Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில்

Featured Replies

புத்­தாண்­டுக்கு முன்னர் புதிய அமைச்­ச­ரவை

Untitled-1-7d7491b3df890be100f6a59eada7876683926ff6.jpg

 

பிர­தமர் – ஜனா­தி­பதி சந்­திப்பில் இணக்கம் காணப்­பட்­ட­தாக ஐக்­கிய தேசிய கட்சி அறி­விப்பு 

16 சு.க. எம்.பி.க்கள் பதவி வில­க­வேண்­டு­மென்றும்  ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை

(எம்.எம்.மின்ஹாஜ்)

இரண்டு பிர­தான கட்­சி­களின் இணக்­கத்­துடன் புதிய அமைச்­ச­ரவை தமிழ் – சிங்­கள புத்­தாண்­டுக்கு முன்னர் அமைக்­கப்­படும். பிர­த­ம­ரு­ட­னான சந்­திப் பின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த யோச­னைக்கு உடன்­பட்டார் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி

பொதுச்­செ­ய­ல­ளாரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

அத்­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த சுதந்­திரக் கட்­சி­யி­னரை உடன் பதவி நீக்க வேண்டும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தொடர்ந்து அமைச்­ச­ர­வை­யிலும் பத­வி­க­ளிலும் இருப்­ப­தற்கு எந்­த­வொரு உரி­மையும் கிடை­யாது. அவர்­க­ளுடன் எம்மால் பய­ணிக்க முடி­யாது. இதனை நாம் ஜனா­தி­ப­தி­யி­டமும் எடுத்­து­ரைத்தோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சமின் இல்­லத்தில் நேற்று நடை பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கடந்த சனிக்­கி­ழமை சந்­திப்­பொன்று நடைப்­பெற்­றது. இதன்­போது பல விவ­கா­ரங்கள் குறித்து பேசினோம். அமைச்­ச­ரவை மாற்றம் மற்றும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த சுதந்­திரக் கட்­சி­யினர் தொடர்­பிலும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது.

இதன்­பி­ர­காரம் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த சுதந்­திரக் கட்­சி­யி­னரை உடன் பதவி நீக்க வேண்டும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தொடர்ந்து அமைச்­ச­ர­வை­யிலும் பத­வி­க­ளிலும் இருப்­ப­தற்கு எந்­த­வொரு உரி­மையும் கிடை­யாது. என்று நாம் ஜனா­தி­ப­தி­யி­டமும் எடுத்­து­ரைத்தோம் .

பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்து விட்டு தொடர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அவர்­க­ளினால் பத­வி­களில் இருக்க முடி­யாது. எனினும் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைச்­சாத்­திட்டு சபா­நா­ய­க­ரிடம் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

 குறித்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கட்­சியின் செயற்­குழு மற்றும் பாரா­ளு­மன்ற குழுவின் அங்­கீ­காரம் இல்­லாமல் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்ளோம். எனினும் தேவை­யேற்­படும் பட்­சத்தில் கட்­சியின் செயற்­குழு அல்­லது பாரா­ளு­மன்ற குழுவின் அங்கீகாரத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும். 

புதிய அமைச்சரவை குறித்து தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்தன. இதன்படி புதிய அமைச்சரவை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நியமிக்கப்படும். இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உடன்பட்டார். 

மகன் சத்துரவுடன் ஐ.தே.க.வில் இணைகிறார் அமைச்சர் ராஜித

02-cef1e45800142bacfdb026539844b51139a59744.jpg

 

(ரொபட் அன்­டனி)

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் சுகா­தார அமைச்­சரும் களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராஜித சேனா­ரத்ன மற்றும் அவ­ரது மகனும் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சத்­துர சேனா­ரத்ன ஆகியோர் ஐக்­கிய தேசியக் கட்­சியில்

உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்து கொள்­ள­வுள்­ளனர்.  

