Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜ.க.வின் வெற்றிப்பயணம் தொடர்கிறது: 21-வது மாநிலமாக கர்நாடகாவிலும் தாமரை மலர்ந்தது

Featured Replies

  • தொடங்கியவர்

ஐதராபாத் சென்ற காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் - தயார் நிலையில் இரண்டு சொகுசு ஓட்டல்

 
அ-அ+

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு ஓட்டலுக்கு சென்றடைந்தனர். #KarnatakaCMRace

 
ஐதராபாத் சென்ற காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் - தயார் நிலையில் இரண்டு சொகுசு ஓட்டல்
 
ஐதராபாத்:

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
 
இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.
 
201805181058018528_1_hytt._L_styvpf.jpg

இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்றிரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், இன்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் வந்தடைந்தனர்

அவர்களுக்காக அங்கு இரண்டு சொகுசு ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #KarnatakaCMRace

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18105802/1163973/Karnataka-Congress-MLAs-arrive-at-Hyderabads-Taj-Krishna.vpf

  • தொடங்கியவர்

பாஜகவினர் பீதி; நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா?- உச்ச நீதிமன்றம் அதிரடி

 
bsyeddyurappa

கர்நாடக முதல்வர் பிஎஸ். எடியூரப்பா : கோப்புப்படம்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆளுநர் வாஜுபாய் வாலா 15 நாட்கள் காலஅவகாசம் அளித்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், எடியூரப்பா பதவி தப்புமா என்ற பீதி பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

 
 

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.

இந்தச் சூழலில் நேற்றுமுன்தினம் இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நேற்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.

எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்றுமுன்தினம் நள்ளிவரவில் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. அதேசமயம், ஆளுநரிடம் தனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி எடியூரப்பா தாக்கல் செய்த கடிதத்திந்நகலை 18-ம் தேதி காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய பாஜக வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிக்ரி, நீதிபதி அர்ஜன் குமார் தலைமையிலான அமர்வுமுன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி இருந்தார். காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார்.

பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகல் ரோகத்கி, எடியூரப்பா ஆளுநரிடம் 15, 16ம் தேதிகளில் அளித்த இரு கடிதங்களையும் நீதிபதி முன் தாக்கல் செய்தார்.

vbk-Supreme%20Courtjpg

உச்ச நீதிமன்றம்

 

மாநிலத்தில் பாஜகதான் தனிப்பெரும்கட்சியாக இருப்பதால், எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக எம்எல்ஏக்கள் என்னைத் தேர்வு செய்துள்ளார்கள் என எடியூரப்பா இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனத் முகல் ரோகத்கி தெரிவித்தார்.

அதேசமயம் கடிதத்தில் தங்களுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பது குறித்து எடியூரப்பா குறிப்பிடவில்லை. தனது ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்களின் பெயரையும் கடிதத்தில் குறிப்பிடவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என பாஜக தலைவர் எடியூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருசிலர் ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார் என ரோகத்கி தெரிவித்தார்.

இதையடுத்து, கேள்வி எழுப்பிய நீதிபதி சிக்ரி, எந்த அடிப்படையில் பாஜக நிலையான அரசு அமைக்க முடியும் என்று ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த ரோகத்கி, பாஜக எம்எல்ஏக்கள் தவிர்த்து, சில காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களும் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்ததால், ஆளுநர் அழைத்தார் எனத்தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதிகள், பெரும்பான்மை என்பது எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலானது. இங்கு எண்ணிக்கை மட்டும் பலமானது, வலுவானது. அப்படி இருக்கையில், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை அழைக்காமல் பாஜக அழைக்கப்பட்டது ஏன். அப்படி என்றால், நாளையே பாஜக பெரும்பான்மையை நீருபிக்க தயாராக இருக்கிறதா என்று கேட்டனர்.

அதற்கு முகல்ரோகத்தி பாஜகதான் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது என்றார், இதை ஏற்க மறுத்த நீதிபதி அர்ஜன் குமார், இதில் இருவிஷயங்கள் இருக்கின்றன.

ஒன்று ஆளுநர் முடிவை ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும், அல்லது சட்டப்பேரவையில் பெரும்பான்மை நீருபிக்க உத்தரவிட வேண்டும். ஆனால், இதில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நீரூபிக்க உத்தரவிடுவதுதான் சரியான தேர்வு என்று தெரிவித்தார்.

அப்போது காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி வாதிடுகையில், பாஜக முதல்வர் எடியூரப்பா அளித்த கடிதத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற தகவலும், அவர்களின் பெயரும் இல்லை.

ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாராக இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு போதுமான அளவு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர உத்தரவிட வேண்டும் என உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், கர்நாடக சட்டப்பேரவைக்கு ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் ஒருவரை ஆளுநர் நியமித்ததும் செல்லாது என உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கேட்கப்பட்டது.

ஆனால், பாஜக வழக்கறிஞர் முகல் ரோகத்கி, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குச் சிறிது கால அவகாசம் தேவை எனத் தெரிவித்தார்.

ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், கர்நாடகச் சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுக்கு நடத்த வேண்டும். எடியூரப்பா தனது பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களுக்கு போதுமான பாதுகாப்பைக் கர்நாடக போலீஸ் டிஜிபி அளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்

http://tamil.thehindu.com/india/article23923277.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஹைதராபாத்திற்கு மாறிய கர்நாடக அரசியல்: 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம் - கட்சி மாறத் திட்டம்?

