Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் – உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பு!!

Featured Replies

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் – உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பு!!

 

Capture-359-750x415.jpg

 
 
 
 

வட­ம­ராட்சி கிழக்­கில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் செய்­வ­தற்கு திணைக்­க­ளங்­கள் எந்த அனு­ம­தி­யை­யும் வழங்­க­வில்லை. உள்­ளூர்­வா­சி­கள் சிலரே, தமது பகு­தி­க­ளில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­ற­னர்.

இவ்­வாறு வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லக மற்­றும் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் பெரும் எடுப்­பில் வந்து தங்­கி­யி­ருந்து கடல் அட்டை பிடிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். உள்­ளூர் மீன­வர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­ற­னர். இதற்கு எதி­ரா­கப் போராட்­டம் நடத்­து­வ­தற்­காள முயற்­சி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

 

தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு திணைக்­க­ளங்­கள் அனு­மதி வழங்­கி­யுள்­ளதா என்று கேட்­ட­போதே, அதி­கா­ரி­கள் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

2016ஆம் ஆண்டு வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில், வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தங்­கி­யி­ருந்து தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு எந்த அனு­ம­தி­யும் வழங்­கு­வ­தில்லை என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அந்­தத் தீர்­மா­னம் கடந்த மாதம் இடம்­பெற்ற ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தி­லும் மீண்­டும் நிறை­வேற்­றப்­பட்­டது.

இருப்­பி­னும், இத­னை­யும் மீறி வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து தங்­கி­யி­ருந்து சிலர் தொழில் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் அவர்­களை வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. சில நாள்­க­ளுக்கு முன்­னர், அந்த வாடி­கள் அமைந்­துள்ள பிர­தே­சங்­க­ளில் துண்­ட­றிக்­கை­கள் ஒட்­டி­னோம். கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் பொலிஸ் நிலை­யத்­தில் மீண்­டும் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.  கட­லட்டை பிடிப்­ப­தற்கு கொழும்பு அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. ஆனால் அவர்­கள் தங்­கி­யி­ருந்து தொழில் செய்­வ­தற்கு உள்­ளூர்­வா­சி­கள் சிலரே உத­வு­கின்­ற­னர். இவ்­வாறு அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் உள்ள கடற்­தொ­ழில் சமா­சங்­கள் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் இன்று கூடி ஆரா­ய­வுள்­ளன. இந்­தப் பிரச்­சி­னைக்­காக விரை­வில் அவர்­கள் போராட்­டம் நடத்­த­வுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/09/வடமராட்சி-கிழக்கில்-தென்னிலங்கை-மீனவர்கள்-உள்ளூர்வாசிகளே-ஒத்துழைப்பு.html

ஓங்குக தமிழரின் ஒற்றுமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.