Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ :

June 18, 2018

குளோபபல் தமிழ்ச் செய்தியாளர்

maylidi-_6151.jpg?resize=750%2C430யாழ்.மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல் தீ பிடித்துள்ளது. குறித்த கப்பல் பழுதடைந்த நிலையில் மயிலிட்டி கடலில் நங்கூரமிடப்பட்டு இருந்த கப்பல் நேற்றிரவு தீ பிடித்துள்ளது. அந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடற்படையினர் தீயினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://globaltamilnews.net/2018/84127/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை

by in செய்திகள்

காங்கேசன்துறைக்கு அருகேயுள்ள, மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால், தரித்து நிற்கும் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HIND-M என்ற பெயருடைய இந்தக் கப்பல் பழுதடைந்த நிலையில், மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சுமார் ஒரு ஆண்டாக கைவிடப்பட்டிருந்த இந்தக் கப்பலின் இயந்திரப் பகுதி, இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இது நாசேவேலையாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ள போதும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.

கப்பலில் பற்றிய தீயை அணைப்பதற்கு சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

myliddy-ship-fire-1.jpg

myliddy-ship-fire-2.jpgmyliddy-ship-fire-3.jpgயாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையிடம் உதவி கோரப்பட்ட போதும், அங்கிருந்த கருவிகள் அனைத்தும்,  சிறிலங்கா அதிபரின் வருகையை முன்னிட்டு கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டதால். உடனடியாக கப்பலில் உள்ள தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இயந்திரப் பகுதியில் பற்றிய தீ மோசமாக எரிந்து கொண்டிருப்பதாகவும், கப்பலின் எண்ணெய்த் தாங்கியிலும் தீ பரவத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கப்பல் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதாகவும், கூறப்படுகிறது.

தீப்பிடித்து எரியும் கப்பல், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சொந்தமானது என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.puthinappalakai.net/2018/06/18/news/31440

எனது நண்பன் ஒருவரை நேற்றுத்தான் கூட்டிச்சென்று இந்த கப்பலை காட்டினேன். படுபாவி அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே. 

 

tenor.gif?itemid=9682311

 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.