Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதும் – தவராசா – முடியாது – உறுப்பினர்கள்..

Featured Replies

சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதும் – தவராசா – முடியாது – உறுப்பினர்கள்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்…

Never1.png?resize=615%2C385
மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும் மறுத்தனர்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த 4ம் மாதம் 10ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர்  நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதன் தொடர் நடவடிக்கையாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடை யிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில் ,

திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு த் தீர்வினை காணவேண்டும். அதாவது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் ஒன்றை கொண்டுவந்தாலே போதுமானது. இங்கு பேசப்படும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

அதனை அடுத்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றில் 50 வீத ஆதரவு தேவை. அதனை சிங்களவர்கள் தருவார்களா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா நீங்கள் அரசுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தரமாட்டார்களா? என கேள்வி எழுப்பினார்.

அதனை அடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அவர்கள் ஆதரவு தரமாட்டார்கள்.

ஆகவே 50 வீதமான ஆதரவு பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. மேலும் சிங்கள குடியேற்றங்களை வெறுமனே மகாவலி அதிகாரசபையில் பணியாற்றும் ஒரு ஊழியர் செய்யவில்லை. இந்த குடியேற்றங்களின் பின்னால் அரசாங்கத்தின் பாரிய திட்டமிடல்கள் உள்ளன என்றார்.

அதனை தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், முன்னாள் ஆளுநர் பளிகக்காரவுடன் ஒருதடவை பேசியிருந்தபோது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது என அவர் தமக்கு கூறியிருந்ததாக கூறினார்.

http://globaltamilnews.net/2018/82310/

பேசிப் பேசி ஒரு பயனும் இல்லை!
ஒரு திருத்தத்தை முன்மொழிகிறது தானே. அது வெல்லுதோ தோற்குதோ என்பதைப் பற்றி ஆரஞ்சு பிரயோசனம் இல்லை. என்ன நடந்தாலும் அதைவைத்து அடுத்த கட்டத்துக்கு புத்திசாலிகளால் நகர்த்த முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.