Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்னரை மிரட்டும் கவர்ன்மென்ட்? - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்!

Featured Replies

கவர்னரை மிரட்டும் கவர்ன்மென்ட்? - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்!

 
 

 

‘யாரை மிரட்டுவதற்காக அந்த ஆடியோ வெளியானது’ என்ற கேள்விதான் அதிகார மட்டத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலோ, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலோ முக்கியப் பதவியைக் கைப்பற்றுவதற்காக சில காரியங்களைப் பார்த்து வந்தார். அந்தப் பதவியைக் குறிவைத்து இருக்கும் மற்றவர்கள் நிர்மலாதேவியை மாட்டிவிடுவதற்காக இந்த ஆடியோவை லீக் செய்தார்கள்’’ என்கிறது ஒரு தரப்பு. ‘‘மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசும் ஆடியோ வெளியானால் அதிகம் அவமானப்படப் போவது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். கவர்னரை அவமானப்படுத்த வேண்டும் என்று அதிகார மட்டத்தில் இருக்கும் சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பரப்பிவிட்டார்கள்’’ என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. மொத்தத்தில் தமிழகமே நாறிக் கொண்டிருக்கிறது.

‘‘அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு வாருங்கள்!’’

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத் துறையின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி. அவர் அக்கல்லூரியில் பி.எஸ்ஸி இறுதியாண்டு படிக்கும் நான்கைந்து மாணவிகளிடம் பேசும் ஆடியோ சில நாள்களுக்கு முன் வெளியானது. மேல் மட்டத்தில் இருக்கும் சிலர் எதிர்பார்க்கும் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று அந்த மாணவிகளிடம் அவர் சொல்கிறார். அதனால் கிடைக்கும் பலன்களையும் பட்டியல் போடுகிறார். அதாவது, அதிகாரத்தில் இருக்கும் சிலரை குஷிப்படுத்த இந்த மாணவிகளை அனுப்பி வைக்கும் வேலையை நிர்மலாதேவி பச்சையாகச் செய்யப் பார்த்துள்ளார்.

என்ன நோக்கத்துக்காக அந்த மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசுகிறார் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. ‘‘இதைப் பத்தி இதுக்கு மேல பேசாதீங்க மேடம்” என்று அந்த மாணவிகள் சொல்கிறார்கள். ‘‘உங்களுக்குப் பணம் தருகிறேன், படிப்புக்கு உதவி செய்கிறேன், வேலை வாங்கித் தருகிறேன், வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம்’’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவிடும் நிர்மலாதேவி, ‘‘இந்தக் காரியத்தை உங்கள் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தே செய்யுங்கள்’’ என்கிறார்.

இறுதியாக அவர் சொல்வதுதான், உயர்கல்வித் துறை எத்தகைய நாற்றத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம்!

p42a_1523987520.jpg

‘‘கவர்னர் ... தாத்தா இல்ல!’’

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை குறிப்பிடும் விதமாக சில வரிகளை நிர்மலாதேவி பேசுகிறார். ‘‘...ரொம்ப ரொம்ப ஹையர் ஆபீசர்ஸ். கவர்னர் விழா வீடியோவை அனுப்பியிருந்தேனே... பார்த்தீங்க இல்லையா? நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு தெரிஞ்சுக்கங்க! நீங்க படிச்சு முடிச்சபிறகு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் போனாக்கூட என்னால கவனிக்கமுடியும். அரசாங்கம் தொடர்பான எதுலேயும் ஓவர் கம் பண்ணி வரமுடியும்... புரிஞ்சுக்கங்க’’ என்கிற ரீதியில் சொல்லிவிட்டு திடீரென்று, ‘‘கவர்னர்... தாத்தா இல்ல’’ என்கிறார். இந்த வார்த்தைகளிலேயே அவரது நோக்கமும் அதன் பின்னால் இருக்கும் ஆபாசமும் வெட்டவெளிச்சம் ஆகிவிடுகிறது. ஆடியோவில் பேசி இருப்பது நான்தான் என்று நிர்மலாதேவி ஒப்புக்கொண்டு விட்டார். ‘ஆனால், அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று சமாளித்து வருகிறார்.

வெளியிட்டது யார்?

‘‘கவர்னர் மாளிகையில் சமீபகாலமாக செய்யப்பட்டு வரும் சில மாற்றங்களின் மூலமாகப் பாதிக்கப்பட்ட சிலர் இந்த ஆடியோவை வெளியிட்டு விட்டார்கள்’’ என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இன்னொரு தகவல்தான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ‘‘இன்றைய ஆளும்கட்சிக்கும் கவர்னருக்கும் கடந்த ஒரு மாத காலமாக மோதல் நடக்கிறது. தமிழக அரசு மட்டத்தில் நடக்கும் பல முறைகேடுகளையும் அப்படியே டெல்லிக்குச் சொல்லிவிடும் மனிதராக பன்வாரிலால் இருக்கிறார். அவரை மாட்டிவிடுவதற்கு நேரம் பார்த்தார்கள். அந்த நேரத்தில் இப்படி ஓர் ஆடியோ சிக்கியது. அதை ஆளும்கட்சியினர்தான் போலீஸ் பின்னணியுடன் லீக் செய்தார்கள்’’ என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் சிலர்.

‘‘நிர்மலாதேவியை மிரட்டுவதற்காக ஆடியோவை லீக் செய்திருந்தால் கட் செய்யவோ ம்யூட் செய்யவோ மாட்டார்கள். அரசியல்ரீதியான பின்னணி உள்ளவர்கள் கையில் இந்த ஆடியோ சிக்கியதால்தான் முக்கியமான சொற்களை ம்யூட் செய்துள்ளார்கள். கவர்னரைப் பற்றிய விஷயங்கள் அப்படியே இருக்குமாறு கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்’’ என்றும் சொல்லப்படுகிறது.

கவர்னர் - அரசு மோதல் ஏன்?

கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வந்ததிலிருந்தே ஆளும்கட்சிக்கும் அவருக்கும் ஆகவில்லை. ‘நமக்கு மோடி தயவு இருக்கிறது” என்று கவர்னரைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும்கட்சி இருந்தது. ஆனால், கவர்னர் அப்படி நினைக்கவில்லை. நிர்வாக விஷயங்களில் தலையிடத் தொடங்கினார். ஊர் ஊராகக் கிளம்பினார். தன்னிடம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்புகள் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டார். அடிக்கடி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரை அழைத்து விசாரணை செய்தார்.  தலைமைச் செயலகத்தை பைபாஸ் செய்து, கவர்னர் மாளிகையிலிருந்தே  பல மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவுகள் பறந்தன. ‘மாநில அரசின்மீது மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. இவர்கள்மீது அதிகமான ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது’ என மத்திய அரசுக்குப் புகார் சொன்னார். சில பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசின் பரிந்துரைகளைக் கேட்கவில்லை. சமீபத்தில் நடந்த காவிரி போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்று அறிக்கை கொடுத்தார். மத்திய அரசு இதனால் கோபமானது. ‘‘அவர்களது ஆட்சி மே மாதம் வரைக்கும்தான்” என்கிறரீதியில் மத்திய அரசும் சொல்லிவிட்டதாக கவர்னர் இங்கு வந்து சொன்னார். இன்னொரு பக்கம் கவர்னரின் செயலாளர் ராஜகோபால், தான் ஒரு தலைமைச் செயலாளர் போல நினைத்துக்கொண்டு எல்லா அதிகாரிகளிடமும் அதிரடியாகப் பேசினார். ‘‘இதனால் கவர்னர்மீது கடுமையான கோபத்துடன் மாநில அரசு இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஆடியோ கிடைக்க, அதை ஆர்வமாக ரிலீஸ் செய்து விட்டார்கள்’’ என்கிறார்கள்!

