Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாளில் நிகழ்ந்தவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஏப்ரல் 28 ஆண்டின் 118ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.

1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது

2005 - மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் சிங்கள பேரினவாத அரசால் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்

1919 இந்த தினத்தில் முதல் முதலாக பாரசூட்டிலிருந்து வீரர்கள் குதித்தனர்

1920 - அசர்பைஜான் நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1945 - முசோலினியும் அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது கான் (Mohammed Daoud Khan) கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1996 - அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் [[மார்ட்டின் பிறையன்ட் என்பவன் சகட்டு மேனிக்குச் சுட்டதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ (Dennis Tito) என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.

1922- அலிஸ்டேர் மாக்ளின் பிறந்த தினம்

1937 சதாம் உஸேன் பிறந்த தினம்

1942 இங்கிலாந்து அணியின் வெற்கரமான அணித்தலைவராக இருந்த மைக் ப்ரியர்லி பிறந்த தினம்

1968 ஜிம்பாப்வேயின் சிறந்த க்ரிக்கெட் வீரர் ஆண்டி ப்ளவர் (Andy Flower) பிறந்த தினம்

1942 - தமிழறிஞர் உ. வே. சாமிநாதையர் இறந்த தினம்

1758 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம்

  • Replies 107
  • Views 19.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஏப்ரல் 29 ஆண்டின் 119ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.

2007 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள முத்துராஜவல எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின

1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஜப்பான் - தேசிய நாள்

அனைத்துலக நடன நாள் (International Dance Day)

1945 - இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தது.

1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் நிகந்த சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2005 - 29 வருட முற்றுகையின் பின்னார் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.

1891 - புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்

1957 - மேமன்கவி, ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளி பிறந்த தினம்

1970 - அன்ட்ரே அகாசி (டென்னிஸ் ஆட்டக்காரர் ) பிறந்த தினம்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 30 ஆண்டின் 120ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன

  • 1945 - அடொல்ப் ஹிட்லர் மற்றும் அவரது மனைவி எவா பிரௌன் திருமணம் புரிந்த அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • 1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 1991 - யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர்.
  • 1904 கோர்ன் ஐஸ் கிறீம் பாவனைக்கு வந்தது
  • 1961 - லோங் அடிகள் இறப்பு, யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896)

  • தொடங்கியவர்

மே1 ஆண்டின் 121ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன.

மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்

இத்தாலி - தேசிய நாள் (Giorno dei Lavoratori)

செக் குடியரசு - தேசிய காதல் நாள்

1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1940 - கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டன.

1945 - சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் ரைஷ்டாக் (Reichstag) என்ற இடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

1989 - இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993 - இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

2006 - புவர்ட்டோ றிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.

1925- சைப்பிரஸ் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தப் பட்டது

1961- முதன் முதலாக அமெரிக்க விமானம் கடத்தப் பட்டது கியூபாவுக்கு

  • தொடங்கியவர்

மே 2 ஆண்டின் 122ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

போலந்து - கொடி தினம்

ஈரான் - ஆசிரியர் நாள்

இந்தோனீசியா - தேசிய கல்வி நாள்

1945 - பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

2006 - குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் பலியாயினர்

2 மே 1997 இப்போது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள தடுமாறும் டோனி ப்ளேயர், வெற்றி பெற்று பிரிட்டிஷ் பிரதமரான தினம்

2 மே 1921 புகழ் பெற்ற இயக்குனர் சத்யஜித் ரே பிறந்த தினம்

2 மே 1969 தலை சிறந்த க்ரிக்கெட் வீரர் ப்ரையன் லாரா பிறந்த தினம்

2 மே 1975 தலை சிறந்த ஃபுட்பால் வீரர் டேவிட் பெக்காம் பிறந்தநாள்

2 மே 1519 புகழ் பெற்ற ஓவியர் லியானார் டோ டா வின்சி மறைந்த தினம்

களத்தில் தூயவன் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

மே 3ஆண்டின் 123ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.

