Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை -– இந்­திய ஒப்­பந்தம் இன்று உயிர்ப்­புடன் இல்லை: புலி­களை முதன்­மைப்­ப­டுத்­தவே இந்­தியா அன்று விரும்­பி­யது என்­கிறார் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள்

Featured Replies

இலங்கை -– இந்­திய ஒப்­பந்தம் இன்று உயிர்ப்­புடன் இல்லை: புலி­களை முதன்­மைப்­ப­டுத்­தவே இந்­தியா அன்று விரும்­பி­யது என்­கிறார் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள்

05-34ae255c8f24ec2898d090db9370911a6b77cc28.jpg

 

(ஆர்.யசி)

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட இலங்கை –இந்­திய ஒப் பந்தம் இன்று உயிர்ப்­புடன் இல்லை. அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இந்­தி­யா­விற்கும்  தமிழர் தரப்­பி­ன­ருக்கும் எந்த அக்­க­றையும் இல்லை. ஆகவே இந்த ஒப்­பந்­தத்தை மீள ஆய்வு செய்ய வேண்­டி­யுள்­ளது என்று வடக்­கு-­கி­ழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் அண்­ணா­மலை வர­த­ரா­ஜ­பெ­ருமாள் தெரி­வித்தார்.  

ஆயுதம் இல்­லாத சூழலை உரு­வாக்க முழு முயற்­சி­யுடன் செயற்­பட்ட இந்­தியா ஏன் தமிழர் தீர்வு விட­யத்தில் முழு முயற்­சி­யுடன் செயற்­ப­ட­வில்லை. அதி­காராம் மிக்க மாகாண சபையை உரு­வாக்க அவர்கள் ஏன் முன்­வ­ர­வில்லை எனவும் அவர் கேள்வி எழுப்­பினர்.

இந்­திய பத்­தி­ரிக்­கை­யாளர் தி.ராம­கி­ருஷ்ணன் எழு­திய "ஓர் இனப்­பி­ரச்­சி­னையும் ஓர் ஒப்­பந்­தமும் " நூல் வெளி­யீட்டு விழா நேற்று முன்­தினம் மாலை கொழும்பு வெள்­ள­வத்தை தமிழ் சங்­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

இலங்கை இந்­திய ஒப்­பந்தம் என்­ன­வா­னது? வெற்றி பெற்­றுள்­ளதா அல்­லது தோல்­வியில் முடிந்­ததா? என்ற கார­ணி­களை சிந்­தித்து பார்க்க வேண்டும். அதேபோல் இலங்கை -இந்­திய ஒப்­பந்­தத்தை விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் ஏற்­க­வில்லை என்றே பலரும் நினைக்­கின்­றனர். அதனை ஏற்­க­வில்லை என்­பது அதற்கு முன்­ன­ரான நீண்­ட­கால செயற்­பா­டு­க­ளுடன் தொட­ரப்­பட்டு இருந்­தாலும் பிர­பா­கரன் இந்த ஒப்­பந்­தத்தை டெல்­லியில் ஏற்­றுக்­கொண்டார். விரும்­பினார் விரும்­ப­வில்லை என்­ப­தற்கு அப்பால் ஒரு பெரிய நாடு எம்­மீது திணிக்­கின்­றது. தீர்­வுகள் குறித்து இந்­தியா ஒரு பொறுப்­பினை எடுத்­துக்­கொண்­டுள்­ளது. ஆகவே அதனை நிரா­க­ரிக்க முடி­யாது என்­பதும் நிரூ­பிக்­கப்­ப­டு­கின்­றது.

1987 ஜூலை மாதம் இலங்கை -இந்­திய ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 1988 ஆம் ஆண்டு செப்­டெம்பர் வரையில் தொடர்ச்­சி­யாக புலிகள் மாகாண சபை முறை­மையை ஏற்க வேண்டும் அத­னூ­டாக அவர்­களை தேர்­தலில் பங்­கு­பற்றும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து தற்­கா­லிக நிர்­வா­கத்­தை­யேனும் உரு­வாக்க இந்­தியா பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்­தது. அதற்கு புலி­களின் ஆத­ர­வாளர் சமூகம் அந்த நம்­பி­கை­யினை இந்­தி­யா­விற்கு கொடுத்­தி­ருந்­தனர். எனினும் முயற்­சிகள் வெற்றி பெற­வில்லை. அந்த நம்­பிக்கை இழக்­கப்­பட்ட பின்னர் மாற்று வழி­மு­றை­யினை இந்­தியா தேடி­யது. அது­வ­ரையில் இலங்­கையில் வடக்கில் விடு­தலைப் புலிகள் என்ற இயக்கம் மட்­டுமே இந்­தி­யாவின் கண்­க­ளுக்கு தெரிந்­தி­ருந்­தது.

