Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

Featured Replies

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

 

 
download

பூட்டுப்போடும் போராட்டம் நடத்திய தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் படம்: எல் சீனிவாசன்

 ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானக் கதவை இழுத்து மூடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் வைத்தனர்.

ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என சில கட்சிகள் அறிவித்திருந்தன.

ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பையும் மீறி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதுகாப்புப் பணிக்கு 13 துணை ஆணையாளர்கள் தலைமையில் 4000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் நான்கு குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே ஸ்டேடியம் இருக்கும் சாலைகளை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள பறக்கும் ரயில்வே ஸ்டேஷன் வழியாக பயணிகள் போல் சிலர் வந்தனர். ஸ்டேடியம் அருகே போலீஸார் அசந்திருக்கும் நேரம் திடீரென மைதானம் வாசலை சங்கிலியால் இழுத்துப் பூட்ட முயன்றனர்.

அவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தமிழர் வாழ்வுரிமை கட்சிக் கொடிகளை வெளியே எடுத்துக் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23489659.ece?homepage=true

 

 

 

பலத்த பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானம் முற்றுகை...

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடப்பட்டிருக்கும் பலத்த பாதுகாப்பையும் மீறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு போன்ற பல பிரச்னைகள் தமிழகத்தில் நிலவி வருகின்றன. இந்த அனைத்துக்கும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றனர். அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன.   

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் இந்த வேளையில் ஐ.பி.எல் போடிகள் நடத்தக் கூடாது எனப் பலர் தெரிவித்து வந்தனர். இதனால் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

arest_12266.jpg

இதைத் தொடர்ந்து, முன்னதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது, போட்டிகள் நடத்தினால் மைதானத்தை முற்றுகையிடுவோம். சென்னையில் உள்ள ஐ.பி.எல் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மைதானத்துக்குப் பூட்டுப்போட முயன்ற அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

 

முன்னதாக, ஐ.பி.எல் போட்டியின்போது போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் மைதானத்தைச் சுற்றி சுமார் 4,000 போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/121757-members-of-tamizhaga-vazhvurimai-katchi-protest-oustide-chepauk-stadium.html

  • தொடங்கியவர்

சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நோக்கிப் பாய்ந்த விடுதலைச் சிறுத்தைகள்!

 

இன்று சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

விசிக

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என அரசியல் கட்சியினரும், பிரபலங்கள் மேலும் பல அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

817bfacf-eb74-450e-bc29-50a676959811_163

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இன்று காலை முதல் மைதானத்தை சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பல விதங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐ.பி.எல் போட்டிக்கு வலுத்து வரும் எதிர்ப்பால் சேப்பாக்கம் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்துக்குள் போட்டிகளை காணச் செல்லும் ரசிகர்களுக்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. சிறிது நேரத்தில் மைதானத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். இந்தச் சூழ்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டி நடக்கும் மைதானத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்திய போலீஸார் இந்தப் பகுதியில் செல்லக் கூடாது, போராட்டம் நடத்தக் கூடாது எனத் தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்காத வி.சி.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்த சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

 

போட்டிகள் தொடங்கும் முன் வீரர்கள் ஆடுகளத்தில் பயிற்சி செய்வதற்காக சேப்பாக்கம் மைதானத்துக்குள் செல்ல உள்ள இந்த நேரத்தில் விசிக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

https://www.vikatan.com/news/tamilnadu/121788-viduthalai-siruthaigal-party-cadres-protest-outside-ma-chidambaram-stadium.html

  • தொடங்கியவர்

சேப்பாக்கத்தில் குவிக்கப்பட்ட கமாண்டோ படை... ஐ.பி.எல்-க்காக முடக்கப்பட்ட முக்கியச் சாலைகள்!

 
 

காவிரி மேலாண்மை வாரியம் கேட்டால் சென்னை சேப்பாக்கம் சாலைக்குப் பூட்டு... ஜல்லிக்கட்டு கோரி குரல் கொடுத்தால் மெரினாவுக்குப் பூட்டு என மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக இதுபோன்ற செயல்பாடுகளை சென்னையில் முதல்முறையாக அரங்கேற்றியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் என இந்தத் திட்டத்தை மெள்ள மெள்ள நகர்த்திக்கொண்டு போகவேண்டியதுதான் பாக்கி! 

போராட்டம் நடத்துவதற்காக மக்கள் திரண்டு விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக சேப்பாக்கம், மெரினா போன்ற இடங்களை ஊருக்குப் ஒதுக்குப்புறமாக மாற்றம் செய்ய முடியுமா என்பது பற்றி `ஆலோசனைக் கூட்டம்' நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வாலாஜாசாலை, பெல்ஸ் சாலைகளில் வசிப்போரின் பிள்ளைகளுக்குப் பொதுத்தேர்வுகள் இல்லையா? அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அவசர மருத்துவ உதவியோ, இன்னபிற உதவிகளோ தேவைப்படப் போவதில்லையா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனென்றால், ஐ.பி.எல். போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் அந்தளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

சென்னை

சென்னை ரசிகர்கள்...!

