Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்புக்களின் தோல்வி

Featured Replies

எதிர்பார்ப்புக்களின் தோல்வி

 

மனி­த­னாகப் பிறந்த ஒவ்­வொருவரும் இலக்­கு­டனும் அந்த இலக்கை அடைந்து கொள்ளும் எதிர்­பார்ப்­பு­ட­னுமே காலத்தை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். அவ்­வாறு சமூக வாழ்­வோடு இணைந்த ஒவ்­வொரு விட­யத்­திலும் ஓர் இலக்கும் எதிர்­பார்ப்பும் நம்­பிக்­கையும் சமூ­கங்­களின் மத்­தியில் இருப்­பது இன்­றி­ய­மை­யா­தது. அத்­த­கைய எதிர்­பார்ப்பும் நம்­பிக்­கையும் நாட்டை ஆளும் அர­சாங்­கத்­திலும் ஒவ்­வொரு சமூகம் சார்ந்த அர­சியல் தலை­மை­க­ளிலும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளிலும் அவர்கள் அளிக்கும் வாக்­கு­று­தி­க­ளிலும் காணப்­ப­டு­கி­ன்றன.

சமூகக் கட்­ட­மைப்பின் விருத்­தியில் அர­சியல் அதி­காரம் முக்­கி­ய­மா­னது. ஒரு சமூ­கத்தின் அடிப்­படைத் தேவைகள் நிறை­வேற்­றப்­ப­டும்­போ­து தான் அச்­ச­மூ­கத்தின் சமூகக் கூறுகள் விருத்தி காண்­கின்­றன. அவ்­வி­ருத்­திக்கு பக்­க­ப­ல­மாக இருப்­பது அர­சியல் அதி­கா­ர­மாகும். அந்த அதி­கா­ரத்தை வழங்­குவது மக்­க­ளாவர். அதி­கா­ரத்­துக்­கான ஆணையை மக்கள் வழங்­கு­வ­தற்­குள்ள மூலமே தேர்தலாகும்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜனா­தி­பதித் ேதர்தல், பாரா­ளு­மன்றத் ேதர்தல், மாகாண சபைத் ேதர்தல் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ேதர்தல் என பிர­தான ேதர்தல்கள் நடை­பெ­று­கின்­றன. இத் ேதர்தல்­களில் தங்­க­ளது வெற்­றியை உறுதி செய்­வ­தற்­கா­கவும் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவும் கட்­சி­க­ளாலும் தலை­மை­க­ளாலும் வேட்­பா­ளர்­க­ளாலும் வாக்­கு­று­திகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. வழங்­கப்­படும் வாக்­கு­று­தி­களை நம்பி அவ்­வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­படும் என்ற எதிர்­பார்ப்பில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்­சி­க­ளுக்கும் வேட்­பா­ளர்­க­ளுக்கும் வாக்­க­ளிக்­கின்­றனர்.

ஆனாலும், மக்கள் வழங்கும் ஆணையின் மூலம் அர­சியல் அதி­கா­ரத்தை பெறு­கின்­ற­வர்­க­ளால் மக்­களின் ஆணைக்­கான எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்றனவா என்­பதே தற்­போ­துள்ள கேள்­வி­யாகும். காலாகால­மாக மக்­க­ளுக்கு வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்டு நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பையும் உரு­வாக்­கி­விட்டு அவை நிறை­வேற்­றப்­ப­டாமல் காணப்­ப­டு­வதும் மக்கள் ஆணையைப் பெற்­ற­வர்கள் சுக­போக வாழ்க்­கையை வாழ்­வதும் இலங்­கையின் அர­சியல் கலா­சா­ரத்தின் மோசமான நிலை என்­பதை மறு­த­லிக்க முடி­யா­துள்­ளது. இவ்­வா­றான அர­சியல் கலா­சா­ரமே கடந்த பல தசாப்த கால­மாக இந்­நாட்டில் நிலை கொண்­டுள்­ளது.

