Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் மீட்பு -நாளை மீண்டும் தொடரும்-(வீடியோ இணைப்பு)

Featured Replies

மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் மீட்பு -நாளை மீண்டும் தொடரும்-(வீடியோ இணைப்பு)

 

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (29) இரண்டாவது நாளாக மனித எலும்புகள் மீட்கும் பணிகள் சற்று முன் நிறைவடைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில் இரவு 7 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளது.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும்,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது. எனினும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் காலை முதல் இரவு வரை முழுமையான அகழ்வுகள் இடம் பெற்றது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் விசேட குழுவினர் தமது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதோடு,பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பொலித்தீன் பையில் அதன் உற்பத்தி திகதி கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக பல்வேறு மனித எலும்புத்துண்டுகள்,பற்கள் என மீட்கப்பட்டுள்ளது. இரவு 7 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை புதன் கிழமை(30) காலை குறித்த இரு இடங்களிலும் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெறவுள்ளது.குறித்த இரு இடங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/81404/

  • தொடங்கியவர்

"லங்கா சதொச" விற்பனை நிலைய வளாக மண்ணை பெற்றவர்களா நீங்கள் ?

 

 
 

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண்ணை பெற்றுக்கொண்ட மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்து மண்ணை ஆய்விற்கு உற்படுத்துமாறு விசேட சட்ட வைத்திய நிபுனர் ஏ.எஸ்.ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று  மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

mannar.jpg

"மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச'  விற்பனை நிலையத்தின்  வளாகத்தில் உள்ள மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பொது மக்கள் குறித்த மண்ணினை கொள்வனவு செய்து தமது வீடுகளில் கொட்டிய போது மனித எலும்புத்துண்டுகள் வெளி வந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இவ் விடயம் தொடர்பில் குறிப்பிட்ட சிலர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 19 திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் இடம் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளினால் கூறப்பட்டமைக்கு அமைவாக மன்னார் நீதவான் மார்ச் மாதம் 28 ஆம் திகதி அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த மண் பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட போது மனித எலும்புகள் குறித்த மண்ணில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து மனித எலும்புகள் மீட்கும் பரிசோதனைகள் அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கீழ் கட்டம் கட்டமாக இடம் பெற்று வருகின்றது.

மன்னார் நீதவானின் முன்னிலையில் அவரின் கட்டளைக்கு அமைவாக குறித்த அகழ்வு பணிகள் தற்போதும் இடம் பெற்று வருகின்றது.

அழைக்கப்பட்ட திணைக்களங்களில் இருந்து வருகை தந்தவர்கள் குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.

குறித்த அகழ்வை முழுமைப்படுத்த வேண்டியுள்ளது. எனவே மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மண்ணை மக்கள் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

மக்கள் தமது வீடுகளுக்கு போட்டுள்ள குறித்த மண்ணினையும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே குறித்த மண்ணையும் ஆய்வு செய்யும் போதே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

குறித்த வளாகத்தில் இருந்து மண்ணை பெற்றவர்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த மண்ணையும் ஆய்வு நவடிக்கைகளுக்கு உற்படுத்த வேண்டும்.

இதன் மூலமே குறித்த மண்ணில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்க முடியும்." எனதெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/34139

  • தொடங்கியவர்

மன்னாரில் மனித எலும்புக்கூடுகளை தேடி 3வது நாளாகவும் அகழ்வு – ஊடகவியலாளர்களுக்கு நிபந்தனை :

DSC_0027.jpg?resize=787%2C525
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று(30) புதன் கிழமை 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்ற போதும் இன்று மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அகழ்வு பணிகளின் போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதினை அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளனர்.

 

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இன்று அகழ்வு பணியினை செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட போதிலும் அகழ்வு பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தல், மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

-அகழ்வு பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போதே ஊடகவியலாளர்களுக்கு கடமையினை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உரிய தடைய பொருட்கள் மற்றும் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் ,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

-தொடர்ந்தும் இரு இடங்களிலும் அகழ்வுகள் இடம் பெற்ற வருகின்றது.குறித்த அகழ்வகளின் போது மனித எலும்புத்துண்டுகள்,பற்கள் என மனித எச்சங்கள் அதிகலவில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_0043-2.jpg?resize=787%2C525DSC_0058.jpg?resize=787%2C525

http://globaltamilnews.net/2018/81505/

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் ஒரு எம்பிலிப்பிட்டிய.. போல வடக்குக் கிழக்கில் பல உள்ளன. ஆனாலும் இவை மூடிமறைக்கப்பட்டு.. சுடுகாடு... இல்ல சவக்காடு என்று முத்திரை குத்தப்பட்டு விடும். ?

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.