அதன்­படி சில தினங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்­து­கொள்­ள­வுள்ள ராஜதி சேன­ராட்­ன­வுக்கு கட்­சியின் உயர் பத­வி­யொன்றும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காண பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

குறிப்­பாக அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைத்து அவ­ருக்கு பத­வி­யொன்றை வழங்க வேண்டும் என்று கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க கட்­சி­யி­டத்தில் முன்­வைத்த யோசனை ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அதன்­டிப இன்னும் சில தினங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவும் அவ­ரது மகனும் இணைந்து கொள்­ள­வுள்­ள­துடன் அவர்­க­ளுக்கு பத­வி­களும் வழங்­க­வுள்­ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அப்­போது சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கடந்த அர­சாங்­கத்தை விட்டு வெ ளியே­றிய ராஜித சேனா­ரட்ன ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­னேவின் வெற்­றிக்­காக பெரும் பங்­க­ளிப்­பை­யாற்­றி­யி­ருந்தார். அதன்­பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ராஜித சேனா­ரட்ன ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து போட்­டி­யிட்டார்.

தொடர்ந்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் ராஜித சேனா­ரட்ன நெருக்­க­மாக பணி­யாற்றி வந்தார். பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வந்­த­போது அவ­ருக்­காக ராஜித சேனா­ரட்ன முன்­னின்று செயற்­பட்டு வந்­தி­ருந்தார்.

அத்­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ரான விவா­தத்தின் போது பிர­தமர் சார்பில் அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவே பதி­ல­ளித்து உரை­யாற்­றி­யி­ருந்தார். கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்­டு­வரை ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் காணி அமைச்சராக ராஜித்த சேனாரட்ன பதவி வகித்தார். எனினும் 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ராஜித்த சேனராட்ன இணைந்தமை குறிப்பிடத்தக்கது. 

மகிழ்ச்­சி­யுடன் இணை­கின்றேன்

 

ராஜித கூறுகிறார்

(ரொபட் அன்­டனி)

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை ­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் மிகவும் மகிழ்ச்­சி­யு­ட­னேயே இணைந்து கொள்­கிறேன் என்று சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அமைச்சர் ராஜித சேனா­ரட்ன ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொள்ளப் போவ­தாக வெ ளிவந்­துள்ள தக­வல்கள் தொடர்பில் அவ­ரிடம் வின­வி­ய­போதே இந்த விட­யத்தை குறிப்­பிட்டார். அவர் இது தொடர்பில் கேச­ரிக்கு தொடர்ந்து கருத்து வெ ளியி­டு­கையில், 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நான் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்டே வரு­கிறேன். தொடர்ந்து இவ்­வாறு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட முடி­யாது. என­வேதான் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொள்ள தீர்­மா­னித்தேன். எனது மகனும் என்­னுடன் சேர்ந்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொள்­கிறார். மிகவும் மகிழ்ச்­சி­யுடன் நான் இந்த முடிவை எடுத்தேன். நான் ஆரம்­பத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லேயே இருந்தேன். தற்­போது மீண்டும் அக் கட்சியுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கின்றேன் என்றார். 

நம்­பிக்­கை­யில்­லாத பிர­த­ம­ருடன் இணைந்து செயற்­பட முடி­யாது

05-fc20f671b2aea219bef2942423c82775008972dd.jpg

 

எதிர்க்­கட்­சியில் அமர ஜனா­தி­பதி அனு­ம­திக்க வேண்டும் என்­கி­றது  சு.க.வின் ரணில் எதிர்ப்புக் குழு

(ஆர்.யசி)

நம்­பிக்­கை­யில்­லாத பிர­த­ம­ருடன் இணைந்து அமைச்­ச­ர­வையில் தொடர்ந்தும் செயற்­பட முடி­யாது. எனவே தேசிய அர­சாங்­கத்திலிருந்து வெளி­யேறி எதிர்க்­கட்­சியில் அமரத் தீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி தெரி­வித்­துள்­ளது.

