Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும் ”

Featured Replies

“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும் ”

 

 
 

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

sampanthan.jpg

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

 

இலங்கைவாழ் தமிழ், சிங்கள இரு இனங்களையும் சேர்ந்த மக்களால் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரே பெருநாளாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது. 

அத்தகு சிறப்புமிகு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒரு நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால், அந்நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவுவது அத்தியாவசியமாகும். எமது நாட்டில் அவ்விலக்கினை அடைவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் முதன்மையானதாக விளங்குவது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினையாகும்.

அப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும்.

எனவே, ஈரினத்தவரும் பொதுவாக இப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் விட்டுக்கொடுப்புடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம், சுபிட்சம் மற்றும் அபிவிருத்தி ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும்.

அந்த வகையில் சகல இனத்தவரிடையிலும் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான இன்னல்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை  இறைஞ்சுவதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.

http://www.virakesari.lk/article/32492

 

 

புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி 

 

புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

maithripala-sirisena.jpg

 ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில்,

கலாசார மனிதனை பரிபூரணப்படுத்தும் வகையிலேயே மானிட கலாசாரம் பல யுகங்களாக பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றது, உலகின் பல்வேறு இனத்தவர்களும் வருடாந்தம் கொண்டாடும் அவர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கலாசார வைபவங்கள் அவர்கள் தமது பாரம்பரிய உரிமையுடன் கொண்டிருக்கும் பிணைப்பினையும் அயராத அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துகின்றது.

சிங்கள-தமிழ் புத்தாண்டின் மூலமாக கீழைத்தேய வாசிகளாகிய எம்முடைய உயரிய பண்பாடே வெளிப்பட்டு நிற்கின்றது.

புதுவருடம் என்பது உண்மையிலேயே புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதேயாகும். புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் தத்தமது நம்பிக்கைக்கு அமைவாக புத்தாண்டு சம்பிரதாயங்களுடன் இணையும் இந்த புதுமனிதன், புத்தாண்டு பிறப்புடன் அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி சொந்தபந்தங்களை காணச் செல்லும் ஒரு சொந்தக்காரனாகவே இச் சமூகத்தில் பிரவேசிக்கின்றான் என ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியின் முழு விபரமும் வருமாறு,

president_msg.jpg

 

 

வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் ; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் 

 

 
 

வளமான தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், மகிழ்ச்சியான இனிய புத்தாண்டாக அமையட்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ranil.jpg

சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும். 

 

இயற்கை மற்றும் மனிதனுக்கிடையே காணப்படும் நெருக்கமான உறவினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்து, சூரியனை முதலாகக் கொண்ட இயற்கைக்கு நன்றிக் கடன் செலுத்தும், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும். 

 

இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கி விட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும். இனம், மதம், அந்தஸ்து எதுவாயினும் கலாசாரப் பல்வகைமையை ஏற்றுக் கொண்டு, அதற்கு மதிப்பளித்து, அனைவருடனும் சந்தோசமாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு இந்தப் புத்தாண்டைப் புதியதோர் ஆரம்பமாக மாற்றியமைப்போம்.

 

நீண்ட காலமாக இந்த நாட்டு மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் புத்தாண்டுப் பழக்கவழக்கங்களில் அர்த்தத்துடன் பங்கு கொண்டு அந்தக் கலாசார உரிமையை எமது எதிர்கால சந்ததியினருக்குப் பரிசளிக்கவும் இதனை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம்.

 

 

வளமான தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், மகிழ்ச்சியான இனிய புத்தாண்டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.