இதன் தொடர்ச்சியாக, கவர்னர் இனி எங்கும் ஆய்வுக்குப் போகாமல் ராஜ்பவனுக்குள்ளேயே முடக்கி வைக்கப்படலாம். ஒருவேளை அதைமீறி எங்காவது போனால், ‘சர்ச்சை புகாரில் சிக்கிய கவர்னரே, திரும்பிப் போ’ என சில அமைப்புகள் போராட்டம் நடத்தும். கவர்ன்மென்ட் இப்படி எல்லா ஆயுதங்களையும் சேகரித்துக்கொண்டு கவர்னரை மிரட்டுகிறது.

இன்னொரு பக்கம், ‘கவர்னரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக அரசியல் இப்படிப்பட்ட சர்ச்சையில் சிக்குவது இதுதான் முதல் தடவை.

- ஆர்.பி., செ.சல்மான்
படம்: ஆர்.எம்.முத்துராஜ்


p42_1523987488.jpg

கவர்னர் விழாவில் இருந்தாரா?

ப்ரல் 16-ம் தேதி இந்த விவகாரம் பரபரப்பாகப் பரவிய நேரத்தில், கல்லூரிமுன் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நிர்மலாராணி, ‘‘இதுவரை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் புரோக்கர்கள் ஒரு மாதிரியான தோற்றத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பேராசிரியர் தோற்றத்திலும் இருப்பார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இக்கல்லூரியில் மிகவும் ஏழ்மையான கிராமப்புற மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி இப்படிப் புதைகுழியில் தள்ள இந்த பேராசிரியர் நினைத்துள்ளார். அதிலும் தான் கவர்னர், பெரிய அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கம் என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார். இதுபோல வெளியே தெரியாமல் பல கல்லூரிகளில் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடந்து வருகின்றன. நிர்மலாதேவிமீதும், அவருக்கு  உதவியாக இருந்தவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கல்லூரி மாணவிகளிடம் நிர்மலாதேவியைப் பற்றி விசாரித்தோம், ‘‘அவங்க கணவரைப் பிரிஞ்சு தனியா இருக்காங்க. 10 வருஷமா இங்க வேலை பார்க்கிறாங்க. உதவிப் பேராசிரியராக இருந்தாலும், பிரின்சிபல் மாதிரியே நடந்து கொள்வார். வி.ஐ.பி-க்களுடன் அவர் இருக்கும் படங்களை செல்போனிலிருந்து காட்டி, ‘எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும்’ என்று பேசுவார்’’ என்றனர்.

புத்துணர்வு வகுப்புக்காக மார்ச் ஒன்பதாம் தேதியிலிருந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தார் நிர்மலாதேவி. அந்த நேரத்தில்தான் இந்த ஆடியோ பேச்சு பேசப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதி அவர் பேசியிருக்கிறார். இடையில் மார்ச் 13-ம் தேதி தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதற்கு கவர்னர் புரோஹித் வந்திருந்தார். அந்த விழாவின்போது நிர்மலாதேவி என்ன செய்தார் என இப்போது ரகசிய விசாரணை நடக்கிறது.

நிர்மலாதேவி இப்போது சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார். அவர்மீது துறைரீதியாக விசாரணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 16-ம் தேதி இரவு, நிர்மலாதேவி வீட்டு வாசலில் காத்திருந்த மீடியாவினரை ஏமாற்றிவிட்டு, சாமர்த்தியமாக அவரைக் கைது செய்தது போலீஸ். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார் கவர்னர் புரோஹித். போலீஸ் விசாரணை நடக்கும்போது, எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ விசாரணை கேட்கும்போது, இப்படி ஒரு விசாரணையை கவர்னர் அவசரமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

தமிழகத்தில் ஆளுநரால் மீண்டும் சர்ச்சை: என் கன்னத்தை ஆளுநர் தட்டியிருக்கக் கூடாது- பெண் செய்தியாளர் காட்டம்

 

 
Banwarilal-Purohit

ஆளுநர் மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடந்துகொண்ட விதம் குறித்து பெண் நிருபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் பல சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவை அடங்குவதற்குள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் செய்தியாளரின் அனுமதியின்றி அவரது கன்னத்தில் தட்டியது மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். 

அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரைப் பார்த்தது இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை என்று விளக்கமளித்தார். 

தமிழக ஆளுநராகக் கடந்த அக்டோபரில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், முதன்முறையாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று கூறிய அவர், பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்ததால் சந்தித்ததாகவும், அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். 

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை ஆளுநர் தட்டிக் கொடுத்தார். 

இது குறித்து அந்த பெண் செய்தியாளர் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது, நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை, அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே... தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!" என்று டுவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

பெண் செய்தியாளரிடம் ஆளுநர் நடந்துகொண்டது குறித்து அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

mks.jpg

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில், ஆளுநரின் செயல் துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல. அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! என்று தெரிவித்துள்ளார் 

 

kani.jpg

கனிமொழி: புரோகித் என்ன தான் வயதில் பெரியவராக இருந்தாலும் தவறான நோக்கத்தில் தொடாவிட்டாலும் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர் கன்னத்தில் தட்டியது தவறு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

http://www.dinamani.com/latest-news/2018/apr/18/தமிழகத்தில்-ஆளுநரால்-மீண்டும்-சர்ச்சை-என்-கன்னத்தை-ஆளுநர்-தட்டியிருக்கக்-கூடாது--பெண்-செய்தியாளர்-க-2902632.html

  • தொடங்கியவர்

நிர்மலாதேவி விவகாரம்: ''ஆளுநர் ஏன் தலையிட்டார்?''

 
 
 
10050576066814868-40e7-4d4b-91a9-d432c5e

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்து சந்தேகம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் ஸ்டாலினின் சந்தேகம் நியாயமானதா? சிபிஐ விசாரணையில் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியுமா? எனக் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துகளை நேயர்களுக்கு இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

''மாணாக்கரின் பகுத்தறிவுக்கு வித்திட வேண்டிய பேராசிரியை விதியை மீறி மாணாக்கரின் எதிர்காலத்தைப் பாழாக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாலும் பெருந்தலையின் தலையீடு இல்லாமல் வால் ஆடியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தின் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் நிகழும் முறைகேடுகள் சமீபகாலமாக அதிகளவில் வெளிப்படுவதும், மாநில பல்கலைக்கழகங்கள் நடுவண் அரசின் கீழ் கொண்டுவரப்படும் என்னும் செய்திகளுக்கும், தற்போதைய நிகழ்வில் ஆளுநர் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கும் தொடர்பு உள்ளனவா என்கிற ஐயம் கலந்த கேள்விகள் எழுகின்றன.'' என சக்தி சரவணன் தெரிவித்துள்ளார்.

''ஸ்டாலின் சந்தேகம் நியாயமே. ஏனென்றால், ஆளுநர் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மத்திய புலனாய்வு தான் தேவை'' என நிஜார் அகமது பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

பேஸ்புக்கில் வாதம் விவாதம் பகுதியில் கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார் நேயர் முகமது ஜாஃபர் . ''மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைகழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் புரோஹித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் வேந்தர் ஆவார்.

கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரிக் கல்வி இயக்ககம் தலையிட முடியும்.