உலக ஊடக சுதந்திர நாள் (World Press Freedom Day)

போலந்து - அரசியலமைப்பு நாள் (Constitution Day)

ஜப்பான் - அரசியலமைப்பு நாள்

  • 1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.
  • 1879 - கரவெட்டியில் இந்துக் கோயில் ஒன்றில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர்.
  • 1916 - ஈஸ்டர் எழுச்சித் தலைவர்கள் டப்ளினில் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • 1999 - ஐக்கிய அமெரிக்காவின் ஓக்ளகாமா நகரை சூறாவளி தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.
  • 1939நேத்தாஜி சுபாஷ் போஸ் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்த தினம்
  • 1979 மார்கரெட் தாட்சர் பிரிட்டனின் முதல் பெண் ப்ரதமராக ஆன தினம்
  • 1898 இஸ்ரேலின் பெண் பிரதமர் கோல்டா மேயர் பிறந்த தினம்
  • 2006 ப்ரமோத் மகாஜன் தன் தம்பியால் சுட்டுக்கொல்லப் பட்ட தினம்.
  • 1968 முதல் செயற்கை இருதயம் பொறுத்தப்பட்ட தினம்

யாழ் களத்தில் இன்று தமிழ்தளிர் பிறந்தநாள் கொண்டாடுகிறார் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

மே 4 ஆண்டின் 124ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன.

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day)

நெதர்லாந்து - இறந்தவர்கள் நினைவு நாள்

சீனா - இளைஞர் நாள் ( மே 4 இயக்கம் நினைவு)

  • 1494 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
  • 1799 - திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
  • 1886 - ஹேமார்க்கெட் கலகம்: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவதுறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1930 - பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1973 - சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது.
  • 1979 - மார்கரட் தட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
  • 1994 - இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

  • தொடங்கியவர்

மே 5 ஆண்டின் 125ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன.

அனைத்து நாடுகள் மருத்துவச்சிகள் நாள் (International Midwives Day)

அல்பேனியா - மாவீரர் நாள்

டென்மார்க் - விடுதலை நாள் (1945)

எதியோப்பியா - விடுதலை நாள் (1941)

நெதர்லாந்து - விடுதலை நாள் (1945).

தென் கொரியா - சிறுவர் நாள்

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

  • 1936 - எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியத் துருப்புகள் கைப்பற்றினர்.
  • 1944 மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
  • 1955 - மேற்கு ஜேர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
  • 1981 - ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.
  • 1991 - ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செயதுகொண்டார்.
  • 1821 - நெப்போலியன் பொனபாட் இறப்பு, பிரெஞ்சு மன்னன்
  • 1948 - புதுமைப்பித்தன் இறப்பு, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
  • 1981 - பொபி சான்ட்ஸ் இறப்பு, ஐரிஷ் புரட்சியாளர்
  • 2006 - நெளஷத் அலி இறப்பு, இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்
  • 1818 - கார்ல் மார்க்ஸ் பிறந்தார், ஜெர்மனிய மெய்யியலாளர்

  • தொடங்கியவர்

மே 6 ஆண்டின் 126ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.

1542 - பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்

1733 முதல் சர்வதேச குத்துச் சண்டை போட்டி (Bob Whittaker beats Tito di Carni ).

1840 முதல் தபால் முத்திரையை பிரித்தாபியா வெளியிட்டது

1889 - ஈபெல் கோபுரம் திறந்துவிடப்பட்டது.

1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது

1861 - மோதிலால் நேரு பிறப்பு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931)

1953 - டோனி ப்ளேர் பிறப்பு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

  • தொடங்கியவர்

மே 7 ஆண்டின் 127ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன.

ரஷ்யா, பல்கேரியா - வானொலி நாள்

நோர்வே - தேசிய நாள்

1895 - ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை செயின்ட் பீற்றட்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1915 - லூசித்தானியா என்ற கப்பலை ஜெர்மனிய நாசகார நீர்மூழ்கிக் கப்பல் 1,198 பயணிகளுடன் மூழ்கடித்தது.