 

 
CapturePNG

காங். எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டல்: படம்: ஏஎன்ஐ

கர்நாடக அரசியல் தற்போது ஹைதராபாத்திற்கு மாறியுள்ளது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து கர்னூல் வழியாக 3 சொகுசு பஸ்களில் ஹைதராபாத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இல்லாத காரணத்தினால், இவர்கள் கட்சி மாறி பாஜகவில் இணைந்தார்களா ? என காங்கிரஸ், மஜத கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

கர்நாடக பேரவை தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 38, இதரவை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்க வில்லை. பெரும்பான்மை கிடைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலையில், காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், அதிக பெரும்பான்மை கொண்ட பாஜகவை (104) ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்த காரணத்தினால், எடியூரப்பா 23-வது முதல்வராக வியாழக்கிழமை பதவி ஏற்றார். இவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சட்டப்பேரவை முன் உள்ள காந்தி சிலை முன் ஆளுநரின் போக்கை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்திற்கு மாறிய கர்நாடக அரசியல்

இந்நிலையில், தங்களது எம்எல்ஏ-க்களை கட்சி மாறாமல் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் வியாழக்கிழமை இரவு தனி விமானம் மூலம் முதலில் கேரள மாநிலம் கொச்சின் செல்ல முடிவு செய்தனர்.

அதன் பின்னர், ஹைதராபாத் செல்ல ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால், இவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என மத்திய விமானத்துறை கூறி விட்டதால், 3 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் பின்னர் இவர்கள் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் தலைமையில் அனைத்து எம்எல்ஏ-க்களும் இன்று காலை 10 மணியளவில் ஹைதராபாத் வந்தடைந்தனர்.

இவர்களை ஹைதராபாத்தில் தங்க வைக்க கோல்கொண்டா நட்சத்திர ஓட்டல், பார்க் ஹையத் மற்றும் தாஜ் கிருஷ்ணா ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் தற்போது இவர்கள் அனைவரும் தாஜ் கிருஷ்ணா, நோவாட்டல், கோல்கொண்டா ஆகிய 3 ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளியில் எங்கும் செல்லாமலும், வெளியாட்கள் யாரும் இவர்களை சந்திக்காமல் இருக்கவும் வேண்டி, பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களிடமிருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

3 காங்கிரஸ்எம்.எல்.ஏ க்கள் எங்கே ?

பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் வந்துள்ள காங்கிரஸ், மஜத கட்சி எம்எல்ஏ-க்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களை காணவில்லை. இவர்களின் செல்போன்களும் செயலிழந்துள்ளன. ஆதலால், இவர்கள் பாஜகவில் இணையலாம் என கர்நாடக காங்கிரஸார் கருதுகின்றனர். ஆதலால், மீதமுள்ள எம்எல்ஏ-க்களை பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/india/article23922939.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா வெற்றி பெறுவாரா?; பாஜக மீது எதிர்க்கட்சிகள் புகார்

 

 
yeddy1jpg

எடியூரப்பா

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக (104), காங்கிரஸ் (78), மஜத (38), மற்றவை (2) என எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (112) கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், மஜதவுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதே போல தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவும் ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்தார்.

 

இதையடுத்து ஆளுநர் கடந்த புதன்கிழமை இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனிடையே காங்கிரஸை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் முறையிட்டார். எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்பதற்கு தடை விதிக்கக் கோரினார். அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த கடிதத்தின் நகலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. எடியூரப்பா நேற்று முன் தினம் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆளுநருக்கு எடியூரப்பா அளித்த கடிதங்களின் நகல்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், '' பாஜகவுக்கு தனிபெரும்பான்மை நிரூபிக்க தேவையான எம் எல் ஏக்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ், மஜத, சுயேச்சைகள் கூட பாஜகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருக்கிறது. தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை'' என்றார்.

அதற்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி, '' எடியூரப்பா ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் ஆதரவு எம் எல் ஏக்களின் பெயரும், கையெழுத்தும் இல்லை. எதன் அடிப்படையில் ஆளுநர் அவருக்கு தனிபெரும்பான்மை இருக்கிறது என அழைத்தார். காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது என கடிதம் அளித்தபோது அழைக்காத அவர், ஏன் பாஜகவை மட்டும் அழைத்தார். எனவே கர்நாடக சட்டப்பேரவையை கூட்டி சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்த முடியுமா? பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா?''என கேட்டார்.

அதற்கு பாஜக வழக்கறிஞர், ''எம் எல் ஏக்கள் சிலர் ஆந்திராவிலும், சிலர் கேரளாவிலும் இருப்பதாக தெரிகிறது. அதனால் ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும். நாங்கள் அப்போது பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்’’என்றார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ''சனிக்கிழமை 4 மணிக்கு அவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்னதாக அவர் எத்தகைய கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது. இதற்காக தற்காலிக சட்டப்பேரவை தலைவரை நியமிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தாமல், வெளிப்படையாக கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து எம் எல் ஏக்களும் கலந்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை கேமராவில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக காவல்துறை தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும்''என உத்தரவிட்டார்.