ஒரு கல்லூரிக்குள் அதுவும் தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரியில், மாணவிகளைத் தவறாக வழி நடத்த ஆசிரியை முயன்றால் அது பற்றி நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், இது குற்றவியல் பிரச்னையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது'' என அவர் எழுதியுள்ளார்.

''சம்பந்தப்பட்டது தனியார் கல்லூரி உதவி பேராசியையை அவரின் கல்லூரியும் அவரை வேலையிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து விட்ட நிலையில் இது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப் பட்டு போலிஸிடம் தகுந்த நடவடிக்கைக்காக அனுப்பி இருக்க வேண்டும். ஆளுநர் இதில் ஏன் தலையிட்டார் என்பது தான் மக்களின் சந்தேகம்.'' என ட்விட்டரில் அமானுல்லா குறிப்பிட்டுள்ளார்.

''மொதல்ல தமிழ்நாட்ல ஆட்சின்னு ஒண்ணு நடக்குதா. இல்ல கவர்னர்தானா எல்லாம்னு சந்தேகேமா இருக்கு. நாங்க கவர்னருக்கு ஓட்டு போடல'' என எழுதியுள்ளார் மதிவாணன்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article23581476.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

`10 ஆண்டுகளாகவே நிர்மலாதேவி இப்படித்தான்!' - ஆளுநர்மீது பாயும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

 
 

நிர்மலாதேவி

Madurai: 

ருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் ஐ.ஏ.எஸ், நாளை விசாரணையைத் தொடங்க இருக்கிறார். `மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசுவது முதல்முறையல்ல. 10 ஆண்டுகளாக அவர் இதைத்தான் செய்து வருகிறார். தேவாங்கர் கல்லூரியில் நிலவும் கோஷ்டி மோதல்களால்தான் இந்த ஆடியோ வெளியானது' என்கின்றனர் அக்கல்லூரி பேராசிரியர்கள். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைத் தொடர்புபடுத்தி, மாணவிகள் விவகாரம் பேசப்பட்டு வருகிறது. `ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்' என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. கடந்த இரண்டு நாள்களாகத் தன்னை மையப்படுத்தி பரப்பப்படும் தகவல்களுக்குப் பதிலளிக்க நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்தச் சந்திப்பின்போது, 'கல்வித்துறையில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என நான் சொல்லவில்லை. சில தவறுகள் நடந்துள்ளன. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி யார் என்று எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. வேந்தர் என்பவர் மாநில அரசையோ அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்தப் புகாரும் இல்லை' எனப் பேட்டியளித்தார். சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளர் கன்னத்தை ஆளுநர் தடவிய விவகாரமும் சர்ச்சைக்குள்ளானது. 

இந்நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடிக்க ஆசிரியர் சங்கங்கள் இணைந்து குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் சுரேஷ். அவரிடம் பேசினோம். " நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள உயர்கல்வித்துறையின் பெரும்புள்ளிகள் மீது கடும் நடவடிக்கை வலியுறுத்தி, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான்-டீச்சிங் அசோசியேஷன் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. நேற்று நடந்த கூட்டத்தில், ' விசாரணைக் கமிஷனில் பேராசிரியர்களுக்கு உடன்பாடில்லை. ஆளுநர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

எனவே, உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் குழு அமைக்கப்பட வேண்டும். அதில் பெண் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். உயர்கல்வித்துறை மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, அந்தநேரத்துக்கு மட்டும் பெரிதாகப் பேசப்படுகிறது. அதன்பிறகு விவகாரம் மூடிமறைக்கப்பட்டுவிடுகிறது. வரும் காலங்களில் உயர்கல்வித்துறையை சீர்படுத்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும். நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதனை வலியுறுத்தி, முதல்கட்டமாக வரும் 24-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்" என்றார் ஆவேசத்தோடு. 

இதையடுத்து, நிர்மலாதேவியின் செயல்பாடுகள் குறித்து காமராஜர் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய பேராசிரியர் ஒருவர், " பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கணிதத்துறையின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார் நிர்மலாதேவி. இந்தப் பணிக்கு அவர் வந்ததன் பின்னணியில் தேவாங்கர் கல்லூரியின் செயலர் ஒருவர் காரணமாக இருந்தார். பணிக்கு வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே, மாணவிகளை வளைக்கும் பணிகளையும் செய்து வந்ததாக அக்கல்லூரி ஆசிரியர்களே கூறுகின்றனர். இதுகுறித்து மாணவிகள் அவ்வப்போது புகார் எழுப்பினாலும், தனிப்பட்ட செல்வாக்கால் அவர்களைப் பேசவிடாமல் செய்துவிட்டார் நிர்மலா. எதிர்காலம் கருதி, பாதிக்கப்பட்ட மாணவிகளும் அமைதியாக இருந்துவிட்டனர். அதேபோல், கல்லூரியின் சில செயல்பாடுகளை மூடி மறைக்கவும் நிர்மலாதேவி தேவைப்பட்டிருக்கிறார்.

 

உதாரணமாக, ' மானியக் குழுவின் நிதியில் நடந்த சில முறைகேடுகள், கல்லூரி நிதியில் நடந்த குளறுபடிகள் ஆகியவற்றைச் சரிக்கட்டவும் நிர்மலாதேவி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்' என தேவாங்கர் கல்லூரி ஆசிரியர்களே கூறுகின்றனர். இந்த விவகாரம் கசிவதற்கு சில காரணங்கள் அடிப்படையாக இருந்தன. தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தில் மூன்று கோஷ்டிகள் உள்ளன. அதில் ஒரு குரூப்பிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆடியோவைக் கொடுத்துவிட்டனர். நிர்மலாதேவியை இயக்கும் கல்லூரி நிர்வாகிகள், காமராஜர் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், ஆளுநர் மாளிகை தொடர்புகள் ஆகியவற்றை வெளியுலகின் பார்வைக்குக் கொண்டு செல்ல அந்தக் குரூப் முயற்சியை மேற்கொண்டது. அதன் விளைவாகத்தான் ஊடகங்களின் கவனத்துக்கு ஆடியோ வந்து சேர்ந்தது. நிர்மலாதேவியின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொடர்புகளும் வெளியில் வர வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன். 

https://www.vikatan.com/news/tamilnadu/122541-nirmala-devi-has-been-doing-this-for-about-ten-years-professors-blame-the-governor.html

  • தொடங்கியவர்

பேத்தி என்று நினைத்து கன்னத்தைத் தட்டினேன்..! மன்னிப்பு கோரிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 
 

பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியதற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்துள்ளார். 

Da_TGMuVAAIqiL9_13068.jpg

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பின்போது, கேள்வி எழுப்பிய த வீக் பத்திரிகையின் பெண் செய்தியாளர் லக்ஷ்மி சுப்ரமணியத்தின் கன்னத்தில் பன்வாரிலால் புரோஹித் தட்டினார்.

banwarilal_18582_02096_13325.jpg

ஆளுநரின் அந்தச் செயலுக்கு, ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார் லக்‌ஷ்மி. மேலும், செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக செய்தியாளருக்கு ஆளுநர் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில், 'செய்திளார்கள் சந்திப்பின்போது, நீங்கள் எழுப்பிய கேள்வி சிறப்பாக இருந்தது. அதைப் பாராட்டும் விதமாக உங்களை என்னுடைய பேத்திபோல கருதியே கன்னத்தில் தட்டினேன்.

