Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது

Featured Replies

தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைதுபடத்தின் காப்புரிமைROUTE55 / ISTOCK

இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஓர் படகில் இரு சிறுவர்கள் , ஓர் பெண் உட்பட ஆறுபேர் படகு மூலம் தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களை ஏற்றிவந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுபேர் மட்டுமே தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்தவர்களை கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை இன்று யாழ் மல்லாகம் நீதிமன்றில் ஆயர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கேசன்துறை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, இம்மாதத்தில் இதுவரை 19 பேர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44311631

ஒரு காலத்தில் இங்கை இருந்து அங்கே போகும்போது நடுக்கடலில் அவங்கட கடற்படையால் கைது என்று செய்தி வரும் இப்ப மாறி செய்தி வருகிறது.

எந்த வித ஆவணக்களும் இல்லாமல் இப்படி திரும்பிவரும் அகதிகள் விடயத்தில் அவதானம் அதிகமாக தேவைப்படுகிறது.

இந்திய உளவுத்துறையின் ஊடுருவலும் நடக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.