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்பட பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் மிகவும் பிடித்தமான ஒன்று. `நம் நாடு', `நம்ம அணி' என்ற சுய பிடிப்போ, தாக்கமோ இல்லாமல் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் சென்னை ரசிகர்களின் பண்புதான் அதற்குக் காரணம். இந்திய வீரர் ஒருவர் வீசும் பந்தை `சிக்ஸராக' தூக்கியடிக்கும் வெளிநாட்டு வீரர்களையும் கைதட்டி வரவேற்கும் மனம் படைத்தவர்கள் சென்னை ரசிகர்கள். ஆனால், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள தற்போதைய அசாதாரணமான சூழலில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் சற்றே தயக்கத்தோடுதான் நுழையப் போகிறார்கள் என்றே தெரிகிறது. இப்படி ஒரு தருணம் உருவாகியிருப்பது, சென்னை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை என்றுகூட சொல்லலாம். இவ்வளவு பதற்றத்திற்குக் காரணம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக மாறியுள்ள காவிரி தண்ணீர்ப் பிரச்னைதான். `காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கக் கோரி, தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றியெல்லாம் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

தோனி

மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதியில் திடீர் பதற்றத்தை யாராவது உண்டு பண்ணக்கூடும் என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. இதனால், அண்ணா சாலை முதல் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, கடற்கரை காமராஜர் சாலைவரை பதற்றம் சூழ்ந்திருப்பதை போலீஸாரின் கெடுபிடிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

வேல்முருகனும், அமைச்சர் ஜெயகுமாரும்...!

ரசிகர்களோடு, ரசிகர்களாக கிரிக்கெட் மைதானத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துவிடாமல் தடுக்க, ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். கறுப்பு நிற ஆடை, பேட்ஜ் அணிந்து வருகிறவர்கள் ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வலைப்பயிற்சிக்காக கிரிக்கெட் வீரர்கள், ஸ்டேடியத்திற்கு வந்தபோதும் இதே அளவு பாதுகாப்பும், கெடுபிடியும் இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கிரவுன் பிளாசா என்னும் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும், இதே அளவுப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார், ``காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உணர்வுகளை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்துவதும், நடத்தாததும் ஐ.பி.எல். நிர்வாகத்தின் கையில்தான் இருக்கிறது. அதேவேளையில் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை, தமிழக அரசு நிச்சயம் செய்து கொடுக்கும். ஐ.பி.எல். போட்டி நடைபெறாமல் இருந்தால் நல்லது" என்றார். 

வேல்முருகன் - காவிரிக்காக போராட்டம்

``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளை நடத்த விடமாட்டோம். மீறி போட்டிகளை நடத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். கிரிக்கெட் அமைப்புகளின் நிர்வாகிகள்தாம் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்" என்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கடுமையாக எச்சரித்துள்ளார். எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, கறுப்பு வண்ண பலூன்களை சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகே வேல்முருகன் மற்றும் அவரின் கட்சியினர் பறக்க விட்டனர்.

கமாண்டோ படையினர் பாதுகாப்பு !

காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர், ``தமிழகத்தில் காவிரி விவகாரம் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் ஐ.பி.எல். விளையாட்டை தள்ளி வைக்க வேண்டும்; மீறி போட்டிகளை நடத்தினால், நாங்கள் அறவழியில் எங்களின் எதிர்ப்பைக் காட்டுவோம்" என்று கூறியுள்ளனர்.

சென்னை

``சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கமாண்டோ படையின் ஓர் அணி, அதிவிரைவுப் படையின் நான்கு அணிகள் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்குச் செல்லும் அணுகு சாலைகள் அனைத்திலும் உளவுப் பிரிவுப் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல், மைதானம் உள்பட அனைத்துப் பகுதிகளும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில், கூலிங் கிளாஸ், பேனர், கொடி, செல்போன், லேப் டாப், ரேடியோ, டிஜிட்டல் டைரி, கைப்பை, சூட்கேஸ், தின்பண்டங்கள், பைனாகுலர், இசைக் கருவிகள், தீப்பெட்டி, வேஸ்ட் பேப்பர், பேனா போன்றவற்றை மைதானத்துக்குள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்" என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

சேப்பாக்கம் சாலைக்குப் பூட்டு!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே இன்று இரவு ஐ.பி.எல். லீக் போட்டி நடைபெற இருப்பதால், போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும், இன்று மாலையிலேயே மூடப்பட்டு விடும். போட்டிக்கான டிக்கெட் இல்லாமல் சேப்பாக்கம் - பெல்ஸ் சாலை சந்திப்பு வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடும் மக்களை கண்காணிப்புப் பணியில் உள்ள போலீஸார், தேவைப்பட்டால் விசாரணைக்கு உட்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்பதால், உலகின் மிக அழகான, நீளமான இரண்டாவது கடற்கரை என்று கொண்டாடப்படும், `மெரினா'-வுக்கு போலீஸார் ஏற்கெனவே பூட்டுப் போட்டு விட்டார்கள். இப்போது, ஐ.பி.எல். போட்டி சுமுகமாக நடைபெறவேண்டும் என்பதால், சேப்பாக்கம் மைதானத்திற்குச் செல்லும் முக்கியச் சாலைகளுக்கும் பூட்டுப் போடவுள்ளனர். கடந்த காலங்களில், இது போன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நூற்றுக்கணக்கில் இப்பகுதியில் நடந்துள்ளன, அப்போதெல்லாம், யாரும் குறிப்பிட்ட பகுதியைப் பூட்டி `சீல்' வைத்த வரலாறு கிடையாது.