தழிழர் ஐக்­கிய விடு­தலை முன்­ன­ணியின் நோக்கம்

மேலும் இந்த ஒப்­பந்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­னணி அக்­க­றை­யுடன் செயற்­பட்­டது. கட்­சியின் தலைவர் அமிர்­த­லிங்கம் அவர்கள் பல்­வேறு சாதகக் கருத்­துக்­களை அப்­போது வெளி­யிட்டார். மாகாண சபைத் தேர்­தலில் பங்­கு­பற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­ன­ணி­யிடம் இருந்து இறுதி நேரத்தில் ஏன் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது என்­பது இன்­று­வரை எனக்குத் தெரி­யாது.

நான் முதல்­வ­ரா­னது ஒரு விபத்து

அதேபோல் நான் வட­கி­ழக்கு முதல்வர் ஆனதும் ஒரு விபத்து. வர­லாறு சுமத்­திய சுமை­யா­கவே அதை நான் கரு­து­கின்றேன். முதல்­வ­ராகும் நோக்கம் எனக்கு இருக்­க­வில்லை. இந்­தி­யா­விற்கு அவ்­வா­றான ஒரு தெரிவும் இருக்­க­வில்லை. இந்­தி­யாவைப் பொறுத்த வரையில் விடு­தலைப் புலிகள் இயக்­கமே முதன்­மை­யாக தென்­பட்­டது. அதுவும் நீண்­ட­கால தெரிவும் அல்ல. இடைக்­கால தேவை­யாக அவர்கள் புலி­களை பயன்­ப­டுத்த பார்த்­தனர். ஜன­நா­யக ரீதியில் கருத்­துக்­களை கொண்டு செல்ல தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­ன­ணிதான் சரி­யான தெரிவு என்­பது தான் முன்னாள் பாரத பிர­தமர் இந்­தி­ரா­காந்தி உள்­ளிட்ட தலை­மை­களின் தெரி­வாக இருந்­தது. அவ்­வாறு நம்­பி­கை­யி­ருந்தும் நிலை­மைகள் மாற்றம் பெற என்ன காரணம் என்­பதை தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­ன­ணி­யினர் தான் தெரி­விக்க வேண்டும்.

இந்­திய அமை­தி­காக்கும் படையின் தோல்வி

அதேபோல் இந்­திய அமைதி காக்கும் படையின் நகர்­வுகள் தோல்­வியில் முடிந்­தது. இது குறித்து 1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் தான் இந்­தி­யா­விற்கு தெளி­வான சிந்­தனை ஒன்று எழுந்­தது. இலங்கை தமிழர் பிரச்­சினை என்றால் என்ன என்­பதும் அப்­போ­தைய பிர­தமர் ராஜீவ்­காந்­திக்கு அன்­றைய காலத்தில் தான் தெரிய வந்­தது. அது­வரை ராஜீவ் காந்­திக்கு இலங்கை விட­யங்கள் முழு­மை­யாக தெரி­ய­வில்லை.

அதேபோல் இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் நான்கு அமைப்­புகள் நெருங்­கிய தொடர்­பு­களை கொண்­டி­ருந்­தன. இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சு, இந்­திய இரா­ணுவம், இந்­திய புல­னாய்வு துறை, இந்­திய ரோ அமைப்பு ஆகிய நான்­குமே நெருங்­கிய தொடர்பில் இருந்­தன. ஆகவே இலங்கை விட­யத்தில் நான்கு இந்­தி­யாக்கள் செயற்­பட்­டன என்­பதே உண்­மை­யாகும்.

எங்­களை அசைக்க முடி­யாது என நினைத்த ஒரு காலமும் உள்­ளது.

