Jump to content

ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில்


Recommended Posts

பதியப்பட்டது

ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில்


 

 

one-minute-story

 

சேகரின் பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்த செய்தியைக்கேள்விப்பட்டு , அவனைப்பார்க்கச்சென்றேன்.

" வா சரவணா... இன்னும் நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யவில்லை. அப்புறம் சொல்ல நினைத்தேன்"

அவன் கைகளைப்பிடித்து குலுக்கினேன்.

" நமக்குள் என்ன பார்மாலிடீஸ், ஆமாம், உன் பையனும் உன்னைப்போல் ரொமாண்டிக்கா, அதான் லவ் மேரேஜ்ஜா?"

அவன் மிகவும் அவசரமாக

" சே..சே..இல்லடா.... இது நாங்க பார்த்து செஞ்சு வைக்கும் கல்யாணம் தான்.என்ன , பையனும் பொண்ணும் ஒரே காலேஜ், ஆனால் டிபார்ட்மெண்ட் வேற பாரு , சந்திச்சிருப்பாங்க ஆனால் லவ்வெல்லாம் இல்லை..."

எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது..

" டேய் நீ இவ்வளவு அவசரமா மறுத்துச்சொல்வதிலேயே நீ இன்னும் பழசை மறக்கவில்லன்னு தெரியுது.... உன் காதல் திருமணம் என்ன அமர்க்களத்தில் நடந்தது. உங்க அப்பா மறுக்க நீ அடம் பிடிக்க உங்க அம்மா நெஞ்சு வலியாலே ஹாஸ்பிடல் சென்று படுக்க...ஆனால் ஒன்று சொல்லணும்டா...நீ தில்லா நின்னு நினைச்சபொண்ணையே கட்டிகிட்டே பாரு... உங்க அப்பா அம்மாவும் இப்போ உன் மனைவியைத் தலையிலே வெச்சு கொண்ட்டாடுறாங்க....." நான் பழசையெல்லாம் பேசிக்கொண்டே போக...சேகர் அச்சுவாரஸ்யமாக்க உச்சு கொட்டிக்கொண்டிருந்தான்.

பேச்சை மாற்றி கல்யாண ஏற்பாடுகள் மண்டபம் , சமையல் என்று நான் பேச்சை மாற்ற அவனையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

பேசி முடித்து வீடு திரும்பும்போது நான் நினைத்துக்கொண்டேன்

"அடேய் மடையா.,..எனக்குத்தெரியும் உன் பிள்ளையும் காதல் கல்யாணம் தான் என்று. என் பையனும் அதே காலேஜ்தான்...விஷயம் எனக்குத்தெரியாமல் எப்படி இருக்கும்? ஆனால் நீ தெரியாது...தெரியக்கூடாது என்று நம்புகிறாய்...பிரச்சனை இல்லை , நான் தெரிந்ததாக காட்டிக்கொள்ள மாட்டேன்...ஆனால் இவ்வளவு வருடங்களாக நீ உன் அப்பாவை மீறிக் காதலித்தது தவறு என்ற எண்ணத்தில் அல்லவா இருக்கிறாய்... சந்தோஷமாக என் பிள்ளையும் லவ் மேரேஜ் தான் என்று சொல்லியிருந்தால் உன் காதலில் அர்த்தம் இருந்திருக்கும். பாவம்டா நீ ஜெயித்ததாக நினைத்த உன் காதல் என் அளவில் தோல்விதான்."

அவனுக்குமாக சேர்த்து நலம் வேண்டிக்கொண்டேன்.

http://www.kamadenu.in

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதலின் பொன் வீதியில் பொய்கள் நிறைந்திருக்கும் என்று சொல்ல வருகிறார்........!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.