Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று வருடங்களில் அரசியலில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்

Featured Replies

மூன்று வருடங்களில் அரசியலில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்

city-1-blackGMGPage1Image0009-e9096acf4efc2efd42e2335ad1f3cc7c221f2cfa.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிருப்தி  100 நாள் வேலைத்திட்டம் குறித்தும் விமர்சனம்

மஹிந்தவுக்கு ஹெலி கொடுத்தது யார்?

அன்றே பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும்

யாரும் இல்லாததால்தான் என்னை வேட்பாளராக்கினர்

சு.க.இல்லாமல் 19 ஐ நிறைவேற்றியிருக்க முடியுமா?

சிங்கம் போலவே நான் வெளியேறி வந்தேன்

மலேஷியா சர்வாதிகார நாடல்ல

 

100 நாள் வேலைத்திட் டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செய லாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன். மூளையிருந்திருந்தால் நான் பதவியேற் றதும் அன்றைய இரவே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். எனது 47 வருடகால அரசியலில் கடந்த மூன்று வருடங்களில் நான் இருந்ததை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை தெரிவித்தார். 

மாதுலுவாவே சோபித தேரரின் 76 பிறந்த தின நினைவு தினத்திற்கு எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை. எந்தவொரு தகவலும் எனக்கு வழங்கவில்லை. இந்த நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் இப்படிதான் நடக்கின்றன. இந்த அரசாங்கத்தின் கடந்த மூன்று வருடங்கள் தொடர்பில் இதனை விட இன்னும் பல தகவல்களை பெற வேண்டுமாயின் என்னை அணுகுங்கள். அவ்வாறான விவாதத்துக்கு அழைத்தால் அதற்கும் நான் தயாராக உள்ளேன். திறந்த விவாததிற்கும் நான் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்த பின்னர் பழைய வாகனங்களை மாத்திரம் வைத்து விட்டு புதிய வாகனங்களை அவர் எடுத்துக்கொண்டு சென்றார். இரண்டு புதிய வாகனங்கள் மாத்திரமே மிஞ்சியிருந்தன.அதனை நான் பிரதமருக்கு வழங்கினேன். இரண்ரை வருடங்கள் நான் பழைய வாகனமே உபயோகித்தேன். முன்னாள் ஜனாதிபதி தோல்வி அடைந்த பின்னர் தங்காலை செல்ல ஹெலிகொப்டர் வழங்கியது யார்? சோபித தேரர் வானுலகில் இறைவனாக பரிணமித்தால் உண்மை வெளியாக வேண்டும் என பிராத்திக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாதுலுவாவே சோபித தேரரின் 76 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அழைப்பு இல்லை 

மாதுலுவாவே சோபித தேரரின் 76 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வுக்கு எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை. எந்தவொரு தகவலுக்கு வழங்கவில்லை. இந்த நாட்டின் அனைத்து செயற்பாடுகள் இப்படிதான் நடக்கின்றன. இலங்கை மன்றத்தின் தலைவரை நானே நியமித்தேன். இலங்கை மன்றத்தில் ஏதாவது நிகழ்வு நடந்தால் அதுபற்றி அவர் எனக்கு அறிவிப்பார். நேற்று முன் தினம் அவர் தொலைபேசி மூலம் எனக்கு அழைத்து சோபித தேரரின் நிகழ்வுக்கு வருவீர்களா? என கேட்டார். எங்கு நடைபெறுகின்றது என்று கேட்டேன். இலங்கை மன்றத்தில் இருப்பதாக கூறினார்.

