Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் வெற்றியும் எதிர்கால சாவல்களும்

Featured Replies

ரணிலின் வெற்றியும் எதிர்கால சாவல்களும்

 

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உலுக்­கிய நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் என்ற அர­சியல் அந்­தஸ்தில் மறு­பி­றவி எடுத்­தி­ருக்­கின்றார் என்றே கூற வேண்டும். இப் பிரே­ரணை வெற்­றி­பெற்­றி­ருந்தால் அவர் பிர­தமர் பத­வியைத் துறக்க நேரிட்­டி­ருக்கும். வேறொருவர் பிர­த­ம­ர­ாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்பார். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமைப் பத­வியும் கூட அவ­ரி­ட­மி­ருந்து சில­வே­ளை பறி­போ­யி­ருக்க நேரிட்­டி­ருக்­கலாம். 

அது மட்­டு­மல்­லாமல் நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் அமைதியையும் சமா­தா­னத்­தையும் நிலை­நாட்­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி முழு­மை­யாக முடி­வுக்கு வர நேர்ந்­தி­ருக்கும். அத்­த­கைய ஒரு நிலையில் ஏற்­க­னவே ஸ்திர­மற்று தள்­ளாடிக் கொண்­டி­ருக்­கின்ற அர­சியல் நிலைமை மேலும் சீர­ழிந்து நாடு மோச­மான அர­சியல் நெருக்­க­டிக்குள் சிக்க நேர்ந்­தி­ருக்கும். தெய்­வா­தீ­ன­மாக அத்­த­கைய ஒரு நிலைமை உரு­வா­க­வில்லை. 

ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் கார­ண­மா­கவே பிர­த­ம­ருக்ெகதி­ராக இந் நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது. எனினும், ஊழல்­க­ளுக்ெகதி­ரான முழு­மை­யான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவும் ஊழல்­களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற தேசிய மட்­டத்­தி­லான மக்கள் நலன் சார்ந்த ஓர் அர­சியல் செயற்­பா­டா­கவும் இதனைக் கருத முடி­யாது.

ஏனெனில் ஊழல் புரிந்­த­வர்கள் என்று ஏற்­க­னவே குற்றஞ்சாட்­டப்­பட்­ட­வர்களே ஊழல்­களை முதன்­மைப்­ப­டுத்தி இப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தி­ருந்­தார்கள். முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷவின் தலை­மை­யி­லேயே யுத்த காலச் செயற்­பா­டு­களில் மிக மோச­மான ஊழல்கள் இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அக்­காலப் பகு­தியில் இடம்­பெற்ற ஊழல்கள் பொரு­ளா­தார ரீதி­யாக நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்­கு­வ­தற்கு வழி வகுத்­திருந்தன. 

கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற ஊழல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களிலிருந்து தப்­பு­வ­தற்­கா­கவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து முன்னர் ஊழல் புரிந்­த­வர்­க­ளால் இந் நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது என்­பது தெளி­வா­னது. முக்­கி­ய­மாக முன்­னைய அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்புக்கூற வேண்­டிய கடப்­பாட்டைக் கொண்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவே இந் நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையை சமர்ப்­பித்­தி­ருந்தார். அத்­துடன் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுக்­கா­கவும் ஊழல் செயற்­பா­டு­க­ளுக்­கா­கவும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை தண்­டனை பெறு­வதிலிருந்து பாது­காப்­ப­தற்­காக அவர் முழுமூச்­சாக செயற்­பட்டு வந்­துள்ளார் என்­பதும் குறிப்பிடத்­தக்­கது. 

ஊழல்கள் மற்றும் மோச­மான குற்றச் செயல்கள், உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயற்­பா­டுகள் என பல­த­ரப்­பட்ட முறை­கே­டான செயல்­க­ளுக்­காகத் தண்­டனை பெறு­வதிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமென்ற நோக்­கத்தில் பொது­ஜன பெர­முன என்ற பொது எதி­ர­ணி­யி­னரால்  பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந் நட­வ­டிக்­கை­களில் இந் நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை உச்­ச­மா­னது என்றே கூற வேண்டும். 

