது­மா­னது என்று பொது எதி­ரணி கோரி­வ­ரு­கின்­றது. இந்த நிலையில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டு­மென்று அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த ஒரு பிரி­வினர் கோரி­வந்­தனர்.

பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்­திலும் மத்­திய குழுக்­கூட்­டத்­திலும் இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. மாகா­ண­சபைத் தேர்­தலின் பின்னர் அர­சாங்­கத்தில் இருந்து வில­க­வேண்டும் என்ற இவர்­களின் கோரிக்கை அதி­க­ரித்­தது. மொட்­டுச்­சின்­னத்தில் போட்­டி­யிட்­ட­வர்­களும் சுதந்­தி­ரக்­கட்­சியில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என்று கோரும் பிரி­வி­னரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அதி­ருப்­தி­யா­ளர்­களும் ஒன்­றி­ணைந்தே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யினை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர்.

அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்­த­வர்கள் என்னை மூன்று தட­வைகள் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். பாரா­ளு­மன்­றத்தில் தம்­மிடம் பெரும்­பான்மை இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர். இந்த நிலை­யில்தான் பெரும்­பான்­மையை காண்­பித்தால் தீர்­மானம் எடுக்க முடியும் என்ற நிலைப்­பாட்டை அவர்­க­ளிடம் வெளி­யிட்டேன்.

இத­னை­ய­டுத்து மூன்று பிரி­வி­னரும் பேசி நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை முன்­வைத்­தனர். தற்­போது அதன் பெறு­பேறு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் எத்­த­கைய முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டாலும் பலம்­மிக்க அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­ல­வேண்­டி­யது எனது கட­மை­யாகும். இதனால் அர­சாங்­கத்தைப் பலப்­ப­டுத்த நான் நட­வ­டிக்கை எடுப்பேன்.

தற்­போ­தைய நிலையில் எந்­தக்­கட்­சியும் தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய நிலைமை இல்லை. கடந்த பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு 106 ஆச­னங்­களே கிடைத்­தது . இதனால் சக­லரும் இணைந்து ஆட்சி செய்­ய­வேண்­டிய நிலை உள்­ளது. அர­சாங்­கத்தை பலம் மிக்­க­தாக மாற்­று­வ­தற்கு 225 எம்.பி.க்களையும் இணை­யு­மாறு நான் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

மாகா­ண­சபைத் தேர்தல், கண்டி வன்­மு­றைச்­சம்­பவம் மற்றும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை போன்ற விட­யங்­க­ளினால் நாட்டில் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலைமை காணப்­பட்­டது. எனவே இனி­யா­வது நாட்டை கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கேள்வி: ஜனா­தி­ப­தி­யா­கிய நீங்கள் நேர்­மை­யா­னவர் என்ற எண்ணம் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் மத்­தி­யிலும் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் காணப்­பட்­டது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நீங்கள் பங்­க­ளிப்பு செய்­தி­ருந்­தீர்கள். கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரால் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் நீங்கள் ஈடு­பட்­டதன் மூலம் உங்கள் மீது மக்­களும் வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­களும் வைத்­தி­ருந்த நன்­ம­திப்பு குறை­வ­டைந்­துள்­ளது. இது­கு­றித்து என்ன கூறு­கின்­றீ­ரகள்?

பதில்: நான் தலை­யிட்டேன் என்று கூறு­வதில் தெளி­வற்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அது குறித்து விளக்­மு­டி­யுமா?

செய்­தி­யா­ளரின் விளக்கம்: பிர­த­மரை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு நீங்கள் கோரி­யி­ருந்­தீர்கள். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டதன் பின்னர் பிர­த­ம­ரு­டனும் சம்­பந்­த­னு­டனும் நீங்கள் பேசி­யி­ருந்­தீர்கள். பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக நீங்கள் செயற்­பட்­டது போன்ற தக­வல்கள் ஊட­கங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தன. கூட்டு எதிர்க்­கட்­சியின் பிரே­ர­ணையை நீங்கள் அப்­ப­டியே விட்­டிக்­கலாம் அல்லா?