எத்தனை மணிக்கு என்று கேட்டேன். மூன்று மணிக்கு என்று அவர் கூறினார். உங்களின் பெயரும் வருகை தருவோரின் பெயர் பட்டியலின் உள்ளது என கூறினார். நான் கூறினேன். எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு என்னுடைய பிரத்தியேக செயலாளரிடம் சோபித தேரரின் நினைவு தின நிகழ்வுக்கு அழைப்பு கிடைத்துள்ளதா என வினவினேன். இல்லை என்றார். என்னுடைய ஊடக இணைப்பாளரின் தகவலை பெற்று நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் ரவி ஜயவர்தனவிற்கு தொலைபேசியில் அழைத்து சோபித தேரர் நிகழ்வு தொடர்பில் வினவினேன். இவ்வாறான நிகழ்வு இருகின்றதா? எனக்கு எந்தவொரு அழைப்பு கிடைக்கவில்லை என கூறினேன். அதன்பின்னர் இது தொடர்பில் தேடி பார்த்துவிட்டு ஒரு பிழை நடத்துள்ளதாக ரவி ஜயவர்தன

கூறினார். உங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என பெயர் பட்டியலில் இருந்த போதும் ஏனையோரை எதிர்பார்த்து உங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார்.

இங்கு பேசிய திஸ்ஸ தேரர் நான் சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்றமையினால் ரொட்டி தீய்ந்து போனதாக கூறினார். ரொட்டி தீய்ந்து போன விதத்தையும் ரொட்டி கருகி சாப்பிட முடியாமல் போனதை பற்றி எனக்கு தற்போது நன்றாக கூற முடியும். கருகிய விதத்தை என்னுடன் யாராவது விவாதத்திற்கு வந்தால் கூறுவேன்.

மாதுலுவாவவே சோபித தேரர் யுத்த காலத்தின் போது பல சேவைகளை செய்தார். திருகோணமலை, மன்னார் போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு சேவை செய்தார். அவருடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். அவருக்கு பல உதவிகளை செய்துள்ளேன். என்னை அவர் பொது வேட்பாளராக தெரிவு செய்த பின்னர் கூட அவருடனான உறவு பலமானதாக இருந்தது. எனினும் மாதுலுவாவே சோபித தேரர் எதிர்பார்த்த நோக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் சீரழித்தது யார்?.

மலேசியா சர்வாதிகார நாடல்ல

நான் தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு பத்திரிகை வாசிப்பேன். இன்றைய ஆங்கில பத்திரிகையொன்றில் மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட்டினதும் எனதும் படம் பொறித்து செய்தியொன்றை வெளியிட்டு இருந்தது. இதில் மஹதீர் மொஹமட் ஐந்து நாட்களில் செய்த விடங்கள் பட்டியலிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஊழல் மோசடிமிக்க அமைச்சர்களையும் பொலிஸார், நீதிபதிகள் என பலரை கைது செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் எனது படத்தை எடுத்து காட்டி மூன்றரை வருடங்களில் எதுவும் செய்யவில்லை என்று காண்பித்துள்ளனர். இந்த செய்தி தொடர்பாக நான் இலங்கைக்கான மலேசிய தூதுவரிடமும் மஹதீர் மொஹமட்டின் கட்சியின் பிரதிநிதியிடம் இப்படி ஏதும் நடந்துள்ளதாக என வினவினேன். எனினும் அந்த இருவரும் அதனை முழுமையாக மறுத்தனர். ஆகவே இந்த ஆங்கில பத்திரிகை முற்றிலும் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையின் மீது எனக்கு நல்ல மதிப்பு இருந்தது. சமூக வலையத்தளங்களிலும் இதனை வைத்தே தாக்குகின்றனர். மஹதீரினால் முடியாவிடின் மைத்திரியால் முடியாதது ஏன்?. மலேசியாவின் முன்னாள் பிரதமரை அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளதே ஒழிய கைது செய்யப்படவில்லை. ஐந்து நாட்களில் கண்டபடி அனைவரையும் கைது செய்ய முடியுமாயின் அது ஜனநாயக நாடல்ல. சர்வதிகார நாடாகும். நீதியில்லாத நாட்டிலேயே இப்படி நடக்கும். நாம் மூன்று வருட காலப்பகுதியில் பலரை கைது செய்துள்ளோம். பலர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி செயலக புதிய வாகங்களுக்கு நடந்து என்ன?

