Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி

Featured Replies

காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி

 

காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது43பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தீனர்கள்படத்தின் காப்புரிமைAFP

மேலும், இதில் 1800 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.

தூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்க உள்ளார்.

 

காஸாவை ஆட்சி செய்யும் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களாக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

எல்லை வேலியை தாண்டவே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.

பாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை எதிர்கால பாலத்தீன ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர். ஆனால், ஜெரூசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்தது.

அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 28 பேர் பலிபடத்தின் காப்புரிமைAFP

ஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்தன. ஜெரூசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியது.

ஒரு சிறிய இடைக்கால தூதரகம், திங்கட்கிழமை முதல் ஜெருசலேத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இயங்க தொடங்கும்.

ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகத்திற்கான பெரிய இடம் பின்னர் தேர்ந்தேடுக்கப்படும். அப்போது டெல் அவீவ் நகரத்தில் இருந்து முழு தூதரகமும் இங்கு இடம் மாற்றப்படும்.

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதின் 70-ம் ஆண்டு நிறைவு நாளில் அன்று புதிய தூதரகத்தைத் திறக்கும் விதமாக திறப்பு விழா தேதி அமைக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-44109598

  • தொடங்கியவர்

காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 52 பேர் பலி

காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 52 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தீனர்கள்படத்தின் காப்புரிமைAFP

மேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது.

ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.

தூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்க உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44109598

  • தொடங்கியவர்

''இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலேம்தான்'' - தூதரக தொடக்க விழாவில் டிரம்ப்

ஜெரூசலேத்தில் நடந்த அமெரிக்க தூதரக தொடக்க விழாவில், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ப்ரீட்மன் அமெரிக்க தூதரகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக முறைப்படி அறிவித்தார்.

ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறப்பு

''இன்று இஸ்ரேலில், ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். முதல் நாடாக தங்கள் தூதரகத்தை திறந்து வைத்ததன் மூலம், மீண்டும் உலகுக்கு வழிகாட்டும் விதமாக அமெரிக்கா செயல்பட்டுள்ளது'' என்று டேவிட் ப்ரீட்மன் கூறினார்.

ஜெரூசலேத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லவில்லை. ஆனால், அவர் இந்நிகழ்வு தொடர்பாக பேசிய காணொளி ஒன்று தொடக்க விழாவின்போது ஒரு பெரிய திரையில் திரையிடப்பட்டது.

''சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலை உலகில் முதன்முதலில் அங்கீகரித்தது அதிபர் ஹாரி ட்ரூமேன் தலைமையிலான அமெரிக்க அரசுதான். இன்று நாம் ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை திறந்துள்ளோம். இது ஒரு நீண்டகால காத்திருப்பு'' என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

''தனது தலைநகரை தீர்மானிக்க இஸ்ரேலுக்கு அதிகாரமுள்ளது''

''இன்று இஸ்ரேல் அரசின் முக்கிய தலமாக ஜெரூசலேம் உள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தாயகமாக ஜெரூசலேம் விளங்குகிறது. மேலும், இஸ்ரேலின் பிரதமர் மற்றும் அதிபர் இயங்கும் தலைமையகமாகவும் ஜெரூசலேம் அமைந்துள்ளது'' என்று அவர் மேலும் கூறினார்.

''இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்தான்'' - தூதரக தொடக்க விழாவில் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''இறையாண்மை கொண்ட மற்ற எந்த நாட்டையும் போல தனது தலைநகர் எதுவென்பதை தீர்மானிக்க இறையாண்மை மிக்க நாடான இஸ்ரேலுக்கும் அதிகாரமுள்ளது'' என்று டிரம்ப் தனது காணொளியில் குறிப்பிட்டார்.

''ஆனாலும், இந்த உண்மையை நாம் பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ள தவறிவிட்டோம். மிக சாதாரண உண்மை என்னவென்றால் இஸ்ரேலின் தலைநகரம் ஜெரூசலேம்தான்'' என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

ஜெரூசலேத்தில் அமெரிக்க தூரதக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் உடன் சென்றுள்ளார். இவர்களுடன் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.

இந்த தொடக்க விழாவில் பேசிய ஜாரெட் குஷ்னெர், ''யூத மக்களின் நிரந்தர இதயம்'' என்று ஜெரூசலேம் நகரை அவர் வர்ணித்தார்.

குஷ்னெர்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஜாரெட் குஷ்னெர்

''ஜெரூசலேம் நகருக்கு எங்கள் தூதரகத்தை மாற்றியதன் மூலம், அமெரிக்கா எப்போதும் நம்பகத்தன்மை கொண்ட நாடு என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

குஷ்னெர் பேசி முடித்தவுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு உரையாற்றினார்.

குஷ்னெர், இவாங்கா டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு தான் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.

''அதிபர் டிரம்ப் அவர்களே! வரலாற்றை அங்கீகரித்ததன் மூலம் நீங்கள் வரலாற்றை நிகழ்த்தியுள்ளீர்கள்! என்று பேசிய பெஞ்சமின் நெதன்யாஹு, இஸ்ரேலின் மிகப்பெரிய கூட்டாளி நாடு அமெரிக்கா'' என்று தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாஹுபடத்தின் காப்புரிமைAFP Image captionபெஞ்சமின் நெதன்யாஹு

பொது வேலைநிறுத்ததிற்குபிஎல்ஓஅழைப்பு

இதற்கிடையே, காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 43 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-காஸா எல்லையில் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் மரணத்துக்கு துக்கம் செலுத்தும் விதமாக பொது வேலைநிறுத்ததிற்கு பாலத்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) அழைப்பு விடுத்துள்ளது.

''இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்தான்'' - தூதரக தொடக்க விழாவில் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகம் தொடங்கப்பட்டதற்கும், காஸா எல்லையில் எதிர்ப்பு தெரிவித்த பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதற்கும் எகிப்து, பாலத்தீனம் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் கண்டனத்தையும், தங்கள் கவலைகளையும் பகிர்ந்துள்ளனர்.

காஸா எல்லையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐ.நா.) பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தனது கவலையை வெளிப்படுத்தியதாக 'தி அசோசியேட்டட் பிரஸ்' செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் இருந்து வரும் செய்திகளால் நான் மிகவும் கவலை அடைந்துளேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-44113718

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக பிரச்சனைகளை கூடுதலாக்குகின்றார்கள்.. 

  • தொடங்கியவர்

ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது அமெரிக்கா : எதிர்ப்பிலீடுபட்டோரில் 41 பேர் பலி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்

 

பாலஸ்தீனர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகரரான ஜெருசலேமில் அமெரிக்கா  புதிய தூதரகத்தை திறந்துள்ளது. 

4C197A0C00000578-5725195-image-m-124_152

பாலஸ்தீனர்கள்  கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனின் தலைநகரமாக உரிமை கோரி வந்தனர். ஆனால் ஜெருசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்த நிலையில் கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தார்.

மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

 

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் டிரம்பின் முக்கிய ஆலோசகரும் மருமகனுமாகிய ஜெரார்ட் குஷ்னர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 

அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் 41 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 1800 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

Gaza-protests.jpg

4C38A71F00000578-5725195-image-a-126_152

4C38B5D800000578-5725195-image-a-2_15263

4C38FA4000000578-5725195-image-a-21_1526

4C380E8A00000578-5725195-image-a-3_15263

http://www.virakesari.lk/article/33457

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.