ஒரு செய்தியாளராக உங்களுடைய செயல்பாட்டைப் பாராட்டும் விதமாகவே நான் அவ்வாறு செய்தேன். உங்களுடைய ஈ-மெயில் கடிதத்தின்மூலம், என்னுடைய செயல்பாட்டினால் நீங்கள் அடைந்த கஷ்டத்தைப் புரிந்துகொண்டேன். உங்களுடைய உணர்வுகள் கஷ்டப்பட்டதைக் குறைக்கும் விதமாக, என்னுடைய மன்னிப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/122553-tn-governor-apologies-to-woman-journalist-for-pat-the-check.html

  • தொடங்கியவர்

ராஜினாமாவா.. இடமாற்றமா..? கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன?

 

கவர்னர் பன்வாரிலால்

ல்லூரி மாணவிகளிடம் செல்போனில் தவறான முறையில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரச்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பெயர் அடிபடுவதால் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கி இருக்கிறது.

தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசியதாக வெளியான ஆடியோ உரையாடலில் பல அதிர்ச்சித் தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. அந்த ஆடியோவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பற்றியும், கவர்னர் பற்றியும் இடம்பெறுவதால் தமிழக கவர்னர் மாளிகை பதறிப்போனது. இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில், கடந்த 16-ம் தேதி விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தார் கவர்னர். ``தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்" என்று கவர்னர் அறிவித்தார்.

இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லத்துரை அறிவித்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அந்தப் பல்கலைக்கழகமே வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்தப் பிரச்னையில் மாநில அரசுக்கும், கவர்னர் மாளிகைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர்தான், ஐவர் குழு விசாரணை அறிவிப்பை துணைவேந்தர் செல்லத்துரை வாபஸ் பெற்றார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் சொல்கிறார்கள். மேலும், செல்லத்துரையை கவர்னர் மாளிகைக்கு அழைத்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவரை அருகில் வைத்துக்கொண்டே கிண்டி கவர்னர் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டி கொடுத்தார்.

நிர்மலாதேவி

அப்போது பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ``என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. பேரன், கொள்ளுப்பேரன்களை எடுத்துவிட்டேன். எனக்கு 78 வயது ஆகிறது. ஆர்.சந்தானம் கமிட்டி விசாரணை அறிக்கையை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும், நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் சொன்னார் பன்வாரிலால் புரோஹித். ``பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை; இதில் தொடர்புடையவர்களும் பெண்கள்; எனவே, பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைப்பதுதானே சரியாக இருக்கும். இதுபற்றி உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதே?" என்று நிருபர்கள் கேட்டதற்கு `ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், தேவைப்பட்டால் பெண் அதிகாரிகளை நியமித்துக்கொள்ளலாம்" என்று கவர்னர் பொதுவாக பதில் சொன்னார்.

``கவர்னராகிய உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது, நீங்களே விசாரணைக் கமிட்டி அமைப்பது எந்த வகையில் நியாயம்? ஆர்.சந்தானம் கமிட்டி உங்களை விசாரிக்குமா?" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ``நீங்கள் (நிருபர்கள்) கூட என்னை விசாரிக்கலாம்" என்று பதில் சொன்னார் கவர்னர். இதையடுத்து இன்னோரு நிருபர், ``தனியார் கல்லூரி பேராசிரியையின் ஆடியோ உரையாடலுக்கு விசாரணை கமிட்டி அமைத்துள்ள நீங்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை ஊழல் குறித்து விசாரிப்பீர்களா..?" என்று கேட்டதற்கு, ``அது கல்லூரி சம்பந்தப்பட்ட பிரச்னை" என்று மழுப்பலாகப் பதில் சொன்னார். ``நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை ஆணையத்தை நீங்கள் அமைத்தது ஏன்? அதை மாநில அரசுதானே செய்ய வேண்டும்" என்று கேட்டதற்கு, "வேந்தர் என்ற முறையில் விசாரணை ஆணையம் அமைக்க  எனக்கு உரிமை உள்ளது" என்று கவர்னர் பதில் சொன்னார்.

ராஜ்நாத் சிங்

``தமிழ்நாட்டில் காவிரிப் பிரச்னைக்காக, பிரதமர் சென்னை வந்தபோது போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோதும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நெடுவாசல் போன்ற பிரச்னைகளின் போதெல்லாம் அமைதிகாத்த நீங்கள், இப்போது நிர்மலா தேவி பிரச்னையில் நிருபர்களை அழைத்து விளக்கம் கொடுப்பது ஏன்?" என்ற கேள்விக்கு, ``நிர்மலா தேவி பிரச்னைக்காக நான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. பொறுப்பேற்று 6 மாதம் முடிந்துவிட்டதால் உங்களைச் சந்தித்தேன். காவிரிப் பிரச்னை என் இதயத்தில் உள்ளது. உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் 6 மாதம் கழித்து உங்களை சந்திப்பேன்" என்று கவர்னர் சொன்ன பதில் நிருபர்களை மட்டுமல்ல, நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களையும் நகைப்புக்கு உள்ளாக்கியது. இப்படி முக்கிய கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், மழுப்பலாக கவர்னர் கூறிய பதில்கள், இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் காரணமாகவே ``கவர்னரை திரும்பப்பெற வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழக எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் இந்த சந்தேகங்கள், மத்திய பி.ஜே.பி அரசுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய உளவுத்துறை மூலம் இந்தப் பிரச்னை பற்றி விசாரித்து இருக்கிறார்கள். அந்த ரிப்போர்ட்டில் ``கவர்னரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பிரச்னையில் தமிழக உளவுத்துறையின் உள்வேலைகள் இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. எனவே, இந்த கெட்டப்பெயரோடு பன்வாரிலாலை இனியும் தமிழகத்தில் வைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை என்கிறார்கள். மாவட்ட வாரியாக ஆய்வுப் பணிகள், துணைவேந்தர்கள் நியமனத்தில் தொடர் சர்ச்சை, இப்போது நிர்மலா தேவி பிரச்னை குறித்து விளக்கம் என்று பன்வாரிலாலின் செயல்பாடுகள் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிக் கொண்டு இருப்பதால் இனியும் அவரை தமிழ்நாடு கவர்னராக தொடர மத்திய அரசு விரும்பவில்லை என்கிறார்கள். எனவே, விரைவில் மேற்கொள்ளவிருக்கும் கவர்னர்கள் மாற்றத்தின்போது தமிழக கவர்னரையும் மாற்ற இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்நிலையில் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து அவர் பேச இருக்கிறார். 

 

அதன் பின்னரே பன்வாரிலால், இடமாற்றமா அல்லது ராஜினாமாவா என்பது தெரியவரும்

https://www.vikatan.com/news/coverstory/122632-governor-banwarilal-purohit-will-submit-explanation-to-central-government.html

  • தொடங்கியவர்

மதுரை காமராசர் பல்கலை.யின் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு: 10 ஆண்டு கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது- பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலத்தால் மிரண்டுபோன போலீஸார்

 

19-MA-MANArupukottai%20Photo

பேராசிரியை நிர்மலாதேவி

18mamaninirmala-devi

போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, மிகவும் சோகமாக காணப்பட்ட நிர்மலா தேவி.

18mamaninirmala-devi-out

அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பின் அழைத்துவரப்படும் பேராசிரியை நிர்மலா தேவி.

18mamaninirmala-devi1

மதுரை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நிர்மலாதேவி.

19-MA-MANArupukottai%20Photo

பேராசிரியை நிர்மலாதேவி

18mamaninirmala-devi

போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, மிகவும் சோகமாக காணப்பட்ட நிர்மலா தேவி.