ஆட்­சியும் அதி­கா­ரமும்

பல்­லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­களும் அந்­நாட்டின் ஆட்­சி­யா­ளர்­க­ளால் ஒரே வித­மாகக் கவ­னிக்­கப்­பட வேண்டும் என்­பது மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். அந்த ­எ­திர்­பார்ப்பை நிறை­வேற்­று­வது அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­களின் பொறுப்­பாகும். ஆனால், கடந்த காலங்­களில் இந்­நாட்டை ஆண்ட ஆட்­சி­யா­ளர்­க­ளால் இந்­நாட்டின் ஓர் அங்­க­மா­க­வுள்ள வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் வேற்­று­மை­யற்ற மனோ­நி­லையில் அர­வ­ணைக்­கப்­ப­ட­வில்லை என்ற மனப்­ப­திவு இம்­மா­கா­ணங்­களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

ஏறக்­கு­றைய 60 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தமிழ் மக்­களின் உரி­மைகள் விட­யத்தில் ஆட்­சி­யா­ளர்கள் புறக்­க­ணிப்புச் செய்­த­போது அதற்­கெ­தி­ராக சாத்­வீகப் போராட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அப் ­போ­ராட்­டங்கள் தோல்­வி­ய­டைந்த நிலையில் தமிழ்த் தலை­மைகளால் மக்­கள்சார் உரி­மை­களைப் பெற்­றுத்­தர இயலாது என்ற நம்­பிக்­கை­யீனம் வலுப்­பெற்ற போது அந்­நம்­பிக்­கை­யீனம் ஆயு­தப்­போ­ராட்­ட­மாக மாற்­ற­ம­டைந்­தது. அவை பல்­வேறு அழி­வு­க­ளையும் பின்­ன­டை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யது வர­லா­றாகும்.

மக்­க­ளையும் மக்­களின் சொத்­துக்­க­ளையும் துவம்சம் செய்த 3 தசாப்த காலப் போர்ச்சூழலின் பங்­கா­ளி­க­ளாக தமிழ் மக்கள் காணப்­ப­டு­கின்­ற­ போ­திலும் தமிழ் பேசும் மற்­று­மொரு சமூ­க­மான முஸ்­லிம்­களும் பங்­கா­ளி­க­ளாக இல்­லா­விட்­டாலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். அந்­த­வ­கை­யில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்­திலும் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­வ­தையும் அறிக்­கை­கள் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தையும் சாத்­வீகப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­நாட்டில் இனப்­பி­ரச்­சி­னையும் இனப்­பு­ரிந்­து­ணர்­வின்­மையும் ஏற்­படக் கார­ண­மாக இருந்­தது ஆட்சி–அதி­கா­ரத்திலிருந்­த­வர்­க­ளே­யன்றி மக்களல்ல. அவர்­களின் ஆட்­சி­யையும் அதி­கா­ரத்­தையும் தாங்கள் பிரதி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூ­கத்தின் மத்­தியில் நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்­காக மக்கள் அர­சி­யல்­வா­தி­களால் ஏவி ­விடப்­பட்டு இனப்­பி­ரச்­சி­னையை எரிய வைத்­தார்கள், இன முரண்­பா­டு­களை உரு­வாக்­கி­னார்கள் என்­பதே நிதர்­ச­ன­மாகும்.

இருப்­பினும் சுதந்­திரமடைந்­தது முதல் 1989ஆம் ஆண்டு வரை­யான காலம் வரை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஓரிரு ஆத­ரவுக் கட்­சி­களின் அனு­ச­ர­ணை­யுடன் மாறி–மாறி இந்­நாட்டை ஆட்சி செய்­தாலும் இவ்­விரு கட்­சி­க­ளி­னதும் ஆளு­மையே ஆட்­சிக்குள் கையோங்­கி­யி­ருந்­தது. இருப்­பினும் இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் குறிப்­பாக 1989 களின் பிற்­பாடு பெரும்­பான்­மை­யினக் கட்­சி­களின் ஆட்சி என்ற நிலை மாற்­றப்­பட்­டது. சிறு­பான்மைக் கட்­சி­களின் ஆத­ர­வு­ட­னான அர­சாங்கம் என்ற நிலை உரு­வா­னது.

அந்த ஆட்­சி­ய­மைப்பே இந்த 8 ஆவது பாரா­ளு­மன்ற ஆட்­சி­யிலும் தொடர்­கி­றது. இருப்­பினும் 8 ஆவது பாரா­ளு­மன்ற ஆட்­சி­யா­னது கடந்த காலங்­களில் இடம்­பெற்ற கூட்­டாட்­சி­யிலும் பார்க்க ஒருபடி மேலே சென்று இந்­நாட்டின் இரு­பெரும் பெரும்­பான்மைக் கட்­சி­களின் கூட்­டி­ணைப்­பி­னாலும் இதர சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் உரு­வாக்­கப்­பட்­டது.

