Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்!

Featured Replies

வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்!

 
 

வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்!

வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டனி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டனர். சுமந்திரன் எம்.பி, அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் உடனடியாக அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது.

இதேவேளை, த.வி.கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் முரண்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தூசண வார்த்தைகள் பேசி முரண்பட்டனர்.

இதேவேளை, ஐ.தே.கட்சியின் பெண் உறுப்பினரை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் தரப்பினர் கடத்தி சென்றே கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கட்சியின் வவுனியா அமைப்பாளர் கருணாதாச குற்றம் சுமத்தினர். ஆனால் அங்கு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் சகோதரரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அதனை மறுத்திருந்தார். குறிப்பிட்ட பெண் வேட்பாளரும் அந்த குற்றச்சாட்டை மறுத்து தனது விருப்பப்படியே செயற்பட்டதாக சபை தவிசாளர் தெரிவில் செயல்பட்டதாக தெரிவித்தார்.

இதன்பின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் சகோதரருக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்.

m2m3m4m7m8m9m10m1

http://www.samakalam.com/செய்திகள்/வவுனியா-நகரசபையை-கூட்டமை/

  • தொடங்கியவர்
 
 

பதவி யாருக்­கும் செல்­லக்­கூ­டாது என்றே நடு­நி­லமை தவிர்த்­தோம் -ஆனந்­தன் எம்.பி.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி நடு­நி­லமை வகித்து, நகர சபை­யின் தவி­சா­ளர் பதவி வேறு யாருக்­கும் செல்­லக் கூடாது என்­ப­தால் அங்கு போட்­டி­யிட்­டோம் என்று கூறி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன்.

வவு­னியா நகர சபை­யில் நேற்று தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யி­னர் திடீ­ரெ­னத் தவி­சா­ளர் பத­விப் போட்­டி­யில் கள­மி­றங்­கி­னர். ஏனைய கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் வெற்றி பெற்­ற­னர். இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் செய­ல­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் கூறி­ய­தா­வது,-
தவி­சா­ளர் தொடர்­பாக நாங்­கள் நடு­நி­லமை வகிப்­போம் என்று எமது கட்சி ஆரம்­பத்­தில் முடி­வெ­டுத்­தி­ருந்­தது. ஆனால் இங்கு கட்­சி­கள் பெற்ற உறுப்­பி­னர்­களை கணக்­கிட்­டுப் பார்த்­த­போது நாங்­கள் நடு­நி­லமை வகித்­தால் தவி­சா­ளர் பதவி வேறு யாருக்­கும் செல்­லும் நிலமை இருந்­தது.

நாம் நடு­நி­லமை வகித்­த­தால் தான் பதவி வேறு யாருக்­கும் சென்­றது என்ற குற்­றச்­சாட்­டுக்கு எமது கட்சி ஆளா­கா­மல் இருப்­ப­தற்­கா­கவே மிக­வும் அவ­தா­ன­மாக பல தரப்­பட்­ட­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டியே இந்த முடிவை எடுத்­தோம் – என்­றார்.

இதே­வேளை, வெங்­க­லச்­செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி நடு­நி­லமை வகித்­தி­ருந்­தது. அந்­தச் சபையை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கைப்­பற்­றி­யி­ருந்­தது.

http://newuthayan.com/story/85221.html

  • தொடங்கியவர்
  • பழிக்­குப் பழி – ஈ.பி.டி.பி.!!
 
 

பழிக்­குப் பழி – ஈ.பி.டி.பி.!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மற்­றும் நெடுந்­தீவு பிர­தேச சபை­யில் எமது கட்­சிக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு செய்த அநீ­திக்­குப் பழிக்கு பழி வாங்­கும் செயற்­பா­டா­கவே வவு­னியா நகர சபை­யில் நடந்­த­தைப் பார்க்­கின்­றோம் என்று ஈ.பி.டி.பியின் அமைப்­பா­ளர் திலீ­பன் தெரி­வித்­தார்.

வவு­னியா நகர சபையை, கூட்­ட­மைப்பை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி கைப்­பற்­றி­யது. கூட்­டணி நிறுத்­திய தவி­சா­ளர் வேட்­பா­ளரை ஈ.பி.டி.பி. ஆத­ரித்­தது. இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.

“நகர சபையை முன்­னர் ஆட்சி செய்த கூட்­ட­மைப்­புச் சரி­யா­கச் செயற்­ப­ட­வில்லை. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மற்­றும் நெடுந்­தீ­வுப் பிர­தேச சபை­யில் எமது கட்­சிக்கு அநீதி இழைத்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பழி­வாங்­கும் செயற்­பா­டா­கத்­தான் இத­னைப் பார்­கின்­றோம்”- என்று அவர் கூறி­னார்.

நெடுந்­தீவு பிர­தேச சபை­யில் ஈ.பி.டி.பி. கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­த­போ­தும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது.

http://newuthayan.com/story/85239.html

  • தொடங்கியவர்
 
 

சறுக்­கி­யது கூட்­ட­மைப்­பின் இரா­ஜ­தந்­தி­ரம்!!