‘10 ஆண்டு கதையை ஒரு நாளில் சொல்ல முடியாது’ என அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தால் காவல்துறை அதிகாரிகள் மிரண்டு போயினர். மேலும், இந்த விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த மாதம் மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டியதாக ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவர் அருப்புக்கோட்டை போலீஸாரால் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மகளிர் பிரிவில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணி வரை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, பேராசிரியை நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தில் ‘பத்தாண்டு கால கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது’ என்று கூறியதை கேட்டு காவல்துறை உயர் அதிகாரிகளே மிரண்டு போயினர்.

இதுகுறித்து, பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிர்மலாதேவியின் பெற்றோரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர் அருப்புக்கோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தற்போது பணியாற்றும் கல்லூரியிலேயே இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார்.

2008-ம் ஆண்டில் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். காமராசர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காகச் சென்று வந்தபோது, குறிப்பாக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் இவருக்கு அலுவல்ரீதியிலான தொடர்பு ஏற்பட்டது.

 

பேராசிரியர்கள் தொடர்பு

கடந்த மாதம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். அப்போது, தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரில் அருப்புக்கோட்டை கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளை அவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டி வற்புறுத்தியதாக தெரிகிறது.

மேலும், உயர் கல்வித் துறையில் பல அதிகாரிகளுடனும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், முதல் கட்ட விசாரணை மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை எடுத்துக் கொண்டவுடன் இவ்வழக்கு விசாரணை மேலும் விரிவடையும். பேராசிரியை நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை நடத்தப்படும்.

 

கல்லூரி நிர்வாகிகள்

அதோடு, மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றிவரும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களும் விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டு வரப்படுவர். அதோடு, குறிப்பிட்ட கல்லூரியில் இதற்கு முன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சிலரும் சிக்குவார்கள். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23598905.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்?

 

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய துணைப் பேராசிரியை நிர்மலாதேவி தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் (சிபிசிஐடி) கூடுதல் டிஜிபி மாற்றப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் கட்சிகள் குறை கூறியுள்ளன.

'நான் இதுவரை நிர்மலா தேவியை பார்த்ததுகூட இல்லை' : ஆளுநர் பன்வாரிலால்

தமிழக காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவின் (சிபிசிஐடி) கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி நேற்று மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டார். இந்தக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைதான் தற்போது நிர்மலாதேவி விவகாரத்தை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், சிபிசிஐடியின் கூடுதல் டிஜிபி மாற்றப்பட்டிருப்பது குறித்து தி.மு.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் சந்தேகம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு இரண்டே நாட்களில் கூடுதல் டிஜிபி மாற்றப்பட்டிருக்கிறார். ஜெயந்த் முரளி நேர்மையான அதிகாரி என்று அறிகிறோம். இப்போது அவரை மாற்றியிருப்பதன் மூலம் எடப்பாடி அரசு யாரையோ காப்பாற்ற முயல்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கூறினார்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அப்பிரிவின் தலைவராக ஜெயந்த் முரளி நீடித்தால், பாலியல் வலையின் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்படலாம்; இந்த விவகாரத்தில் ஆளுனர் மாளிகைக்கு உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படலாம் என்பதாலேயே சி.பி.சி.ஐ.டி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஜெயந்த் முரளி நீக்கப்பட்டுள்ளார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பாலியல் வலை வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலி நாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலி நாடாவில் பேசியிருந்தார்.

இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.

இந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. பிறகு நிர்மலா தேவியும் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு பிறகு, அருப்புக்கோட்டை காவல்துறையிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

'நிர்மலா தேவியை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை' : ஆளுநர் பன்வாரிலால்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதையடுத்து சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் இன்று தேவாங்கர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தினர். நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு காவல்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார்.

விசாரணை அதிகாரியான சந்தானம் இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று துணை வேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தினார். துணைப் பேராசிரியர் நிர்மலா தேவியின் பின்னணி குறித்து அறிவதும் எந்தப் பின்னணியில் அவர் மாணவிகளை அணுகினார் என்பதை தெரிந்துகொள்வதுமே தனது விசாரணையின் நோக்கம் என சந்தானம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவருக்கு உதவியாக வேறு இரண்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தங்களிடம் இருக்கும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-43827970

  • தொடங்கியவர்

“எஸ்.வி.சேகரின் பதிவு அருவருக்கத்தக்கது!” - கனிமொழி காட்டம்

 
 

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகரின் கருத்துக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். சந்திப்பு முடிவடைந்த  பின், மீண்டும் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிவிட்டுப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் அரசியலில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. ஆளுநருக்கு பல அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கண்டங்களைத் தெரிவித்ததை அடுத்து, அந்தப் பெண் நிருபரிடம் ஆளுநர் மன்னிப்புக் கேட்டார்.

ஆளுநரின் செயல்குறித்து முகநூல் பக்கத்தில் பல கருத்துகள் உலா வந்தன. அதில், ஆளுநருக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்நிலையில், ஆளுநரிடம் கேள்விகேட்ட பெண் நிருபருக்கு எதிராகவும், ஊடகங்களுக்கு எதிராகவும்  தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, நேற்று ஒரு நபர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார், அந்தக் கருத்தை     பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பகிர்ந்திருந்தார். பதிவிட்டவரைவிட, எஸ்.வி.சேகரின் பகிர்வுக்குப் பிறகு, அந்தக் கருத்து ஊடகத்தினரிடமும் பெண்கள் அமைப்பினர், பெண் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து, எஸ்.வி.சேகர் அந்தக் கருத்தை தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

tweet_12162.jpg

 

இவரின் இந்தக் கருத்துக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ ஊடகத் துறையில் உள்ள பெண்கள்குறித்த பி.ஜே.பி உறுப்பினர் எஸ்.வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்படவேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அந்த முகநூல் பதிவு, அருவருக்கத்தக்க மனநிலையையே காட்டுகிறது. இப்படிப்பட்ட பதிவுகளைப் போட்டுவிட்டு, கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகிவருகிறது. பி.ஜே.பி தலைமை, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இத்தகைய கருத்துகளுக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள முடியும். இத்தகைய கருத்துகள், அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்று கூறிவிட்டு, அவரை கட்சியில் தொடர அனுமதிப்பது தவறு. அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/122759-kanimozhi-condemns-on-svsekar-post-about-women-journalist.html

  • தொடங்கியவர்

எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு

சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும்,பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்புபடத்தின் காப்புரிமைTWITTER

எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருமலை சடகோபன் என்பவர் எழுதியிருந்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசப்பட்டிருந்தது.