இன்­றைய மத்­திய குழுக் கூட்­டத்தில் ஜனா­தி­ப­தியின் முடி­வுக்­காக காத்­தி­ருப்­ப­தா­க­வும் ­பி­ர­த­மரை எதிர்த்த சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் உள்­ள­டங்­கிய 16 பேர் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் வாக்­க­ளித்த நிலையில் அவர்கள் எதிர்­கட்­சியில் அமர ஜனா­தி­ப­தி­யிடம் அனு­மதி கேட்­டுள்­ளனர். அதன்­படி இன்று அதற்­கான முடிவை எதிர்­பார்த்­துள்­ளனர். ஜனா­தி­பதி தலை­மையில் இன்று கூடும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி முடிவை அறி­விப்பார் என கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் தற்­போ­தைய குறித்து வின­வி­ய­போதே ரணில் எதிர்ப்பு பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.  

இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா கூறு­கையில்.

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கார­ணத்­தினால் முரண்­பா­டு­களை சகித்­துக்­கொண்டு செயற்­பட முடி­யாது. மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஊழல் இடம்­பெற்­றமை, கள்­ளர்­களை பிர­தமர் காப்­பாற்­று­கின்­றமை என அனைத்­துமே வெளிப்­ப­டை­யாக தெரி­கின்ற நிலையில் பிர­த­மரை நியா­ய­ப­டுத்த எம்மால் முடி­யாது.

தேசிய அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அங்கம் வகிக்­கின்ற போதிலும் கொள்கை அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தர கட்­சி­யிக்கும் இடையில் இணக்­கப்­பா­டுகள் இல்லை. அவ்­வா­றான நிலை­யிலும் பொது­வான நோக்­கங்­களை கருத்தில் கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். எவ்­வாறு இருப்­பினும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆத­ரித்­த­மையை தவ­றென கூறவே முடி­யாது. தேசிய அர­சாங்­கத்தில் பிர­தமர் மீது நம்­பிக்கை இல்­லாமல் எம்மால் தொடர்ந்தும் ஆட்­சியில் அங்கம் வகிக்க முடி­யாது. நம்­பிக்­கை­யில்லா அர­சாங்­கத்­திலும் அமைச்­ச­ர­வை­யிலும் அங்கம் வகிக்க முடி­யாது. ஆகவே நாம் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற தயா­ராக உள்ளோம். இப்­போது கூட எமது 16 உறுப்­பி­னர்­களும் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எதிர்க்­கட்­சியில் அமர அனு­ம­தியை கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கடிதம் ஒன்றை அனுப்­பி­யுள்ளோம் எனக் குறிப்­பிட்டார்.

அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர குறிப்­பி­டு­கையில்

 நாளை (இன்று ) ஸ்ரீலங்கா மத்­திய குழுக் கூட்டம் ஜனா­தி­பதி தலை­மையில் கூடு­கின்­றது. ஆகவே இந்த கூட்­டத்தில் ஜனா­தி­ப­தியின் பதிலை நாம் எதிர்­பார்க்­கின்றோம். எம்மை சுயா­தீ­ன­மாக செயற்­பட அனு­மத்­திப்பார் என நாம் நம்­பு­கின்றோம். எதி­ர­ணியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரர்­களே அங்கம் வகிக்­கின்­றனர். ஆகவே அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதில் எந்த சிக்­கலும் இல்லை. பிர­தமர் மீது நம்­பிக்கை இல்­லாத தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக அங்கம் வகிக்­கின்­ற­மை­யினால் தொடர்ந்தும் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தலாம். தேசிய அர­சாங்­கத்தை குழப்பும் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுக்­க­வில்லை. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யாது என கூற எமக்கு முழு அதி­கா­ரமும் உள்­ளது. அதேபோல் தன்­னிச்­சை­யாக தீர்­மானம் எடுக்­கவும் எம்மால் முடியும். எனினும் நாம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மைக்கும் மத்­திய குழு­விற்கும் கட்­டுப்­பட்ட வகையில் தீர்­மா­னங்­களை எடுக்­கவே நினைக்­கின்றோம். ஆகவே 16 உறுப்­பி­னர்­களும் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற அனு­மதி கேட்­டுள்ள நிலையில் ஜனா­தி­பதி எமக்கு சாத­க­மான தீர்ப்­பினை வழங்­குவார் என எதிர்­பார்க்­கின்றோம் எனக் குறிப்­பிட்டார்.