1954 - வியட்நாமில் தியன்பியன்பு (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

1980 - Paul Geidel 68 ஆண்டுகள், 245 நாட்கள் சிறைவாசத்தின்பின் விடுதலையானார்.

1861 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தார், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர்

1539 - குரு நானக் இறப்பு, சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர்

  • தொடங்கியவர்

மே 8 ஆண்டின் 128ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.

உலக செஞ்சிலுவை நாள்

தென் கொரியா - பெற்றோர் நாள்

1886 - ஜோன் பெம்பர்ட்டன் பின்னர் கொக்கா கோலா எனப் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.

1902 - கரிபியன் நாடான மார்ட்டீனிக்கில் பெலீ மலை தீக்கக்கியதில் 30,000 பேர் மாண்டனர்.

1933 - மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சிக்கெதிராக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1984 - லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1945 - ஜெர்மனி நிபந்தனை இன்றிச் சரணடைந்தது

1916 - சுவாமி சின்மயானந்தாபிறந்ததினம், இந்திய ஆன்மிகவாதி

1951 - ஈழத்துப் புலவர் மு. நல்லதம்பி இறந்த தினம்,

1911 - ஐஸ்லாந்து தேசத்தில் பெண்களுக்கு முதல் முதலாக ஓட்டுரிமை கொடுத்த நாள்

1970 - மைக்கேல் பெவன் ஆஸ்திரேலிய க்ரிக்கெட் வீரர் பிறந்தார்

1961- கடல் தண்ணீரை குடி நீராக்கும் முதல் திட்டம் அமெரிக்காவில் இன்று தொடங்கியது

  • தொடங்கியவர்

மே 9ஆண்டின் 129ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன

  • ரஷ்யா - வெற்றி நாள்

  • ஆர்மேனியா - வெற்றி நாள்
  • ஐரோப்பிய ஒன்றியம் - ஐரோப்பிய நாள்

  • 1502 - கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஆரம்பித்தார்.
  • 1901 - அவுஸ்திரேலியாவின் முதலாவது பாராளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.
  • 1927 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
  • 1933 - மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
  • 1988 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
  • 1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார்.
  • 2004 - செச்னியா அதிபர் அகமது காதீரொவ் (Akhmad Kadyrov) கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்

  • தொடங்கியவர்

மே 10 ஆண்டின் 130ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.

  • ஐக்கிய அமெரிக்கா - வானியல் நாள்
  • ஹங்கேரி - பறவைகள் மற்றும் மரங்களின் நாள் (Birds' and Trees' Day)
  • இசுரேல் - தேசிய விடுமுறை
  • தென் கொரியா - பெற்றோர் நாள்

  • 1857 - இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிரான முதலாவது சுதந்திரப் போர் ஆரம்பித்தது.
  • 1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
  • 1940 - வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
  • 1997 - ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.
  • 2007 - டொனி பிளையர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

  • தொடங்கியவர்

மே 11 ஆண்டின் 131ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன

  • 1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
  • 1928 - முதலாவது தொலைக்காட்சி சேவை நியூ யோர்க்கில் ஆரம்பமானது.
  • 1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது.
  • 1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
  • 1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி காரி காஸ்பரவைத் தோற்கடித்தது.
  • 1998 - இந்தியா போஹரனில் (Pohran) மூன்று அணுச் சோதனையை நடாத்தியது.
  • 1997 Deep Blue என்கிற கணினி உலக சாம்பியனான கேரி காஸ்பரோவைத் தோற்கடித்த தினம்
  • 1895 தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே.) பிறந்த தினம்
  • 1960 ஜான் டி ராக்ஃபெல்லர் மறைந்த தினம்
  • 1949 முதல் போலராய்ட் காமெரா விற்பனைக்கு வந்த தினம்

  • தொடங்கியவர்

மே 12ஆண்டின் 132ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன.