ஒன்­றுக்­கொன்று முரண்­பட்ட கொள்­கைகள் கொண்ட இரு பிர­தான கட்­சி­களும் 2015 இல் கூட்­டாட்சி அமைக்க ஒரு­மைப்­பட்டு ஆட்சி அமைத்­த­போ­திலும் தற்­போது இவ்­விரு கட்­சி­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள அதி­கார முரண்­பா­டுகள் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் எதிர்­பார்ப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்ளது என்­பது ெதளிவாகப் புலப்­ப­டு­வ­தாக சிறு­பான்­மை­யி­னங்­களைச் சேர்ந்த அர­சியல் ஆய்­வா­ளர்கள் குறிப்­பிட்டு வரு­கின்­றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் ேதர்தலி­னூ­டாக 57,68,090 (47.58%) வாக்­கு­களைப் பெற்ற மஹிந்த ராஜ­ப­க் ஷவைத் தோற்­க­டித்து 62,17,162 - (51.28%) வாக்­கு­களைப் பெற்று மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது எதிர்க்­கட்­சி­களின் சார்பில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றார். ேதர்தல் காலத்தில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களின் பிர­காரம் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்­ட­தோடு அமைச்­ச­ரவை நிய­ம­னமும் இடம்­பெற்று நல்­லாட்சி அர­சாங்கம் என்று அழைக்­கப்­படும் தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது என்­பவை அறிந்த விட­யங்­க­ளா­கும்.

புதிய அர­சாங்­கத்தின் மூலம் இந்­நாட்­டுக்கு நல்­லவை பல நடக்கும் என்ற எதிர்­பார்ப்பும் மக்கள் மத்­தியில் – குறிப்­பாக சிறு­பான்மை மக்கள் மத்­தியில் – உரு­வா­னது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி மாதத்தில் உரு­வாக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்­தால் முன்­வைக்­கப்­பட்ட 100 நாள் வேலைத்­திட்­டத்தில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இரத்துச் செய்தல், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை ஏற்­ப­டுத்­துதல், ேதர்தல் முறையில் மாற்றம் கொண்­டு­வ­ருதல், அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களைக் குறைத்தல், தகவல் அறியும் சட்டமூலத்தை நிறை­வேற்­றல் உள்­ளிட்ட பல முக்­கிய வாக்­கு­று­திகள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஆனால், தற்­போது அந்த 100 நாள் வேலைத்­திட்டம் தொடர்பில் கடந்த வாரம் ஜனா­தி­பதி தெரி­வித்த கருத்­துக்கள் அர­சியல் தரப்பில் பெரும் பேசு பொரு­ளாக மாறி­ய­துடன் கூட்­டாட்­சியின் பங்­காளிக் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்சிப் பிர­மு­கர்­க­ளால் அக்­க­ருத்­துக்கு பதி­ல­ளிக்­கப்­பட்டு வரும் நிலையில், இரு கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான அதி­கார முரண்­பாடுகள் பல்­வேறு தளங்­களில் அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கி­றது.

அதி­கார முரண்­பா­டு­களின் அதிர்­வுகள்

சிறு­பான்மைச் சமூ­கங்­களின் பங்­க­ளிப்­புடன் மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் உரு­வாக்­கப்­பட்ட இந்­நல்­லாட்சி அர­சாங்கம் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்றும் என்ற நம்­பிக்கை இவ்­விரு கட்சித் தலை­மை­க­ளாலும் பிர­மு­க­ர்­க­ளாலும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற கருத்­துக்­க­ளால் தோல்வி அைடந்து வரு­வ­தையே காணமுடி­கி­றது.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற மாது­லு­வாவே சோபித தேரரின் 76ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனா­தி­பதி தெரி­வித்த கருத்­துக்­களில் 100 நாள் வேலைத்­திட்­டமும் அத­னுள்­ள­டக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் இந்­நல்­லாட்சி மீதான நம்­பிக்­கையை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, "100 நாள் வேலைத்­திட்­டத்தை யார் தயா­ரித்­தது என்று எனக்குத் தெரி­யாது. எனினும், அது முட்­டாள்­த­ன­மான செய­லாகும் என அதனைத் தயா­ரித்­த­வர்­க­ளுக்கு நான் கூற விரும்­பு­கின்றேன்", எனக் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­னது அத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த விட­யங்­க­ளையும் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதைப் புரிந்துகொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