வவு­னியா நகர சபை மற்­றும் வெண்கலச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை என்­ப­வற்­றில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தும் அந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்பை இழந்­தது. வவு­னியா நகர சபையை, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யும், வெண்க­லச் செட்­டிகு­ளம் பிர­தேச சபையை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் கைப்­பற்­றி­ன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஆத­ர­வைக் கோரி நேற்று இரவு வரை­யில் பேச்சு நடத்­தி­யது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் இந்­தப் பேச்­சுக்­க­ளில் நேர­டி­யா­கப் பங்­கேற்­க­வில்லை. அவர் சார்­பில் மூன்­றாம் தரப்­பி­னரே, கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சுக்­க­ளில் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

வவு­னியா வடக்கு பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் பத­வி­யை­யும், வவு­னியா நகர சபை­யின் உப­த­வி­சா­ளர் பத­வி­யை­யும் அவர்­கள் கோரி­யி­ருந்­த­னர். கூட்­ட­மைப்­பும் அதற்கு இணங்­கி­யி­ருந்­தது. இறுதி நேரத்­தில் அவை எவை­யுமே வேண்­டாம் என்­றும், தாங்­கள் நடு­நி­லமை வகிக்­கப் போகின்­றோம் என்று கூட்­ட­ணி­யி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர். கூட்­ட­ணி­யி­னரை மசிய வைக்க கூட்­ட­மைப்பு எவ்­வ­ளவோ முயன்­றது.

இந்த நிலை­யில் வவு­னியா நகர சபைத் தவி­சா­ளர் தெரி­வுக்­கான அமர்வு நேற்­றுக் காலை ஆரம்­ப­மாகி, தவி­சா­ளர் தெரி­வுக்­கான பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­ப­டும் வரை­யில், கூட்­டணி சார்­பில் ஒரு­வர் போட்­டி­யி­டப் போவது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குத் தெரி­யாது.

கூட்­ட­ணி­யி­னர், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னின் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், சுதந்­தி­ரக் கட்சி, மகிந்­த­வின் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­வற்­றின் ஆத­ர­வு­டன் தமது தவி­சா­ளரை அறி­வித்­த­னர். கூட்­ட­ணி­யின் இந்­தத் திடீர் நட­வ­டிக்­கை­யா­னால் கூட்­ட­மைப்பு திக்­கு­முக்­கா­டிப் போய், இறு­தி­யில் தவி­சா­ளர் பத­வியை இழந்­தது. கூட்­ட­மைப்­பின் இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்கை சறுக்­கி­யது.

http://newuthayan.com/story/85255.html

  • தொடங்கியவர்
 
 

கூறிய வாக்கை காற்­றில் பறக்­க­விட்­டது முன்­னணி!!

வடக்­குப் பிர­தேச சபை­க­ளின் ஆட்சி தெற்கு அர­சி­யல் கட்­சி­க­ளின் கைக­ளுக்­குச் செல்­லும் சூழ்­நிலை ஏற்­பட்­டால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்கு ஆத­ர­வ­ளிப்­போம் என்று தெரி­வித்­தி­ருந்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வவு­னியா வெண்க­லச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் கைக­ளுக்­குச் செல்­வ­தற்கு இட­ம­ளித்­துள்­ளது.

“தமி­ழர் மண்­ணில் பேரி­ன­வாத கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அவ்­வா­றான சூழல் ஏதா­வது சபை­க­ளில் உரு­வா­னால் அந்த இடத்­தில் தமி­ழர்­கள் ஆட்சி அமைப்­ப­தற்கே ஆத­ர­வ­ளிப்­போம். அது ஒரு­வேளை கூட்­ட­மைப்­பாக இருந்­தா­லும் தமிழ்த் தேசத்­தின் நலன் கருதி ஆத­ர­வ­ளிப்­போம்” – என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­தி­ருந்­தார்.

வவு­னியா வெங்­க­லச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் தெரி­வின்­போது, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆகிய கட்­சி­கள் போட்­டி­யிட்­டன. முதல் சுற்­றில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி தோல்­வி­ய­டைந்­தது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யி­லான போட்­டி­யின்­போது, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி நடு­நி­லமை வகித்­தது. இறு­தி­யில் ஓர் வாக்­கால், சபை­யின் தவி­சா­ளர் பதவி தெற்­குக் கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வசம் சென்­றது.

 

http://newuthayan.com/story/85247.html

 

 
 

வட்­டா­ரத்­தில் தோற்­ற­வரே வவுனியா நக­ர­சபை தவி­சா­ளர்!!

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ள­ராக தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் சார்­பில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இரா­ச­லிங்­கம் கௌத­மன் அந்­தக் கட்­சி­யின் சார்­பில் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் போட்­டி­யிட்­டி­ருந்­தார்.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி தனது கட்­சிக்கு கிடைத்த விகி­தா­சார ஆச­னத்­தின் ஊடா­கவே, இரா­ச­லிங்­கம் கௌத­மனை உறுப்­பி­ன­ராக நிய­மித்­தது.

 

http://newuthayan.com/story/85243.html

 

  • தொடங்கியவர்

துரோ­கத்­தைத் தன் கண்­க­ளால் நேரில் கண்ட சுமந்­தி­ரன் எம்.பி.!!

  • தொடங்கியவர்

வவுனியா நகரசபை ஆட்சி அமைப்பின்போது நடைபெற்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை

doucklas.jpg?resize=640%2C443

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான சேவைகளைச் செய்ய அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

வவுனியா நகரசபையின் ஆட்சி அமைப்பின்போது நடைபெற்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்றே கருதுகின்றேன். மனக் கசப்புக்களை முன்னிறுத்தாது சபைகளின் அதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து தரப்பினரும் தாம் மக்களுக்கான சேவையை கருத்தில்கொண்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக ஒருமித்து செயலாற்ற வேண்டும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகும் போதே தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலாபலன்களை ஓரளவேனும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்புகின்றேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுக்காமல் எந்த தரப்பினராலும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுடன் இருந்து முரண்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அந்தவகையில் சபைகளை பொறுப்பேற்ற அனைவரும் தேவயைற்ற முரண்பாடுகளையும் தனிப்பட்ட வன்மங்களையும் கைவிட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/75391/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.