Jump to content

ஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு


Recommended Posts

பதியப்பட்டது

ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு


 

 

one-minute-story

 

கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. 

கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இவனும் வேண்டாம் என்று ஆள்மாற்றினால், மாதத்தில் பாதி நாட்கள் பேப்பர் போடாமல் தொந்தரவு.

இப்படிப்பல கஷ்டங்களை அனுபவித்துபின் தானே காலையில் கடைக்குச்சென்று பேப்பர் வாங்கத் தீர்மானித்து வாங்கிப்பழகியும் இருந்தார்.

சில வருடங்களாகப் வாங்கி வந்த பேப்பர் கைகளில் கிடைத்தும் சிரமமாகித்தான் போய்விட்டது. ரிடையர் ஆகி வீட்டில்தானே இருக்கிறாய், நாங்கள் ஆபீஸ் போவதற்குள் படித்துவிட்டுத்தருகிறோம் என்று இரண்டு பிள்ளைகள் அடுத்து அவர்கள் மனைவிகள் என்று ரூல்படி பேப்பர் கைமாறி, பத்துமணிக்கு மேல்தான் அவர் கைகளில் கிடைக்கிறது. பேப்பர் பார்க்காமல் உறிஞ்சப்படும் காபி ருசிப்பதே இல்லை.

ஆனால் அவர் பேப்பர் வாங்கப்போகும் போது பக்கத்து வீட்டின் வாசலில் பேப்பர் கிடப்பதைத் தினமும் பார்க்கிறார். திரும்பி வரும்போது தொண்ணூறு வயதான தாத்தா பேப்பர் படித்தபடி வாசலில் இருப்பதையும் தினமும் பார்க்கிறார்.
அவர்கள் வீட்டிலும் ஆபீஸ் போகும் தாத்தாவின் பிள்ளைகள், பேரன்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் காலையில் பேப்பருடன் அமரும் தாத்தா மத்தியானம் சாப்பாட்டுக்குத்தான் பேப்பருடன் உள்ளே செல்வார்.
லேசாகப் பொறாமையாகத்தான் இருந்தது.

அந்தக் கிழவரைப்போல் தனக்கும் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்திருந்தால் இப்படி காலையில் பேப்பருக்கு ஏங்கத் தேவை இல்லாதிருந்திருக்கும்.
எப்படி இப்படி அவர்கள் வீட்டில் மட்டும். அவருக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
இன்று போய் கேட்டுவிடுவது என்ற தீர்மானத்தோடு மெதுவாக அவர்கள் வீட்டு கலிங்பெல்லை அழுத்தினார்.

வாசல் வராண்டாவில் எப்போதும் போல் பெரியவர் கைகளில் பேப்பருடன்.
" நமஸ்காரம், பக்கத்துவீட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். தினம் பார்கறோம் பேசமுடிகிறதில்லை. இன்றைக்கு ஞாயிறு எல்லோரும் லிஷேர்லியா இருப்பீங்க..அதான் வந்தேன்." பேச்சு தொடர்ந்தது.கடைசியாகச் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

" உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். என் வீட்டில் நான் ரிடையர் ஆனதாலே எல்லோரும் படித்து முடிச்சு பின் தான் காலை பேப்பர் என் கைக்கு வரும். உங்க வீட்டிலே காலையிலிருந்து மதியம் வரை வாசலில் உள்ள உங்க அப்பா கையிலேயே பேப்பர் பார்க்கிறேன். வாசலில் ஒரு பேப்பர் மட்டும்தான் கிடக்கு...நீங்க யாரும் பேப்பர் படிச்சு பழக்கமில்லையோ...??"
சிரித்துக்கொண்டே பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார்.
" அப்பா என்ன படிக்கிறார் என்று பார்த்துவிட்டு வாங்க"
கணேசன் பெரியவர் அருகில் சென்றார்.
" நமஸ்காரம். பேப்பர் படிக்கிறீங்கபோல....என்ன செய்தி.."
அவர் ஹெட்லைன்ஸ் படித்துச்சொன்ன செய்தி ஒரு வாரத்திற்கு முன் வந்த செய்தி.
குழப்பத்தோடு விழித்தார்.
" இங்கே வேண்டாம்...உள்ளே வாங்க..."
மேலும் குழம்பி உள்ளே சென்றார்.
" சார், அப்பாவுக்கு எதுவும் நினைவில் இருக்காது. டிமென்ஷியா. ஆனால் காலையில் முதலில் தான் தான் பேப்பர் படிக்கவேண்டும் என்ற பழக்கம் மட்டும் மறக்கவில்லை. அதனால் கைகளில் கிடைக்கும் ஏதோ ஒரு பேப்பரை கொடுத்துவிடுவோம். அதைப்படிப்பார் ஆனால் எதுவும் நினைவில் இருக்காது. நாங்கள்
எல்லோரும் அபீஸ் போன பின்பு இன்றைய பேப்பரை என் மனைவி கொடுப்பா. அதையும் படிப்பார் இதைத்தான் நான் காலையிலேயே படிச்சுட்டேனே என்று சொல்லிக்கொண்டு....வேற என்ன சார் செய்யறது?"

http://tamil.thehindu.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பேப்பர் வழக்கல்ல, பே(ய்)ப்பர் வழக்கு,ஏய்ப்பர் வழக்கு......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.