இலங்­கையில் சகல இயக்­கங்­களும் ஒன்­றோடு ஒன்று கைகோர்த்து எங்­களை அசைக்க முடி­யாது என நினைத்த ஒரு காலமும் உள்­ளது. அந்த காலத்தில் நாங்கள் கூறிக்­கொண்ட ஒரு விட­யமே இந்­தியா அவ­சர தீர்­மா­னங்­களை எங்கள் மீது திணிக்க முற்­ப­டு­கின்­றது என்­ப­தாகும். அதேபோல் இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் இந்­தி­யா­விற்கு இருந்த குழப்பம், தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் எவ்­வா­றான வழி­மு­றை­யினை கையாள்­வது என்ற குழப்பம், இவ்­வா­றான எண்­ணங்கள் இந்­தி­யா­விடம் இருந்­தது. இந்த கார­ணி­களே இந்­திய அமை­தி­காக்கும் படையின் தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­தது. அவ்­வ­ளவு உயிர்­கா­வு­க­ளுக்கு பின்னர் ஒன்­றையும் சாதிக்­காது போய்­விட்­டனர் என்று கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் இந்­தியா எத­னையும் சாதிக்­க­வில்­லையா? என்ற கேள்­வியும் எழத்தான் செய்­கின்­றது. தமி­ழர்கள் சாதிக்­க­வில்லை என கூறலாம். ஆனால் இந்­தியா தனது நல­னுக்­காக முன்­னெ­டுத்த பலனை அடை­ய­வில்­லையா என்ற கேள்­வியை கேட்டால் மட்­டுமே ஒப்­பந்தம் தோற்­றதா அல்­லது இந்­திய அமை­தி­காக்கும் படை தோற்­றதா என்ற கேள்­வி­க­ளுக்­கெல்லாம் பதில் கிடக்கும்.

அதேபோல் இந்­தி­யாவின் முயற்­சியை நாம் தோற்­க­டித்­த­தாக இலங்­கையின் இரா­ணுவ தலை­மைகள், அர­சியல் தலை­மைகள் மார்­தட்­டிக்­கொள்ளும் அதே நிலையில் சில உண்­மை­க­ளையும் அவர்கள் வாயி­னா­லேயே ஒப்­புக்­கொண்­டுள்ளார். இந்­திய அமை­தி­காக்கும் படை­யினர் 350 ஆக கொண்­டு­வந்த விடு­தலைப் புலி­களை இலங்கை ஜனா­தி­பதி பிரே­ம­தாஸா 8 ஆயி­ர­மாக உரு­வாக்­கி­விட்டார் என்ற குற்­றச்­சாட்டும் இலங்கை தரப்­பி­னா­லேயே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே 1990 ஆம் ஆண்­டுக்கு பின்னர் இருந்த விடு­தலைப் புலிகள் இந்­திய அர­சாங்­கத்­தினால் வளர்த்­து­வி­டப்­பட்­ட­வர்­களா அல்­லது இலங்கை அர­சாங்­கத்­தினால் வளர்த்­து­வி­டப்­பட்­ட­வர்­களா என்ற கேள்வி எழு­கின்­றது.

ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தினால் வளர்த்­து­வி­டப்­பட்ட புலி­க­ளையே இலங்கை அர­சாங்கம் தோற்­க­டித்­ததே தவிர இந்­தி­யா­வினால் வளர்த்­து­வி­டப்­பட்ட புலிகள் அப்­போதே தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டனர். அதேபோல் இலங்கை இந்­திய ஒப்­பந்தம் அன்று இருந்த நிலை­மை­யி­லேயே இன்றும் இல்லை. ஒரே கண்­ணோட்­டத்தில் அதனை பார்க்க இய­லாது. இந்த ஒப்­பந்தம் வரும் வேளையில் உல­க­ம­ய­மாக இருக்­க­வில்லை. அன்று உலகம் இரண்டு முகாம்­க­ளுக்குள் இருந்­தது. இந்­தி­யாவும் இரண்டு முகாம்­களின் பங்­கா­ளி­யாக இருந்­தது. இந்­தியா சோவியத் யூனி­யனின் நண்­ப­னாக இருந்­தது. ஆகவே இவற்­றையும் கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