இது குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், '' உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். உடனடியாக தலைமைச் செயலாளருடன் கலந்துபேசி, சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அலுவல்கள் தொடங்குகிறேன். இதில் நான் வெற்றி பெற்று, 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்வேன். என்னை வெளியே இருந்து ஆதரிக்க நிறைய எம் எல் ஏக்கள் உள்ளனர்''என்றார். இதற்கிடையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

http://tamil.thehindu.com/india/article23933270.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிகழ் பதிவு: கர்நாடக அரசியல் பரபரப்பு - கள நிலவரம்

 

 
DdivbDVAAA7qgujpg

காங்கிரஸ் எம்எல்ஏ உகரப்பா

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இதில் வெற்றி பெற சில அதிரடி வியூகங்களை பாஜக தரப்பு வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 5 வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிகழ் நேரப் பதிவு:

   
 

1.35 PM: பாஜகவுடன் கரம்கோர்த்த காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடக சட்டப்பேரவைக்கு வராத காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பினர் ஆனந்த் சிங்கை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிய வந்துள்ளது. காங்கிரஸூக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஆனந்த் சிங் நேற்று கட்சி  தலைமையிடம் வாக்குறுதி அளித்து இருந்த நிலையில், அவர் பாஜக எம்எல்ஏவுடன் இருப்பது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1.20 PM: கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  விரிவான செய்திக்கு: ‘நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1.08 PM: ரூ.15 கோடி, அமைச்சர் பதவி: மனைவி மூலம் பாஜக பேரம்

DdivbDVAAA7qgujpg

காங்கிரஸ் எம்எல்ஏ உகரப்பா

 

கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக மீது காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு புகார் கூறியுள்ளார். பாஜகவினர் தனது மனைவி மூலமாக எடியூரப்பாவிற்கு வாக்களிக்ககோரி பேரம் நடத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ். உகரப்பா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாஜக எம்எல்ஏ விஜயேந்திரா, எனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனக்கு அமைச்சர் பதவியும், 15 கோடி ரூபாய் பணமும் கொடுப்பதாக எனது மனைவியிடம் பேரம் பேசியுள்ளார். எனவே பாஜக எம்எல்ஏ விஜேயேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.  

 

sivakumarPNG

அமைச்சர் சிவக்குமார்

 

12.50 PM: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுடன் இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவக்குமார்  உறுதிப்பட  தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

12.35 PM: கர்நாடகாவில் வாக்கெடுப்பு நடைபெற இன்னமும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிரணி எம்எல்ஏக்களை இழுக்க இரு தரப்பிலும் இறுதிகட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. பதவியேற்க காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் உரிய நேரத்தில் வராததால் பரபரப்பு ஏற்பட்டது. விரிவான செய்திக்கு: கர்நாடகாவில் இறுதிகட்ட மோதல்: ஆபரேஷன் தாமரையா? கையா? - காணாமல் போன காங்கிரஸ் எம்எல்ஏவால் பரபரப்பு

12.20 PM: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பாஜக எத்தனை விதமான சூழ்ச்சிகளையும், குறுக்குவழிகளையும், தனக்குச் சாதகமாக செய்துவருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். விரிவான செய்திக்கு: ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எத்தனை குறுக்கு வழிகள், தடைகள்’ - பாஜகவைச் சாடிய சிதம்பரம்

12.08 PM:  நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்க கட்சி கொறடா உத்தரவு

11.56 AM: கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல். ஏவாக பதவியேற்க பிரதாப் கவுடா வருகை

11.54 AM: கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா ஆகிய இருவரும் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்

11.52 AM: கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றால் வாக்கெடுப்பை ஒத்தி வைக்க காங்கிரஸூக்கு சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வாக்கெடுப்பை போiபையாவே நடத்தி முடிப்பார் எனவும் நீதிபதிகள் கூறினர். விரிவான செய்திக்கு: கர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்; உச்ச நீதிமன்றம் உத்தரவு: வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க சம்மதமா? என காங்கிரஸூக்கு நீதிபதிகள் அதிரடி கேள்வி

11.50 AM: மூத்த எம்.எல்.ஏக்கள் நிறையபேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்?- நீதிபதி பாப்டே கேள்வி

11.40 AM: கர்நாடக தற்காலிக சபாநாயகர் போதிய அனுபவம் இல்லாதவர்;போபையாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது- கபில் சிபல் வாதம்

11.35 AM: காங்கிரஸ் எம்.எல். ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க கர்நாடக சட்டப் பேரவைக்கு வரவில்லை.   

11.30 AM: சித்தராமையா எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தொடர்து பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

11.20 AM: கர்நாடக சட்டப்பேரவையில் முதல் நபராக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் எடியூரப்பா

11.15 AM: போபையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் ஆஜரராகினர்.

11.12 AM: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏதாவது தில்லு முல்லு வேலைகள் செய்து பாஜக வெற்றி பெறும் என்று நினைக்கிறேன் என்று பாஜக முன்னாள் எம்.பி யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தகிடுதத்தம்’ செய்தாவது பாஜகதான் வெற்றி பெறும்: யஷ்வந்த் சின்ஹா காட்டம்

11.10 AM: கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது.

10.55 AM: கர்நாடக தற்காலிக சபாநாயகர் போபையாவுக்கு எதிரானமனு மீதான விசாரணை தொடங்கியது. போபையாவுக்கு எதிராக காங்கிரஸ், மஜத தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது

10.50 AM: காங்கிரஸ் மற்றும் மஜத இழிவான அரசியல் கூட்டணியை வைத்துள்ளனர்; மக்களால் அவர்கள் நிராகரிப்படுவர் - அனந்த் குமார் (பாஜக