47 வருட கால அர­சி­யலில் கடந்த 3 வரு­டங்­களில் தான் இருந்­ததை விட கீழ் நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் மாது­லு­வாவே சோபித தேரரின் பிறந்த தின நிகழ்­வுக்கு தனக்கு எந்­த­வொரு அழைப்பும் கிடைக்­க­வில்­லை­யெ­னவும் இந் நிகழ்வு குறித்து எந்­த­வொரு தக­வலும் வழங்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இந்­நாட்டின் அனைத்து செயற்­பா­டு­களும் இப்­ப­டித்தான் நடக்­கின்­றன என்றும் இந்த அர­சாங்­கத்தின் கடந்த 3 வரு­டங்கள் தொடர்பில் இன்னும் பல தக­வல்­களைப் பெற வேண்­டு­மாயின் என்னை அணு­குங்கள் என்றும் குறிப்­பிட்­டுள்ள ஜனா­தி­பதி, சுதந்­திரக் கட்­சியை இணைத்துக் கொண்­ட­மை­யால் அர­சாங்கம் சீர­ழிந்­த­தாகப் பலர் கூறு­கின்­றனர். "நான் ஜனா­தி­பதியாகும் போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 47 ஆச­னங்கள் மாத்­தி­ரமே இருந்­தன. எனினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் 142 ஆச­னங்கள் இருந்­தன. அதில் 127 ேபர் சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்தவர்கள். எனினும், அப்­போது 47 ஆசனங்­களைக் கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்தேன்",என்றும் இன்னும் பல்­வேறு விட­யங்­களைத் தொட்­டுக்­காட்டி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேசி­யி­ருப்­பதை இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்குள் ஏற்­பட்­டுள்ள அதி­கார முரண்­பா­டு­களின் அதிர்­வு­க­ளா­கவே கொள்ள வேண்­டி­யுள்­ளது.

இவ்­வாறு அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கூறி­யுள்ள விமர்­ச­னங்­க­ளுக்கு யாரும் பதி­ல­ளிக்க வேண்டாம் என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கு வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­போ­திலும் "ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு எதி­ராக ெவளியேறி வந்த அனை­வ­ரு­டனும் இணைந்தே 100 நாள் திட்­டத்தைத் தயா­ரித்தோம். தற்­போது தெரி­யாது என்று கூறு­வதை ஏற்க முடி­யாது. இத் திட்­டத்தில் மக்கள் நலன்­சார்ந்த விட­யங்கள் பல உள்­ளன. ஆகவே இத்­திட்­டத்தைத் தயா­ரித்­த­மைக்­கான பொறுப்பை ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­றுக்­கொள்­கின்­றது", என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருப்­ப­தா­னது முரண்­பா­டு­க­ளின் பாரதூ­ரத்தைப் புலப்­ப­டுத்­து­கி­றது.

