Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் விரிசல்!

Featured Replies

தொடரும் விரிசல்!

 

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த ஆட்சி, எதிர்பார்த்­ததைப் போன்று நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு வழிகாட்­ட­வில்லை. நாட்டை முன்­னேற்­ற­க­ர­மான வழியில் வழி­ந­டத்திச் செல்­லவும் இல்லை. மாறாக பொரு­ளா­தாரம் நலி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. ஆட்­சியில் குழப்­பங்­களும், ஆட்­சி­யா­ளர்­க­ளி­டையே அர­சியல் பனிப்போர் பகை­மை­­யுமே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.  

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையை இல்­லாமல் செய்­வதன் மூலம் தனி­ந­பரின் ஆட்சி அதி­கார ஆதிக்­கத்­திற்கு முடிவு கட்டப் போவ­தாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சியல் கொள்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தி, ஊழல்­களை இல்­லாமல் செய்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­துடன், மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. 

இத்­த­கைய அர­சியல் கொள்­கை­யுடன் கூடிய தேர்தல் ஆணை­களின் அடிப்­ப­டையில் நல்­லாட்சி நிறு­வப்­படும், நாடு முன்­னேற்றம் அடையும் என்று பலரும் எதிர்­பார்த்­தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு மூன்று ஆண்­டுகள் கடந்த நிலையில் இந்த எதிர்­பார்ப்பு கானல் நீரா­கி­யி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தில் குழப்­பங்­களும் ஐக்­கி­ய­மின்­மையும், அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலை­மை­யுமே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 

நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மாகப் பின்­ன­டைந்­துள்­ளது. அர­சாங்கம் பாரிய கடன் சுமைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது. எரி­பொருள் விலை அதி­க­ரிப்­பை­ய­டுத்து, அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களும் எகி­றி­யி­ருக்­கின்­றன. அதி­க­ரித்­துள்ள விலை­வா­சி­க­ளுக்கு ஈடுகொடுக்க முடி­யாமல் மக்கள் திண்­டாட நேர்ந்­தி­ருக்­கின்­றது. பண­வீக்கம் அதி­க­ரித்து ரூபாவின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வரு­கின்­றது. இதனால், வருட முடிவில் அமெ­ரிக்க டொலரின் பெறு­மதி 165 ரூபா­வாக உயர்­வ­டைந்து, இலங்கை நாணயம் மோச­மாக வீழ்ச்சி அடையும் என்று பொரு­ளா­தார ரீதி­யான அச்சம் எழுந்­துள்­ளது.  

வரவு–செலவுத் திட்­டத்தின் ஊடாக முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் திட்­ட­மி­டப்­பட்ட வேலைத் திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு நாட்டின் திறை­சே­ரியில் போதிய நிதி இல்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. இதனால் திட்­ட­மி­டப்பட்ட வேலைத் திட்­டங்­க­ளிலும், அவ­சர, அத்­தி­யா­வ­சிய தேவையை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி வேலைத் திட்­டங்­களைச் சுருக்கி நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. 

கடந்த அர­சாங்­கத்­தில்தான் ஊழல்கள் மலிந்­தி­ருந்­தன.அரச நிதி பெரு­ம­ளவில் மோசடி செய்­யப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக அமெ­ரிக்காவுக்கான இலங்­கையின் தூது­வ­ராக 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில், செயற்­பட்­டி­ருந்த ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரிய 3 லட்­சத்து 32 ஆயிரம் அமெ­ரிக்க டொலர் நிதியைக் கமி­ஷ­னாகப் பெற்று அமெ­ரிக்­காவில் தனது மக­ளுக்கு வீடு ஒன்றை வாங்­கு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார் என்று குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த நிதி மோசடி தொடர்பில் அமெ­ரிக்க அரசும் இவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­தை­ய­டுத்து, இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்­கான தண்­டனை விலக்­க­ளிப்பு சலுகை இல்­லாமல் செய்­யப்­பட்­டது. இலங்­கையில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த அவர் மருத்­துவ தேவை­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வ­தற்­கான சலு­கையை நீதி­மன்­றத்­திடம் பெற்­றி­ருந்தார். இத­னை­ய­டுத்து, அவர் நாட்­டை­விட்டு வெளி­யேறி தலை­ம­றை­வா­கி­யுள்ளார். 