10.45 AM: 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வருகை தந்தனர்.

10.40 AM: கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றால் வாக்கெடுப்பை ஒத்தி வைக்க காங்கிரஸூக்கு சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வாக்கெடுப்பை போபையாவே நடத்தி முடிப்பார் எனவும் நீதிபதிகள் கூறினர். விரிவான செய்திக்கு: கர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்; உச்ச நீதிமன்றம் உத்தரவு: வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க சம்மதமா? என காங்கிரஸூக்கு நீதிபதிகள் அதிரடி கேள்வி

10.15 AM: கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10.00 AM: 4.30 மணி வரை காத்திருங்கள்; நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. எடியூரப்பா அடுத்த 5 ஆண்டுகளுக்கு கர்நாடக முதல்வராக பதவியில் நீடிப்பார் - பாஜகவின் மூத்த தலைவர் சதானந்த கவுடா

9.30 AM: எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கர்நாடகாவில் காங்- மஜத ஆட்சியமைக்கும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு குறைவாகவும், எங்களுக்கு அதிகமாகவும் உள்ளது - குலாம்நபி ஆசாத்

9.00 AM: கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 இடங்களுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய்குமார் மாரடைப்பால் காலமானார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. விரிவான செய்திக்கு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் 2 தொகுதிகளுக்கு தேர்தல்: காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரம்

8.40 AM: கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மையை நான் பெறுவேன். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது . விவசாயிகள் மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நாளை தான் முடிவு எடுப்பேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

8.20 AM: மஜத எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர் என்று குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

8.00 AM: கர்நாடக பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவை சுற்றி 1 கி.மீ தொலைவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

7.30 AM: காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்கை பாஜகவினர் கடத்தி சிறை வைத்துள்ளனர் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு: காங்கிரஸ் எம்எல்ஏ கடத்தல்: சித்தராமையா குற்றச்சாட்டு

7.15 AM: ஆட்சி அமைக்க எடியூரப்பா காட்டிய மூர்க்கத்தனத்தை இதற்கு முன் நான் எங்கும் பார்த்ததில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தோல்வி அடையும் என்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி. விரிவான செய்திக்கு: பாஜக தோல்வி அடையும்: அபிஷேக் சிங்வி நம்பிக்கை

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. விரிவான செய்திக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா வெற்றி பெறுவாரா?; பாஜக மீது எதிர்க்கட்சிகள் புகார்

ஹைதராபாத்தில் காங்கிரஸ் மஜத எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மாயமானார். இதனால் காங்கிரஸ் முகாமில் பெரும் சர்ச்சை கிளம்பியது. விரிவான செய்திக்கு: ஓட்டலில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ மாயம்

கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டால், அதை தடுக்கும் முயற்சியாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர். விரிவான செய்திக்கு: பாஜகவின் குதிரை பேரத்துக்கு பயந்து ஹைதராபாத்தில் தங்கிய காங்., மஜத எம்எல்ஏக்கள்

download%206jpg
 

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இதில் வெற்றி பெற சில அதிரடி வியூகங்களை பாஜக தரப்பு வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 5 வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் வாஜ்பாய் வாலா, கர்நாடக முதல்வராக எடியூரப்பாவிற்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பாஜகவினர் கடத்த வாய்ப்பு இருப்பதாக புகார் எழுந்ததால் ஹைதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்த பின் கர்நாடக சட்டப்பேரவைக்கு செல்ல தயாராகினர். இதனிடையே கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க பாஜவினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர்களிடம் அக்கட்சித் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

லிங்காயத் எம்எல்ஏக்களுக்கு வலை

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன் வந்ததை காங்கிரஸில் உள்ள லிங்காயத் சமூக எம்எல்ஏகளுக்கு பிடிக்கவில்லை. காங்கிரஸில் 18 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் 2 பேரும் லிங்காயத் சமூக எம்எல்ஏக்கள் உள்ளனர். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடருவதற்காக, இவர்களுக்கு பாஜக தரப்பில் வலை விரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் லிங்காயத் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் மீது அந்த சமூக தலைவர்கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளனர். எனவே அவர்களின் ஆதரவுடன், அந்த சமூக எம்எல்ஏக்களை வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜனார்த்தன் ரெட்டி

வடக்கு கர்நாடகாவில் பெல்லாரி, பிஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். பாஜகவின் செல்வாக்குடன் திகழும் ஜனார்த்தன் ரெட்டி மூலமாக, அந்த சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பண பேரமும் நடந்து வருகிறது.

எடியூரப்பா தப்புவரா?

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத நிலையில் மொத்தம் 222 எம்எல்ஏக்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இதில் 104 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே பாஜகவுக்கு உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 38 பேர் உள்ளனர். மேலும் இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்த அணியின் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 118 ஆகும். சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 222 பேரில் 111 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக வெற்றி பெறும். தற்போதுள்ள எம்எல்ஏக்களில் ஒருவர் சபாநாயகராகி விட்டதால் பாஜக அணிக்கு 103 பேர் பலம் மட்டுமே உள்ளது. எனவே இன்னமும் 8 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில் தான் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

பாஜகவுக்கு உள்ள 5 வாய்ப்புகள்

வாக்கெடுப்பில் வெற்றி பெற எடியூரப்பாவிற்கு 5 வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

1) அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை எடியூரப்பாவிற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யலாம். ஆனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனினும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த வழக்கு பல காலம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.

2) காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களில் சிலரை சட்டப்பேரவைக்கு வரவிடாமல் செய்யலாம். அவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால், வந்தவர்களில் பெரும்பான்மை என்ற அடிப்படையில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

3) காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் சிலர் சட்டபேரவைக்கு வந்து வாக்கெடுப்பின்போது, நடுநிலைமை வகிக்கிலாம். அப்போது ஆதரவு குறைவாகும் என்பதால் எடியூரப்பா வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். இதுவும் கொறாடா உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையே. ஆனால் அரசு வெற்றி பெற்று விடும் என்பதால் மற்றவை நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டதாகி விடும்.

4) சபாநாயகர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் எதிர் தரப்பு எம்எல்ஏக்கள் சிலரின் வாக்குகளை செல்லததாக அறிவிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் எதிர்ப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். ஆனால் இதுவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படும். ஆனாலும் பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்தலாம்.

5) பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலை ஏற்பட்டால் வாக்கெடுப்பு நடைபெறும் போது பெரிய அளவில் கலவரம் ஏற்படலாம். இதை காரணம் காட்டி வாக்கெடுப்பை தள்ளி போடலாம்

http://tamil.thehindu.com/india/article23934132.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிகழ் நேரப் பதிவு:

  

 

2.25 PM: ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ?

 

Ddi9KdUU0AAIDYpjpg

காரில் செல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்   -  படம்: ஏஎன்ஐ

 

காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் பெங்களூரு ஹோட்டலில் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர். அவரை பாஜகவினர் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த ஹோட்டலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு எம்எல்ஏ இருக்கிறாரா? என காவல்துறை டிஜிபி சோதனை நடத்தினார். இந்த பரபரப்புக்கு இடையே எம்எல்ஏ ஆனந்த் சிங் அந்த ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றார்.

1.35 PM: பாஜகவுடன் கரம்கோர்த்த காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடக சட்டப்பேரவைக்கு வராத காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பினர் ஆனந்த் சிங்கை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிய வந்துள்ளது. காங்கிரஸூக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஆனந்த் சிங் நேற்று கட்சி  தலைமையிடம் வாக்குறுதி அளித்து இருந்த நிலையில், அவர் பாஜக எம்எல்ஏவுடன் இருப்பது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/india/article23934132.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிகழ் பதிவு: கர்நாடக அரசியல் பரபரப்பு - கள நிலவரம்

 
DdjXIBpXUAE85pZjpg

சட்டப்பேரவையில் பேசிய எடியூரப்பா   -  படம்: ஏஎன்ஐ

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இதில் வெற்றி பெற சில அதிரடி வியூகங்களை பாஜக தரப்பு வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 5 வாய்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிகழ் நேரப் பதிவு: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

   
 

4.10 PM: கர்நாடகாவில் அரசியல் திருப்பம்: உருக்கமாகப் பேசிய எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். போதிய ஆதரவு இல்லாததால் இந்த முடிவுக்கு வந்ததாக சட்டப்பேரவையில் எடியூரப்பா அறிவித்தார். உருக்கமாகப் பேசிய எடியூரப்பா அடுத்த முறை 150 இடங்களைப் பாஜக கைப்பற்றும் என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறி பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறி எடியூரப்பா முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். தேவைப்படும்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவர் ராஜினாமா செய்தார்.

3.55 PM: கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா பேச்சு

கர்நாடக சட்டப்பேரவை உணவு இடைவேளைக்கு பிறகு  தொடங்கியது. முதல்வர் எடியூரப்பா உரை நிகழ்த்தி வருகிறார். ‘‘கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர்.  பாஜகவுக்கு வாக்களித்த கர்நாடக மக்களுக்கு எனது நன்றி’’ எனக் கூறினார்.

3.35 PM: எடியூரப்பா ராஜினாமா செய்கிறார்?

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினமா செய்துவிடுவார் என்று கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. விரிவான வாசிப்புக்கு எடியூரப்பா ராஜினாமா செய்ய முடிவா?: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன் பதவி விலகத் திட்டம்: ஆளுநரைச் சந்திக்கிறார்

3.15 PM: காங்கிரஸ் எம்எல்ஏவுடன் எடியூரப்பா பேரம்

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவிடம், முதல்வர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் எடியூரப்பா பேசுகையில் ‘‘ஏன் கொச்சிக்கு செல்கிறீர்கள்? நீங்கள் எங்களுடன் வாருங்கள். உங்களுக்கு தேவையானவற்றை செய்கிறோம், உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களுக்கு தேவையானவற்றை செய்கிறோம். எது வேண்டுமோ? கேளுங்கள்’’ என பேசியுள்ளார்

http://tamil.thehindu.com/india/article23934132.ece?homepage=true

  • தொடங்கியவர்

உருக்கமான பேச்சுக்குப் பின்னர் ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா! #KarnatakaFloorTest #LiveUpdate

 
 

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 

எடியூரப்பா

 

* கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, `கர்நாடக மக்கள் பா.ஜ.கவுக்கு 104 இடங்களை அளித்தார். மக்களின் பெரும்பான்மை ஆதரவு காங்கிரஸூக்கோ அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கோ இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தேன். மக்கள் எனக்கு அளித்த வரவேற்பையும், அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். மக்கள் எங்களுக்கு (பா.ஜ.கவுக்கு) 113 இடங்களை அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்றும். ஆட்சியை இழப்பதால் நான் எதையும் இழந்துவிட மாட்டேன். மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்’’ என்று உருக்கமாகப் பேசினார். அதன்பின்னர், முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 

* கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆளுநர் வாஜூபாய் வாலாவை முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநரை எடியூரப்பா சந்திப்பதற்கானக் காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், அவர் ராஜினாமா செய்ய இருப்பதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

*ஆனந்த் சிங்கைத் தொடர்ந்து பிரதாப் கௌடாவும், கோல்ட் பின்ச் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார்.

