Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்­சியா என்­பதை பார்க்­கக் காத்­தி­ருங்­கள் -வடக்கு முதல்­வர் மழுப்­பல்

Featured Replies

புதிய கட்­சியா என்­பதை பார்க்­கக் காத்­தி­ருங்­கள் -வடக்கு முதல்­வர் மழுப்­பல்

 

 

Capture-101.jpg

 

புதிய அர­சி­யல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்­பில் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் புதிய அர­சி­யல் கட்சி ஒன்றை ஆரம்­பிக்­கப் போகி­றார் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­வ­லா­கப் பேசப்­பட்­டும் நிலை­யில் அவர் நேற்று இவ்­வாறு தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் இளை­ஞர் மாநாட்­டுக்­கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது நூல­கக் கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்ட தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தத­லை­வ­ரும், மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி விக்­னேஸ்­வ­ர­னி­டம் ஊட­க­வி­ய­லா­ளர் எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் புதிய அர­சி­யல் கட்சி ஒன்றை ஆரம்­பிக்­கப் போவ­தா­கப் பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பில் உங்­க­ளு­டைய கருத்து என்ன? என்று ஊட­க­வி­ய­லா­ளர்­கள் முதல்­வ­ரி­டம் கேட்­ட­னர்.

நானும் அது தொடர்­பில் கேள்­விப்­பட்­டேன். அதைத் தவிர எனக்கு ஒன்­றும் தெரி­யாது. எதற்­கும் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம் என்று முத­ல­மைச்­சர் மழுப்­ப­லா­கப் பதி­ல­ளித்­தார். புதிய கட்­சி­யின் முன்­னேற்­றம் தொடர்­பில் முத­ல­மைச்­ச­ரி­டம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

ஏதோ எல்­லா­வற்­றுக்­கும் பொது­வான முன்­னேற்­ற­க­ர­மான செயல் உள்­ளது. ஆனால் கட்சி சார்­பான ஒன்று என்று சொல்­லு­வ­தற்கு ஒன்­றும் இல்லை என்று அவர் பட்­டும்­ப­டா­ம­லும் கூறி­னார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டனா எதிர்­வ­ரும் தேர்­தல்­க­ளி­லும் போட்­டி­யி­டு­வீர்­கள் என்று அவ­ரி­டம் வின­வப்­பட்­டது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் மூன்று மாதத்­துக்கு முன்­னரே அறி­விக்­கப்­பட்­டார் எது­வும் எந்த நேரத்­தி­லும் சுனாமி அடித்­தது போல மாறும். இது பற்றி அந்­த­நே­ரம் தான் தெரி­விக்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

http://newuthayan.com/story/09/புதிய-கட்­சியா-என்­பதை-பார்க்­கக்-காத்­தி­ருங்­கள்-வடக்கு-முதல்­வர்-மழுப்­பல்.html

மாண்புமிகு முதலமைச்சர் வர வர ரஜனிபோல பேசுகிறார்.

எப்போ அவருக்கு ரஜனி மாதிரி ஆப்பு இருக்கோ தெரியவில்லை. பேச்சில் மட்டுமில்லை ஆன்மீக அரசியலிலும் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

கூடிய விரைவில் ரஜனிக்கு ஏற்பட்ட கதி உங்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் முதல்வரே.

தெளிவாகவும் ஆளுமையுடனும் இருக்க வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்; முன்னேற்றமான நடவடிக்கை நடக்கிறது : வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­விப்பு

city-01GMGPage1Image0016-0a15a5dae45637d6c17712de09c1f5ef76df7104.jpg

 

(ரி.விரூஷன்)

அடுத்த தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர் பில் உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன் எனத் தெரி­வித்­துள்ள வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன், தற்­போது முன்­னேற்­ற­மான நட­வ­டிக்கை ஒன்று இடம்­பெ­று­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். 

யாழ்.பொது நூலக மண்­ட­பத்தில் நேற்­றைய

தினம் தமிழ் மக்கள் பேர­வையின் இளைஞர் மாநாடு தொடர்­பான பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இதன்­போது அங்கு முத­ல­மைச்­ச­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளிக்கும் போதே இதனை தெரி­வித்தார்.

உரிய...

முத­ல­மைச்­ச­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு மேலும் அவர் பதி­ல­ளித்­தி­ருப்­ப­தா­வது,

கேள்வி : தமிழ் மக்கள் பேர­வையின் செயற்­பா­டுகள் கடந்த காலங்­களில் மந்த கதியில் இடம்­பெ­று­வ­தாக பொது­வாக கூறப்­பட்­டதே. இந்­நி­லையில் தற்­போது இளைஞர் மாநாடும் வெறு­மனே கருத்­து­ரு­வாக்­க­மாக மாத்­தி­ரமா இருக்கும்?