திருடர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேட்கின்றனர். சோபித தேரரின் கோட்பாட்டை பின்பற்றுவன் என்ற வகையில் ஜனவரி 8 தேர்தல் நடத்தப்பட்டு ஜனவரி 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு எம்மை அழைத்தது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கே தேர்தல்கள் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமது உடைமைகளை கட்டிக்கொண்டு சென்றார்.

இதன்போது பழைய வாகனங்களை மாத்திரம் வைத்து விட்டு புதிய வாகனங்களை அவர் எடுத்துக்கொண்டு சென்றார். இரண்டு புதிய வாகனங்கள் மாத்திரமே மிஞ்சியிருந்தன. அந்த சமயம் பிரதமருக்கு பாவிப்பதற்கு வாகனம் இல்லை என கூறப்பட்டதை அடுத்து அந்த இரு வாகனத்தையும் நான் பிரதமருக்கே வழங்கி விட்டேன். எனினும் நான் சுமார் இரண்டரை வருடங்களாக பழைய வாகனத்தையே உபயோகித்தேன். அதன்பின்னரே புதிய காரை கொள்வனவு செய்தேன்.இதற்கு இங்கு அமர்ந்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சி கூறுவார். அதுமாத்திரமின்றி ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு தொழில்நுட்ப கருவியொன்று இருந்தது. ஜனாதிபதிக்கு பக்கத்தில் அது வைக்கப்பட்டிருக்கும். எனினும் அந்த கருவியை கூட விட்டுவைக்க வில்லை. அந்த கருவி ஒருவேளை கொண்டு செல்லப்பட்ட வாகனத்துடன் சென்றிருக்கும்.

மஹிந்தவுக்கு ஹெலிகொப்டர் வழங்கியது யார்?

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தங்காலைக்கு ஹெலிகொப்டரில் எப்படி சென்றார்?. யார் ஹெலிகொப்டரை வழங்கியது? நானா வழங்கினேன்?. இதற்கு பதில் வழங்க வேண்டியவர்கள் பதில் வழங்க வேண்டும். இது தொடர்பாக விமானபடையிடம் வினவினேன். யார் ஹெலிகொப்டர் வழங்கியது என கேட்டேன். அதற்கு விமானபடை தளபதி கூறினார். நீங்கள் கேட்டதாக இன்னார் சொன்னார் அதனால் வழங்கினோம் என என்னிடம் கூறினார். இது பற்றி பல விடயங்களை கூற முடியும்.

சுதந்திரக் கட்சி இணைந்தமையினால் நடந்தவை

அத்துடன் சுதந்திரக் கட்சியை இணைத்து கொண்டமையினால் அரசாங்கம் சீரழிந்ததாக பலர் கூறுகின்றனர். சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை பெற்றமையினாலேயே அரசாங்கம் இந்த நிலைமைக்கு வந்ததாக கூறுகின்றனர். நான் ஜனாதிபதி ஆகும் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனம் மாத்திரமே இருந்தது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பாமையுடன் 142 ஆசனங்கள் இருந்தன. அதில் 127 பேர் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும்

அப்போது 47 ஆசனங்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

100 நாள் திட்டத்தை தயாரித்தது யார் என்று எனக்கு தெரியாது

100 நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தது யார் என்று எனக்கு தெரியாது. பொது வேட்பாளராக என்னை அழைத்தமைக்கு நான் நன்றி கூறுகின்றேன். எனினும் தற்போது ஒரு சிலர் கூறுகின்றனர். நாய் குட்டியை களமிறக்கினாலும் அப்போது வெற்றி பெற்றிருக்கும் என கூறுகின்றனர். அப்படி கூறுவதாயின் ஏன் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரை பொது வேட்பாளராக நியமித்தீர்கள். அப்போது வெற்றிவாகை சூடும் அளவிற்கு எதிரணியி்ல யாரும் இருக்கவில்லை. அதனால் என்னை தேர்ந்தெடுத்தனர்.யாரும் இல்லாதததால் தான் என்னை வேட்பாளராக்கினர்.

சர்வாதிகார அரசாங்கத்தில் இருந்து சிங்கம் போன்று வெளியேறினேன்.