இலங்­கையில் இந்­திய, சீன போட்டி

அதேபோல் இலங்­கையில் இந்­தி­யா­வி­னதும், சீனா­வி­னதும் இரா­ணுவ போராட்டம் ஒன்று இடம்­பெற்று வரு­வ­தாக கூறி அதில் இந்­தி­யாவின் ஆதிக்­கத்தை தக்­க­வைக்க தமிழர் துணை­போ­வார்கள் என்றும், அதற்கு இந்த ஒப்­பந்தம் பல­ம­டைய வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­படும் என்று கட்­டுக்­க­தை­களை கூறு­கின்­றனர். இது முழு­மை­யாக தவ­றா­னதும் பொய்­யான கருத்­தாகும். இந்­தியா -சீனா­விற்கு இடையில் இடம்­பெ­று­வது பொரு­ளா­தார போர். அதில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த நன்­மை­யையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. ஆகவே எம்மை பற்­றிய மித­மிஞ்­சிய நினைப்பை விடுத்தால் மட்­டுமே இந்த ஒப்­பந்­தங்கள் சாத்­தி­ய­மாகும்.

ஒப்­பந்­தத்தின் மூன்று கட்­டங்கள்

மேலும் இலங்கை இந்­திய ஒப்­பந்தம் மூன்று கட்­டங்­க­ளாக இடம்­பெற்­றது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1984 ஆம் ஆண்­டு­களில் பார்த்­த­சா­ர­தியின் ஈடு­பாட்டில் தமிழர் ஐக்­கிய விடு­தலை கூட்­ட­ணிக்கும் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் இடையில் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. 1985 இல் திம்பு பேச்­சு­வார்த்தை (இது பேச்­சு­வார்த்தை அல்ல) இதில் நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. சம்­பந்­த­னு­டனும், அமிர்த்­த­லிங்­கத்­தி­டமும் இந்­தியா பேசி­யது. 1986 ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. போராட்ட இயக்­கங்­க­ளுடன் எந்த தொடர்­பி­னையும் இந்­தியா கொண்­டி­ருக்­க­வில்லை. அதன் பின்னர் சார்க் மாநாட்­டுக்கு புலி­க­ளுக்கு மட்­டுமே அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

பிர­பா­க­ர­னுக்கு மட்­டுமே ரோவுடன் தொடர்பு

இந்­திய ரோ அமைப்­புடன் உற­வு­களை வைத்­தி­ருந்­தது விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மட்­டுமே. அந்த இயக்­கத்தில் வேறு எவரும் ரோவுடன் தொடர்­பு­களை வைத்­தி­ருக்­க­வில்லை. சிலர் மீது பொய்­யான குற்­றங்­களை சுமத்தி புலிகள் தப்­பிக்­கவே கட்­டுக்­க­தைகள் பரப்­பி­வி­டப்­பட்­டது. இறு­தி­வரை இந்­தியா புலி­களை வைத்­து­கொண்டு முயற்­சி­களை எடுத்தும் முயற்­சிகள் வெற்­றி­பெ­ற­வில்லை. இந்­நி­லையில் 1989ஆம் ஆண்டு தேர்­தலில் ராஜீவ்­காந்தி தோற்றார். அந்தத் தேர்­தலில் அவர் வெற்றி பெற்­றி­ருந்தால் இலங்­கையின் சரித்­திரம் வேறு ஒன்­றாக அமைந்­தி­ருக்கும். இந்த இணைந்த மாகாண சபை தொடர்ந்­தி­ருக்கும். நிலை­மைகள் மாற்றம் பெற்­றி­ருக்கும். ஆனால் இந்­திய அமை­திப்­படை முழு­மை­யாக வெளி­யே­றி­யி­ருக்­காது. ஆனால் ராஜீவ்­காந்தி என்ற ஒரு தலை­வரே தமிழர் விவ­கா­ரத்தில் அக்­க­றை­யுடன் செயற்­பட ஒரே தலை­வ­ராவார். ஆனால் இலங்கை பிரி­வதை இந்­திய அர­சாங்கம் எப்­போ­துமே விரும்­ப­வில்லை. அதற்கு அனு­ம­திக்­கவும் இல்லை. இலங்கை பிரி­வ­தற்கு இட­ம­ளிக்க தயா­ரா­கவும் இல்லை. அதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் பலமும்.

இந்­திய அர­சாங்கம் தனது கட­மையை தவ­ற­விட்­டது.

