Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம்

ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 14:32 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதும் பொறுமை காத்து வட்டியும் முதலுமாக வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

மாலைமலர் நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி விவரம்:

அன்று சைக்கிள் குண்டு- இன்று விமான குண்டு: விடுதலைப் புலிகளை கண்டு கதி கலங்கும் சிங்களப் படைகள்

இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள்இ அவர்களை 1970-களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நாலாந்தர குடிமக்கள் போல தமிழர்களை ஒதுக்கினார்கள்.

சொந்த மண்ணில் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை உருவானதால் ஈழத் தமிழர்கள் கொதித்து எழுந்தனர். மகாத்மா காந்தி போல சிலர் அறவழிப் போராட்டத்தை கைக்கொண்டனர். சிலர் சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள்.

தொடக்க காலத்தில் நிறைய ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் தெளிவான நோக்கம் இல்லாததால் அவை வந்த வேகத்தில் மறைந்தன.

1983 ஆம் ஆண்டு "தமிழர்களின் தாகம் தனித் தமிழ் ஈழம்'' என்ற லட்சிய வாசகத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரபாகரன் தோற்றுவித்தார். அப்போது பிரபாகரனுடன் 40 இளைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

இந்த 40 பேருடன் போராட்டத்தை தொடங்குவது என்றும்இ அதே சமயத்தில் புலிகள் இயக்கத்துக்கு நிறைய பேரை சேர்த்து ஒருங்கிணைப்பது என்றும் பிரபாகரன் முடிவு செய்தார். இதற்காக பிரபாகரன் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஆள்இ அம்புஇ ஆயுதம் எதுவும் இல்லாத நிலையில் பிரபாகரனே போர்க்களத்தில் முதல் வீரனாக குதித்தார்.

அப்போது பிரபாகரனிடம் இருந்த வாகனம் சைக்கிள். அதில் சென்று சிங்கள வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தார். அதன் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் மீது குண்டு வீசி பிரபாகரன் தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு புலிகள் சைக்கிளில் வந்து குண்டுவீசி தாக்குதல் நடத்துவதும்இ துப்பாக்கியால் சுடுவதும் தொடர்ந் தது. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் பற்றி ஈழத் தமிழர்களிடம் பரவியது. தமிழ் இளைஞர்கள் கூட்டம்இ கூட்டமாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.

இதே காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரிப்பதும் அதிகரித்தது. 1990 வரை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் தளவாடங்கள் சேகரிக்க தமிழகம் தளமாக இருந்தது. அதன் பிறகு வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் கப்பல்இ கப்பலாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தங்களை மிகஇ மிக வலிமை ஆக்கிக் கொண்டனர்.

இதற்கிடையே இலங்கையின் வடக்குஇ கிழக்கில் ஒரு சுயராஜ்ஜியத்தை பிரபாகரன் உருவாக்கினார். வரி வசூல்இ காவல்துறைஇ கோர்ட்டு என்று தனி அரசே நடக்கத் தொடங்கியது. இதற்கென தனி குழு இயங்கியது.

அதே சமயத்தில் சிங்களவர்களை எதிர்த்து போராட புலிகள் இயக்கத்தில் அனைத்துத்துறையிலும் பிரபாகரன் நவீனத்தை புகுத்தினார். உளவுப் பிரிவு தொடங்கப்பட்டது. அந்த பிரிவு கொடுத்த ஒற்றர் தகவல்களால் புலிகளுக்கு வெற்றி மீது வெற்றி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் தரைப்படைஇ கடற்படை உருவாக்கப்பட்டது. தரைப்படையினர் வைத்திருக்கும் பீரங்கிகள் அதி நவீனமானவை. அது போல கடல் புலிகள் அமைப்பு புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பு போல பிரபாகரனால் மாற்றப்பட்டது.

கடல் புலிகளிடம் மின்னல் வேக படகுகள்இ தற்கொலை படகுகள்இ சரக்கு படகுகள்இ ஆயுதம் கடத்தும் படகுகள் என்று பல வகை படகுகள் உள்ளன. சமீபத்தில் 2 பெரிய போர் கப்பல்களை புலிகள் வாங்கியது தெரியவந்துள்ளது. இவை தவிர விடுதலைப் புலிகளிடம் நீர்மூழ்கி கப்பல் கூட இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் சொல்கிறது.

இத்தகைய வலுவான கடல் புலிகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைப் படை உள்ளது. இவர்கள் "கரும்புலிகள்'' என்றழைக்கப்படுகிறார்கள். சுதந்திர தமிழ் ஈழத்துக்காக இவர்கள் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து மனித வெடிகுண்டாக மாறி தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள். உலகில் சொந்த நாடு பெறுவதற்காக தற்கொலை படையில் அதிகம் பேரை வைத்திருப்பது விடுதலைப் புலிகள்தான்.

