Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழ விரும்புகின்றனரா?

Featured Replies

வடக்கு, கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழ விரும்புகின்றனரா?

City-Page-03-BlackGMGPage1Image0010-e8244a56dd1005b14914b0186047f616ef5deff8.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

உட­ன­டி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்­கிறார் ஸ்ரீ­தரன் எம்.பி.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையும் தமி­ழர்­க­ளையும் பயன்­ப­டுத்தி இந்த அர­சாங்­கமும் தமது இருப்­பினை தக்­க­வைக்கும் சுய­நல போக்­கினை மட்­டுமே கையாண்டு வரு­கின்­றது. நாம் கேட்கும் தீர்­வுகள் குறித்து சிந்­திக்க அர­சாங்கம் தய­ாராக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் தமி­ழர்கள் போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வாகும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் தெரி­வித்தார்.  

வடக்கு கிழக்கு மக்கள் தெற்கின் சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து ஒரே நாட்­டுக்குள் வாழ விரும்­பு­கின்­ற­னரா என்­றதை அறிய உட­ன­டி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்­றினை நடத்­துங்கள் எனவும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற 1990 சுவ­செ­ரிய மன்றம் சட்­ட­மூல இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

  அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இன்று நாடு முழு­வதும் தபால் சங்க ஊழி­யர்கள் வேலை­நி­றுத்த போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நாட்டில் பல்­வே­று­பட்ட தபால் நிலை­யங்­க­ளுக்­கூ­டாக உத­வி­களை பெற்­றுக்­கொள்ளும் மக்கள் இன்று அந்த உத­வி­களை பெற முடி­யாது தவித்­துக்­கொண்­டுள்­ளனர். இன்­றுடன் 12 நாட்­களை கடந்தும் இந்த போராட்­டத்தை நடத்தி வரு­கின்­றனர். இதனால் மாதாந்த உதவிப் பணங்­களை பெரும் மக்கள் அதனை பெற்­றுக்­கொள்ள முடி­யாது தவித்து நிற்­கின்­றனர். இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்கு ஒரு முடிவை எட்ட முடி­யாது இருப்­பது பார­தூ­ர­மான விட­ய­மாகும். வடக்கு கிழக்கு மக்கள் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். அவர்கள் இந்த மாதாந்த உத­வி­களை பெற்றே வாழ்ந்து வரு­கின்­றனர். ஆகவே அதனைக் கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதி­யாக ஒரு போராட்டம் நடை­பெ­று­கின்­றது என்றால் அதனை தீர்வு காண அர­சாங்கம் முன்­வந்­தி­ருக்க வேண்டும். ஆனால் அதனை கையாள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே அத்­தி­யா­வ­சி­ய­மான இந்த பிரச்­சி­னைக்கு உடன் தீர்­வினை காண வேண்டும்.

மேலும் இந்த நாட்டில் மக்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. எனினும் எமது மக்­க­ளுக்­கான மிகப்­பெ­ரிய பிரச்­சினை காணாமால் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சி­னை­யாகும். இன்று கிட்­டத்­தட்ட 500 நாட்­களை எட்­ட­வுள்ள இந்த போராட்டம் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளது. வடக்கு கிழக்கில் மக்கள் தொடர்ச்­சி­யாக இந்த போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் . இந்த நாட்டில் இடம்­பெற்ற யுத்­தத்தின் மூல­மாக பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், காணமால் போயுள்­ளனர். ஆனால் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண இந்த அர­சாங்கம் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. 500 நாட்கள் இவ்­வாறு போரா­டு­வது என்­பது சாதா­ராண விடயம் அல்ல. இது குறித்து சர்­வ­தேச மன்­னிப்பு சபையும் கூட இலங்­கையின் கடப்­பா­டுகள் குறித்து விமர்­சித்­தி­ருந்­தது. இலங்கை பொறுப்­புக்­களை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை என குறிப்­பிட்­டுள்­ளது. நேர்­மை­யான ஒரு பாதையில் அர­சாங்கம் பய­ணிக்­க­வில்லை என்­பதை அர­சாங்­கமும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை என ஜனா­தி­பதி கூறு­கின்றார், பிர­தமர் வேறு கருத்­தினை கூறு­கின்றார், அமைச்­சர்கள் வேறு ஒரு கருத்­தினை கூறு­கின்­றனர். ஆனால் இழந்­த­வர்கள் இன்றும் அக­தி­க­ளாக அவ­திப்­பட்டு வாழ்­கின்­றனர். தமது போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அதேபோல் காணாமல் ஆக்­கப்­பட்டோர் குறித்து 351 நபர்­களின் விப­ரங்­களை காணாமால் போனோர் அமைப்பு வெளி­யிட்­டுள்­ளது. பல்­வேறு ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அவர்கள் இந்த ஆதா­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளனர். அதேபோல் விடு­தலைப் புலி­களின் சில முக்­கிய உறுப்­பி­னர்கள் குடும்­பத்­துடன் சர­ண­டைந்த புகைப்­ப­டங்கள் இன்று வெளி­வந்­துள்­ளன. ஆனால் இவை எது­வுமே நடை­பெ­றாத வகையில் தான் நகர்­கின்­றது. இலங்­கையில் தமிழர் இனம் மிகக் கொடூ­ர­மான வகையில் கொன்­றொ­ழிக்­க­பட்­டனர் . ஜனா­தி­பதி கிளி­நொச்­சியில் நான்­கா­யிரம் குழந்­தை­க­ளுக்கு விழா எடுக்க வந்தார், ஆனால் நான்கு வயது குழந்­தையின் மன­நி­லையை புரிந்­து­கொள்ள முடி­யாத ஒரு தலை­வ­ராக உள்ளார். ஆகவே இந்த நாட்டில் நீதி நியாயம் எவ்­வாறு கிடைக்­கப்­பெ­று­கின்­றது, யாருக்கு நீதி கிடைக்­கப்­போ­கின்­றது, நாட்டின் உண்­மை­யான பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுக்கும் தமிழ் தேசி­யத்தின் அடை­யா­ளத்தை அழிக்கும் நட­வ­டிக்­கையே இடம்­பெற்று வரு­கின்­றது. திட்­ட­மிட்ட இன அழிப்பு, திட்­ட­மிட்ட நில அப­க­ரிப்பு என்ற இரண்­டுமே இடம்­பெற்று வரு­கின்­றன.