பதில்: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை எப்­படி கொண்­டு­வ­ரப்­பட்­டது என்­பது குறித்து நான் முன்னர் விளக்­கி­யி­ருந்தேன் பிர­தமர், சம்­பந்­த­னுடன் நான் அந்த விடயம் குறித்து பேசி­யி­ருந்தேன். சகல கட்­சி­களும் என்­னுடன் இந்த விடயம் தொடர்பில் சந்­தித்து பேச­வுள்­ளன . இந்த விட­யத்தில் பெரும்­பான்­மையைக் காட்­டு­மாறே நான் கோரி­யி­ருந்தேன். வேறு சம்­பந்தம் எனக்கு இல்லை.

கேள்வி: பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட­யத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்தம் உங்­க­ளுக்கு இருந்­த­ததா?

பதில்: இலங்­கையின் பாரா­ளு­மன்ற விவ­கா­ரத்தில் தலை­யிட வேண்­டிய அவ­சியம் எந்­த­நாட்­டுக்கும் இல்லை. சர்­வ­தேச சமூகப் பிர­தி­நி­த­களோ, அல்­லது எந்த நாட்­டி­னதும் பிர­தி­நி­தி­களோ என்­னுடன் கதைக்­கவும் இல்லை. அழுத்தம் கொடுக்­கவும் இல்லை.

கேள்வி: பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்று (நேற்று முன்­தினம்) சந்­தித்துப் பேசி­னீர்­களா?

பதில்: ஆம் அர­சாங்­கத்தை எவ்­வாறு முன்­கொண்டு செல்­வத என்­பது தொடர்­பிலும் அர­சாங்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வது குறித்தும் பிர­த­ம­ருடன் நேற்று பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது.

கேள்வி: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஜனா­தி­ப­தியின் பூரண ஆசிர்­வா­தத்­து­ட­னேயே செயற்­ப­டு­வ­தாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­வித்­த­துடன் ஆத­ரித்தும் வாக்­க­ளித்­துள்­ளனர். மற்­றைய பிரி­வினர் வாக்­கெ­டுப்பில் பங்­கு­பெற்­றா­தி­ருந்­துள்­ளனர். பிர­த­ம­ருடன் தொடர்ந்து பணி­யாற்ற முடி­யாது என்றும் சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் கூறி­வ­ரு­கின்­றனர். இதன் உண்­மைத்­தன்மை என்ன?

பதில்: பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு கருத்­துக்­களை கூற முடியும். இந்த விட­யத்தில் சிலர் கூறிய கருத்­துக்கள் சரி­யா­னவை. சிலர் கூறிய கருத்­துக்கள் பிழை­யா­ன­வை­யாக உள்­ளன.

கேள்வி: பிர­த­ம­ருடன் பணி­யாற்ற முடி­யாது என்று நீங்கள் முன்னர் கூறி­யி­ருந்­தீர்கள், தற்­போது இவ்­வி­டயம் குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்: பிர­த­ம­ருடன் புதிய வேலைத்­திட்டம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றேன். புதிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வது, தவ­று­களை திருத்­திக்­கொண்டு முன்­கொண்டு செல்­வது குறித்து தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கென இரு­த­ரப்பின் சார்­பிலும் குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: இந்த வருட இறு­திக்குள் புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் இல்­லையேல் சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். ஜெனி­வாவில் இரா­ணு­வத்­தி­னரின் மனித உரிமை மீறல் தொடர்பில் விசா­ரிக்­க­வேண்டும் என்ற கோரிக்கை தொடர்­பிலும் அர­சாங்கம் உரிய நிலைப்­பாட்டை எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் எழுந்­துள்­ளது. இது­தொ­டர்பில் உங்­களின் பதில் என்ன?

பதில்: ஜெனி­வாவில் எமது குழு திறம்­பட செயற்­பட்­டது. வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு ஆத­ர­வாக அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, பைசர் முஸ்­தபா ஆகி­யோரை அங்கு அனுப்­பி­யி­ருந்தேன். அவர்கள் நன்­றாக செயற்­பட்­டி­ருந்­தனர். ஜெனி­வாவின் நிபந்­த­னை­க­ளுக்கு ஏற்ப செயற்­பட முடி­யாது என்று கூறப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்த முடி­யாது என்றும் நாம் கூறி­யுள்ளோம்.