இந்­நல்­லாட்­சியின் பயணம் இன்னும் எவ்­வ­ளவு காலத்­துக்குத் தொட­ரு­மெ­னவும் நல்­லாட்­சி­யால் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் சமூகநலன்கள் தொடர்­பான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் இன்னும் எந்­த­ளவு தூரம் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற சந்­தே­கங்கள் தமிழ் பேசும் சமூ­கங்கள் மத்­தியில் உரு­வா­கி­யி­ருப்­பதை சிறு­பான்மைச் சமூ­கங்கள் மத்­தி­யி­லி­ருந்து ெவளிவரும் கருத்­துக்கள் மூலம் அறிய முடி­கி­றது. அத்­துடன் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான வரவு–செலவுத்திட்ட முன்­மொ­ழி­வுகள், அத­னூ­டாக அளிக்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­திகள் தொடர்­பிலும் மக்­களின் நம்­பிக்­கையில் கேள்­விக்­கு­றியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந் ­நல்­லாட்சி அர­சாங்­கத்தின் 2016ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்ட அறி­விப்­பில் வவு­னி­யாவில் பொரு­ளா­தார மையம், கொழும்பில் நிதி கேந்­திர மையம், யாழ்ப்­பா­ணத்தில் கைத்­தொழில் பூங்கா, 2016 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­ மாதத்தி­லி­ருந்து இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்டை, கட­னட்­டை­க­ளுக்­கான முத்­திரை தீர்வுக் குறைப்பு, கிராமசேவகர் பிரி­வுக்கு 1500 மில்­லியன் ரூபா, மலை­யக வீட­மைப்­புக்கு 1000 மில்­லியன் ரூபா, வரு­மானம் குறைந்­தோ­ருக்கு 1,00,000 வீடுகள், அரச ஊழி­யர்­க­ளுக்கு 1,50,000 வீடுகள், சமையல் எரி­வாயு உட்­பட 11 பொருட்­களின் விலைக்­கு­றைப்பு, கல்­வித்­து­றைக்­காக 90,000 மில்­லியன் ரூபா, உயர்­த­ரத்­துக்குப் பின்னர் தொழிற்­ப­யிற்சிக் கட்­டணம், பல்­க­லைக்கழக மாண­வர்­க­ளுக்கு மடிக்கணினி பெறக்கடன், புத்­தகம், சஞ்­சிகை இறக்­கு­மதி வரி நீக்கம், கட்­ட­டத்­து­றையில் பயிற்சி பெறு­வோ­ருக்கு 10,000 ரூபா போன்ற அறி­விப்­புக்கள் இடம்­பெற்­றி­ருந்­தன

அவ்­வாறு, 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்ட அறி­விப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் பொரு­ளா­தார ரீதி­யாகக் காணப்­படும் வித்­தி­யாசம் 2020ஆம் ஆண்­ட­ளவில் சீர் செய்­யப்­படும். மீன்­பி­டித்­துறை அபி­வி­ருத்­திக்­காக ஹம்­பாந்­தோட்டை, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு 1200 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு, கல்வி அபி­வி­ருத்­திக்­காக மேல­தி­க­மாக 17,840 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு, 1,75,000 உயர்­தர மாண­வர்கள் மற்றும் 28,000 ஆசி­ரி­யர்­க­ளுக்கும் டெப் கணினி வழங்­குதல், விசேட தேவை­யு­டைய சிறார்­க­ளுக்கு நாளாந்த கொடுப்­ப­ன­வாக 150 ரூபா அதி­க­ரிப்பு, சிறிய – நடுத்­தர தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு கடன் வழங்­கு­வ­தற்­காக 500 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு, சிறிய மற்றும் நடுத்­த­ர வர்க்­கத்­துக்கு 5 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கத் திட்டம், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 25,000 வீடுகள் நிர்­மா­ணிக்கத் திட்டம், வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு, 15 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அரச வீடு­களில் தங்­கி­யி­ருப்­போ­ருக்கு அந்த வீடு­களில் தொடர்ந்தும் வசிக்க வாய்ப்பு வழங்­கப்­படும் என முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு 2018, 2017 மற்றும் 2016 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்ட அறி­விப்­புக்­களில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள சமூக, பொரு­ளாதார அபி­வி­ருத்தி தொடர்­பான முன்­மொ­ழிவு­க­ளையும் வாக்­கு­று­தி­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் தற்­போது ஏற்­பட்டுள்ள அதி­கார முரண்­பா­டுகள் பல்­வேறு சல­ச­லப்­புக்­க­ளையும் எதிர்­மறைக் கருத்­துக்­க­ளையும் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்குள் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. இவை­களும் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களில் தோல்வி நிலையை உரு­வாக்­கி­யி­ருப்­ப­தா­கவே உணர முடி­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற போராட்ட வடி­வங்­க­ளி­னூ­டாக இவை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.எந்­த­ள­வுக்கு இம்­முன்­மொ­ழி­வுகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்ற கேள்­வி­களும் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளன. மூன்­றரை வருட காலத்தில் சிறு­பான்மைச் சமூகம் தொடர்பில் தேசிய அர­சாங்­கத்­தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் சிறு­பான்மை மக்களின் நம்­பிக்­கையில் உறு­தி­யற்ற நிலைப்­பாட்டைத் தோற்­று­வித்­தி­ருப்­ப­துடன் எதிர்­பார்ப்­புக்­களின் தோல்வி நிலை­யையும் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது என்­பதைச் சுட்­டிக்­காட்­டித்தான் ஆக வேண்டும்.