தற்கொலைப்படை வீரர்கள் மரணம் அடையும் போதுஇ "அவர்கள் சாகவில்லை விதைக்கப்படுகிறார்கள்'' என்று சொல்வதுண்டு. சைக்கிளில் சென்று தற்கொலை தாக்குதல் நடத்த தொடங்கிய இவர்கள் பிறகு மோட்டார் சைக்கிள்இ 3 சக்கர சைக்கிள்இ ஜீப்இ கார்இ டிராக்டர்இ படகு என்று தங்கள் வளர்ச்சியை அதிகப்படுத்தி விட்டனர்.

1983 இல் சைக்கிள் தற்கொலை தாக்குதல் நடத்தும் யாழ்ப்பாணத்தில் யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சிங்கள அரசு உத்தரவிட்டது. ஆனால் புலிகளிடம் மாற்றம் ஏற்பட தொடங்கியதும் அரசால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை.

புலிகளிடம் தரைப்படைஇ கடல் படை மட்டும்தானே உள்ளது. அவர்களை எளிதில் நசுக்கி விடலாம் என்று சிங்கள அரசு நினைத்தது. ஆனால் 1998 இல் விடுதலைப் புலிகள் தங்களுக்கு என தனி விமானப் படையை (வான் புலிகள்) உருவாக்கினார்கள். அந்த ஆண்டு மாவீரர் தினத்தன்று புலிகளின் கல்லறைகள் மீது வான்புலிகள் குட்டி விமானங்களில் வந்து மலர் தூவினார்கள்.

இந்த தகவல் மெல்ல கசிந்து விடுதலைப் புலிகளிடம் விமானம் இருக்கிறது என்று பரவ தொடங்கியது. ஆனால் அதை உறுதிப்படுத்த சிங்கள உளவுப் படையால் இயலவில்லை.

கடந்த 3 மாதமாக சிங்கள இராணுவம் தனது மிக்இ கிபிர் ரக விமானங்களால் தாக்குதல் நடத்திய போது விடுதலைப் புலிகள் அமைதியாக இருந்தனர். கடந்த திங்கட்கிழமை வட்டியும் முதலுமாக சேர்த்து "வான்புலிகள்'' பதிலடி கொடுத்தனர்.

கொழும்புக்குள் ஊடுருவிஇ குறி தவறாமல் மிகஇ மிக நேர்த்தியாக 4 குண்டுகளை வீசி சிங்கள வான் படை தளத்தை தகர்த்தனர். இது சிங்களவர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இன்னமும் அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. விமான தாக்குதல் தொடரும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதால் சிங்களவர்கள் கதி கலங்கி போய் கிடக்கிறார்கள்.

வான்புலிகள் நிகழ்த்திய சாகசம் உலக நாடுகளின் ஒருமித்த பார்வையை விடுதலைப் புலிகள் மீது திருப்பி உள்ளது. "எப்படி இவர்களால் குட்டி இராணுவத்தை நள்ளிரவில் கையாள முடிந்தது'' என்று நிபுணர்களே ஆச்சரியப்படுகிறார்கள். வான் புலிகளின் தொழில் நுட்ப திறன் உலக தரத்துக்கு நிகராக இருக்கிறது.

25 ஆண்டுக்கு முன்பு சாதாரண ஓட்டை சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் இன்று வானத்தில் குட்டி விமானத்தில் பறந்து வந்து குண்டு போடுகிறார்களே என்று சிங்கள இராணுவம் தொடை நடுங்கிய படி உள்ளது. சுதந்திர ஈழத்தை அடைய வேண்டும் என்ற லட்சிய வேட்கையில் விடுதலைப் புலிகள் மிகஇ மிக உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது.

விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்கள் வலிமையானவர்கள் என்று அமெரிக்காவே சான்றிதழ் அளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் எங்கும் ஊடுருவ கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்பது அவர்களது ஒவ்வொரு செயலிலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. வன்னி காட்டுப் பகுதியில் அவர்கள் 4 விமான ஓடுதளம் அமைத்து இருக்கிறார்களாம்.

வான் புலிகளிடம் 6 அல்லது 7 குட்டி விமானங்கள் இருக்கலாம் என்று உலக உளவுத்துறை நிறுவனங்கள் கணித்துள்ளன. விடுதலைப் புலிகள் பற்றி இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வரப்போகிறதோ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31258

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது "முதல்" இல் ஒரு சிறிய பகுதி மட்டும்தான்... இனித்தான் மிச்சம்.. வட்டி... குட்டி... எல்லாமே!

25 வருசம் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள் என்றால் வட்டி எக்கச்சக்கமா எகிறியிருக்கும்..