பிரதாப் கௌடா 

Photo Credit: ANI

* நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே எடியூரப்பா பதவி விலகுவது உறுதி என கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `மாயமாகியிருந்த பிராதாப் கௌடா வந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்’ என்று தெரிவித்தார். 

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார்

Photo Credit: ANI

*மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், கோல்ட் பின்ச் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். போலீஸாரின் விசாரணைக்குப் பின்னர் அவர் ஹோட்டலை விட்டு வெளியே வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://www.vikatan.com/news/tamilnadu/125420-karnataka-assembly-floor-test-updates.html

  • தொடங்கியவர்

`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு

 
 

கர்நாடக முதலமைச்சராக, வரும் திங்கள்கிழமை (21.5.2018) பதவியேற்க இருப்பதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி தெரிவித்திருக்கிறார். 

குமாரசாமி

 

Photo Credit:ANI

கர்நாடக முதலமைச்சராக கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பதவியேற்ற எடியூரப்பாவை, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா, வாக்கெடுப்புக்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  பின்னர், ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த எடியூரப்பா, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். எடியூரப்பா ராஜினாமா செய்ததன்மூலம் ஜனநாயகம் வெற்றிபெற்றதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துதெரிவித்தனர். 

 

இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற குமாரசாமி, காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்றிருந்தனர். ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, `ஆளுநர் எங்களை ஆட்சியமைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, வரும் திங்கள்கிழமை (21.5.2018) மதியம் 12 முதல் 1 மணிக்குள் நான் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளேன். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க இருக்கிறேன். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நானே நேரில் சென்று அழைப்பு விடுக்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/125454-governor-has-invited-me-to-form-government-says-hd-kumaraswamy.html

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி - 21-ஆம் தேதி பதவியேற்பு

img_trans.gif

பாஜக-வைச் சேர்ந்த எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார் குமாரசாமி. இதனைத் தொடர்ந்து வரும் 21-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

blobid1526745320326.jpg

 

ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியிருந்த குமாரசாமி ஆளுநரை சந்தித்தார்.

 

இதனைத் தொடர்ந்து வரும் 21-ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.thesubeditor.com/news/india/3599/kumarasamy-became-chief-minister-of-karnataka

 

  • தொடங்கியவர்

குமாரசாமியை தேடி அதிர்ஷ்டம் வந்த வழியைப் பாருங்கள்!

கர்நாடக தேர்தல்படத்தின் காப்புரிமைREUTERS

கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் இந்த சூழ்நிலையில், 103 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரிய பா.ஜ.க நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகியது. 37 உறுப்பினர்களை கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத).-வின் எச்.டி குமாரசாமி முதலமைச்சர் அரியணையில் ஏறப்போவதாக அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

தோளில் பச்சைத் துண்டுடன் முதலமைச்சர் கனவில் பதவியேற்ற எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கொடுத்திருந்த15 நாட்கள் அவகாசத்தை குறைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, 19ஆம் தேதி மாலை நான்கு மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பச்சை சிக்னலில் இருந்த எடியூரப்பாவுக்கு நிலைமை சிகப்பு சிக்னல் காட்ட, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்லவில்லை என்று கூறி பதவி விலகிவிட்டார்.

தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, பா.ஜ.கவுக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்று நினைத்த காங்கிரஸ், 38 உறுப்பினர்கள் கொண்ட குமாரசாமி பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தானாகவே முன்வந்து அறிவித்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்கள் இருந்தாலும், அரசியல் சதுரங்க விளையாட்டில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார் எச்.டி குமாரசாமி.

கர்நாடக தேர்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சி அமைக்க கோரிக்கை விடுப்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா (இடது) மற்றும் குமாரசாமி

முதலமைச்சர் பதவிக்கும் குமாரசாமி இடையே பெரிய இடைவெளி இருந்தது. எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவில்லை என்று பின்வாங்கியதால் குமாசாமியின் தலைவிதியே மாறிவிட்டது.

குமாரசாமி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தாலும் அந்த நாற்காலியை தாங்கிப் பிடிக்கும் நான்கு கால்களாக இருக்கப்போவது காங்கிரஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிந்ததே.

சரி, ம.ஜ.த மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் அடிப்படையை எப்படி புரிந்து கொள்வது?

எச்.டி தேவே கெளடபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎச்.டி தேவே கெளட

2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய குமாரசாமி, "2006ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க நான் எடுத்த முடிவினால், எனது தந்தையின் அரசியல் வாழ்வில் களங்கத்தை ஏற்படுத்திவிட்டேன். அந்த தவறை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் காங்கிரஸ் உடன் இருப்பேன்" என்று தெரிவித்தார்.