சம்­பந்தன் என்­னுடன் பேசும்­போது சிங்­கள மக்கள் விரும்­பாத தீர்வை நாம் கேட்­க­வில்லை என்றும் பெரும்­பான்­மை­யின மக்கள் ஏற்­றுக்­கொள்ளும் தீர்­வையே நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் என்றும் கோரி­வ­ரு­கின்றார். இதற்­காக அவ­ருக்கு நாம் நன்றி தெரி­விக்­க­வேண்டும்.

கேள்வி: ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக அச்­சு­றுத்தல் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. சிரச காரி­யா­ல­யத்­திற்கு முன்னால் கழகம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்: சிரச தொலைக்­காட்சி நிறு­வ­ன­மல்ல எந்த ஊடக நிறு­வ­னத்தின் மீதும் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டால் அது தவ­றான செயற்­பா­டாகும். கடந்த ஆட்­சியில் சிரச நிறு­வனம் எரி­யூட்­டப்­பட்­டது. யார் ஊட­கங்கள் மீது அச்­சு­றுத்தல் விடுத்­தாலும் அது தவ­றான செயற்­பா­டாகும். அதனை நான் கண்­டிக்­கின்றேன்.

கேள்வி: பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு பிர­த­ம­ருடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஒப்­பந்தம் செய்­துள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல் உட்­பட பல விட­யங்கள் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இது­கு­றித்து உங்­களின் கருத்து என்ன?

பதில் : இது குறித்து நான் அறிந்­தி­ருக்­க­வில்லை.

கேள்வி: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­களை அமைச்­ச­ர­வையில் இருந்து விலக்­கு­மாறு பிர­தமர் உங்­க­ளிடம் கோர­வில்­லையா?

பதில்: அது குறித்து நாம் பேச­வில்லை. எமது கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்­தி­லேயே அது குறித்து ஆரா­யப்­படும். அர­சியல் ரீதியில் பிரச்­சி­னைகள் இருந்­தாலும் நாடு, மக்­களின் நலன் கருதி செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி: பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த ஆறு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்சி நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­க­வுள்­ளது. அந்த பிரே­ரணை வெற்­றி­பெற்றால் நீங்கள் என்ன செய்­வீர்கள்?

பதில்: அப்­படி நடந்தால் அது குறித்து அந்த நேரம் பார்க்­கலாம்.

கேள்வி: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­தமர் வெற்­றி­பெற்­றுள்ளார். மத்­திய வங்கி பிணை முறி விவகாரம் குறித்து குற்றம்சாட்டியே இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதிலிருந்து பிரதமர் நிரபராதி என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: ( பலமாக சிரிக்கிறார்) பாராளுமன்றத்தில் இவ்வாறு வெல்வதும் தோற்பதும் சாதாரண விடயமாகும். பாராளுமன்றத்தில் பிரதமர் வெற்றிபெற்றிருக்கின்றார்.

கேள்வி: பூரண அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று கூறியிருந்தீர்கள் அதன் அர்த்தம் என்ன?

பதில்: அமைச்சரவையில் உயர்கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு ஒருவரிடம் உள்ளது. இதேபோன்று சீனி உற்பத்தி தொடர்பான நிறுவனங்கள் மூன்று அமைச்சர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை திருத்தி அமைத்து உரிய வகையில் அமைச்சர்களை நியமிக்கவேண்டி உள்ளது.

கேள்வி: புதிய அரசியலமைப்பு எப்போது வரும்?

பதில்: இது பாராளுமன்றத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் பாராளுமன்ற செயற்பாடுகளே இதனைத் தீர்மானிக்கும்.

கேள்வி: தற்போதைய நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கியதேசியக்கட்சி ஆட்சி அமைக்கலாமா?

பதில்: அவ்வாறான நிலை இல்லை. தற்போது அரசாங்கத்தைப் பலப்படுத்துவதே எமது தேவையாக உள்ளது. பிரதமருடனான சந்திப்பில் எப்படி அரசாங்கத்தின் வேலையை முன்னெடுப்பது தொடர்பிலேயே பேசப்பட்டது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.