சென்னை

``போராட்டங்களை ஒடுக்குவதாகச் சொல்லிக் கொண்டு, மெரினா கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் தடுக்கப்படுகிறார்கள். கடற்கரையின் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மயிலை சத்யா முறையீடு செய்துள்ளார். `இதை தனி மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்' என்று கோர்ட் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு, மக்களிடமிருந்தும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் வெளிப்படும் எதிர்ப்பின் `வெயிட்டேஜைப்' பொறுத்து அரசும், காவல்துறையும் தங்களின் முடிவை மாற்றிக்கொள்கின்றன என்பதுதான் கடந்தகால அனுபவம்!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு என்னாச்சு?

தமிழக மக்கள் நலன் சார்ந்த முந்தைய போராட்டங்களை விடவும், காவிரிப் பிரச்னைக்காக இப்போது நடைபெறக்கூடிய போராட்டங்களின் வீரியம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உடைப்பைச் சின்னதாகத் தொடங்கி வைத்தவர்கள், அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியைப் பார்வையிட, வரும் 12-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியை வரவேற்று, கிழக்குக் கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள `கட்-அவுட்'-களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். சில கட் அவுட்களில், `நீங்கள் வேண்டாம், காவிரி மட்டும்தான் வேண்டும்' என்று கறுப்பு மையினால் எழுதியுள்ளனர்.

ஐ.பி.எல்

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினோ, ``கறுப்புச் சட்டை, ரவிக்கை  அணிந்து பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார். கோடிகளைக் கொட்டிக்கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் ஒருபக்கம், போட்ட பணத்தை டிக்கெட் விற்பனை, விளம்பரங்களிலிருந்து எடுக்க வேண்டிய வணிகம் ஒரு பக்கம், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் கோரி மக்களின் போராட்டம் மற்றொரு பக்கம் எனச் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கிறது. ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டைக் கொளுத்தி, `இது ஆரம்பம், நெய்வேலி முதல் பல இடங்களில் இனிமேல்தான் தொடரும்' என்று எச்சரிக்கும் போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.

 

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், ``ஐ.பி.எல். போட்டியில் நடந்த சூதாட்டத்தின் உண்மைத்தன்மை வெளியில் வராமல் இந்த விளையாட்டை நடத்தக் கூடாது" என்று கோர்ட்டுக்குப் போன ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் கோரிக்கையும் நியாயத்துக்கான காத்திருப்பில் உள்ளது...

https://www.vikatan.com/news/coverstory/121790-chepauk-is-for-cauvery-marina-is-for-jallikattu-will-closing-the-gates-gives-the-solution-for-cauvery-issue.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டம் - எதுக்கு முக்கியத்துவம் தரப் போறீங்க?

 

 
06ade3cb-0526-4b24-8dbe-573db20ccae6jpg

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Shereen Basharath

     

‏வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. அரசு அமைதி வழியில் மாணவர்கள் மெரினாவில் #காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட அனுமதி வழங்க வேண்டும். அதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும். ஜல்லிக்கட்டுக்கு கிடைத்தது போல

Ramarajan Govindaraj

‏புரிதல் இல்லாமல் போசும் கிரிக்கெட் ரசிகர்கள் எங்களின் எண்ணம் விளையாட்டிற்கு தடை அல்ல எதிர்ப்பை பதிவு செய்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பது

SHANKAR CHIYAAN KXIP

‏மேட்ச் நடக்கலனா 2 டீம்க்கும் பாயிண்ட் பிரிச்சு கொடுத்திடுவாங்க..  ஆனா நீங்க கேட்ட காவிரி தண்ணிய பிரிச்சு தர மாட்டாங்க.

klpng
 

Susee Maha

‏தமிழ்நாட்டில் இப்பொழுது காவேரி issue va இல்ல IPL issue va nu தெரியல..

இது என்னமோ அரசியல்வாதிங்கதான் IPL பக்கம் திருப்பி விட்டாங்கனு தோனுது      

SIVARAJ NAGARAJAN    

‏நாம் அனைவரும் கிரிக்கெட்டைப் புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால்

நாடும் நல்லா இருக்கும்

வீடும் நல்லா இருக்கும்

நம்ப எதிர்ப்ப கடுமையா தெரிவித்த மாறியும் இருக்கும்.

பொள்ளாச்சி நிவாஸ்

‏இன்று  IPL ஐ டிவியில் பார்க்கவுள்ளேன்.

காலியான‌ இருக்கைகள் என் இனத்தின் கோபத்தை வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையில்....