நல்­லாட்சியின் மூன்­றரை வரு­டங்களும் சிறு­பான்­மை­யி­னரும்

"நல்­லாட்சி அர­சாங்கம் பதவியேற்று மூன்­றரை வரு­டங்கள் கடந்தும் இவ்­வ­ர­சாங்கம் பத­வி­யேற்­றது முதல் இன்று வரை கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்­க­ளுக்கு கிடைத்த நன்­மைகள் என்ன? இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வெற்­றிக்கு கைகொ­டுத்த மலை­யக மக்­க­ளுக்கு கிடைத்த நன்­மைகள் என்ன?", என்ற கேள்­வி­களும் பர­வ­லாக எழுப்­பப்­ப­டு­கின்றன.

குறிப்­பாக, இந்­நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்கு தடை­யாகச் செயற்­படும் பெரும்­பான்மை மத­வாத கடும்­போக்­கா­ளர்­களின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதில் இந்­நல்­லாட்சி அர­சாங்கம் அலட்சிய­மாகச் செயற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதைக் கடந்த மார்ச் மாதம் அம்­பாறை மற்றும் கண்டிப் பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்கள் சிறு­பான்மை சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் பிர­மு­க­ர்கள் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்கள், தமிழ் – முஸ்லிம் மக்கள் ஆகியோர் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது மாத்­தி­ர­மின்றி சர்­வ­தேச ரீதி­யா­கவும் அர­சாங்­கத்­துக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அத்­தோடு, இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்­தால் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விட­யங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்­களின் நம்­பிக்­கையைப் பொறுத்­த­வ­ரையில் வீண­டிக்கச் செய்­யப்­பட்­ட­தாக மாத்­தி­ர­மின்றி திருப்­தி­ய­ளிக்­க­வில்லை என்றும் கூறப்­பட்டு வரு­கின்­றது.

இதே­நே­ரத்தில், வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் கையப்­ப­டுத்தி வைக்கப்பட்டி­ருந்த மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளமை, கிழக்கில் ஆளுநர் மாற்­றப்­பட்­டமை, தமிழ்­மொ­ழியில் தேசிய கீதம் இசைக்க வழி­விட்­டமை, மலை­ய­கத்தில் 7 ேபர்ச் காணி­யுடன் தனி வீடுகள் கட்­டித்­த­ரப்­படும் என்ற திட்டம் ஆங்­காங்கே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை போன்ற நட­வ­டிக்­கைகள் ஓர­ளவு சிறு­பான்மை மக்கள் மத்­தியில் நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்­பான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­ற­ போ­திலும், அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்­றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள அதி­கார இழு­பறி மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் பெரும்­பான்மைக் கட்­சி­களின் அங்­கத்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து வரும் கருத்­துக்கள் சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்கைக் கீற்றை ஒளியி­ழக்கச் செய்­துள்­ள­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

"கடந்த அர­சாங்­கத்தின் ஏதேச்­சா­தி­கா­ரப்­போக்கு, அதி­கார துஷ்­பி­ர­யோகம், சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள், ஊழல் – ­மோ­ச­டிகள், அநி­யாயச் செல­வுகள் உள்­ளிட்ட அநா­வ­சிய விட­யங்­க­ளுக்கு இந்­நல்­லாட்­சியின் மூன்­றரை வருட காலத்­துக்குள் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளதா?" என்ற கேள்வி எழுப்­பப்­படும் நிலையில், சிறு­பான்மை மக்­களின் மனங்­களை முழு­மை­யாக வெற்­றி­கொள்­வ­தற்­கான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் இதயசுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்ற சிறுபான்மை மக்­களின் உள வெளிப்­பா­ட்டையும் மறு­த­லிக்க முடி­யா­துள்­ளது. இந்­நி­லை­யில்தான் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குடும்­பத்­தி­லி­ருந்து சிறு­பான்மைச் சமூ­கங்கள் குறித்­தான நல்­லி­ணக்கக் கருத்­துக்­களும் உறுதிமொழி­களும் ெவளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