நாட்டில் காணாமல் போதல், ஊழல் மோசடிகள், அடக்குமுறை என மிகவும் மோசமான முறையில் ராஜபக்ஷ ஆட்சி சர்வாதிகாரமாக நடந்துக்கொண்டிருக்கும் போது நான் அந்த அரசாங்கத்தில் இருந்து சிங்கம் போன்று வெளியே வந்தேன். நான் முதலாளித்துவ, அரசியல் குடும்பத்தை சார்ந்தவன் அல்ல. நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனாக அதனை செய்தேன். நான் அப்போது செய்த அர்ப்பணிப்பை தற்போது பலர் மறந்துள்ளனர்.

100 நாள் வேலைத்திட்டத்தை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாவிட்டால் எப்படி அதனை அமுல்ப்படுத்துவது. எனக்கு பதில் கூறுங்கள்.

பாராளுமன்றத்தின் 47 ஆசனங்களை கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.வினரால் 100 நாள் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக புத்தகமும் அடித்தனர். இந்த திட்டத்திற்குள் அரசியலைமைப்பு திருத்தமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த பாராளுமன்றத்தில் 47 பேரின் விருப்பினால் அரசியலமைப்பினை திருத்த முடியும். 100 நாள் வேலைத்திட்டத்தில் அந்த குறிப்பிட்ட நாள் முடிவடைந்ததும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என கூறப்படவில்லை.

100 நாள் திட்டம் முட்டாள் தனமானது

100 வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செயலாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன். மூளையிருந்திருந்தால் நான் பதவியேற்றதும் அன்றைய இரவே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தது போதாதென்று இடைக்கால வரவு செலவுத்திட்டமும் கொண்டு வரப்பட்டது. அதனை சுதந்திரக் கட்சி இல்லாமல் நிறைவேற்ற முடியுமா?. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்ததை சுதந்திரக் கட்சி இல்லாமல் நிறைவேற்ற முடியுமா?. அந்த சட்டத்தை நிறைவேற்ற சுதந்திரக் கட்சியின் இணக்கம் இன்மையினால் 5 மணிக்கு பாராளுமன்றத்தில் நடத்த வேண்டிய வாக்கெடுப்பை பிற்போட்டேன். சுதந்திரக் கட்சியின் தீர்மானம் வராமையின் காரணமாக அன்றைய நாள் முழுவதும் பாராளுமன்றத்தி்ல இருந்து சுதந்திரக் கட்சியினர் செல்லும் இடமெல்லாம் சென்று அவர்களின் ஆதரவினை பெற முயற்சி செய்தேன்.

இருபிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கவே இணங்கினோம். கட்சி இல்லாமல் அரசாங்கத்தின் உறுப்பினர்களாக இருக்க ஏதாவது கட்சிகள் விரும்புமா? அப்படி ஏதாவது கட்சி முன்வருமா?. எமக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை சரியாக முடிக்க முடியாமல் போனது. சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்தமையினால் பல சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.

தலைமை பதவியை பலவந்தமாக பெறவில்லை

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமையினால் சுயாதீன ஆணைக்குழுக்கள் சீராக இயங்குகின்றன.நான் சுதந்திரக் கட்சியின் தலைவரானமையினால் இவை நடந்தது. நான் சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை பலவந்தமாக பெறவும் இல்லை. நான் கோரவும் இல்லை. கட்சியினர் அனைவரும் வந்து கோரியமைக்கு அமைவாக நான் தலைவர் பதவியை ஏற்றேன்.

நாட்டுக்கு பாதகமான பல யோசனை அமைச்சரவையில் நிராகரித்தேன்

சுதந்திரக் கட்சியினர் அமைச்சர்களானமையினால் நாட்டுக்கு பாதகமான எத்தனை அமைச்சரவை யோசனைகளை என்னால் நிராகரிக்க முடிந்தது. நான் ஒன்றை கூறுகின்றேன். ஒரு முறை அரச வங்கிகளில் பணங்களை தனியார் வங்கிக்கு விடுவிக்க யோசனை முன்வைக்கப்பட்டது. நான் எதிர்த்தும் அதனை மீண்டும் கொண்டு வந்தனர். எனினும் அப்போது அதற்கு நான் இடமளிக்கவில்லை. அன்று அதனை நிறைவேற்றியிருந்தால் தற்போது இலங்கை வங்கியோ, மக்கள் வங்கியோ, அரச வங்கிகள் எதுவும் இருந்திருக்காது.

