Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்­கில்- 36 ஏக்­கர் காணிகளுக்கு இன்று விடிவு!!

Featured Replies

வலி.வடக்­கில்- 36 ஏக்­கர் காணிகளுக்கு இன்று விடிவு!!

 

Capture-271.jpg

 
 
 
 

வலி.வடக்­கில் இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து 36 ஏக்­கர் காணி மக்­க­ளின் மீள்  பாவ­னைக்கு இன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஜே/233 கிராம அலு­வ­லர் பிரி­வுக்கு உட்­பட்ட மாம்­பி­ராய், மாங்­கொல்லை பகு­தி­களே  மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ளன.

85 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 36 ஏக்­கர் காணித் துண்­டு­கள் இதற்­குள் அடங்­கி­யுள்­ளன.  காணி உரி­மை­யா­ளர்­கள், இன்று தெல்­லிப்­பழை பிர­தேச செய­ல­கத்­துக்கு நேரில் வரு­மாறு, பிர­தேச செய­லர் சிவ­சிறீ கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/10/வலி-வடக்­கில்-36-ஏக்­கர்-காணிகளுக்கு-இன்று-விடிவு.html

  • தொடங்கியவர்

வலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு!!!

 

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. 

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஜே 233 கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லைப் பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் விடுவிக்கப்பட்ட பகுதிகளை தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு அடையாளப்படுத்தினார். அப்பகுதிக்கு விரைந்த மக்கள் தமது வீடுகளுக்கோ, ஒழுங்கைகளுக்கோ செல்ல முடியாத நிலையில்  பற்றைகள் மண்டிக் காணப்படுகிறது.  இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடாகச் சென்று தமது காணிகளை பார்வையிட்டனர். 

இதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணி வீடுகள் விடுவிக்கப்படவில்லை அவை தொடர்ந்தும்  இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன. இதனால் காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோயில் பின்பகுதியூடாகவோ, மாம்பிராய் உள் வீதியூடாகவோ விடுவிக்கப்பட்ட காணிக்குள் போக முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் விடுவிக்கப்பட்ட  தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

http://www.virakesari.lk/article/33962

  • தொடங்கியவர்

காடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

33729364_2467697906591124_52452630754890
 
 
 
 

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காணிகள் இப்பிலிப்பிலி மரங்களால் மூடப்பட்டிருந்தன. தமது வீடுகளையோ ஒழுங்கைகளையோ இனங்காண முடியவில்லை. இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடாகச் சென்று தமது காணிகளை பார்வையிட்டனர்.

ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய் , மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன என்று தெல்லிப்பழை பிரதேச செயலர் தெரிவித்தார்.

தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கு வலி.வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

33686730_2467698109924437_1249074595319733685509_2467698013257780_8754838976566633522094_2467697949924453_5192266726699433503343_2467698283257753_90561876044745

http://newuthayan.com/story/13/காடுகளால்-மறைந்த-வீடுகள்-வீதிகள்-காணிக்குள்-சென்ற-மக்கள்-அதிர்ச்சி-வலி-வடக்கில்-36-ஏக்கர்-காணிகள்-விடுவிப்பு.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

 

 

7 hours ago, நவீனன் said:

வலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு!!!

 

 

மிகவும் நல்ல விடையம்

Edited by சுவைப்பிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.