Untitlejkpng
 

Santharam.G

‏விளையாட்டுல நல்ல அறுவடை

விவசாயத்துல டக்கவுட்

எதுக்கு முக்கியத்துவம் தரப் போறீங்க?

jnhbpng

100

 

VASANTH

மனுஷன் படைச்சதிலயே உருப்படியான ரெண்டே விசயம் சோறு, கிரிக்கெட், இதுல ஒண்ண சொல்ல சொல்றாங்க சரி சொல்லிடுவோம் சோறு தான்.

கயல்

சென்னை நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு தருகிறது

hgvbpng

Asusual idiot

தமிழக இளைஞர்கள் கிரிக்கெட் மைதானத்தில் செல்லாமல் இருப்பதே சிறந்த எதிர்ப்பு.

உமா சங்கர்

நான் இன்றைய போட்டியை boycott செய்து விட்டேன், சரி அடுத்து? உடனே BCCI காவிரியை தந்துவிடுமா?இப்படி சினிமாவையும் விளையாட்டையும் எளிய target ஆக்கி நம்மை அலைகிழிக்கும் அரசியலையும்/வாதிகளையும் தான் நாம் முற்றுகையிட வேண்டும்.

விளையாட்டை அரசியலாக்காதீர். அப்புறம் என் வெங்காயத்திற்கு பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களை மட்டும் ஐபிஎல் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை! நீங்க மட்டும் விளையாட்டில் அரசியல் செய்யலாம் நாங்க செய்யக்கூடாதா?

http://tamil.thehindu.com/incoming/article23492921.ece

  • தொடங்கியவர்

போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி..! பதற்றத்துடன் சேப்பாக்கம் #liveupdate

 
 

அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். 

 

பாரதிராஜா பேசும்போது, 'போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் உள்ளே நுழைந்திருக்கலாம். இது அரசியல் கட்சிகளுக்கான போராட்டம் அல்ல. இது தமிழர்களின் போராட்டம்' என்றார். 

பல்வேறு விதமான போராட்டங்களுக்கு மத்தியில் வீரர்களின் வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் மைதானத்தை வந்தடைந்தது. 

43974358-ab48-41ae-990d-7590adc4c14d_184

விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியனர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்றார். 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். சீமான், பாரதி ராஜா, வைரமுத்து, வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்ற்றுள்ளனர். 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆங்காங்கே
போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள்
தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ரத்து
செய்யவேண்டும், தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் இந்த வேளையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என பலர் தெரிவித்து வந்தனர். இதனால் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலையில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னையில் நடைபெறும் போட்டி தொடங்க இன்னும் சிறிது நேரமே உள்ள நிலையில் மைதானத்தை சுற்றி நடைபெறும் போராட்டங்கள் மிகவும் பெரிதாக வலுத்து வருகின்றன. திருவல்லிகேணி, அண்ணாசாலை போன்ற இடங்களில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை திடீரென தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தும் இவர்கள் தொடர்ந்து மைதானத்தை நோக்கி சென்றுக்கொண்டிருகிறார்கள். இதனால் சேப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போராட்டகளமாக மாறியுள்ளது.

9706e271-8e6b-4e44-aef6-3b511067fafe_174

ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கிழித்து சென்னை அண்ணா சாலையில் எஸ்.டி.பிஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரஜினி ரசிகர் மன்றம், நாம் தமிழர் கட்சியியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது ஆனால் தற்போது நடைபெறும் போராடங்களினால் அண்ணாசாலை பகுதியில் முற்றிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது.

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/121796-protest-around-chepauk-stadium-on-cauvery-issue.html

 

  • தொடங்கியவர்

போராட்டக்களத்திலிருந்து பேசிய வைரமுத்து, 'இந்தப் போராட்டம் போலீஸாருக்கு எதிரான போராட்டம் அல்ல. கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழருக்கு ஆதரவான போராட்டம். இது மண்ணுக்கான போராட்டம்' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/121796-protest-around-chepauk-stadium-on-cauvery-issue.html

 

 

 

கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம் - வைரமுத்து

 

ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நேரத்தில் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கவிப்பேரரசு வைரமுத்து கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம் என்று கூறியிருக்கிறார். #IPL2018 #CSKvKKR #Vairamuthu

 
 
 
 
கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம் - வைரமுத்து
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இதனால், ஐபிஎல் போட்டி வீரர்களுக்கும், போட்டி நடக்கும் மைதானத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாசாலையைத் தாண்டி சேப்பாக்கம் மைதானம் நோக்கி செல்லும் சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 
 
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் பேசிய வைரமுத்து, ‘இது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம். காவல்துறைக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழருக்கான போராட்டம்’ என்றார்.
 
இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ‘நாங்கள் அனுமதி வாங்கி கொண்டுதான் இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். எந்த கட்சியும் இல்லாமல், தமிழ் உணர்வோடு நாங்கள் போராடுகிறோம். ஐபிஎல் போட்டிக்கு எதிராக கண்ணியமான முறையில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம்; போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் உள்ளே நுழைந்திருக்கலாம்’ என்றார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/10182056/1156289/Vairamuthu-Speech-About-Protest.vpf

  • தொடங்கியவர்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படை?

 
அ-அ+

சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. #IPL2018 #CSK

 
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படை?
 