இதே­போன்று ரஷ்யா­வுக்­கான இலங்கைத் தூது­வ­ராக முன்­னைய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த உத­யங்க வீர­துங்­கவும் பாரிய நிதி மோச­டியில் ஈடு­பட்­டி­ருந்தார் என குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இவர், அமெ­ரிக்காவுக்கான இலங்­கையின் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரி­யவின் உற­வி­ன­ராவார்.  உக்­ரேயின் நாட்டில் அர­சுக்கு எதி­ராகப் போராடி வரு­கின்ற பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு ஆயுத விநி­யோகம் செய்தார் என்று உத­யங்க வீர­துங்க மீது அந்த நாட்டு அரசு குற்றம் சுமத்­தி­யி­ருந்­த­தை­ய­டுத்து. இலங்கை அரசு அவ­ரு­டைய இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்­கான கடவுச் சீட்டைப் பறித்து, அவர் மீதான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தது.

அத்­துடன் மிக் 27 ரக போர் விமானக் கொள்­வ­னவில் ஒன்­றரை மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி மோச­டியில் இவர் ஈடு­பட்­டி­ருந்தார் என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து வெளி­நாட்டில் அவர் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கின்றார். இவ்­வாறு அரச நிதியில் பாரிய மோச­டி­களைச் செய்­துள்ள ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரிய மற்றும் உத­யங்க வீர­துங்க ஆகிய இரு­வ­ருமே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் உற­வி­னர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. 

முன்­னைய அர­சாங்­கத்தில் பெரு­ம­ளவு அரச நிதி மோசடி சம்­ப­வங்களில் வேறு பலரும் ஈடு­பட்­டி­ருந்­தனர் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இருப்­பினும், வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த இரா­ஜ­தந்­திர அந்­தஸ்து பெற்­ற­வர்­க­ளான ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரிய மற்றும் உத­யங்க வீர­துங்க இரு­வரும் சர்­வ­தேச மட்­டத்தில் நிதி­மோ­சடி விவ­கா­ரத்தில் சிக்­கி­யி­ருக்­கின்­றார்கள். 

ஆட்சி மாறியும்...

முன்­னைய ஆட்­சியில் மட்­டு­மல்ல. ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் மோச­மான முறையில் நிதி மோச­டியும் ஊழல்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக மத்­தி­ய­ வங்­கியின் ஆளு­ந­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அர்­ஜுன மகேந்­திரன் மத்­திய வங்­கியின் பிணை முறிகள் தொடர்பில் நிதி­மோ­ச­டியில் ஈடு­பட்­டி­ருந்தார் என குற்றம் சுமத்­தப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. 

மத்­திய வங்­கியின் மிகவும் இர­க­சிய பிரத்­தி­யே­க­மான தக­வல்­களை பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் என்ற கம்­ப­னிக்கு வெளிப்­ப­டுத்­தி­யதன் மூலம் நம்­பிக்கைத் தன்­மையை மீறிய வகையில் குற்றம் புரிந்­தி­ருக்­கின்றார் என்று நீதி­மன்றம் அவ­ருக்கு எதி­ராகக் குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்­வ­தற்­கான பிடி­யாணை உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்­ளது. பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் என்ற நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ரா­கிய அர்ஜுன் அலோ­சியஸ் மற்றும் கசுன் பலி­சேன ஆகியோர் நிதி மோசடி தொடர்பில் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அர்ஜுன் அலோ­சியஸ் அர்ஜுன மகேந்­தி­ரனின் மரு­மகன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

நீதி­மன்றம் பிடி­யாணை பிறப்­பித்­துள்ள போதிலும் அர்ஜுன மகேந்­திரன் நீதி­மன்­றத்தில் சர­ண­டை­ய­­வில்லை. சிங்­கப்­பூரில் அவர் காணப்­பட்­டதாகத் தெரி­விக்­கப்­பட்ட போதிலும் அவரைக் கைது செய்ய முடி­ய­வில்லை. அவரும் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். அவரைக் கைது செய்­வ­தற்கு சர்­வ­தேச பொலிஸாரின் உதவி நாடப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கி­வி­டு­வத­ற்­கான நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரும் அள­வுக்கு மத்­தி­ய­ வங்கி பிணைமுறி நிதி­மோ­சடி விவ­காரம் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தது.