அந்த பதிவு தொடர்பான சர்ச்சை எழுந்ததும் திருமலை சடகோபன் தன் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டார். எஸ்.வி.சேகரும் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இருந்தபோதும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்கள் தற்போது சமூகவலைதளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு

எஸ்.வி.சேகர் பதிவுசெய்த இந்தக் கருத்துக்கு பத்திரிகையாளர்களால் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரன்ட்லைன் இதழின் ஆசிரியருமான விஜயஷங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் குறிப்பில், "ஊடகத் துறைக்கு அதிக அளவில் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீண்டதூரப் பயணங்கள், இரவு ஷிப்டுகள், அபாயகரமான சூழல்கள் என்று அசராமல் பணிபுரிகிறார்கள். இரான்-ஈராக் போர் உச்சகட்டத்திலிருந்த போது போர்முனையிலிருந்து செய்தி சேகரித்த சீமா முஸ்தபா, 2002இல் நடந்த குஜராத் வன்முறையின் போது களத்தில் நின்று கட்டுரைகள் எழுதி அதற்காக விருது பெற்ற டியோன் புன்ஷா (பிரண்ட்லைன்), மதவாதப் பேய்களுக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த கவுரி லங்கேஷ், இயற்கைப் பேரிடர்கள் நிகழந்தபோது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரித்த பெண் நிருபர்கள்.... இந்தப் பட்டியல் நீளமானது." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தி.மு.கவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எஸ்வி சேகரின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "ஊடகத் துறையில் உள்ள பெண்கள் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வி சேகரின் கருத்து அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இப்படிப்பட்ட பதிவுகளைப் போட்டுவிட்டு, கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகிவருகிறது. பிஜேபி தலைமை எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இத்தகைய கருத்துகளுக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள முடியும்" என அவர் கூறியிருக்கிறார்.

கனிமொழிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார், "பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்த பதிவு பெண்களை மட்டும் இழிவுசெய்யவில்லை. ஊடக முதலாளிகளையும்தான் கேவலப்படுத்துகிறது. இதுவரை ஊடக முதலாளி ஒருவர்கூட இதற்கு எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லையே அது ஏன்?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

எஸ்.வி. சேகர் பகிர்ந்திருக்கும் இந்தப் பதிவை எழுதியிருக்கும் திருமலை சடகோபன், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். சர்ச்சை பெரிதானதும் தனது பக்கத்தை பிறர் பார்க்காத வண்ணம் முடக்கியுள்ளார். அவர் தன்னுடைய பதிவில், தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் புகார் அளித்தார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் என்றும் எச். ராஜாவும், எஸ்வி சேகரும், ’சைபர் சைக்கோக்கள்’ என்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்திற்கே ஆபத்து எனவும் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-43834079

  • தொடங்கியவர்

சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் எஸ்.வி. சேகர்

எஸ்.வி. சேகர்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்துப் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்துகளுக்கு தொலைக்காட்சி நடிகரும் பாரதீய ஜனதாக் கட்சி உறுப்பினருமான எஸ்.வி. சேகர் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்கிறவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி. சேகர் வியாழக்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் 'திருமலை சடகோபன்' என்பவர் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்தை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது இந்தச் செயல் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்திருந்தன. மீன்வளத் துறை அமைச்சர் எஸ்.வி. சேகரை 'சைபர் சைக்கோ' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்கு எஸ்வி சேகர் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமலை சா என்ற நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவிட்டேன். சற்றுநேரத்தில் என் நண்பன் அதை படித்துவிட்டு அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னான். உடனடியாக அது நீக்கப்பட்டும்விட்டது. அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்புபடத்தின் காப்புரிமைTWITTER

மேலும், "அனைத்து பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும், நடத்தும் குடும்பத்திலிருந்து வருபவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். தரம் தாழ்ந்த அரசியலிலோ, பொது வாழ்க்கையில் தரம் குறைந்த தனி மனித விமர்சனங்களிலோ எனக்கு என்றும் விருப்பம் கிடையாது. இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்." என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம், நான் நீக்கிவிட்ட பதிவை பத்திரிகை சகோதரிகளுக்கு மனவருத்தம் ஏற்படுத்திய பதிவை இப்போதும் தொடர்ந்து போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவுசெய்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சில பத்திரிகையாளர் அமைப்புகள் எஸ்வி சேகரைக் கைதுசெய்ய வேண்டுமென காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளன.

https://www.bbc.com/tamil/india-43838425

  • தொடங்கியவர்

ஆபாச கருத்து விவகாரம்: எஸ்.வி. சேகர் வீடு மீது தாக்குதல்

எஸ்.வி.சேகர்படத்தின் காப்புரிமைFACEBOOK/SVE SHEKHER VENKATARAMAN

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பத்திரிகையாளர்கள் பா.ஜ.க. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பத்திரிகையாளர்கள் அவரது வீட்டின் மீதும் கல்லெறிந்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் வைத்தியராம் தெரு முன்பாக பெரும் எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் கூடினர். எஸ்.வி. சேகர் மீதும், தொடர்ந்து ஆபாச கருத்துக்களைத் தெரிவித்துவரும் அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதன் பிறகு, சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தி வீக் இதழின் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் சார்பில் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஒரு சில பத்திரிகையாளர்கள் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டின் முன்பாகக் கூடி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிறகு திடீரென அவரது வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர்.

இதையடுத்து இவர்களை போலீசார் கைது செய்து, பிறகு விடுவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-43843490

  • கருத்துக்கள உறவுகள்

நாகரிக உலகின் பார்வையில்.....ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒருவரின் இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத் தக்கதும், அருவருப்பானதும் ஆகும்!

அவ்வளவு பத்திரிகையாளர்கள் நிற்கும் போது...ஒரு பெண் நிருபரை மட்டும்...கன்னத்தில் தட்டுவது ,,சரியான செயல் அல்ல!

அந்தப் பெண் நிருபரின் முகத்திலேயே.....கவர்னரின் செயலின்...அருவருப்பு இழையோடுவது ..அப்பட்டமாகத் தெரிகின்றது!

இந்தியா போன்ற தேசத்தில்...ஒரு தமிழ் நாட்டுப் பெண்ணால் ,,,கவர்னரை எதிர்த்து...அதிக தூரம் போல இயலாது எனினும்...தமிழ் நாட்டுப் பெண்கள் காட்டும் எதிர்ப்பானது....அவர்கள்..இன்னும் மௌனமாக..இப்படியான் செயல்களைப் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது!

கவர்னரின் பெயரில் மறைந்திருக்கும்....புரோகித் என்ற வார்த்தைக்காக....எஸ்.வி. சேகர்...வக்காலத்து வாங்குகிறார்!

இவர் சாதாரண உடையிலிருக்கும்...ஒரு சுப்பிரமணிய சுவாமி...என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே!

பேராசிரியர் நிர்மலா தேவி....வாழத் தெரிந்தவர்! ஆனால்...களையெடுக்கப் பட வேண்டியவர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18.4.2018 at 11:43 AM, நவீனன் said:

பேத்தி என்று நினைத்து கன்னத்தைத் தட்டினேன்..! மன்னிப்பு கோரிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

“எஸ்.வி.சேகரின் பதிவு அருவருக்கத்தக்கது!” - கனிமொழி காட்டம்

 
 

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகரின் கருத்துக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

 

10 hours ago, நவீனன் said:

எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு

DbODHqRVMAAKgU-.jpg

7 hours ago, நவீனன் said:

ஆபாச கருத்து விவகாரம்: எஸ்.வி. சேகர் வீடு மீது தாக்குதல்

 

  • தொடங்கியவர்

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது விவகாரம்; மதுரை காமராசர் பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்; பேராசிரியர்கள் சிலர் தலைமறைவு

 

 
21makrishcbcid%20office

மதுரையில் சிபிசிஐடி அலுவலகத்தில் 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வரும் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா.   -  படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி தனிப்படையினர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வாணையர் அலுவலகங்களில் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை, நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 9 குழுவாகப் பிரிந்து, அருப்புக்கோட்டை, மதுரையில் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

டிஎஸ்பி கருப்பையா, ஆய்வாளர் சேகர் அடங்கிய குழுவினர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் துணைவேந்தர் பிபி.செல்லதுரை, பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, விசாரணைக்கு தேவையான சில ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டனர்.

