Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முதலமைச்சர், விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Featured Replies

வடமாகாண முதலமைச்சர், விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
 
 

வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கியமையை கண்டித்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

image_23ed327ef8.jpg

வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து, வவுனியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கம் என்பன இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டமானது, வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனை முன்பாக ஆரம்பித்து கடைத்தெரு வழியாக யாழ் வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் நிறைவடைந்ததுடன் இறுதியில் முதலமைச்சர் மற்றும் விவிசாய அமைச்சரை கேலி செய்யும் வீதி நாடகமும் இடம்பெற்றது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடமாகாண-முதலமைச்சர்-விவசாய-அமைச்சருக்கு-எதிராக-ஆர்ப்பாட்டம்/71-216861

  • தொடங்கியவர்

முதலமைச்சர் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் ஆகியோருக்கு எதிராக வவுனியாவில் கண்டன ஊர்வலம் : ஈபிஆர்எல்எப், ரெலொ, புளொட் உயர்மட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு

 

முதலமைச்சர் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் ஆகியோருக்கு எதிராக வவுனியாவில் கண்டன ஊர்வலம் : ஈபிஆர்எல்எப், ரெலொ, புளொட் உயர்மட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு

வவுனியாவில் விவசாய பிரதிப்பணிப்பாளரை இடம்மாற்றியமை தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சிலஅமைப்புக்கள் இணைந்து இன்று கண்டன ஊர்வலம் ஓன்றினை நடத்தியிருந்தன.

கல்வி நிர்வாகத்தில் பல்வேறு இடர்பாடுகள் காணப்பட்டு வரும் நிலையிலும் ஆசிரியர்களுக்கு பல பிரசினைகள் உள்ள நிலையில் வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்தும் வவுனியாவில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஊர்வலம் இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கம் என்பன இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இடம்மாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்தும் மூங்கில் செய்கையை உடன் நிறுத்தவேண்டும் எனவும் பதாதைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இவ் ஊர்வலத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்பீடத்தை சேர்ந்த உறுப்பினருமான பூ.சந்திரபத்மன், ஈ.பிஇஆர்.எல்.எப் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் கே. அருந்தவராஜா, செட்டிகுளம் பிரதேசசபையின் உறுப்பினரும் புளொட்டின் முக்கியஸ்தரான ஜெகதீஸ்வரன், புதிய மாக்சிச லெனின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பிரதீபன்,
இலங்கை ஆசரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டமுக்கியஸ்தரும் அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பின் தலைவர் நேசராஜா உட்பட 40 பேர் வரையில் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஊர்வலமானது வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனை முன்பாக ஆரம்பித்து கடைத்தெரு வழியாக யாழ் வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகததிற்கு அருகாமையில் நிறைவடைந்ததுடன் இறுதியில் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரை கேலிக்கை செய்யும் வீதி நாடகமும் அரகேற்றப்பட்டது.

IMG_4361IMG_4380IMG_4382IMG_4389IMG_4404

http://www.samakalam.com/செய்திகள்/முதலமைச்சர்-மற்றும்-வடக்/

ஆர்ப்பாட்டம் செய்த முறை பிடித்திருக்கிறது. ஒரு நல்ல வழிமுறை -  வீதி நாடகங்கள் மூலமான எதிர்ப்பு ("அன்பே சிவம்" படத்தை ஞாபகப்படுத்துகிறது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.