47 வருட கால அரசியல் வாழ்க்கை மூன்று வருடத்தில் நாசம்

நான் சாதாரண பரீட்சை தோற்றுவதற்கு முன்பு இருந்தே சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். நான் 1967 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியலில் படி படியாக உயர்ந்து கொண்டே சென்றேன். எனது 47 வருடகால அரசியலில் கடந்த மூன்று வருடங்களில் நான் இருந்ததை விட கீழ்நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு விட்டேன். நான் கிராமத்தின் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன்.

மத்திய வங்கியை கொள்ளையிட சோபித தேரர் கோரவில்லை

மாதுலுவாவே சோபித தேரர் மத்திய வங்கியை கொள்ளையடிக்க கூறவில்லை. கடந்த மூன்று வருடங்கள் தொடர்பில் பேசுவதற்கு பல விடயங்கள் உள்ளன. எனினும் தற்போது அதனை நான் கூற மாட்டேன். நேரம் வரும்போது பல விடயங்களை கூறுவேன்.

அத்துடன் தற்போது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தாமதமாகுவதற்கு நான் தான் காரணமாம். அது முற்றிலும் போலியானது. டி.பி.ஏக்கநாயக்க வாகனம் பெற்றமை தொடர்பில் விசாரணை செய்யுமாறும் அமைச்சர் பெளசி அமைச்சு வாகனத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யுமாறும் நாட்டு மக்கள் கோரவில்லை. அதனை பார்க்க பல விடயங்கள் உள்ளன. அதனையே விசாரணை செய்ய வேண்டும்.பொது மக்கள் எதிர்பார்த்த ஒன்றும் நடக்கவில்லை.

வசீம் தாஜூதீன் குடும்பத்தினரை அணுகினால் உண்மை வெளிவரும்

வசீம் தாஜூதீனின் குடும்பத்தினருடனும் அவர்களது சட்டதரணிகளுடன் தனியாக பேசி பாருங்கள் உண்மைகள் பல வெளியாகும். நான் பல விமர்சனங்களுக்கு உள்ளானவன். சேறு பூசும் செயற்பாடுகளை கண்டு நான் அஞ்ச மாட்டேன். சோபித தேரரே நீங்கள் வானுலகில் இறைவனாக பரிணமித்திருந்தால் உண்மை வெளிவர வேண்டும் என பிராத்தியுங்கள்.

திறந்த விவாதத்து நான் தயார்

அத்துடன் கடந்த மூன்று வருடங்கள் தொடர்பில் இதனை விட இன்னும் பல தகவலைகளை பெற வேண்டுமாயின் என்னை விவாதத்துக்கும் அழைத்தால் அதற்கு நான் தயாராக உள்ளேன். திறந்த விவாதத்துக்கும் நேர்காணல்களுக்கும் நான் தயாராக உள்ளேன். எந்த சந்தர்ப்பத்திலும் என்னை வந்து சந்திக்க முடியும்.

ஜனாதிபதி வேட்பாளர் தற்போதே பெயரிடுவது நாட்டை பின்நகர்த்து செயல்

அத்துடன் தற்போது இன்னும் கால நேரம் உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர்களை இப்போதே பெயரிடுகின்றனர். இது நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு தள்ளும் செயற்படாகும். தேர்தல் நெருங்குவதனை போன்று ஊகங்களை வெளியிடுகின்றனர். இதனால் அரச இயந்திரங்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. ஆகவே மாதுலுவாவே சோபித தேரரின் நோக்கங்களை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-31#page-1

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கே இந்த நிலை என்றால்  தமிழ் மக்களின் தீர்வு 300 வருடம் கீழ்நிலைக்கு தள்ளப்படும்...என்று  எதிர்பார்க்கலாம்....

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.