 

தீவிர விசாரணை

இந்நிலையில், மதுரை விசுவநாதபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையா மற்றும் பல்கலைக்கழக மூத்த பேராசிரியை ஒருவரையும் போலீஸார் வரவழைத்தனர். இருவரிடமும் டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான குழுவினர், சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக தீவிரமாக விசாரித்தனர். அவர்களிடம் இருந்து சில ஆவணங்களும் பெறப்பட்டன. மேலும் சில முக்கிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.

இதை ஏற்பாடு செய்வதாக பதிவாளர் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் நேற்று மாலை 3 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கு பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

 

உதவி பேராசிரியர் தலைமறைவு

துணைவேந்தர், பதிவாளரை தொடர்ந்து மூத்த பேராசிரியை ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது பல்கலைக்கழக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிபிசிஐடி குழுவினர் கூறும்போது, “நேற்றுதான் நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். அவரிடம் முழுமையான விசாரணை நடத்தினால்தான் முழு விவரங்களையும் பெற முடியும். சம்பந்தப்பட்ட பேராசிரியை பல்கலைக்கழக வளாகத்துக்கு அவ்வப்போது வந்து சென்று இருக்கிறார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரிக்கிறோம். இதுபோன்ற விசாரணைக்கு தேவையான ஆவணங்களை பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்டுள்ளோம்” என்றனர்.

ஆவணம் அடிப்படையில் மூத்த பெண் பேராசிரியை ஒருவரிடமும் விசாரணை நடத்தினோம். பல்கலைக்கழக உதவி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் ஒருவருக்கு நிர்மலாதேவியுடன் தொடர்பு இருப்பதற்கான தகவல் சில ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சில பேராசிரியர்களுடன் நிர்மலாதேவி நல்ல தொடர்பு வைத்துள்ளார். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களையும் விரைவில் பிடித்து விசாரணை நடத்துவோம் என்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23624398.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆடிப்போயிருக்கும் உயர்கல்வி வட்டாரம்; பல்கலை வரை பாயும் பணமும் பாலியல் தொந்தரவும்: பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆதங்கம்; புகார் பெட்டிகள் அமைக்க வலியுறுத்தல்

 

 
MDU-MKU

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்   -  The Hindu

அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேநேரம், நிர்மலாதேவி கூறுவது உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செல்லத்துரைக்கு ஆதரவாக ஒரு குழுவும், எதிராக ஒரு குழுவும் நிர்வாக ரீதியாக செயல்படுகிறது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கங்களும் நிறைய உள்ளன. நிர்மலாதேவியின் விவகாரத்தை பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினையுடன் இணைத்தே பேசுகின்றனர். எதிலும் சம்பந்தப்படாத அலுவலர்கள், நிர்மலாதேவி பிரச்சினையால் பல்கலைக்கழகத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். நிர்மலாதேவிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா எனவும் சிலர் ஆச்சரியப்படுகின்றனர்.

நிர்மலாதேவி தனது ஆடியோ பதிவில் குறிப்பிடும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மோசமாகியுள்ளதா என்பது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரி யும் பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள், அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

பொதுவாக, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் சிறு தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இல்லை என ஒரேயடியாக கூறமுடியாது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் இது பொருந்தும். ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பிஎச்டி டிகிரியை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவது என்பது அந்தந்த மாணவர் சார்ந்த பேராசிரியர்களின் கையில் (வழிகாட்டி) இருக்கிறது.

பிஎச்டி முடிக்க இழுத்தடிப்பு நடக்கிறது. இதை தவிர்க்க சிலர் பணம் வாங்குகின்றனர். மிகச் சிலர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். சாதி ரீதியாக மாணவர்களைக் கையாளும் போக்கும் உள்ளது.

 

பல லட்சம் கைமாறுகிறது

ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட முறையில் வேலை வாங்கும் பேராசிரியர்களும் உண்டு. தற்போது அது குறைவு. சிலர் ரூ.2 லட்சம் முதல் 7 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பிஎச்டி படிப்பை முடித்துக் கொடுக்கும் நிலையும் உள்ளது. காரணம், பல லட்சங்களைக் கொடுத்து பேராசிரியர் பணிக்கு வருபவர்கள், ஆராய்ச்சிப் படிப்புக்கு வரும் மாணவர்களிடம் அதை வசூலித்து ஈடுகட்டிவிடலாம் என கருதுகின்றனர்.

தவிர, உதவித் தொகைக்கான ஆராய்ச்சிப் படிப்புக்கு யுஜிசி தேர்வு எழுதி வருவோருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகைக்கும் சில வழிகாட்டி பேராசிரியர்கள் ஆசைப்படுகின்றனர். இதுபோன்ற தவறுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனாலும், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

படிப்பை முடித்தால் போதும் என்ற எண்ணத்தில், குடும்ப சூழல் கருதி, பாதிக்கப்படுவோர் வெளியில் புகார் தர முன்வருவது இல்லை.

மேலும், இங்கு சிறப்பு விசாரணைக் குழுக்கள் இல்லை. பணம் வசூலிப்பது, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை, பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அளிக்க ஒவ்வொரு துறையிலும் விசாரணை அதிகாரிகளின் பெயர் விவரம், தொடர்பு எண்களை எழுதி வைக்க வேண்டும். ‘உமன் ஃபோரம்’, விஜிலென்ஸ் கமிட்டி உள்ளிட்ட குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

துணைவேந்தராக பிபி.செல்லத்துரை பொறுப்பேற்ற பிறகு சில பணி நியமனம் (ஆசிரியர் அல்லாத) நடந்துள்ளது. இதற்கும், நிர்மலாதேவி விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை.

 

உண்மை வெளிவர வேண்டும்

அலுவலர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் புவனேஸ்வரன், முத்தையா கூறியபோது, ‘‘நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். பின்னணியில் யார் இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’’ என்றனர்.

ஆராய்ச்சி மாணவி ஒருவர் கூறியபோது, ‘‘ஆராய்ச்சி மாணவர்களைப் பொறுத்தவரை அவரவருக்கு பொறுப்பு அவசியம். நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பிஎச்டி முடிக்க வேண்டும். ஆராய்ச்சிப் பிரிவில் நடக்கும் தவறுகளுக்கு, வழிகாட்டி பேராசிரியர்களை மட்டும் குறைகூற முடியாது. இரு பக்கத்திலும் தவறு இருக்கிறது. பல்கலைக்கழக உயர் பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் தவறு செய்தால், அது மாணவர்களையும் தவறு செய்யத் தூண்டும். பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையைப் பொறுத்தவரை, மாணவர் - ஆசிரியை, மாணவி - ஆசிரியர் என்பதால் மட்டும் தவறு நடக்கிறது என சொல்ல முடியாது. ஒரே பாலினத்தவராக இருந்தாலும் பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் - மாணவர் என்ற எல்லையை மீறும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது’’ என்றார்.