  • உலக செவிலியர் நாள்


  • 1828 ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்
  • 1656 - ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர்.
  • 1942 - 1,500 யூதர்கள் போலந்தில் Auschwitz என்னும் இடத்தில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
  • 1965 - சோவியத் நாட்டின் விண்கலம் லூனா சந்திரனில் மோதியது.
  • 1982 - போர்த்துகலில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது
  • 1908 -ஒயரலஸ் ரேடியோ இன்றுதான் முதல் முதலில், நாதன் பி ஸ்டப்பில்ட் (Nathan B Stubblefield)என்பவரால்,ஓலிப்பு துவங்கப்பட்டது.

  • தொடங்கியவர்

மே 13 ஆண்டின் 133ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.

  • 1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
  • 1765 - யாழ்ப்பாணத்தின் கொமாண்டராக அந்தனி மூயார்ட் (Anthony Mooyaarrt) நியமிக்கப்பட்டான்.
  • 1830- ஈக்வடார் நாடு சுதந்திரம் அடைந்த தினம்
  • 1952 - ராஜ்ய சபை, இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
  • 1981 - ரோமில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
  • 2006 - திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
  • 1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
  • 2006 - அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்தனர்
  • 1918 -நாட்டிய மேதை பால சரஸ்வதி பிறந்த நாள்
  • 1958 -வெல்க்ரோ (velcro) அறிமுகமான தினம்
  • 1890 -எலக்ட்ரிக் ஜெனரேடர் அறிமுகமான தினம்

  • தொடங்கியவர்

மே 14 ஆண்டின் 134ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.

  • 1796 - அம்மை நோய்க்கான (smallpox) தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
  • 1811 - ஸ்பெயினிடம் இருந்து பரகுவாய் விடுதலை அடைந்த்து.
  • 1900 - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
  • 1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
  • 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது.
  • 1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.
  • 1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
  • 1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

  • 1973 Skylab என்கிற விண்வெளிக் கலத்தை அமெரிக்கா விண்ணில் செலுத்திய நாள்
  • 1878 வாசலைன் (vaseline) அறிமுகப்படுத்தப் பட்ட தினம்
  • 1850 முதல் dish washer அறிமுகமான தினம்
  • 1796 எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கெதிரான vaccination அறிமுகப்படுத்திய தினம்
  • 1686 கேப்ரியல் டேனியல் ஃபாரன்ஹைட் என்ற தெர்மாமீட்டர் கண்டு பிடித்த விஞ்ஞானி பிறந்த நாள்
  • 1948 சமீபத்தில் மரணமடைந்த பாப் உல்மர் முன்னாள் க்ரிக்கெட் வீரர்/க்ரிக்கெட் பயிற்சியாளர் பிறந்த தினம்
  • 1908 முதல் பயணிகள் விமானம் பறந்த தினம்

Edited by வானவில்

  • தொடங்கியவர்

மே 15 ஆண்டின் 135ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.

  • உலகக் குடும்ப நாள்

  • மெக்சிகோ - ஆசிரியர் நாள்
  • தென் கொரியா - ஆசிரியர் நாள்


  • 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
  • 1718 - லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கிள் (James Puckle) உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார்.
  • 1851 - நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
  • 1915 - இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • 1932 - ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.
  • 1940 - மக்டொனால்ட்ஸ் உணவகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1985 - நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1991 - Edith Cresson பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்
  • 2005 - திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
  • 2006 - வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1978 - டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது

Edited by வானவில்

  • தொடங்கியவர்

மே 16 ஆண்டின் 136ஆவது நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.

மலேசியா - ஆசிரியர் நாள்

1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.

1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மான் (Theodore Maiman) முதலாவது ஒளிக்கதிர் லேசரை இயக்கினார்.

1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1975 - சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1975 - Junko Tabei எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

2004 - 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

  • தொடங்கியவர்

மே 17 ஆண்டின் 137ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.

  • உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
  • நோர்வே - அரசியல் நிர்ணய நாள்

  • 1498 - வாஸ்கொடகாமா கள்ளிக்கோட்டையை அடைந்தார்.
  • 1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
  • 1846 - அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்ஸபோன் வடிவமைக்கப்பட்டது.
  • 1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ( International Telegraph Union) ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் (International Telecommunication Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்சை ஆக்கிரமித்தது.
  • 1983 - லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படையினரின் வெளியேற்றத்துக்கான உடன்பாட்டில் லெபனான், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியன கைச்சாத்திட்டன.
  • 2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

  • தொடங்கியவர்

மே 18 ஆண்டின் 138ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும்

227 நாட்கள் உள்ளன

1984 - அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

  • 1765 - கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
  • 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1974 - இந்தியா தனது முதலாவது அணுக்குண்டுப் பரிசோதனையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • 1991 - ஹெலன் ஷார்மன் (Helen Sharman) விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1048 - ஒமார் கையாம் (Omar Khayyám) பிறந்தார், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர்
  • 1920 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II பிறந்தார்
  • 1913 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் பிறந்தார்

  • தொடங்கியவர்

மே 19 ஆண்டின் 139ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.


  • பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
  • உக்ரேன் - அறிவியல் நாள்

  • 1604 - மொன்ட்றியால் நகரம் தாபிக்கப்பட்டது.
  • 1978 - விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
  • 1882 - மொஹம்மது மொஸாடெக் பிறப்பு, ஈரானியத் தேசிய இயக்கத்தின் தலைவர்
  • 1890 - ஹோ ஷி மின் பிறப்பு, வியட்நாமியத் தலைவர்
  • 1925 - பொல் பொட் பிறப்பு, கம்போடிய சர்வாதிகாரி

  • தொடங்கியவர்

மே 20 ஆண்டின் 140ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன

  • 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1293- ஜப்பான் கமகுராவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்
  • 1570 - உலகின் முதலாவது நவீன வரைபடத்தை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
  • 1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
  • 1869 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை (telegraph line) பூர்த்தியடைந்தது.
  • 1830-முதல் தடவையாக புகையிரத நேர அட்டவனை பத்திரிகையில் பிரசுரமானது (Baltimore American)
  • 1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது.
  • 2002 - கிழக்குத் திமோர் இந்தோனீசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
  • 1948- முதல் தடவையாக இஸ்ரேல் தனது வான் படையை தாக்குதலில் ஈடுபடுத்தி வெற்றி பெத்றது(சிரியாவுக்கு எதிராக)

  • தொடங்கியவர்

மே 21 ஆண்டின் 141ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன

1904 - பாரிசில் அனைத்து நாடுகள் உதைபந்தாட்ட சம்மேளனம் (Fédération Internationale de Football Association - FIFA) ஆரம்பிக்கப்பட்டது.

1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்ட்டார்.

1996 - தான்சானியாவில் MV Bukoba என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1998 - 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.

2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1994 -சுஸ்மிதா சென் 43ஆவது அகில அழகியாகா தெரிவானார்

1840 - நியூசிலாந்து பிரிட்டிஷ் காலணித்துவ நாடகியது

1916 - பிரித்தானியாவில் முதன்முதலில் கோடைகால நேரமாற்றம் அமுலானது

1964- முதன் முதலாக அணுசக்தியிலிருந்து வெளிச்சவீடு இயக்கப்பட்டது(Chesapeake Bay)

கிமு 427 - கிரேக்கத் தத்துவவியலாளர் பிளாட்டோ பிறந்த தினம்

  • தொடங்கியவர்

மே 22 ஆண்டின் 142ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

World Biodiversity Day

யேமன் - தேசிய நாள்

  • 1840 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானிய சிறைக்கைதிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
  • 1915 - ஸ்கொட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டு 246 பேர் காயமடைந்தனர்.
  • 1958- இலங்கை இனக்கலவரம் - இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1960 - தெற்கு சிலியில் 9.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
  • 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
  • 1990 - வடக்கு மற்றும் தெற்கு யேமன் ஒன்றாகி யேமன் குடியரசு ஆகியது.
  • 1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
  • 1927 - சீனாவின் Xining என்ற பகுதியை தாக்கிய நிலநடுக்கம் சுமார் 2 லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.

  • 2001 - ஷெர்பா இனத்தைச் சேர்ந்த இளைஞர் டெம்போ ஹேரி மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட்டைத் தொட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.