முன்னாள் ஆட்­சியில் கோத்­த­பாய ராஜபக் ஷவின் ஊடாக சிங்­கள ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன, எனினும் சர்­வே­தேச அழுத்தம் கார­ண­மாக அது தடுக்­கப்­பட்­டது. இன்று இந்த கூட்­டாட்­சியில் மீண்டும் சிங்­கள குடி­யேற்­றங்கள் கட்­சி­த­மாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. தமிழர் இன பரம்­பலை திட்­ட­மிட்டு அழிக்­கின்­றனர். அம்­பாறை, வவு­னியா , மன்னார், கிளி­நொச்சி என அனைத்து பகு­தி­யிலும் மாற்று இனக் குடி­யேற்­றங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன பிரச்­சி­னைக்­கான தீர்வு ஒன்றை அடைய அர­சாங்­கத்­துக்கு பல தட­வைகள் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. ஆனால் அர­சாங்கம் எங்­களை ஏமா­ளி­க­ளாக மாற்றி அர­சாங்­கத்தின் சுய­நல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அர­சியல் அமைப்பு என்ற பேச்­சுக்கே இன்று இட­மில்லை. ஆகவே இவ்­வா­றான நிலையில் தீர்வு எங்­கி­ருந்து வரப்­போ­கின்­றது. தமி­ழர்­களை பயன்­ப­டுத்தி அர­சாங்கம் தங்­களை தக்­க­வைத்துக் கொள்­கின்­றது.

அன்றும் தமிழ் மக்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டனர், இன்று எஞ்­சி­யுள்ள மக்­க­ளையும் கொடு­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வெறு­மனே சட்­டங்­களை கொண்­டு­வ­ரு­வதன் மூலமோ, வாக்­கு­று­தி­களை கொடுத்தோ தீர்­வுகள் கிடைக்­கப்­போ­வ­தில்லை. தீர்­வு­களை உட­ன­டி­யாக பெற்­றுத்­தர வேண்டும். தமி­ழர்கள் உறு­தி­யான தீர்­வையே எதிர்­பார்க்­கின்றார். அவ்­வா­றான ஒரு தீர்வு கிடைக்­க­வில்லை என்றால் மீண்டும் தமிழர் தமது உரி­மைக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வாகும். காணி­களை அப­க­ரிக்­கின்­றனர், இரா­ணு­வங்­களை குவிக்­கின்­றனர். முழுமையாக இராணுவ ஆட்சியை வடக்கில் நிகழ்த்துகின்றனர். காணமால் ஆக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றனர். நீதி நியாயம் நிலைநாட்டப்படவேண்டும் என்றால் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றினை எட்ட வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தெற்கில் வாழும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியுமா என்பதை ஆராய பகிரங்க வாக்கெடுப்பிற்கு அரசாங்கம் தயாராக வேண்டும். உடனடியாக பொதுசன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்த வேண்டும். யுத்தத்தால் பதிக்கப்பட்ட மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியுமா இல்லையா என்பதை பொதுசன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-3

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு  முன்  பேசப்பட வேண்டிய பேச்சை இப்போ பேசுகின்றார் சிறிதரன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.