முன்­னைய அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற ஊழல்கள், முறை­கே­டான செயற்­பா­டுகள் என்­ப­வற்றை இல்­லாமல் செய்து நேர்­மை­யான நல்­லாட்சி புரிவோம் என்ற உறு­தி­மொ­ழியை முன்­வைத்து 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாத ஜனா­தி­பதி தேர்­த­லிலும் அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற பொதுத் தேர்­த­லிலும் நல்­லாட்சி அர­சினர் பொது­மக்­க­ளிடம் ஆணையைப் பெற்­றி­ருந்­தார்கள். ஆயினும் அவ்வுறு­தி­மொழிகளை அவர்கள் நிறை­வேற்றத் தவ­றி­விட்­டனர் என்­பதை நாட்டு மக்கள் முகத்தில் அடித்தால் போன்று மிகத் தெளி­வாக உள்­ளூராட்சித் தேர்­தலில் உணர்த்­தி­யி­ருந்­தார்கள். 

நல்­லாட்சி அர­சாங்கம் மக்­க­ளுக்கு அளித்த தனது வாக்­கு­று­திகளை நிறை­வேற்­று­கின்ற பொறுப்­புக்­களிலிருந்து தவ­றி­விட்­டது என உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்கள் சுட்­டிக்­காட்­டி­யமை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன எதி­ர­ணி­யி­ன­ருக்கு அர­சியல் ரீதி­யான வெற்­றி­யாக மாறி­விட்­டது. இது பொது எதி­ர­ணி­யி­ன­ருக்குக் கிடைத்த அரியதொரு அர­சியல் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். 

நல்­லாட்சி புரி­வ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சி­யிலும் ஊழல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பது துர­திர்ஷ்­ட­வசமா­னது. குறிப்­பாக மத்­திய வங்­கியின் பிணை­முறி விவ­கா­ரத்தில் இடம்­பெற்ற மிகப் பெரும் நிதி­மோ­ச­டியே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையின் அடிப்­ப­டை­யாகும். 

ஊழல் புரிந்­த­வர்களையும் பார­தூ­ர­மான குற்றச்செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளையும் தண்­டனை பெறு­வதிலிருந்து பாது­காப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­ததைப் போலவே ஊழல்­க­ளற்ற நல்­லாட்சி புரி­வ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சிபீடம் ஏறி­ய­வர்கள் ஊழல் புரி­வ­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

ஆனால் பிர­த­ம­ருக்ெகதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை அத்­த­கைய சுய இ­லா­ப­மற்ற மக்கள் நலன் சார்ந்­ததோர் அர­சியல் நட­வ­டிக்­கை­யாக அமை­ய­வில்லை. மாறாக எப்­ப­டி­யா­வது மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற அர­சியல் சுய­ இலா­பத்தை அடிப்­ப­டையில் உள் நோக்­க­மாகக் கொண்­டி­ருப்­பதைத் தெளி­வாகக் காணமுடி­கின்­றது. இம் முயற்­சிக்கு வெற்றி கிடைக்­க­வில்லை என்­பது நாட்டின் இன்­றைய அர­சியல் நிலை­மையில் பொது­வாக ஆறு­த­ல­ளிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

ஆட்­சியைக் கைப்­பற்­று­வதே நோக்கம்

நல்­லாட்சி அர­சாங்கம் தனது தேர்தல் கால உறு­தி­மொ­ழி­களைக் காற்றில் பறக்­க­விட்­டுள்­ளது. நல்­லாட்­சியில் செய்­தி­ருக்க வேண்­டிய பல விட­யங்­களை அது உரிய காலத்தில் செய்­ய­வில்லை என்­பது நாட்டு மக்­களின் பொது­வான குற்றச்சாட்டு. பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில் போதியளவில் அரசு அக்­கறை காட்­ட­வில்லை. பிரச்­சி­னை­களை இழுத்­த­டிப்­ப­தி­லேயே கவ­ன­மாக உள்­ளது என்­பதே தமிழ் மக்­களின் நிலைப்­பா­டாகும். இதனால் அவர்கள் இந்த அரசு மீது மிகுந்த அதி­ருப்­தியைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

ஆனால் அர­சாங்கம் ஊழல்­களை இல்­லாமல் செய்­ய­வில்­லையே என்ற சிங்­கள மக்­களின் ஆதங்­கத்தை மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் அர­சியல் ரீதி­யாகத் திசை திருப்பி உள்­ளூராட்சித் தேர்­தலில் ஆளும் தரப்­பி­னரை படு­தோல்­வி­ய­டையச் செய்­து­விட்­டார்கள்.