ஆனால் குமாரசாமிக்கும் காங்கிரசிற்கும் இடையிலான உறவு எப்போதுமே சுமூகமாக இருந்ததா? பா.ஜ.கவுடான அவரது உறவு கசந்து போக காரணம் என்ன? இந்த கேள்விக்கான பதிலை இந்திய அரசியலின் வரலாற்றுச் சுவடுகளை புரட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

பா.ஜ.கவுடன் நட்பு

2004 சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, மஜத மற்றும் காங்கிரஸ் இணைந்து கர்நாடகாவில் ஆட்சியமைத்தன. ஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளேயே குமாரசாமி தனது விளையாட்டை தொடங்கினார்.

கர்நாடக தேர்தல்படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

முதலமைச்சராக பதவியேற்கும் பேராவலில், தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவே கெளடவின் பேச்சைக் கேட்காமல், கட்சியில் இருந்து வெளியேறினார் குமாரசாமி.

ஆட்சியில் பாதி காலத்திற்கு குமாரசாமி முதலமைச்சர், மீதி பாதி காலத்திற்கு பா.ஜ.கவை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலமைச்சரானார் குமாரசாமி.

ஆனால் 2007 அக்டோபரில் தனது வாக்குறுதியை திரும்பப் பெற்ற அவர், பா.ஜ.க உறுப்பினர் முதலமைச்சராக முட்டுக்கட்டை போடும் விதமாக ஆதரவை விலக்கிக்கொண்டார்.

அதையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சி அமைத்தது.

கர்நாடக தேர்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நட்பாக மாறிய பகைமை

குமாரசாமியின் தந்தை, முன்னாள் பிரதமர் எச்.டி தேவே கௌட என்ன செய்தார்? அவர் 1999ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் இருந்து விலகி, மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை நிறுவினார். 1977இல், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவானதே ஜனதா கட்சி என்பதும், அந்த ஜனதா கட்சியில் இருந்தவர் தேவே கெளட என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் பகையாளியாக கருதிய காங்கிரசுடன் பங்காளியாக நட்பு பாராட்டினார் தேவே கெளட. 1996ஆம் ஆண்டில் தேவே கெளட பத்து மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தபோது, அவருக்கு ஆதரவளித்தது காங்கிரஸ்.

சித்தராமையா

சித்தரமையாவின் நிலைமையோ பாவம். தனக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் பணியாற்றிய சித்தராமையாவுக்கு கட்சியின் தலைமை பொறுப்பை ஒப்படைக்காமல் தனது மகன் குமாரசாமியை கட்சியின் தலைவராக்கினார் தேவே கெளட.

கர்நாடக தேர்தல்படத்தின் காப்புரிமைMANJUNATH KIRAN

கட்சிக்குள் நிராகரிக்கப்பட்ட சித்தராமையா, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளை கொண்டு ஒரு கட்சியை உருவாக்கினார், அவருக்கு காங்கிரசின் ஆதரவு கிடைக்க மாநில முதலமைச்சரானார்.

ஆனால் சித்தராமையாவின் பகைமை தேவே கெளடவுடன் முடியவில்லை. கர்நாடக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த தேவே கெளட மீதுகொண்ட வெறுப்பினால், அந்த சமூகத்தை சேர்ந்த அதிகாரிகளிடமும் சித்தராமையா பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அரசியல் அரிச்சுவடிகளை தனது தந்தையிடம் கற்றுக்கொண்ட குமாரசாமி, பல தந்திரங்களை பயன்படுத்தினார். தனது தந்தை தேவே கெளடவின் மீதான சித்தராமையாவின் தாக்குதல்களை ஒக்கலிகா சமூகத்தின் மீதான தாக்குதலாக சித்தரித்தார் குமாரசாமி.

கர்நாடக தேர்தல்

குமாரசாமியின் அரசியல் பயணம்

1996ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த குமாரசாமி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 11வது நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்கு சென்றார்.

இதுவரை, ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள குமாரசாமி, ஆறு முறை வெற்றி பெற்றிருக்கிறார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில், சென்னபட்டினா, ராம்நகர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு, இரு இடங்களிலும் வெற்றிபெற்றார்.

அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பதற்கு முன் குமாரசுவாமி திரைப்படம் தயாரிப்பாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்தார்

https://www.bbc.com/tamil/india-44185409

  • தொடங்கியவர்

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி நீடிப்பதில் என்னென்ன சிக்கல்கள்?

இந்திய அரசியலின் உச்சகட்ட பரபரப்பு தற்போதுகர்நாடக மாநிலத்தில்தான் நிலவி வருகிறது.

தாக்கு பிடிக்குமா -காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அண்மையில் நடந்து முடிந்த அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரியது. பின்னர் நடந்த திடீர் திருப்பமாக ஆட்சியமைக்க உரிமை கோரிய பா.ஜ.க. நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகியது.

இந்நிலையில், 78 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் , 37 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத). எச்.டி குமாரசாமி கர்நாடகாவின் முதலமைச்சராக வரும் 23-ஆம் தேதியன்று (புதன்கிழமை) பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் குறித்தும், இது தேசிய அரசியலில் எந்த அளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பது குறித்தும் மூத்த பத்திரிக்கையாளர் கேஸ்தூர் வாசுகி பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கேஸ்தூர் வாசுகி Image captionகேஸ்தூர் வாசுகி

''கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நீடிக்குமா என்பதும், இதன் வலிமை எவ்வாறு இருக்கும் என்பதும் போகப்போகத்தான் தெரியும்'' என்று வாசுகி தெரிவித்தார்.