எல்லாத்தையும் திருப்பிக்கொடுக்கிறது தானே மரியாதை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது "முதல்" இல் ஒரு சிறிய பகுதி மட்டும்தான்... இனித்தான் மிச்சம்.. வட்டி... குட்டி... எல்லாமே!

25 வருசம் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள் என்றால் வட்டி எக்கச்சக்கமா எகிறியிருக்கும்..

எல்லாத்தையும் திருப்பிக்கொடுக்கிறது தானே மரியாதை!

சரியாகச் சொன்னீர்கள். நாளைக்கு, முதலுடன் சேர்த்து வட்டியையும் முழுங்கிவிட்டான் தமிழன் என்று எம்மீது யாரும் வசைபாடக்கூடாதல்லவா. அதனால் முதலும் வட்டியுமாக வேணுமென்றால் கொஞ்சம் மேலேயும் போட்டுத் திருப்பிக் கொடுப்பதுதான் தமிழனின் மானத்திற்கும் வீரத்திற்கும் அழகு.

என்ன நான் சொல்லுறது....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்புலிகள் தாக்குதல்: இந்திய தயாரிப்பு ராடார்கள் மீது குற்றம் சாட்டுகிறது சிறிலங்கா

ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 15:23 ஈழம்ஸ ஜசி.கனகரத்தினம்ஸ

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட ராடார்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை அவதானிக்க முடியவில்லை என்று சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பிலிருந்து இன்று புதன்கிழமை வெளியான ஆங்கில ஊடகமான தி ஐலேண்ட் நாளிதழின் முதல் பக்கத்தில் அதன் செய்தியாளர் சமிந்த்ர பெர்னாண்டோ எழுதியுள்ளதாவது:

பண்டாரநாயக்க அனைத்துலக வான் நிலையத்துக்கு அருகாமை வரை வானூர்திகள் வந்ததை இந்தியாவால் வழங்கப்பட்டிருந்த ராடார்களால் அவதானிக்க முடியவில்லை. சிறிலங்கா வான் படையில் இணைக்கப்பட்டிருக்கும் இந்திய ராடார்களானவை இயங்குவதில் சிக்கல் உள்ளன. தாக்குதல் நேரத்தின் போது அது இயங்கவில்லை. அதே நேரத்தில் அனைத்துலக பயணிகள் வானூர்தி நிலையத்தில் உள்ள ராடாரானது ஊடுருவியோரை அவதானித்துள்ளது. அது மிகவும் தாமதமானது. ஏனெனில் அந்தத் தளத்திலிருது 3 கிலோ மீற்றர் தொலைவில் ஊடுருவல்காரர்கள் இருந்தனர்.

ஊடுருவியோரை சிறிலங்கா வான் படையின் ராடார் அவதானித்திருந்தால் திங்கட்கிழமை நிகழ்வானது வேறுவிதமாக இருந்திருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய ராடார் இயங்காமல் போன விடயம் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை கொண்டு சென்றுள்ளது.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து 3 டி உயர்ரக ராடார்களை கொள்வனவு செய்ய விரும்பினார். ஆனால் அப்போதைய சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் இவ்விடயத்தில் தலையிட்டுஇ கொழும்பின் பாதுகாப்புக்காக ராடார்களை வழங்குவோம் என்று தெரிவித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்கவும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

இது விடயமாக தற்போதைய இந்தியத் தூதுவரான அலோக் பிரசாத்தை சந்தித்துப் பேச சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது

வான் புலிகளால் வானுயர்ந்தது எம் புலிகள் வீரம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்புலிகள் தாக்குதல்: இந்திய தயாரிப்பு ராடார்கள் மீது குற்றம் சாட்டுகிறது சிறிலங்கா

ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 15:23 ஈழம்ஸ ஜசி.கனகரத்தினம்ஸ

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட ராடார்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை அவதானிக்க முடியவில்லை என்று சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.

நாலு பணத்துக் குதிரையும் வேணும், அது ஆறுகடக்க பாயவும் வேணும் என்றால் எப்படி?

தானமாய்த் தந்தால் அதை பல்லைப் பிடுங்கிப் பார்க்கக் கூடாது என்ற நாகரீகம் கூட தெரியாத மகிந்தாகூட்டம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு பணத்துக் குதிரையும் வேணும், அது ஆறுகடக்க பாயவும் வேணும் என்றால் எப்படி?

தானமாய்த் தந்தால் அதை பல்லைப் பிடுங்கிப் பார்க்கக் கூடாது என்ற நாகரீகம் கூட தெரியாத மகிந்தாகூட்டம்.........