குறிப்­பாக அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­யா­னது, தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மாக அதிலும் விடு­த­லைப்­பு­லி­களின் நோக்­கங்­களை நிறை­வேற்றும் வகையில் தனி­நாடு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு சாத­க­மான முறையில் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என்று இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவர்கள் மேற்­கொண்ட தீவி­ர­மான அர­சியல் பிர­சா­ரமே பொதுத்­தேர்­தலில் அரச தரப்­பினர் மண் கவ்­வு­வ­தற்கும் பொது எதி­ர­ணி­யி­னரின் பொது­ஜன பெர­முன அமோ­க­ வெற்­றி­ய­டை­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

இத் தேர்தல் வெற்­றியைத் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி பிர­தமர் மீது நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்து அவரைப் பதவியிழக்கச் செய்­வ­துடன் ஆட்­சியை மீண்டும் கைப்­பற்ற வேண்டும் என்­பதே பொது எதி­ர­ணி­யி­னரின் உள்­நோக்­க­மாகும். 

உள்­ளூராட்சித் தேர்­தலில் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மிக மோச­மான தோல்­வியைச் சந்­தித்­தது. அக் கட்­சி­யிலும் பார்க்க ஒரு படி முன்­னேற்­ற­மாக தேர்­தலில் அமோக வெற்றி பெற்ற பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அடுத்­த­தாக இரண்­டா­வது நிலையை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­றி­யி­ருந்­தது. எனவே, மிக மோச­மான தோல்­வியைச் சந்­தித்­ததன் மூலம் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அக் கட்­சியைக் கைவிட்டு தனி­யாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற சிந்­த­னையை உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஊட்­டி­யி­ருந்­தது. 

அதற்­கான முயற்­சி­க­ளிலும் அக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஈடு­பட்­டி­ருந்தார். இதனால் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்குமிடை­யி­லான அர­சியல் உற­விலும் கீறல் விழுந்­தி­ருந்­தது. இதனால், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஸ்திர­மற்ற நிலையும் அடுத்து என்ன நடக்கப் போகின்­றதோ என்று அர­சி­யலில் ஒரு சஞ்­ச­ல­மான நிலை­மையும் உரு­வா­கி­யி­ருந்­தது. இச் சந்­தர்ப்­பத்தைத் தனக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திய மஹிந்த ராஜ­பக் ஷ நல்லாட்சி அர­சாங்­கத்தை மேலும் குழப்­பவும் அர­சியல் நிலை­மையை மேலும் ஸ்திர­மற்­ற­தாக மாற்றி பொதுத்தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்­கான சூழலை உரு­வாக்கும் வகை­யி­லேயே பிர­த­ம­ருக்ெகதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை என்ற அர­சியல் வெடி­குண்டை வெடிக்கச் செய்­தி­ருந்தார். ஆனால், அது புஸ்­வா­ண­மாகிப் போய்­விட்­டது.  இருப்­பினும் நாட்டு மக்­களின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மாக இருந்த தேசிய அர­சாங்கம் அல்­லது நல்­லாட்சி அர­சாங்­கத்தை பிள­வு­ப­டுத்து­வ­தற்கு அல்­லது முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு இந் நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை வழி வகுத்­து­விட்­டது. 

                      புதிய திருப்பம்

தனக்ெகதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்­களை நீக்­கி­வி­ட பிரதமர் முடிவு செய்­தி­ருக்­கின்றார். அதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் அவர் மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றார். இந்த இரு நட­வ­டிக்­கை­களும் புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு வழியமைத்­தி­ருக்­கின்­றன. அந்த வகையில் புதிய அமைச்­ச­ர­வை­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்­ச­ர­வை­யா­கவே அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் அது ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­க­மாக மாற்றியமைக்­கப்­படும். இதனால், 3 ஆண்­டு­க­ளாகச் செயற்­பட்டு வந்த ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்த கூட்டு அர­சாங்கம் என்ற நல்­லாட்சி அர­சாங்கம் முடி­வுக்கு வர­வேண்­டிய அர­சியல் சூழ்­நி­லையே உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. 

