Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்!

Featured Replies

முள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்!

 

 
Image
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் மக்களுக்கு வழங்கிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது அங்கு மழை பொழிந்தவண்ணம் உள்ளது. நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் வீதியோரமாக கொட்டகை அமைத்துள்ள படையினர், அவ்வழியால் வரும் மக்களை இடைமறித்து குளிர்பானங்கள் வழங்கிவருகின்றனர்.

எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்? யுத்த வெற்றியை இன்றையதினம் இங்கு கொண்டாடுகிறீர்களா? என்று சம்மந்தப்பட்ட படையினரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த படையினர், “இன்றைய தினம் முல்லைத்தீவில் துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதால் கடைகள் அனைத்தும் பூட்டியுள்ளன. நினைவேந்தலை கடைப்பிடிக்கும் மக்களுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். நிகழ்வுகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் சிறிய உதவியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். மற்றும்படி இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வாக ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை. நாம் என்றும் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானவர்களேயென்றி மக்களுக்கு எதிராளிகள் இல்லை. இறந்துபோன மக்களின் உணர்வினை மதித்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என்றனர்.

குறித்த பகுதியில் பேருந்துகளில் வந்த மக்களை நடு வீதியில் நின்று மறிக்கும் படையினர் தமது குளிர்பானங்களை மக்களுக்கு வழங்குவதாகவும் இதனை சில மக்கள் தாகத்தினால் பெற்று பருகுவதாகவும் பலர் அதனை புறக்கணிப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும் வெளிப்படையாக இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்டம் இல்லை என படையினர் தெரிவித்தபோதும் ஏதாவது உள் நோக்கம் இருக்கலாம் என அங்கிருப்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Image0

Image1

http://www.ibctamil.com/srilanka/80/100684?ref=bre-news

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் கண்ணீர் சிந்தியவர்களுக்கு, இராணுத்தினர் மென்நீர் கசிந்தனர்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து  கொட்டும் மழையிலும்   குளிர்பானம் வழங்கியுள்ளனர்

 

Army-Mulli1.jpg?resize=800%2C450Army-Mulli2.jpg?resize=800%2C450

IMG_0379.jpg?resize=800%2C533IMG_0380.jpg?resize=800%2C534IMG_0383.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/79735/

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உருக்கம் என்ன கனிவு??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.