இவ்­வா­றான நிலை­மை­களின் மத்­தியில் இலங்கை இந்­திய ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது. இதில் மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கார பகிர்வு வரை­யப்­படும் என்றே ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது. ஆனால் அந்த வரை­தலில் இந்­தியா நேர­டி­யாக தலை­யிட்­டதா என்­பது சந்­தே­கமே. அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். தனது சட்ட ஆலோ­சகர் மூல­மாக செயற்­பட்டே இதனை உரு­வாக்­கி­யி­ருந்தார். இதில் இந்­திய அர­சாங்கம் தனது கட­மையை தவ­ற­விட்­டி­ருந்­தது.

13ஐ ஏற்­றுக்­கொள்ள மறுத்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி அதன் மூல­மாக வந்த மாகாண சபையை ஏற்­றுக்­கொள்­கின்­றது. அதேபோல் சமஷ்டி தான் தீர்வு என கூறும் விக்­கி­னேஸ்­வ­ரனும் அதனை ஏற்­றுக்­கொள்­கின்றார். ஆகவே 13ஆம் திருத்தம் இருக்க வேண்­டுமா என்­பது எம்­மத்­தியில் எழுப்­பப்­ப­ட­வேண்­டிய கேள்­வி­யாகும். 13ஆம் திருத்தம் எந்­த­ளவு அவ­சியம் என்­பது குறித்த சட்ட அறிஞர் மத்­தியில் விவா­திக்­கப்­பட வேண்டும். பொலிஸ் மற்றும் நில அதி­கா­ரங்கள் குறித்தும் ஆராய வேண்டும். நாங்கள் இன்­னமும் சரி­யாக நக­ர­வில்லை.

வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன் சட்டம் தெரிந்த, நீதி­ய­ர­ச­ராக செயற்­பட்ட ஒருவர். மாகாண அதி­கா­ரங்­களை கையில் எடுக்­க­வில்லை. வழக்­கு­களை போட்டு மத்­திய அர­சாங்­கத்­துடன் சவா­லாக செயற்­ப­டுவார், எமது பிரச்­சி­னை­களை நீதி­மன்றம் வரையில் கொண்டு செல்­வார்கள் என நினைத்தோம். ஆனால் இன்­று­வரை அது நடை­பெ­றவே இல்லை. நாம் போரா­டவே இல்லை. ஆகவே தமிழ் தலை­மைகள் தங்­களை மீண்டும் மறு பரி­சீ­லனை செய்­ய­வேண்டும். மேலும் இந்­தியா ஏன் இந்த ஒப்­பந்­தத்தை கொண்­டு­வந்­தது? தமிழர்களுக்காகவா? இல்லை. ஆயுதம் இல்லாத சூழலை உருவாக்க முழு முயற்சியுடன் செயற்பட்ட இந்தியா ஏன் தமிழர் தீர்வு விடயத்தில் முழு முயற்சியுடன் செயற்படவில்லை.

அதிகாராம் மிக்க மாகாண சபையை உருவாக்க அவர்கள் ஏன் முன்வரவில்லை. இன்றைக்கும் அதில் அக்கறை காட்டுவதாக இல்லை. ஆகவே இவை காலம் கடந்து போன விடயங்களாகும். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்று உயிர்ப்புடன் இல்லை என்பதே எனது கருத்தாகும். ஆகவே இந்த ஒப்பந்தத்தை மீள ஆய்வு செய்ய வேண்டியது இலங்கை தமிழர்களாகிய நாங்களே. அன்று ஒப்பந்தம் வந்தபோது மலையக தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் தமிழர் என்ற வரைவிலக்கணத்தில் இருந்தார்கள். இன்று அது இல்லை. மலையக தமிழர்கள் எவ்வாறு இந்தியாவிற்கு போனார்களோ அதேபோல் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பாதிப்பேர் இந்த நாட்டில் இல்லை. ஆகவே இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தமிழர் தலைமைகள் தாயாராக உள்ளனவா? இந்தியா தயாராக உள்ளதா? என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் தெரியவில்லை. மேலும் அரசாங்கம் எதையாவது தரும், அதனை எதிர்ப்பது எமது நிலைப்பாடு என்றதே எமது நோய். ஆனால் எமக்கு என்ன வேண்டும் என்றதை நாம் கூறமாட்டோம். இதுவே இன்றுவரை எமது நோயாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-26#page-1

"அலுசேஷன் குலைச்சு முடிய பொக்கற் Dog குலைக்குது".

இனிப்பாருங்கோ  ஊர் நாய்கள் எல்லாம் எஜமானுக்காக குலைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி நாயை விரும்பியதே தவிர புலியைஅல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.