காவிரி மேலாண்மை வாரியத்தை  உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில்தான் இன்று ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டியை நடத்தக்கூடாது, ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம், தமிழக அரசு, ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இன்று நடைபெற இருக்கும் போட்டிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

201804101659400021_1_Athi1455-s._L_styvpf.jpg

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் 6 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. போராட்டம் வலுத்து வருவதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் இன்று உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்தார். அப்போது சென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ராஜீவ் சுக்லா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

201804101659400021_2_Athi1000-s._L_styvpf.jpg

இதனால் சென்னையில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வாய்ப்பு உள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/10165940/1156273/IPL-chairman-requested-central-force-to-chennai-ipl.vpf

  • தொடங்கியவர்

பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டவர்கள் கைது..! உச்சகட்ட பதற்றத்தில் சேப்பாக்கம் #liveupdate

 

 



பலத்த பரபரப்புகளுக்கு மத்தியில் கொல்கத்தா அணி வீரர்கள் முழுமையான பாதுகாப்பு மைதானத்துக்குள் சென்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, சீமான், கருணாஸ், கௌதமன், தங்கர்பச்சான், மணியரசன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி பதற்றம் நிலவுகிறது. சுமார், இரண்டாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலை பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/121796-protest-around-chepauk-stadium-on-cauvery-issue.html

  • தொடங்கியவர்

சென்னையில் லேசான தடியடி; திரைப்பட இயக்குனர்கள் கைது

 

சென்னை: காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல், கிரிக்கெட் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
 

 

போலீசார் குவிப்பு

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடக்கிறது. இதனையடுத்து, மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

 

 

93989_sureshkannan_SKN_6084_100418231229.jpg
next.png
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய முக்குலத்தோர் புலிப்படையினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது.

 

தனிப்பாதை

 

பல்வேறு சாலைகளில் சேப்பாக்கம் செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஓட்டலில் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
 

 

பூட்டு போடும் போராட்டம்


போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
 

 

ரஜினிரசிகர்கள் கைது


இதற்கிடையில் கிரிக்கெட்போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


பல்வேறு போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

 

 
 
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1997492

  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சியினர் கைது

 

 
download%206

மைதானத்தில் ஜடேஜா அருகில் வீசப்பட்ட காலணியும், கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரும் படம்: சிறப்பு ஏற்பாடு

ஐபிஎல் போட்டிக்கு சாலையில் போராட்டம் நடந்த நிலையில் போட்டி நடக்கும்போது மைதானத்துக்குள் காலணி வீசிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக வலுவான போராட்டம் நடந்துவரும் நிலையிலும் போட்டி தொடங்கியயது. இன்று மதியம் முதல் போலீஸார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தும் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டங்களால் சேப்பாக்கம் பரபரப்பானது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், நாம் தமிழர், மே 17, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் போராட்டம் நடத்தி கைதாகினர். இன்று நடந்த போராட்டத்தில் 1000 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்தது. போட்டியும் திட்டமிட்டபடி நடந்தது. போட்டியின் இடையே அசம்பாவிதம் எதுவும் நடக்கலாம் என எதிர்பார்த்து மைதானத்துக்குள்ளே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் பவர் பிளே முடிந்த பின்னர் பவுண்டரி லைன் அருகே பட்டாபிராம் முனை பகுதியில் காலரியிலிருந்து ஷூ ஒன்று மைதானத்திற்குள் வீசப்பட்டது. அது நேராகச் சென்று ஜடேஜா அருகில் விழுந்தது. அவர் அதைப் பார்த்து திடுக்கிட்டார். பின்னர் அதைக் காலால் உதைக்க முயன்றார். அது மீண்டும் மைதானத்திலேயே விழுந்தது.

மைதானக் காவலர்கள் காலணியை எடுத்துச் சென்றனர். உடனடியாக மைதான பாதுகாவலர்களும், போலீஸாரும் ஷூ வீசிய இளைஞர்களைப் பிடித்தனர். மைதானத்துக்குள் காலணி வீசியதாக ராஜ்குமார், அய்யனார், பொன்வேல் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அப்போது அந்த இளைஞர்கள் சற்றும் அஞ்சாமல் நாம் தமிழர் கொடியை எடுத்து விரித்து பிடித்தபடி கோஷமிட்டபடி சென்றனர். படிகட்டில் இறங்கும் நேரத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் அவர்களைத் தாக்க முயன்றார். அவர்கள் பதிலுக்கு தாக்க முயன்ற போது போலீஸார் இழுத்துச் சென்றனர்.

இதே போல் வாலாஜா சாலையில் நுழைவு வாயில் அருகே போட்டியைக் காணவந்த இரண்டு இளைஞர்களை டிக்கெட்டைக் காட்டுங்கள் என்று கூறி பனியனை கழற்றச்சொல்லி தாக்கியதாக போலீஸார் சிலரை பிடித்தனர்.

போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் மைதானம் முழுதும் குழுமி இருந்த ரசிகர்கள் செல்போனில் டார்ச்சை மொத்தமாக அடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23495564.ece?homepage=true

  • தொடங்கியவர்

`இது ட்ரெய்லர்தான்; இன்னும் மெயின் பிக்சர் காட்டல' - சீறும் சீமான்!