வாங்கிறது ஓசியும்,பிச்சையும் இதில குவாலிட்டி வேணுமாமோ? :rolleyes::rolleyes: :P

Edited by சித்தன்

விமானம் ஓட்டிய தமிழன் எண்டு ஒரு படம் எடுங்க ப சீக்கிறம் அப்பதான் சில பேருக்கு புரியும் சினிமாவே கதி எண்டு இருகிறவர்கழுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SLA attempt to enter Batticaloa LTTE territory beaten

[TamilNet, Wednesday, 28 March 2007, 11:30 GMT]

Liberation Tigers of Tamil Eelam (LTTE) forces thwartted a pre-dawn attempt by Sri Lanka Army (SLA) troopers and paramilitary cadres of Karuna group from Chenkalady Black Bridge SLA camp in Batticaloa district Wednesday around 3:30 a.m, to advance into Koduvamadu area in LTTE held territory in Batticaloa, sources in Batticaloa said.

LTTE recovered the bodies of two paramilitary members killed in the retaliation besides eight T-56 rifles, unconfirmed sources in Batticaloa said.

The four injured paramilitary members were first rushed to Chenkalady hospital and later transferred to Batticaloa Teaching hospital.

They were identified as Thutchan, Varman, Nesan and Thevikan, according to hospital sources.

The SLA and the Karuna group paramilitary personnel withdrew to their camps following the failed attempt.

Chenkalady is located 13 km north west from Batticaloa town.

விமானம் ஓட்டிய தமிழன் எண்டு ஒரு படம் எடுங்க ப சீக்கிறம் அப்பதான் சில பேருக்கு புரியும் சினிமாவே கதி எண்டு இருகிறவர்கழுக்கு.

சுபன் சரியாய் சொன்னீங்க

வாங்கிறது ஓசியும்,பிச்சையும் இதில குவாலிட்டி வேணுமாமோ? :lol::) :P

சித்தன்

உலகிலேயே பிச்சை எடுத்து அரசாங்கம் நடத்துவதில் இலங்கை முதலிடத்தில் இருக்கு இது அவர்களுக்குபெருமையாம்.

(அன்மையில் காலியில் பிச்சைஎடுப்புமாகாநாடுநடந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்புலிகள் தாக்குதல்: இந்திய தயாரிப்பு ராடார்கள் மீது குற்றம் சாட்டுகிறது சிறிலங்கா

பாடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்றானாம்.. உங்கடை ராடரின் ஆழம் தெரியாமலா புலிகள் காலை வைத்திருப்பார்கள்..?

எடுக்கிறது பிச்சை அதுக்குள்ள குறை வேற, இந்தியாவும் கேவலம் கெட்ட இந்தியா இவன் இப்படி சொல்லும் போது என்னும் அள்ளி அள்ளி கொடுக்குறானே.......... கடலில சூடு வாங்குவான் ஆன கப்பல் கொடுப்பன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடுக்கிறது பிச்சை அதுக்குள்ள குறை வேற, இந்தியாவும் கேவலம் கெட்ட இந்தியா இவன் இப்படி சொல்லும் போது என்னும் அள்ளி அள்ளி கொடுக்குறானே.......... கடலில சூடு வாங்குவான் ஆன கப்பல் கொடுப்பன்

கடலில் சூடு வாங்குவது இந்தியன் என்று வடக்கில் உள்ளவர்கள் நினைப்பது இல்லை ....தமிழன் தானே சூடு வாங்குவது என்று இன்னும் கூட துப்பாகியும் கொடுப்பார்க்ள்........அவர்களுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவூ கடற்பரப்பில் கடற்புலிகளின் மூன்று படகுகள் தாக்கி அழிப்பு!!… அலம்பில் கடற்பரப்பில் 20க்கும் மேற்பட்ட கடற் புலிகள் பலி! (பிந்திய செய்தி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ADOOOOO PASANGALAA .........

CAN ANY PLS LET ME KNOW HOW TO TYPE IN TAMIL ................

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பற்றி இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வரப்போகிறதோ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31258

87ல் இந்தியா இராணுவத்துடன் சண்டைபிடிக்கும் போது புலிகள் இனி தலை நிமிரெலாது என்றார்கள். ஆனால் நடந்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இராணுவம் வன்னி நிலப்பரப்பினை ஜெயசுக்குரு பிடித்துக் கொண்டு நெடுங்கேணி வரை முன்னேற, புலிகள் இனி அழிச்சு போயிடும் என்றார்கள். ஆனால் 3 நாட்களில் அடிச்ச அடியில் ஒமந்தையும், வெளினாட்டு நிபுணர்களினால் அனையிறவினை தகர்ப்பு கடினம் என்று சொல்லும் போது அனையிறவினையும் அழித்துக்காட்டியவர்கள் தமிழர்களின் படை. பாருங்கள் இன்னும் பல அதியங்கள் நிகழப்போவதைப் பாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.