அமைச்சர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த குறிப்­பி­டு­கையில்

பிர­த­மரின் செயற்­பா­டுகள் மற்றும் கொள்­கை­க­ளுடன் எம்மால் இணைந்து செயற்­பட முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சியில் நாம் இருப்­ப­தினால் தொடந்தும் முரண்­பா­டு­களே உரு­வாகும். ஆகவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்க நாம் முழுமையாக இடம் வழங்குகின்றோம். எமக்கும் அதுவே அவசியமாகவும் உள்ளது. ஆகவே நாம் எமது அமைச்சுப் பதவிகளை துறந்து எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தயாராக உள்ளோம். இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து கூலம் அறிவித்தல் விடுத்துள்ளோம். அவர் இன்னும் எமக்கு பதில் தெரிவிக்கவில்லை. நாளைய (இன்று ) மத்தியகுள் கூட்டத்தில் இதற்கான பதிலை அவர் வழங்குவர் என நாம் எதிர்ப்பார்க்கிறேன்.   

ஐ.தே.க. தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்து மலிக் சம­ர­விக்­ரம இரா­ஜி­னாமா

04-f82e49be5dbc4763b80ac776f8fcdebec56446ee.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சாளர் பத­வி யிலிருந்து சர்­வ­தேச வர்த்­தக மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்தி அமைச்சர் மலிக் சம­ர­விக்­­ரம நேற்று இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

"கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணி­க­ளுக்கு மதிப்­ப­ளித்து தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தேன்"" என்று அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம குறிப்­பிட்டார். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தற்­போ­தைய பத­விகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரைக்கும் நீடிக்­கப்­பட்­டுள்­ளன. அதற்குள் தற்­போ­தைய பத­விகள் அனைத்தும் இரத்­தாகி விடும்.

இதன்­படி கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணி­க­ளுக்கு மதிப்­ப­ளித்து ஏற்­க­னவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாஷீம் இரா­ஜி­னாமா செய்தார்.

இத­னை­ய­டுத்து நேற்­றைய தினம் தவி­சாளர் பத­வியில் இருந்து அமைச்சர் மலிக் சம­விக்­கி­ரம இரா­ஜி­னாமா செய்­துள்ளார். கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணி­க­ளுக்கு மதிப்­ப­ளித்து குறித்த பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தாக மலிக் சம­ர­விக்­கி­ரம கூறி­யுள்ளார்.

இதன்­பி­ர­காரம் கட்­சியின் பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்­களை நிய­மிப்­ப­தற்கு இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் 10 பேர் கொண்ட கட்சி மறு­சீ­ர­மைப்பு குழு­வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் புதியவர்கள் பதவிகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐ.தே.க.வின் தலைமை பத­வியில் மாற்றம் வராது

 