பல்கலைக்கழகங்களின் எஸ்எப்ஐ மாணவர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாரதி கூறியதாவது:

நிர்மலாதேவி ஆடியோ குறித்து மாணவ, மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தினோம். இங்கு உள்ள யாருக்கும் அவரைத் தெரியவில்லை. தவிர, இந்த சூழலால் பல்கலைக்கழகத்தின் நிலைமை மோசமாகி, எந்த நிதியும் கிடைக்காத நிலை ஏற்பட்டால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதால் இவ்விஷயத்தை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்தோம். தவிர, யார் மீதும் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கிடைக்காததால், போராட்டத்தில்கூட பல்கலைக்கழக பாரம்பரியத்தை பாதுகாக்கவே கோஷம் எழுப்பினோம். இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க வேண்டும் எனத் தெரிவித்தோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் பொதுவாக சில முரண்பாடுகள் உள்ளன. இதை, நிர்மலாதேவி பிரச்சினையில் இணைக்க சிலர் முயற்சிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அதே சமயம், பல்கலைக்கழகத்தில் எந்த சம்பவம் ஆனாலும் சாதி ரீதியாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை இயக்குநரின் நேரடி உத்தரவின்பேரில் ஒரு பேராசிரியர், மேலும் ஒரு உதவி பேராசிரியர் என 2 பேர் மீது இதுவரை பாலியல் ரீதியிலான புகார்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பாலியல் ரீதியிலான புகார்கள் ஏதும் வெளிவரவில்லை.

நிர்மலாதேவி பிரச்சினையில் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வருகிறது. இது உண்மையா என விசாரணை முடிவில்தான் தெரியும். இதையும் கடந்து நிர்மலாதேவியின் செல்வாக்கு பாய்ந்திருக்க வாய்ப்பு இல்லை.

உயர்கல்வித் துறையில் பிஎச்டி துறையில்தான் அதிக தவறுகள் நடக்கிறது. மாணவர்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வழிகாட்டி பேராசிரியர் திறமையானவரா, நேர்மையானவரா என்று பார்த்தே தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் பணம் கேட்டாலோ, சொந்த வேலையை ஏவினாலோ, பாலியல் சீண்டல் வந்தாலோ தைரியமாக மறுக்க வேண்டும். வரம்பு மீறினால் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். இத்தகைய புகார்களைப் பெறவும், விசாரிப்பதற்கும் ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகப் பிரிவினர் என அனைத்து துறையினரும் இணைந்த குழு அமைக்க வேண்டும். வெளிப்படையாக புகார் பெட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article23624674.ece?homepage=true

  • தொடங்கியவர்

முக நூலில் அவதூறு பதிவு: எஸ்.வி.சேகர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு

 

 
201801082354169266Trustees-nominee-SV-Sh

எஸ்.வி.சேகர் - கோப்புப் படம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்தார். இதில் இடம்பெற்ற கருத்துகள் ஊடகத்துறையில் பணி புரியும் பெண் செய்தியாளர்களை மிகவும் இழிவு படுத்தும் விதமாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்த பெண் பத்திரிகையாளரையும் மிகவும் இழிவுப்படுத்தி எழுதியிருந்தார்.

இதற்கு பெண் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். “கடந்த வியாழக்கிழமை முகநூலில் திருமலை என்பவரின் கருத்தைப் படிக்காமல், தவறுதலாக என் பக்கத்தில் பகிர்ந்துவிட்டேன். சற்று நேரத்தில் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக என் நண்பன் சொன்னதையடுத்து உடனடியாக அப்பதிவு நீக்கப்பட்டு விட்டது.

இந்தச் சம்பவத்தால் மன வருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பெண் பத்திரிகையாளர்களிடமும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். ஆனால் அவரது விளக்கத்தை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர், பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம், திரைப்பட பத்திரிகையாளர் சங்கம், பால்முகவோர் சங்கம் உள்ளிட்ட பலரும் புகார் அளித்தனர்.

எஸ்.வி சேகர் மீது பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் இந்திய தண்டனைச்சட்டம் 504(பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல்), 505(1)(c)(குறிப்பிட்ட சமூகத்திற்கு, தனி மனிதருக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டிவிடுதல்), 509( வலைதளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவிடுதல்) IPC and sec. 4 of Tamilnadu prohibition of women act.( பெண் வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23630442.ece?homepage=true

  • தொடங்கியவர்

அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் 6 மணி நேரம் சிபிசிஐடி சோதனை: முக்கிய ஆவணங்கள், டைரி, புகைப்படங்கள் சிக்கியதாக தகவல்

 

 
22-MA-MANCBCID%20Photo-2%20SP%20Rajeshwa

சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி

அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் நேற்று மாலை சிபிசிஐடி போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. பேராசிரியை வீட்டில் இருந்து சில டைரிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற் றினர்.

கல்லூரி மாணவிகளை பாலி யல்ரீதியாக தவறாக வற்புறுத்தியதாக உதவி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, சிபிசிஐடிக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டு, கடந்த புதன்கிழமை இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.

அதையடுத்து, நேற்று முன்தினம் 5 நாள் காவலில் எடுத்து நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத் தத் திட்டமிட்டு அங்கு சென்றனர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, வீட்டைத் திறந்து காட்டினார். அதையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் 6 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் சில டைரிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று காலை நிர்மலா தேவியிடம் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 2-வது நாளாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மட்டும் தனியாக விசாரணை நடத்தினார்.

நிர்மலா தேவியின் உடல்நிலை குறித்து, மருத்துவக் குழுவினர் நேற்று பரிசோதனை நடத்தினர். மேலும், நிர்மலா தேவிக்கு தேவையான ஆடைகளை அவரது சகோதரர் ரவி நேற்று கொண்டு வந்து கொடுத்தார். அவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

 

வாக்குமூலம் பதிவு

விசாரணையின்போது பேராசிரியை நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதோடு, தனக்கு யார் யாரிடம் எந்த வகையில் தொடர்பு உள் ளது என்பது குறித்து அவர் அளிக் கும் தகவல்களை அடுத்து, குறிப்பிட்ட அந்த நபர்களை பற்றிய தகவல்கள், முகவரி போன்றவை உடனடியாக சேகரிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட நபரிடம் நேரடி யாக விசாரணை நடத்த தனிப்படையையும் எஸ்பி ராஜேஸ்வரி உடனுக்குடன் அனுப்பி வைக் கிறார். 2-வது நாளாக நிர்மலாதேவியி டம் நடத்தப்பட்ட விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

மாணவிகளுக்கு குறுந்தகவல்

இதுகுறித்து சிபிசிஐடி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு நிர்மலா தேவி வழக்கமாக பல குறுந்தகவல்களையும், வாட்ஸ்அப் மூலம் தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இது பல ஆண்டுகளாகவே தொடர்ந்துள்ளது.

கல்லூரி நிர்வாகத்திலும் நிர்மலா தேவிக்கு ஒத்துழைப்பு இருந்துள்ளது. பாலியல்ரீதியாக பேசியதாக ஆடியோ, வாட்ஸ் அப் தகவல்கள் வெளியாவதற்கு முன்பே இவ்விவகாரம் கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிந்துள்ளது.

இதனால், நிர்மலா தேவியின் நடவடிக்கை அங்கு உள்ள சில பேராசிரியர்களுக்கு பிடிக்கவில்லை. அவரைப் பற்றி பலமுறை புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகக் குழு வில் இருந்த குழப்பத்தை நிர்மலா தேவி தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

தற்போது, அவரது செல்போன் தகவல்களைக் கொண்டு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் சிபிசிஐடி தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, கல்லூரி முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் சிலருக்கும் பல்கலைக்கழகத்தில் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மாமனார், கணவரிடம் விசாரணை

விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு பேராசிரியை நிர்மலாதேவியின் மாமனார் பாண்டியன், கணவர் சரவண பாண்டியன் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி முன்னாள் செயலாளர் சவுண்டையா ஆகிய 3 பேரையும் நேற்று இரவு வரவழைத்து சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தீவிர விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் இன்று விசாரணை தொடங்கும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23633914.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.