 

தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தேவையா? அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட ஆரம்பித்தனர். இயக்குநர் பாரதிராஜா, 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப்  பேரவை' என்ற அமைப்பினை ஆரம்பித்தார். அதில் வெற்றிமாறன், அமீர், ராம், தங்கர் பச்சான், கெளதமன் எனத் திரையுலகை சார்ந்த பலர் இருக்கின்றனர். இந்த அமைப்போடு இணைந்து தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கச் சீமான், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் முன்வந்தனர். ஐ.பி.எல் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த பலர் கைதாகினர்.   
           
அப்போது பேசிய சீமான்,   ``இன்று ஐ.பி.எல் போட்டியை பார்க்கப் போனவர்கள் உணர்வற்றவர்கள். அங்குச் செருப்பை வீசி ஒரு ட்ரெய்லர்தான் காட்டியிருக்கோம். இன்னும் மெயின் பிக்சர் காட்டல. நாங்க போராடுற திட்டத்தை முடிவெடுக்கிறதுக்குள்ள டிக்கெட் எல்லாம் வித்துட்டாங்க. இல்லைனா, வேற மாதிரி பண்ணியிருப்போம். எங்களோட எதிர்ப்பை காட்டிட்டோம். ஆனாலும், போட்டி நடந்துச்சு. இன்னும் சென்னையில நிறையப் போட்டிகள் இருக்கு. அதுக்கு எங்ககிட்ட திட்டமிருக்கு. அதுக்கான வேலைகளை ஆரம்பிக்கப்போறோம். அடுத்து 20-ம் தேதி நடக்க வேண்டிய போட்டி சென்னையில நடக்காது. வேற ஊருக்கு மாத்திருவாங்க. மாத்த வைப்போம். ப்ளேயர்களே விளையாட வரமாட்டங்க பாருங்களேன்.  தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம். என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாருங்க" என்றபடி முடித்தார்.  

https://www.vikatan.com/news/politics/121818-seeman-slams-ipl-matches-for-cauvery-management-board.html

  • தொடங்கியவர்

காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு: அண்ணாசாலையில் பல்வேறு அமைப்புகள் முற்றுகை;சென்னையில் போக்குவரத்து முடங்கியது; போலீஸ் தடியடி; ஆயிரக்கணக்கானோர் கைது

 

11CHRGNJADEJA

மைதானத்தில் விழுந்த காலணியை அப்புறப் படுத்தும் சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா.

11CHRGNGROUND

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் காலணி, கொடி, சட்டைகளை கழற்றி மைதானத்தில் வீசினர். படங்கள்: ம.பிரபு

11CHRGNJADEJA

மைதானத்தில் விழுந்த காலணியை அப்புறப் படுத்தும் சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா.

11CHRGNGROUND

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் காலணி, கொடி, சட்டைகளை கழற்றி மைதானத்தில் வீசினர். படங்கள்: ம.பிரபு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்துவதா என எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் நேற்று மாலை பல்வேறு அமைப்பினர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியே போர்க்களமானதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மறியலில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.

போட்டியின்போது மைதானத்துக் குள் காலணி, கொடி, சட்டைகளை வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் 3 நிமிடம் போட்டி தடைபட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என பல் வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பை மீறி போட்டியை நடத்தினால், மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னையில் அறிவிக்கப்பட்ட முதல் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நேற்று மாலை போராட்டங்கள் வெடித்தன. திருவல்லிக்கேணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல சேப்பாக்கம் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகில் மாலை 4 மணியில் இருந்து ஒவ்வொரு அமைப்பினராக திரளத் தொடங்கினர். நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், கொங்குநாடு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயகக் கட்சி, தமிழ்த்தேச பொதுவுடை மைக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேர வை, தமிழ் நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கொடிகளுடன் திரண்டனர்.

தொடக்கத்தில் சில நூறு பேர்களுடன் தொடங்கிய மறியல் போராட்டத்தில் நேரம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அண்ணா சிலையை சுற்றிலும் உள்ள நான்கு சாலைகளிலும் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மாலை சுமார் 5 மணி அளவில் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் மைதானம் நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்த முடியா மல் போலீஸார் திணறினர். அப் போது காவல் துறையினரின் தடுப்புகளை உடைத்துத் தள்ளிவிட்டு மைதானத்தை நோக்கி ஓடினர்.

இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலையல் அருகே அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு எம்எல்ஏக்கள் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரி, கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், தங்கர்பச்சான், கவுதமன், களஞ்சியம், அமீர், வி.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்த்தேச பொதுவுடமை கட்சியின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஐபிஎல் டிக்கெட்களை தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

கடைகள் அடைப்பு

கலைந்து செல்லுமாறு போலீ ஸார் கூறியும் அதை ஏற்காமல் வாலாஜா சாலையில் தரையில் அமர்ந்து அனைவரும் தொடர்ந்து முழக்கமிட்டனர். ஒருகட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. இதில் இயக்குநர்கள் வெற்றி மாறன், களஞ்சியம் உள்ளிட் டோர் தாக்கப்பட்டனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் அண்ணா சாலையை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டனர். போராட்டம் காரண மாக அண்ணா சாலை, வாலாஜா சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் மாலை 6 மணியில் இருந்து படிப்படியாக அவர்களை காவல் துறையினர் கைது செய்யத் தொடங்கினர். முதலில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அண்ணா சிலை அருகே ஒரு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்து ஏராளமானோரை கைது செய்தனர்.