இதனை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­ட­வுடன் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு மாற்­றங்கள் குறித்து குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். அத்­துடன் 2020 ஆம் ஆண்டு வர­வுள்ள பொதுத் தேர்­தலை இலக்கு வைத்து பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் கூறி­யி­ருக்­கின்றார். ஐக்­கிய தேசிய கட்­சியில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள மாற்­றங்­களின் அடை­யா­ள­மா­கவே அக் கட்­சியின் செய­லாளர் கபீர் ஹாசிம் தனது பத­வியை இராஜி­னாமா செய்­துள்ளார். புதிய செய­லா­ள­ராக திஸ்ஸ அத்­த­நா­யக்­கவின் பெயர் முதலில் அடி­பட்­டது. இப்­போது அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் அப் பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டலாம் என்று கூறப்­ப­டு­கின்­றது.  

போருக்குப் பிந்­திய சூழலில் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள நல்­லாட்­சியில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலும் அதனைத் தொடர்ந்து கொண்டு வரப்­பட்ட பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையும் அர­சி­யலில் புதிய திருப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அவ­சி­யத்தை உரு­வாக்கியிருக்­கின்­றன. ஆனால் இத் திருப்பம் வெறு­மனே அர­சியல் கட்­சி­களின் நலன்­களைப் பேணிப் பாது­காக்க மட்­டுமே உத­வுமா அல்­லது நாட்டு மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்­வ­தற்கும் அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்கும் வழி­ய­மைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகவே உள்­ளது.   

இப்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் பொது­வாக தேர்­த­லையே மைய­மாகக் கொண்­டி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் எதிர்­பா­ராத முடி­வுகள் ஆட்­சியைக் கைப்­பற்ற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் நோக்­கத்­திற்குப் புதிய உத்­வே­கத்தை அளித்­தி­ருக்­கின்­றன. குறிப்பாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி அடைந்­துள்ள படு­தோல்வியானது மக்கள் மத்­தியில் அது இழந்­துள்ள அர­சியல் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காகத் தேர்­தலை இலக்கு வைத்து தீவி­ர­மாகச் செயற்­பட வேண்­டிய அவ­சி­யத்தை உணர்த்தியி­ருக்­கின்­றது. 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பொது எதி­ர­ணி­யி­ன­ரிடம் தோல்­வி­ய­டைந்த ஐக்­கிய தேசிய கட்சி, மிஞ்­சி­யுள்ள இரண்டு ஆண்டு காலத்தில் தனி­யா­கவே ஆட்­சியைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற நிர்ப்­பந்­தத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையின் மூலம் பிர­தமர் பதவியிழப்­ப­தற்­கான சூழலை எதிர்­நோக்­கி­ய­துடன் அதனைத் தொடர்ந்து சில வேளை­களில் ஆட்­சியை இழக்­கலாம் என்ற ஆபத்­தான நிலை வரை சென்று திரும்­பி­யுள்ள  ஐக்­கிய தேசிய கட்சி தொடர்ந்து ஆட்­சியை நடத்தி அதன் ஊடாக அடுத்த தேர்­த­லிலும் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காகச் செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது. இதுவும் அடுத்த பொதுத்­தேர்­தலை இலக்­கு­வைத்த செயற்­பா­டா­கவே காணப்­ப­டு­கின்­றது.

                என்ன நடக்கப் போகின்­றது?

நல்­லாட்சி அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் அளித்த தேர்தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டிய அர­சியல், பொரு­ளா­தார சூழலும் சர்­வ­தேச நிலைப்­பாடு தொடர்­பி­லான கடப்­பாட்டு நிலை­மையும் இன்னும் மாற்­ற­ம­டை­ய­வில்லை. ஒரு பொதுத் தேர்தல் நடை­பெற்று புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­படும் வரையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு இருந்த பொறுப்­புக்கள் தொட­ரவே செய்யும். அதில் எந்­த­வி­த­மான மாற்­றங்­களும் இருக்க முடி­யாது. உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் சார்ந்த விட­யங்கள் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற வேண்­டிய கட்­டாயத் தேவை இருக்­கின்­றது.  

இவ்வுறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வதனூடாக தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் பல­வற்­றுக்குத் தீர்வு காணப்­படும் என்ற நிலைமை காணப்­பட்­ட­போ­திலும் எஞ்­சி­யுள்ள இரண்டு வருட காலத்தில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தால் அவற்றை நிறை­வேற்ற முடி­யுமா என்­பது சந்­தே­கமே. 

