Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி வன்­மு­றை­க­ளின்­போது முன்­னெ­டுத்த பாது­காப்பு ஏற்­பா­டு­களில் திருப்­தி­யில்லை குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்­கி­றது ஐரோப்­பிய ஒன்­றியம்

Featured Replies

கண்டி வன்­மு­றை­க­ளின்­போது முன்­னெ­டுத்த பாது­காப்பு ஏற்­பா­டு­களில் திருப்­தி­யில்லை

 

குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்­கி­றது ஐரோப்­பிய ஒன்­றியம்

(ரொபட் அன்­டனி)

கண்­டியில் ஏற்­பட்ட வன்­மு­றை­க­ளின்­போது பாது­காப்புத் தரப்­பினர் மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த உட­ன­டி­யாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எங்­களால் திருப்­தி­ய­டை­ய ­மு­டி­யா­தி­ருக்­கின்­றது. இந்தப் பிரச்­சி­னையை தடுத்து நிறுத்­து­வ­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம் என்றே நாம் கரு­து­கின்றோம் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பாரா­ளு­மன்றத் தூதுக்­குழு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

எவ்­வா­றெ­னினும் இந்த சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­பட்டு தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­காத கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். அதே­போன்று பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விரை­வாக நீக்கி அதற்குப் பதி­லாக சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வான சட்­டத்தை கொண்­டு­வ­ர­வேண்டும். இதில் தாமதம் மேற்கொள்ளாமல் விரை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பாரா­ளு­மன்றக் குழு சுட்­டிக்­காட்­டி­யது. 

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொண்­டுள்ள இலங்கை தற்­போ­தைய நிலை­மையில் சில முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் சர்­வ­தேச மனித உரிமை சாச­னங்­களை வெளிப்­ப­டுத்தி முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த வேண்டும். நிலு­வை­யி­லுள்ள பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு தற்­போ­தைய சந்­தப்­பத்தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும் என்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யது. 

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சர்­வ­தேச வர்த்­தகம் தொடர்­பான பாரா­ளு­மன்ற தூதுக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினர். 

அதன்­படி ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தெற்­கா­சி­யா­விற்­கான நிலை­யியல் அறிக்­கை­யாளர் சஜாத் கரீம் மற்றும் இந்தத் தூதுக்­கு­ழுவின் தலைவர் ஜேன் சக­ராட்டில் ஆகியோர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை ஏற்­க­னவே பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இது இலங்­கைக்கு பாரிய நன்­மை­களை கொடுக்­கின்­றது. நாம் இலங்­கைக்கு உதவி செய்­யவே எதிர்­பார்க்­கின்றோம். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை விவ­கா­ரத்தை மதிப்­பீடு செய்­யவோ, மீளாய்வு செய்­யவோ எமது தூதுக்­குழு இலங்­கைக்கு வர­வில்லை. 

மாறாக இலங்­கைக்கு உதவி செய்­யவும் இலங்­கை­யு­ட­னான தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­த­வுமே வந்­தி­ருக்­கின்றோம். இலங்­கையில் குறிப்­பாக பாது­காப்பு, நீதித்­துறை என்­பன முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக பார்க்­கப்­ப­ட­வுள்­ளன. ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இவை முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக உள்­ளன. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை என்னும் போது சர்­வ­தேச சாச­னங்­களை இலங்கை அமுல்­படுத்­து­வதில் எவ்­வாறு அர்ப்­ப­ணிப்­பு­களை காட்­டு­கின்றது என்பதை பார்க்­கின்றோம். 

அதே­போன்று நாங்கள் இலங்­கைக்கு எவ்­வி­த­மான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­க­வில்லை. நாங்கள் இலங்கை வந்­த­வுடன் அழுத்தம் பிர­யோ­கிக்க வந்­து­விட்­ட­தாக சில ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. ஆனால் நாங்கள் இலங்­கை­யு­ட­னான தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­தவே வந்­தி­ருக்­கின்றோம். இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச தரங்­களை பின்­பற்­ற­வேண்டும். அது இலங்­கைக்கும் அதன் மக்­க­ளுக்­குமே முக்­கி­ய­மா­ன­வை­யாகும். குறிப்­பாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக மாற்­றுத்­த­ரங்­களை கொண்­டு­வ­ர­வேண்டும். 

இலங்கை சர்­வ­தேச தரங்­களை ஏற்­கி­றதா இல்லையா என்­பதை இலங்­கையே தீர்­மா­னிக்­க­வேண்டும். நாம் பல­மான இலங்­கையைப் பார்க்­க­வி­ரும்­பு­கின்றோம். கண்டி அசம்­பா­விதம் தொடர்­பாக நாம் அவ­தானம் செலுத்­தினோம். இந்த வன்­மு­றைகள் இடம்­பெற்­ற­போது உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட பாது­காப்பு ஏற்­பா­டுகள் தொடர்பில் எம்­மிடம் அதி­ருப்தி இருக்­கி­றது.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­காத கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். சிறு­பான்மை மக்கள் தாம் பாது­காப்­புடன் இருக்­கின்றோம் என்­பதை உணரும் வகையில் அர­சாங்கம் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். 

ஜி.எஸ்.பி. பிளஸ் சலு­கையை இலங்கை இழக்­கக்­கூ­டாது என்றே நாம் விரும்புகின்றோம். அதனை இலங்கை இழக்காமல் இருப்பதற்கு நாம் உதவி செய்ய தயாராக உள்ளோம். தற்போது பல முன்னேற்றங்கள் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும். 

 

அரசாங்கம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைதொடர்பில் மீளாய்வு இடம்பெறுகின்றது. ஆனால் நாம் அதனை செய்வதற்காக வரவில்லை. நாம் அழுத்தம் பிரயோகிக்க வரவில்லை. அரசாங்கம் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.  
 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-06#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.