Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய வரைபடம் – நாளை வெளியாகிறது!!

Featured Replies

இலங்கையின் புதிய வரைபடம் – நாளை வெளியாகிறது!!

 

map-srilanka-750x430.jpg

 
 

அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளது என்று நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

 

ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார். இதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/17/இலங்கையின்-புதிய-வரைபடம்-நாளை-வெளியாகிறது.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நிலம் சுருங்கி.. சிங்கள.. மற்றும் அரபு ஊர்களாக திரிவுபடுத்தப்பட்டுக் காண்பிக்கப்பட்டாலும்.. ஆச்சரியப்பட எதுவுமில்லை. ?

  • தொடங்கியவர்

இதோ இலங்கையின் புதிய வரைபடம் 

 

 

(கே.லாவண்யா)

 

இலங்கைக்கான புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்பிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்று இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. 

IMG_9231.jpg

இந்நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1:500 எனும் விகிதத்திலே இலங்கைக்கான புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகநகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மொஹரகந்த நீர்த்தேக்கம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான கட்டமைப்பு ஆகியன வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

IMG_9248.jpg

துறைமுகநகரமானது காலிமுகத்திடலிலிருந்து 269 ஹெக்டயர் நிலப்பரப்பினை மேலதிக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

IMG_9282.jpg

இது தொடர்பாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த தெரிவிக்கையில், 

IMG_9295.jpg

இலங்கையின் இடப்பரப்பானது தொடர்ச்சியாக மாற்றங்களுக்குட்பட்டுவருகின்றது. இலங்கையில் பாரிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வண்முள்ளமையால் இன்னும் சில வருடங்களில் இலங்கை வரைபடத்திற்கு மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.

http://www.virakesari.lk/article/34231

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.