பதில் : இது­வரை காலமும் எம்­மோடு பொறுப்­பான பத­வி­களில் இருந்­த­வர்கள் செயற்­றிட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். எனவே அவர்கள் தமது பணி­க­ளையும் கவ­னித்­துக்­கொண்டு இவற்றை செய்ய வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் தற்­போது கூடிய நேரத்தை தம்­மிடம் வைத்­தி­ருக்க கூடி­ய­வர்கள் எம்­மோடு இணைந்து நட­வ­டிக்கை எடுக்க முன் வந்­துள்­ளார்கள். எனவே கூடிய விரைவில் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : வடக்கு மாகாண சபையில் நேற்று  முன்­தினம் இடம்­பெற்ற,  வடக்கு மாகா­ணத்தில் உள்ள சிங்­கள குடி­யேற்­றங்கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான கூட்­டத்­திற்கு நீங்கள் செல்­ல­வில்லை என்ற குற்­றச்­சாட்டு உள்­ளதே ??

பதில் : அக் கூட்­டத்­திற்கு கடைசி வரை நான் போவ­தாக இருந்தேன். ஆனால் எனது தனி­பட்ட கார­ணங்­க­ளுக்­காக என்னால் அங்கு செல்ல முடி­ய­வில்லை. எனினும் அது தொடர்­பாக அவைத் தலை­வ­ருக்கு கடிதம் எழு­தி­யி­ருந்தேன். அதா­வது நீங்கள் முடி­வு­களை எடுங்கள் அவற்­றிக்கு செயல் வடிவம் கொடுக்கும் போது நான் முத­ல­மைச்சர் என்ற வகையில் அனைத்­தையும் செய்வேன் என குறிப்­பிட்­டி­ருந்தேன்.

கேள்வி : யாழ்ப்­பாண மாந­கர சபை எல்­லைக்குள் இரா­ணு­வத்தின் செயற்­பாடு இருக்க கூடாது என யாழ்.மாந­கர சபையில் தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் மாகாண சபை­யிலும் இது தொடர்­பாக பேசப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் இன்­றைய தினம் (நேற்று) மர நடுகை நிகழ்வின் போது இரா­ணு­வத்­தோடு இணைந்து நீங்கள் அதில் பங்­கு­பற்­றி­யுள்­ளீர்­களே ??

பதில் : அது வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாந­கர சபை மேயர் இரா­ணு­வத்­தோடு சேர்ந்து இந் நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.  இந்த நேரத்தில் அதனை புறக்­க­ணித்தால் அது எங்கள் மக்­களை தான் தாக்கும். மேலும் எல்லா விட­யங்­க­ளையும் நாம் அர­சியல் ரீதி­யாக பார்க்க கூடாது. எமக்கு வரு­கின்ற நன்­மை­க­ளையும் நாம் பார்க்க வேண்டும். அத்­தோடு இரா­ணு­வமே மரங்­களை வெட்­டி­யது. எனவே அவர்­களே அதனை நாட்டி தரட்டும்.

எனினும் இந்த செயற்­திட்­ட­மா­னது என்­னிடம் பேசப்­பட்டு எங்­க­ளூ­டாக செய்­யப்­பட்­டி­ருந்தால் நான் நிச்­சயம் இதற்கு இடம்­கொ­டுத்­தி­ருக்க மாட்டேன்.

கேள்வி : நீங்கள் புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிக்க போவ­தாக பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றதே ?

பதில் : நானும் அவ்­வாறு தான் கேள்­விப்­பட்டேன். அந்­த­ளவே எனக்கும் தெரியும். எதற்கும் பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.

கேள்வி : தமிழ் மக்கள் பேரவை அடுத்த மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யி­டுமா ?

பதில் : பேரவை சார்பில் ஒரு­வ­ரையும் நிய­மிக்க மாட்டோம். ஆனால் பேர­வையின் அனு­ச­ர­ணையில் யாரா­வது முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக வரக்­கூடும்.

கேள்வி : நீங்கள் புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்­பான முன்­னேற்றம் இடம்­பெ­று­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே ?

பதில் : முன்­னேற்றம் ஒன்று நடை­பெற்­றுக்­கொண்டு தான் இருக்­கின்­றது. ஆனால் அது கட்சி ரீதி­யா­னது என நான் பார்க்­க­வில்லை.

கேள்வி : அடுத்த மாகாண சபை தேர்­தலில் நீங்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யி­டு­வீர்­களா ?

பதில் : 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் தேர்­தலில் போட்டியிடுவேன் என்பது அதற்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு தான் தெரியும். எனவே அது அந்தந்த நேரத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக உறுதியாக எதனையும் கூற முடியாது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.