முரண்பாடுகளை புதிய அரசு எப்படி எதிர்கொள்ளும்?

''பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரும் காங்கிரசின் முயற்சி, 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக தோன்றுகிறது'' என்று தெரிவித்த அவர், இந்தியா முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்தால் பெரும்பாலான தொகுதிகளை வெல்ல முடியும் என்ற எண்ணம் அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது'' என்று வாசுகி குறிப்பிட்டார்.

இதனையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கூட்டணி வாய்ப்புகள் குறித்து சிந்தித்து அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வியூகம் அமைத்து வருகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''ஆனால், இந்த புதிய அரசியல் திருப்பத்தில் பல கேள்விகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளன''

தாக்கு பிடிக்குமா -காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணிபடத்தின் காப்புரிமைAFP

''சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் அவரை கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்து வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரான ஜி.டி. தேவகெளடா தற்போது இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த முரண்பாட்டை எப்படி பார்ப்பது?'' என்று அவர் வினவினார்.

''கர்நாடகாவில் சமூக ரீதியாக மாறுபட்ட பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இந்த வேற்றுமைகளை, அரசியல் பகைமையை களைந்து இவர்கள் இணைந்து அரசியல் மற்றும் அரசுப் பணியாற்ற வேண்டும். இது எந்த அளவு இரு தரப்புகளிடையே உரசலை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை'' என்று வாசுகி மேலும் தெரிவித்தார்.

பாஜகவின் அரசியல் வியூகம் என்ன?

''காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் மற்றும் உரசல்கள் முழுவதும் விலகாத நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் இந்த கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே உண்டான கசப்பை எவ்வாறு சரிசெய்யும்'' என்று கேள்வியெழுப்பினார்.

''மற்ற மாநிலங்களில் இதுபோன்ற முரண்பட்ட அரசியல் கூட்டணிகளுக்கு ராகுல் காந்தி எவ்வாறு முயற்சி செய்யப் போகிறார் என்று தெரியவில்லை''

கர்நாடகாவில் விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையே கூட்டணி இல்லையென காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ள நிலையில், இது எந்த மாதிரியான அரசியல் மாற்றம் என்று மக்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் அரசியல் வியூகம் பற்றி கேட்டதற்கு, ''ஆட்சியமைக்க முடியாத நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை பங்கு போட போகின்றன, ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யப் போகின்றன என்பதை பாஜக நன்கு உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என்று வாசுகி குறிப்பிட்டார்.

சங்பரிவார் அமைப்பின் 'பி டீம்' : மஜதவை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி

''37 இடங்களை மட்டும் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி நாளை மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாளில் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இது என்ன மாதிரியான ஜனநாயகம்? காங்கிரஸ் ஏன் இந்த அளவு சமரசம் செய்கிறது?''

கர்நாடக அரசியல் திருப்பம்: யாருக்கு வெற்றி? யாருக்கு இழப்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை சங்பரிவார் அமைப்பின் 'பி டீம்' என்று ராகுல் காந்தி தேர்தல் பிரசார காலத்தில் கூறியிருந்தது தற்போதுள்ள நிலையில் நினைவுகூர வேண்டிய ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

குமாரசாமியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாநில தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த கட்சிகளை காங்கிரஸ் கட்சி எவ்வாறு ஒருங்கிணைக்கப் போகிறது என்று தெரியவில்லை என்று வாசுகி குறிப்பிட்டார்.

''நான் 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பேன் என்று நேற்று குமாரசாமி கூறியுள்ளார். ஆனால், இதுபற்றி காங்கிரஸ் கட்சி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே துணை முதலமைச்சர் பொறுப்பு, வெவ்வேறு இலாகா பொறுப்புகள் எந்தக் கட்சிக்கு செல்லும் என்பது போன்ற தகவல்கள், வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இதனை எவ்வாறு இந்தக் கட்சிகள் எதிர்கொள்ள போகின்றன என்று தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

பாஜகவின் நிலை என்ன?

தற்போது எந்த உடனடி அரசியல் நகர்வையும் பாஜக எடுக்காது என்று நம்புகிறேன். அதே வேளையில், தங்களின் வாய்ப்புக்காக நிச்சயம் அந்தக் கட்சி காத்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவசரப்பட்டுவிட்டதா பாஜக?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅவசரப்பட்டுவிட்டதா பாஜக?

''104 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மற்ற கட்சிகளை சேர்ந்த லிங்காயத்து சமூக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று நினைத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனால் அவர் ஆட்சியமைக்க மிகவும் அவசரம் காட்டினார்'' என்று பாஜகவின் அரசியல் நகர்வு குறித்து அவர் குறிப்பிட்டார்.

தற்போது கர்நாடகாவில் ஏற்பட்ட புதிய அரசியல் மாற்றத்தால் எந்தக் கட்சிக்கு ஆதாயம், எந்த கட்சிக்கு இழப்பு என்று கேட்டதற்கு, '' இந்த புதிய திருப்பத்தில், நிச்சயம் மதசார்பற்ற ஜனதாதள கட்சிதான் வெற்றியாளர். இந்த புதிய அரசியல் ஏற்பாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு. பாஜகவை பொறுத்தவரை அவர்களுக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை'' என்று வாசுகி குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-44198023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.