 

மைதானத்தில் காலணி வீச்சு

போராட்டத்தையொட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மைதானத்தில் அதிவிரைவுப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கிடையே, இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது. போட்டி நடந்து கொண்டிருந்தபோது, இரவு 8.30 மணி அளவில் கேலரியில் இருந்த சில இளைஞர்கள் திடீரென காலணிகளை மைதானத்துக்குள் வீசினர். சட்டையை கழற்றியும் வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து சென்று, காலணி வீசிய 8 பேரைப் பிடித்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இவர்கள் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23499022.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு

barathy.jpg?resize=615%2C350
சென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.  இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் காவல்துiயினர் ; தடுப்பு வேலி அமைத்து போராட்டக் காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ், பி.ஆர்.பாண்டியன் உட்பட 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/74535/

  • தொடங்கியவர்

போராட்டம் வன்முறையானது எப்படி? - அண்ணா சாலை `திக் திக்’ நிமிடங்கள் 

 

போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் நடந்த ஐ.பி.எல் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில், இயக்குநர் களஞ்சியம் உட்பட சிலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் போலீஸாரும் தாக்கப்பட்டனர்.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி  நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. ஆனால், அதையும்மீறி போட்டி நடந்தது. அதைக் கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி எனப் பல அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால், நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போராட்டம்

 போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். அப்போது போலீஸார், நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்டனர். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. போலீஸாரைத் தாக்கியதற்கு, நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய தடியடியில், சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம், ரமேஷ் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர். அவர்களைப் போராட்டக்காரர்களே மருத்துவமனையில் சேர்த்தனர்.

போராட்டத்தின்போது நடந்தது என்ன என்று விசாரித்தோம். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "அண்ணா சிலை சந்திப்பு சாலை, திருவல்லிக்கேணி காவல் நிலையம், வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் என மூன்று இடங்களில் போலீஸார் தடுப்புகளை வைத்திருந்தனர். நாங்கள் போராட்டம் நடத்த முறையாக அனுமதி பெற்றிருந்தோம். அறவழியில்தான் போராட்டம் நடந்தது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள், தடுப்புகளைத் தகர்த்தெறிந்தனர். இதனால்தான், போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. அதில் போராட்டக்காரர்களும் போலீஸாரும் தாக்கப்பட்டனர்.

வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதி வரை போராட்டக்காரர்களை விரட்டிய போலீஸாரைத் திடீரென இளைஞர்கள் சிலர் தாக்கத் தொடங்கினர். அவர்களிடம் தன்னந்தனியாகப் போலீஸ்காரர் ஒருவர் சிக்கியிருக்கிறார். போலீஸாரைத் தாக்கியது கண்டனத்துக்குரியது. போராட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த போலீஸாருக்கும் சேர்த்துதான் நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம். போலீஸார் தாக்கியதில் தமிழர் நலப் பேரியக்கத்தின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் ரமேஷ் படுகாயமடைந்தார். அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதுபோல, இயக்குநர் களஞ்சியமும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றனர்.

attack_IPL_12185.jpg

போலீஸார் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்ததைவிட திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது. அதில் சில போராட்டக்காரர்கள் தடுப்பைத் தாண்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் செல்ல முயன்றனர். அவர்களைத்தான் தடுத்தோம். அதையும் தாண்டி செல்ல முயன்றதால், தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள்மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். போட்டியைக் காணவந்த ரசிகர்கள்மீதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுத்துள்ளோம். போலீஸாரின் கூட்டு முயற்சியால், சென்னை அண்ணாசாலை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியது" என்றனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/121850-how-did-the-protest-changed-to-riot-in-chennai-protest.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டி இடமாற்றம்: இப்போது காவிரி மேலாண்மை வாரியம் வந்துரும்- ஆர்.ஜே.பாலாஜி நக்கல்

 

 
11MPBalaji2JPG

ஆர்.ஜே.பாலாஜி | கோப்புப் படம்

‘வன்முறைக்குத் திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்’ என ஆர்.ஜே. பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என காவிரிக்காகப் போராடும் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

 

ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஐபிஎல் நிர்வாகம் சென்னையில் நேற்று கிரிக்கெட் போட்டியை நடத்தியது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலை ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4000 போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து கொச்சிக்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இப்போது ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. மக்கள், தேசிய அளவில் கவனம் பெற விரும்பினர். அது சரியாக அமைந்ததா? இப்போ காவிரி மேலாண்மை வாரியம் வந்துரும்ல. இவர்களால் முடிந்தது என்னவெனில், காவிரியில் இருந்து கிரிக்கெட்டுக்கும், பிறகு வன்முறைக்கும் கவனத்தைத் திசை திருப்புவதுதான். எந்த ஒரு உணர்வுள்ள தமிழனும் இதுபோன்ற முறை தவறிய சூழ்ச்சிகரமான சுயநல வழிமுறைகளை ஆதரிக்க மாட்டான்.