பிரதிப் பொதுச் செயலர் அகில அறி­விப்பு

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பின்படி ஜனா­தி­பதி அல்­லது பிர­த­ம­ராக பதவி வகிப்­ப­வரே கட்சியின் தலை­வ­ராக இருக்க வேண்டும். அதன்­பி­ர­காரம் தலை வர் பத­வியில் எந்த மாற்­றமும் வராது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். கட்­சியின் பத­விகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரைக்­குமே நீடிக்­கப்­பட்­டுள்ளd. ஆகவே மே முதலாம் திக­திக்குள் புதி­ய­வர்கள் கட்­சியை பொறுப்­பேற்பர். ஆகவே எமது கட்சி புதிய கட்­சி­யாக பரி­ண­மிக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சமின் இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ல­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து நேற்று முன் தினம் விரி­வாக ஆராய்ந்தோம். கட்­சியின் செயற்­கு­ழுவில் பிர­த­ம­ருக்கு வேண்­டி­ய­வர்கள் இருப்­ப­தனால் மறு­சீ­ர­மைப்பு குழு­வுக்கு ஆட்­களை நிய­மிக்கும் பொறுப்பு செயற்­கு­ழுவில் இருந்து பாரா­ளு­மன்ற குழு­விற்கு வழங்­கப்­பட்­டது.

இதன்­போது கட்சி மறு­சீ­ர­மைப்பு குழு­வுக்கு இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் நபர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். இதன்­படி ஜன­நா­யக முறையில் குழு­வுக்கு ஆட்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். இதன்­படி 10 பேர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இந்த குழுவில் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவும் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் தானாக பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்வர்.

அத்­துடன் தலைமை பத­வியில் மாற்றம் செய்­யாமல் இருக்க நேற்று முன் தினம் செயற்­கு­ழுவும் பாரா­ளு­மன்ற குழுவும் தீர்­மா­னித்­தது. ஏனெனில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பில் ஜனா­தி­பதி அல்­லது பிர­த­ம­ராக பதவி வகிப்­ப­வரே தலை­வ­ராக இருக்க வேண்டும். அதன்­பி­ர­காரம் தலைவர் பத­வியை நீடிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எனவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர், தவி­சாளர், பொரு­ளாளர் பத­விகள் ஏப்ரல் மாதம் 30 வரைக்கும் மாத்­தி­ரமே நீடிக்கப்பட்டுள்ளன. ஆகவே 30 ஆம் திகதிக்கு பின்னர் பதவிகள் தொடர்ந்தும் இருக்காது. இதன்படி மே முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி புதிய

அமைச்சுப் பத­வி­களில் கண் ­வைத்­துள்ள ஐக்­கிய தேசிய கட்சி பின்­வ­ரிசை எம்.பி.க்கள்

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் பொறுப்பு வகித்த அமைச்சர், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பத­வி­களின் மீது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் கண் வைத்­துள்­ளனர்.

சுதந்­திரக் கட்­சி­யினர் பத­வி­களில் இருந்து வில­கினால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கு குறித்த பத­விகள் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது பிர­த­ம­ருக்கு எதி­ராக சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் 6 பேரும் இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்கள் 9 பேரும் வாக்­க­ளித்­தனர்.

இத­னை­ய­டுத்து சுதந்­திரக் கட்­சியின் 16 பேரும் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். இதன்­படி சுதந்­திரக் கட்­சி­யினர் வெளி­யே­றினால் அமைச்சர், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பத­வி­க­ளுக்கு வெற்­றி­டங்கள் ஏற்­படும். குறித்த பத­வி­களின் மீதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் கண் வைத்­துள்­ளனர்.

அர­சாங்­கத்தின் அமைச்சு பத­வி­களை இலக்­கு­வைத்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தனித்து ஆட்சி அமைக்கும் போராட்­டத்தில் கள­மி­றங்­கி­யி­ருந்­தனர். எனினும் தற்­போது தனி­ஆட்சி சாத்­தி­ய­மா­காத நிலையில் சுதந்­திரக் கட்­சி­யி­னரை வெளி­யேற்றும் முயற்­சியில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாலித ரங்கே பண்­டார, வசந்த சேனா­நா­யக்க, காவிந்து ஜய­வர்­தன, புத்­திக பதி­ரண, முஜிபுர் ரஹ்மான், சுஜிவ சேன­சிங்க உட்­பட பலரும் எதிர்­பார்ப்­புடன் காத்துள்ளனர்.

  சுதந்திரக் கட்சியினர் வெளியேறும் பட்சத்தில் பல அமைச்சு பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.