அரச பொது நிறு­வ­னங்­க­ளின் 11  ஆயி­ரத்து 145 மில்­லியன் ரூபா பொது நிதிக்கு நட்டம் ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அர்­ஜுன மகேந்­திரன் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. எனினும் மத்­தி­ய­ வங்­கியின் பிணைமுறி நட­வ­டிக்­கை­களில் இது நட்­டத்தை ஏற்­ப­டுத்த மாட்­டாது என்று குறிப்­பிட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­திடம் இருந்து 9.2 பில்­லியன் ரூபா நிதி இந்த விவ­காரம் குறித்து விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரையின் மூலம் பெறப்­படும் என்று கூறி­யி­ருந்தார். 

ஆயினும் தேசிய கொள்கைத் திட்­ட­மிடல் அமைச்சின் கீழ் செயற்­ப­டு­கின்ற மத்­தி­ய­வங்கி ஏற்­க­னவே பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­திடம் இருந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­ய­திலும் பார்க்க அதிக தொகை­யான 12 பில்­லியன் ரூபா நிதியைத் தடுத்து வைத்துப் பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

எனினும் பாரிய நிதி­மோ­சடி குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகி, பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள,  முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரிய, உத­யங்க வீர­துங்க ஆகிய மூவ­ரையும் உட­ன­டி­யாகக் கைது செய்து நாட்­டுக்குக் கொண்டு வந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜே.வி.­பி.யின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க இந்த மூவ­ரையும் கைது செய்­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் தனிப்­பட்ட ரீதியில் தலை­யீடு செய்ய வேண்டும் என்று பாரா­ளு­மன்­றத்தில் குரல் எழுப்­பி­யி­ருக்­கின்றார். 

அர்­ஜுன மகேந்­திரன் சிங்­கப்­பூ­ருக்கு திரு­மண வைபவம் ஒன்­றிற்­கா­கவே சென்­றி­ருந்தார் என்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்­ததன் மூலம், அவ­ரு­டைய தனிப்­பட்ட விஜ­யத்தைப் பற்றி அறியும் அள­வுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ருடன் நட்­பு­றவு கொண்­டுள்­ளதைச் சுட்­டிக்­காட்­டியே இந்த கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று ஏனைய இரு­வரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவின் உற­வி­னர்கள் என்ற கார­ணத்­தினால் அவரும் இந்த விட­யத்தில் அக்­கறை செலுத்த வேண்டும் என்று அனு­ர­கு­மார திஸா­நா­யக்க கோரி­யுள்ளார். 

அர்­ஜுன மகேந்­திரன் நண்­ப­ராக இருந்­தாலும், அவர் எங்கு சென்­றுள்ளார் என்ற விட­யங்­களைத் தெரி­விக்க முடி­யாது என்று பிர­தமர் பதி­ல­ளித்­தி­ருக்­கின்றார். ஆயினும் மஹிந்த ராஜ­பக்­ ஷ­விடம் இருந்து எந்­த­வி­த­மான கருத்­துக்­களும் வந்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. 

ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஆணை வழங்கி அதி­கா­ரத்­திற்கு வந்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கத் தலை­வர்­க­ளினால் மிகவும் பார­தூ­ர­மான நிதி மோசடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்ட இந்த மூவர் தொடர்­பிலும் இறுக்­க­மான நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­தி­ருப்­பது பலத்த சந்­தே­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அதிலும் நாடு பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள ஒரு சூழலில் இந்த ஊழல் நிதி­மோ­சடி குறித்து நாட்டுத் தலை­வர்கள் அக்­க­றை­யற்ற மேம்­போக்­கான போக்கில் நடந்து கொண்­டி­ருக்­கின்­றார்­களோ என்று சிந்­திக்­கவும் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

அரச தலை­வர்­க­ளி­டை­யான பிளவு

நாட்டில் நல்­லாட்சி புரிய வேண்டும் என்று ஒன்­றி­ணைந்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான அர­சியல் உறவு முறிந்­துள்­ள­தா­கவே கூறப்­ப­டு­கின்­றது. அண்மைக் கால­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்டு வரு­கின்ற அர­சியல் ரீதி­யான கருத்­துக்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் தாக்கும் வகை­யிலும் வெளிப்­ப­டை­யாக விமர்­சனம் செய்யும் வகை­யிலும் அமைந்­துள்­ளதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது,

ஆட்சி மாற்­றத்­திற்கு அடித்­த­ள­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த 100 நாள் வேலைத்­திட்டம் ஜனா­தி­பதி தேர்தல் முடி­வ­டைந்­ததும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முந்­திய கால­கட்­டத்தில் இந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்­புடன் புதிய அரசு செயற்­பட்­டி­ருந்­தது. ஆயினும் இப்­போது 100 நாள் வேலைத்­திட்டம் குறித்து கார­சா­ர­மான கருத்­துக்­களும் விமர்­ச­னங்­களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருந்து வெளி­வந்­தி­ருக்­கின்­றன. இந்தக் கருத்­துக்கள் கட்சி அர­சியல் நலன்­சார்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது குற்றம் சுமத்தும் நோக்­கத்தில் வெளி­வந்­தி­ருப்­ப­தா­கவே அவ­தா­னிகள் கரு­து­கின்­றனர். 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அர­சாங்கக் கட்­சிகள் இரண்டும் அடைந்த தோல்­வியே இரண்டு அரச தலை­வர்­க­ளி­டை­யே­யான அர­சியல் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அந்தத் தோல்­வியை அடுத்து இரண்டு கட்­சிகள் இணைந்த அர­சாங்­கத்தைக் கைவிட்டு ஒரு கட்சி அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு இரண்டு தலை­வர்­க­ளுமே ­த­னித்­த­னி­யான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அந்த முயற்­சிகள் வெற்­றி­ய­டை­ய­வில்லை. 

அமைச்­ச­ர­வையில் பிளவு ஏற்­பட்டு சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த 16 அமைச்­சர்கள் தனி­வழி சென்று தனிக்­கு­ழு­வாகச் செயற்­பட்டு வரு­கின்­றனர். இதனால் மஹிந்த அணியைச் சேர்ந்­த­வர்கள் பொது­ஜன பெர­முன என்றும் 16 பேர் கொண்ட முன்னாள் அமைச்­சர்கள் குழு என்றும், அர­சாங்­கத்தில் இணைந்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்தவர்கள் கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு என்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி மூன்று பிரி­வு­க­ளாக உடைந்­தி­ருக்­கின்­றது. 

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் உடைவு ஏற்­பட்டு மூன்று துண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற போதிலும், மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற அர­சியல் முனைப்­பிலும் செயற்­பா­டு­க­ளிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தீவி­ர­மா­கவே செயற்­பட்டு வரு­கின்றார். அதே­வேளை அர­சுக்குள் பிளவு ஏற்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பல்­வேறு கருத்து மோதல்கள் ஏற்­பட்­டி­ருந்த சூழ­லிலும், அந்தக் கட்சி பிள­வு­ப­டாமல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் செயற்­பட்டு வரு­கின்­றது. 

புதிய அமைச்­ச­ரவை உரு­வாக்­கப்­பட்டுள்ள பின்­ன­ணியில் பிரதி  சபா­நா­ய­கரை நிய­மிக்கும் நட­வ­டிக்­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செயற்­பா­டுகள் ­ஜ­னா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு இடை­யி­லான அர­சியல் உறவில் விரிசல் ஏற்­பட்­டி­ருப்­பதைத் தெட்டத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. 