விளையாட்டுக்கு எதிராக வன்முறையாகப் போராட்டம் நடத்தி, ஐபிஎல் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றியதை பெரிய வெற்றியாகக் கருதுவோர்களே... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள். முடியுமா?” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

http://tamil.thehindu.com/tamilnadu/article23504505.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நவீனன் said:

ஐபிஎல் போட்டி இடமாற்றம்: இப்போது காவிரி மேலாண்மை வாரியம் வந்துரும்- ஆர்.ஜே.பாலாஜி நக்கல்

 

 
11MPBalaji2JPG

ஆர்.ஜே.பாலாஜி | கோப்புப் படம்

‘வன்முறைக்குத் திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்’ என ஆர்.ஜே. பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என காவிரிக்காகப் போராடும் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

 

ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஐபிஎல் நிர்வாகம் சென்னையில் நேற்று கிரிக்கெட் போட்டியை நடத்தியது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலை ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4000 போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து கொச்சிக்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இப்போது ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. மக்கள், தேசிய அளவில் கவனம் பெற விரும்பினர். அது சரியாக அமைந்ததா? இப்போ காவிரி மேலாண்மை வாரியம் வந்துரும்ல. இவர்களால் முடிந்தது என்னவெனில், காவிரியில் இருந்து கிரிக்கெட்டுக்கும், பிறகு வன்முறைக்கும் கவனத்தைத் திசை திருப்புவதுதான். எந்த ஒரு உணர்வுள்ள தமிழனும் இதுபோன்ற முறை தவறிய சூழ்ச்சிகரமான சுயநல வழிமுறைகளை ஆதரிக்க மாட்டான்.

விளையாட்டுக்கு எதிராக வன்முறையாகப் போராட்டம் நடத்தி, ஐபிஎல் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றியதை பெரிய வெற்றியாகக் கருதுவோர்களே... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள். முடியுமா?” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

http://tamil.thehindu.com/tamilnadu/article23504505.ece?homepage=true

சரியாச் சொன்னீங்கள்
போங்கோ
இந்த சீமான்
செங்குட்டுவன் போன்றவர்களின்
வெற்று முழக்க அரசியலின்
விளைவு
இவ்வளவு தான்
 
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க ஒரு வேளை
மத்திய அரசுக்கு
எண்ணமிருப்பினும் (?)
அது
கர்நாடக தேர்தலுக்கு பின்புதான்
அதுவரைக்கும் எதுவும்
நடக்க போவது இல்லை
சீமான் போன்றவர்களின்
வன்முறை சார்ந்த
அரசியலால் பயனடைவது
ஆரியமும் பார்ப்பனியமும்
மட்டுமே
மத்திய அரசுக்கு எதிராக
போராடாமல் கிரிக்கெட் மட்ச்
இற்கு எதிராக போராடி
தம் சொந்த அரசியல் நலனை
மேம்படுத்த முனைந்தது
மட்டுமே இங்கு சீமான்
மற்றும் சிறு கட்சிகளால்
நிகழ்ந்து இருக்கு
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க ஒரு வேளை

5 hours ago, வைரவன் said:

மத்திய அரசுக்கு
எண்ணமிருப்பினும் (?)


அது
கர்நாடக தேர்தலுக்கு பின்புதான்
அதுவரைக்கும் எதுவும்
நடக்க போவது இல்லை

தண்ணி இல்லாமல் பயிர்கள் கருகி அழிந்தபின் தண்ணி வந்து என்ன பலன் ?

மத்திய அரசு எண்ணமிருப்பினும் என்று தமிழ் நாட்டில் போய் சொல்லி பார்த்தால் தெரியும் பீயை கரைத்து ஊத்துவார்கள் .

5 hours ago, வைரவன் said:

சீமான் போன்றவர்களின்
வன்முறை சார்ந்த
அரசியலால் பயனடைவது
ஆரியமும் பார்ப்பனியமும்
மட்டுமே

அதெப்படி சகட்டுமேனிக்கு அடித்து விடுகிறிர்கள் எப்படி பயன் பெறுவர் என்று விளக்கம் ப்ளிஸ் ?

5 hours ago, வைரவன் said:

மத்திய அரசுக்கு எதிராக
போராடாமல் கிரிக்கெட் மட்ச்
இற்கு எதிராக போராடி
தம் சொந்த அரசியல் நலனை
மேம்படுத்த முனைந்தது
மட்டுமே இங்கு சீமான்
மற்றும் சிறு கட்சிகளால்
நிகழ்ந்து இருக்கு

யார் சொன்னது மத்திய அரசுக்கு தடவிகொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று ? அவர்கள் சொல்வது இந்த நேரம் வேண்டாம்  என்பதுவே . நாங்கள் மே 18ல் அழியும்போது கர்ணாநிதி திரைப்பட உலக குலுக்கு டான்சும் ,உலகதமிழ் ஆராட்சி மாநாடும் வைத்தது போல் இதை வைக்க வேண்டாம் என்கிறார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.