கோத்­த­பா­யவின் உறு­தி­மொழி

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே 2015இல் தமது தோல்­விக்குக் கார­ண­மென முன்னாள் ஜனா­தி­ப­தியின் தரப்பில் குறிப்­பிட்டு வந்த நிலையில் நல்­லாட்சி அர­சாங்க பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான அதி­கார முரண்­பாட்டைத் தொடர்ந்து சிறு­பான்மைச் சமூ­கங்கள் மற்றும் அதி­காரப்பகிர்வு குறித்­தான கருத்­துக்­களை முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் மற்றும் இதர தரப்­பி­ன­ரால் சிறு­பான்மைச் சமூ­கங்­களை நோக்கி முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அந்­த­கை­யில் வடக்கு – கிழக்கு மற்றும் தேசிய பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வை எமது தரப்­பினால் மட்­டுமே வழங்க முடியும். அதி­கா­ரப்­ப­கிர்வை வலி­யு­றுத்­து­கின்ற வாசு­தேவ ­நா­ண­யக்­கார, ராஜா கொல்­லுரே, திஸ்ஸ விதா­ரண போன்றோர் எமது தரப்­பி­லேயே இருக்­கின்­றனர் என்றும் ஐக்­கிய தேசியக் கட்சி அதி­காரப் பகிர்வை ஆத­ரிக்­க­வில்லை. ரணில் விக்­கி­ர­ம­சிங்க மட்­டுமே அதி­கா­ரப்­ப­கிர்வை விரும்­பி­னாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அதி­க­மானோர் அதி­கா­ரப்­ப­கிர்வை விரும்­ப­வில்லை. ஆதலால், ஐக்­கிய தேசியக் கட்­சியால் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வை வழங்க முடி­யாது என்றும் எமது தரப்­பினால் மாத்திரமே இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வைக் காண முடியும் என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்­ள­தையும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் எதிர்­கா­லத்தில் உரு­வாகும் ஆட்­சியில் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் எவ்­வித அச்­சமும் பீதி­யு­மின்றி சமயக் கட­மை­களை செவ்­வனே நிறை­வேற்­றவும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை எவ்­வித இடை­யூறு­மின்றி மேற்­கொள்­ளவும் நிம்­ம­தி­யாக வாழவும் கூடிய சிறந்­த­தொரு சூழ்­நி­லையை உருவாக்கித் தருவோம் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய முஸ்லிம்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமூகம் சார் நடவடிக்கைகள் தொடர்பிலும் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில், எதிர்பார்ப்புக்களில் தோல்வி கண்டுள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளின் எதிர்பார்ப்புக்களில் நம்பிக்கையீனத்தையும் தோல்வியையும் முஸ்லிம் சமூகம் கண்டுள்ளது. இதனால் தமிழ் மக்களுக்கான புதிய தலைமைத்துவம் வேண்டும் என்ற கோஷம் வடக்கில் எழுப்பப்படுவதையும் முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஒன்றுபட வேண்டும் அல்லது மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் கிழக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து எழுப்பப்படுவதை யும் சமகாலத்தில் காணக்கூடிய தாகவுள்ளது.

இந்நிலையில், இந்நல்லாட்சிக்குச் கைகோ ர்த்த வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் வகையில் சிறுபான்மைச் சமூகத்தின் நீண்டகாலத் தேவைகள் இந்நல்லாட்சியில் நிறைவேறும். இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும்.அதனூடாக சகல மக்களினதும் உரிமைகள் மதிக்கப்பட்டு நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழும் சூழல் ஏற்படும். பேரினவாத கடும்போக்காளர்களின் வெறுப்புப் பேச்சுகளும் அவர்களின் செயற் பாடுகளும் கடந்த ஆட்சியோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சட்டமும் நீதியும் சகலருக்கு சமம் என்ற தத்துவத்துக்கு இந்த நல்லாட்சியில் மதிப்பளிக்கப்படும் என்ற பல்வேறு நம்பிக்கையின் அடிப்படையிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலும் இந்நல்லாட்சி அரசாங்கம் உரு வாகுவதற்கு சிறுபான்மை சமூகத்தின் பெரும் பாலானோர் வாக்களித்தனர்.

இருந்தபோதிலும், இந்நல்லாட்சியின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையிலான அதிகார முரண்பாட்டின் அதிர்வுகள் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த நல்லாட்சியின் மீது சிறுபான்மை சமூகங் கள் வைத்திருந்த நம்பிக் கையையும் எதிர்பார்ப்பையும் தோல்விகளை நோக்கி நகரச் செய்வ தாகவே சிறுபான்மை சமூகங்களால் உணரப்படுகின்றது என்பதே யதார்த்தமாகவுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.