அரசில் இருந்து சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை வெளி­யேற்ற கோரிக்கை 

சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கிய அங்­கஜன் இராம­நா­தனை முதலில் பரிந்­து­ரைத்­தி­ருந்த ஜனா­தி­பதி பின்னர், 16 பேர் கொண்ட குழு­வினால் குறிப்­பி­டப்­பட்ட சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்­ளேயை பிரதி சபா­நா­யகர் பத­விக்குத் தெரிவு செய்­வதை ஆத­ரித்­தி­ருந்தார். சபா­நா­யகர் பதவி ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் பிரதி சபா­நா­யகர் பதவி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும், பாரா­ளு­மன்­றத்தின் பிரதி குழுக்­களின் தலைவர் பதவி தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் என்ற ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் முன்னர் நிய­ம­னங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. 

ஆயினும் புதிய நிய­ம­னங்­களின் போது எதிர்­க்கட்­சிக்கு ஒரு பதவி என்றும் எனவே, அதற்கு மேல­தி­க­மாக எதிர்க்­கட்­சி­யான 16 பேர் குழுவைச் சார்ந்த சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்­ளேக்கு பிரதி சபா­நா­யகர் பதவி வழங்க முடி­யாது என்ற நிலைப்­பாடு எடுக்­கப்­பட்­டது. இதனால் பிரதி சபா­நா­யகர் பத­விக்கு நடை­பெற்ற வாக்­கெ­டுப்பில் ஐக்­கிய தேசி­ய­ கட்­சியைச் சேர்ந்த ஆனந்த குமா­ர­சிறி பிரதி சபா­நா­ய­க­ராகத் தெரி­வா­கி­யுள்ளார்.  இந்த நிய­மன விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்சி புரிந்­து­ணர்­வு­டனும் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் நடந்து கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிரத­ம­ரா­கவும், அதே கட்­சியைச் சேர்ந்த ஒருவர் பிரதி சபா­நா­ய­க­ரா­கவும் பதவி ஏற்­றி­ருப்­பதன் மூலம் பாராளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சியல் ரீதி­யாகப் பலம் பெற்­றுள்­ளது என்று கரு­தப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய தேசிய கட்­சியின் இந்த முன்­னேற்றம் அந்தக் கட்சி தனி­யாக ஆட்சி அமைப்­ப­தற்கு வழி­கோ­லக்­கூடும் என்ற சந்­தேகம் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் மாற்று அணி­யி­ன­ரா­கிய 16 பேர் கொண்ட குழு ஆகி­யவை மத்­தியில் மட்­டு­மல்­லாமல் அரச அதி­கா­ரத்­திற்கு வரு­வ­தற்குத் துடித்துக் கொண்­டி­ருக்­கின்ற பொதுஜன பெரமுன அணியினரிடத்திலும் எழுந்திருக்கின்றது. 

இதன் காரணமாகவே அந்தக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடனடியாக வெளியேற்றிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட்டதையடுத்து பொறுப்பேற்றுள்ள பொதுச் செயலாளருக்குப் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதி சபாநாயகர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சிக்கே அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் எதிர்காலத்தில் இணைந்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா சுதந்திரக்கட்சி உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார். 

ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சி மாற்றத்தின் போது, ஒப்பந்த அடிப்படையிலேயே இணைந்து ஆட்சியை உருவாக்கின. இரண்டு வருடங்களுக்கு செய்து கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது, இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர், இரண்டு கட்சிகளும் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை. புதிய ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளவுமில்லை. எனவே அதிகாரமற்ற முறையிலேயே அரசு இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் ரத்நாயக்க தொனி செய்திருக்கின்றார். 

இந்த போட்டி நிலைமையானது நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் போக்கிலும் முரண்பாடான நிலைமைகளை உருவாக்கியிருப்பதுடன், இருகட்சி அரசாங்கமாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் உள்ளே அரச தலைவர்கள் மட்டத்திலும் பிளவை ஏற்படுத்தி இருக்கின்றது. 

இந்த குழப்பகரமான நிலையில் இருகட்சி இணைந்த நல்லாட்சி அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரையில் எவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.