Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைமையகத்தில் இருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

அதையடுத்து. யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று யாழ். மாவட்டத்தில் அரை நாள் அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், யாழ். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் வணிக நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஏனைய பகுதிகளில் இயல்புநிலை காணப்பட்டது.

jaffna-demo.jpg

இதற்கிடையே, நேற்றைய பேரணியில் பங்கேற்கச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, பேரணியில் பங்கேற்ற சிலரால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசியல்வாதிகளை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் கோசம் எழுப்பியதை அடுத்து, அவர் வெளியேறிச் சென்றார்.

அதேவேளை, மாவை சேனாதிராசா பேரணியில் பங்கேற்றவர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டமைக்காக கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் வருத்தம் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/12/news/31347

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு போனாலும் தமிழ் அரசியல் வாதிகளை அவமானப்படுத்துகிறார்...என்ன நடக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

எங்கு போனாலும் தமிழ் அரசியல் வாதிகளை அவமானப்படுத்துகிறார்...என்ன நடக்கின்றது

ஆமை(மாவை) புகுந்த விசயங்கள் ஒண்டும் சரியாய் உருப்படுறேல்லை எண்டு சனத்துக்குத்தானே தெரியும்  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு எதிராக கோசமிட்ட ஈ.பி.டி.பி… இரண்டு பஸ்ஸில் ஆள் அனுப்பிய சுரேஷ்: இன்றைய போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள்!

June 11, 2018
IMG20180611113643-696x392.jpg

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பவர்களை தடுக்கும்படி கோரி இன்று கடற்றொழிலாளர் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட போராட்டம் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இதில் அணிகளாக பிரிந்து செயற்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சர்ச்சைகளிற்கும் குழப்பங்களிற்கும் குறைவின்றி இன்று நடந்த போராட்டத்தில் என்னவெல்லாம் நடந்தது?

1.மாவை சேனாதிராசாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஈ.பி.டி.பியினரே. சமாச தலைவராக உள்ள குழறி ராசன் என்பவர் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர். அவரது தலைமையில்தான் மாவைக்கு எதிர்ப்பு கோசம் எழுப்பப்பட்டது. குழறி ராசனை கட்சி கூட்டங்களிலேயே எழுந்து பேச டக்ளஸ் தேவானந்தா அனுமதிப்பதில்லை. அப்படி “அரசியல் முத்துக்களை“ உதிர்ப்பார்.

கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்திற்குள் வந்த மாவை சேனாதிராசா பேசிக் கொண்டிருந்துவிட்டு, வெளியில் வந்தபோதே ஈ.பி.டி.பி குழறி ராசன் அணி அவருக்கு எதிராக கோசமிட்டது. அதை சிலர் படம்பிடித்து, மாவை போராட்ட களத்திலிருந்து விரட்டப்பட்டதாக பகிர, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது.

2.மாவை அவமானப்படுத்தப்பட்டதற்கு, சம்மேளன பிரதிநிதிகள் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினர்.

3.சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உதவியாளர்களுடன் காரில் வந்தார். அந்த பகுதியில் நின்ற ஊடகவியலாளர்கள் மாவைக்கு நடந்த வரவேற்பை கூறி, அங்கே போக வேண்டாமென அவரை தடுத்து விட்டனர். இல்லையெனில், சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீடியோவும் வந்திருக்கும்! இந்த பேரணிக்கு இரண்டு பேரூந்துகளில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஏற்பாட்டில் ஆட்கள் கொண்டு வரப்பட்டிருந்தனர். கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் தவச்செல்வம் இப்படி உதவி கோரிவிட்டு, அரசியல்வாதிகளை வேண்டாமென எப்படி சொல்வதென சுரேஷின் உதவியாளர் ஒருவர் தமிழ்பக்க செய்தியாளரிடம் விசனம் தெரிவித்தார்.

4.யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு பேரணி சென்றபோது, மாவைக்கு எதிராக குரல் எழுப்பிய அணிதான் முன்னிலையில் சென்றது. அவர்கள் கொஞ்சமும் விவஸ்தையின்றி நடந்து கொண்டனர். “ஏ.டி இலஞ்சம் வாங்கி விட்டாயா?“? “ஏ.டியை உடனே மாற்றுங்கள்“ என கோசமெழுப்பத் தொடங்கினார்கள். போராட்டக்காரர்கள் வந்ததும், அவர்களை சந்திக்க வந்த பிரதி நீரியல்வள திணைக்கள அதிகாரி, ஏன் வில்லங்கம் என அலுவலகத்திற்குள் திரும்பி சென்றுவிட்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. போராட்டக்காரர்கள் வெளியில் நீண்டநேரம் காத்திருந்த பின்னரே, நிலைமை ஓரளவு அமைதியான பின்னரே வெளியில் வந்தார்.

5.வடமராட்சி கிழக்கில் வாடிகள் அமைத்து கடலட்டை பிடிக்க ஐந்து கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களிற்கும், பல தனியாட்களிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீரியல்வள திணைக்கள பிரதி பணிப்பாளர் ஜே.சுதாகரன் கூறினார்.

 

சட்டத்தின் பிரகாரம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் வழங்குகிறார். அந்த அனுமதியை கொண்டு கடலட்டை பிடிக்கலாம். ஆனால் வாடிகள் அமைப்பதற்கு அந்த பிரதேசத்தின் பிரதேச செயலருடைய ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். ஒப்புதல் பெறப்படவில்லையென்றால் அதனை பார்க்கவேண்டியது பிரதேச செயலர்தான். யாழ்.மாவட்டத்தில் 14 நிறுவனங்கள் கடலட்டை பிடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களால் எமது பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாம் காலத்திற்கு காலம் மத்திய கடற்றொழில் அமைச்சுக்கு எழுத்துமூலம் கடிதங்களை எழுதியிருப்பதுடன், எமது மீனவர்கள் தென்பகுதி மீனவர்களுக்கு எதிராக நடாத்தும் போராட்டங்கள், எதிர்ப்புக்கள் குறித்தும் நாங்கள் மத்திய கடற்றொழில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம் என்றார்.

6.ஆளுனர் அலுவலகத்தில் மகஜர் கொடுத்துவிட்டு வெளியில் வந்தபோது, கஜேந்திரனிற்கு அருகில் வந்த ஈ.பி.டி.பி அணியினர் அவருக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். அரசியல்வாதிகளிற்கு இங்கு என்ன வேலை, அரசியல்வாதிகளே வெளியேறுங்கள் என குரல் எழுப்பினர். இந்த சந்தர்ப்பத்தில் சில ஊடகவியலாளர்களும் அந்த பகுதியில் நின்றபோதும், யாரும் அதை செய்தியாக்கவோ, படமாக்கவோ இல்லை!

7.வரும் 13ம் திகதி- புதன்கிழமை கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை ஆளுனர் தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். கடலட்டை பிடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

http://www.pagetamil.com/8008/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.