ஏனெனில் இந் நாட்டின் இரு­பெரும் தேசிய அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்­தி­ருந்த ஆட்சிக் காலத்­தில்­கூட சர்­வ­தே­சத்­திற்குப் பொறுப்பு கூறும் விட­யங்­களை நிறை­வேற்ற முடி­யாமல் போயி­ருந்­தது. அத்­த­கைய ஒரு சூழலில் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி செய்­கையில் தென்­னி­லங்­கையின் தீவிர இன­வாத, மத­வாத அர­சியல் போக்­கிற்கு ஈடு­கொ­டுத்து அவற்றை சமா­ளித்து பொறுப்பு கூறும் விட­யங்­களை நிறை­வேற்ற முடியும் என்று கூறு­வ­தற்­கில்லை.

நாட்டின் ஸ்திர­மற்ற அர­சியல் நிலை­மை­யையும் பிர­த­ம­ருக்ெகதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையின் பின்­ன­ரான சிக்­கல்கள் நிறைந்த அர­சியல் சூழலையும் காரணம் காட்டி சர்­வ­தே­சத்­திற்குப் பொறுப்பு கூறும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் காலஅவ­கா­சத்தைப் பெற்று அவற்றைப் பின்­போடச் செய்யக் கூடும். 

ஆனால், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­திலும் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற் ­று­வ­திலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தனிக்­கட்சி அர­சாங்கம் தீவி­ர­மாகச் செயற்­பட முடியும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. அந் நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் கூட்டு அர­சாங்­கத்திலிருந்து வெளி­யே­றிய நிலையில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்­பது சந்­தே­கமே. 

அதே­நேரம் ஐக்­கிய தேசிய கட்­சியை மக்கள் மத்­தியில் செல்­வாக்கு இழக்கச் செய்­வ­தற்­காக கடு­மை­யான நிலைப்­பாட்­டுடன் காத்­தி­ருக்­கின்ற பொது எதி­ர­ணி­யினர் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்­க­மாட்­டார்கள். அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை தங்­களால் முடிந்த வழி­களில் முறி­ய­டிப்­ப­தற்கும் அவற்றை இன­வாதப் போக்கில் சிங்­கள மக்­க­ளுக்கும் சிங்­களத் தேசி­யத்­திற்கும் எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளாகச் சித்­தி­ரித்து சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெறத் தயங்க மாட்­டார்கள். அதற்­காக அவர்கள் எக் காரி­யத்­தையும் செய்யத் துணிந்­த­வர்கள். எத­னையும் செய்­வ­தற்கு அவர்கள் தயா­ராக இருப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

ஆயினும் அர­சியல் கள நிலை­மைகள் இவ்­வாறு இருந்­தாலும் தமிழ் மற்றும் முஸ்­லிம்கள் அடங்­கிய தேசிய சிறு­பான்மை இன மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி முயற்­சிக்கக் கூடும். ஏனெனில் நம்பிக்கை இல்லாப் பிரேரணையைத் தோல்வியடையச் செய்வதற்கு தேசிய சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பேராதரவு வழங்கியிருந்தன. 

அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை இல்லாப் பிரேரணையின்போது அவற்றின் ஆதரவைப் பெறுவதற்காக அக் கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். அவ் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் பயணம் என்பது நிச்சயமாக மோசமான அரசியல் விஷம் தோய்ந்த முட்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. 

அவர் ஓர் இக்கட்டான நிலையில் இருந்தபோது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதாகவும் அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் அவர் உறுதியளித்திருக்கக் கூடும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசியல் சூழல் இடமளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறான முயற்சிகள் தற்போதைய கடும்போக்குடன் கூடிய போட்டியான அரசியல் நிலைமைகளின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் செல்வாக்கிற்கு ஊறு விளைவிக்கத்தக்க ஒரு முயற்சியாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

எனவே, இவ்வாறான சூழலில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பும் தனியாக அரசாங்கம் அமைக்கும் முயற்சியும் பல சவால்களும் அரசியல் ரீதியான பல அபாயங்களும் நிறைந்ததாகவே காணப்படுகின்றன. அடுத்த இரண்டு வருடங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவது என்பது பரபரப்பான பல அரசியல் நிலைமைகளையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை.  

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.