Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

Featured Replies

ஞானசார தேரர் பிணையில் விடுதலை 

 

 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

galao.jpg

கலகொட அத்தே ஞானசார தேரர், பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ,  அவரது வெளிநாட்டு செல்வதற்கும் நீதிமன்றத் தடை விதித்துள்ளது.

ஞானசார தேரருக்கு  பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு ஒரே தடவையில் 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடு செலுத்துவதற்கும் தவறினால் மேலும் மூன்று மாத சிறைத் தண்டனையும், 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு கடந்த 14 திகதி ஹோமாகம பிரதான நீதவான் உதேஷ் ரணசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 

இதேவேளை, ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை  6 மாதங்களில் நிறைவடையும் வகையில் அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35394

2 hours ago, நவீனன் said:

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2 hours ago, நவீனன் said:

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறையில் சிங்கள-பௌத்த குற்றவாளிகளுக்கு  நியாயமான தண்டனைகள் வழக்கப்படாது என்பத்தற்கு இதுவும் ஒரு சான்று.

 

  • தொடங்கியவர்

ஞானசார தேரருக்கு பிணை: வெளி­நாடு செல்­வ­தற்கு தடை; மேன்முறை­யீட்டு மனுவை ஆராய்ந்து ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ரவு

2-6473e40fa1923e756a8d2fb66b16a16a80e977d9.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் வைத்து திட்டி அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் ஒரு வருட கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு அதனை 6 மாதத்தில் அனு­ப­விக்க உத்­த­ர­வி­டப்­பட்ட பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் பிணையில் நேற்று விடு­விக்­கப்­பட்டார்.

தனக்கு கொடுக்­கப்­பட்ட தண்­ட­னைக்கு எதி­ராக அவர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள மேன் முறை­யீட்டு மனு மீது நேற்று இரண்டாம் தடை­வை­யாக விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போதே, அவரை பிணையில் செல்ல ஹோமா­கம நீதிவான் உதேஷ் ரண­துங்க அனு­மதி வழங்­கினார். அதன்­படி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்ல ஞான­சார தேர­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­துடன், அவ­ரது வெளி­நாட்டு பய­ணத்தை நீதி­மன்றம் தடை செய்து அவ­ரது கடவுச் சீட்­டையும் முடக்­கி­யது. அது தொடர்பில் நீதிவான் ஊடாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ள­ருக்கு விஷே­ட­மாக அறி­விக்­கப்­பட்­டது. 

கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை, ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் வைத்து திட்டி அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு ஒரு வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்த ஹோமா­கம பிர­தான நீதிவான் உதேஷ் ரண­துங்க, அத்­தண்­ட­னையை 6 மாதங்­களில் அனு­ப­விக்க கடந்த 14 ஆம் திகதி உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் 3000 ரூபா அப­ரா­தமும், அச்­சு­றுத்­தப்­பட்ட சந்­தியா எக்­னெ­லி­கொ­ட­வுக்கு 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடு செலுத்­தவும் உத்­த­ர­விட்ட நீதிவான், அப­ராதம் செலுத்­தாமல் இருப்பின் மேலும் மூன்று மாத கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் எனவும், நட்ட ஈடு வழங்­கப்­ப­டாது விடின் அத்­தொ­கையை அப­ரா­த­மாக அற­வி­டவும் அப்­படி அப­ரா­த­மா­கவும் அத்­தொ­கையை அவர் செலுத்த தவ­றினால் அது தொடர்­பிலும் மூன்று மாத சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க நேரிடும் எனவும் எச்­ச­ரித்தார்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற எக்­னெ­லி­கொட கடத்தல், காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் பின்னர் நீதி­மன்றில் வைத்து எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தி­யாவை திட்டி அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் ஹோமா­கம பொலி­ஸாரால் இந்த வழக்கு தண்­டனை சட்டக் கோவையின் 346 மற்றும் 486 ஆம் அத்­தி­யா­யங்­க­ளுக்கு அமைய தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 இந் நிலையில் வழக்கு விசா­ர­ணை­களில் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான இரு குற்­றச்­ச­ட­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்த நீதிவான் ஞான­சார தேரரை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்து தண்­டனை விதித்தார்.

 இந்த நிலை­யி­லேயே தண்­ட­னைக்கு எதி­ராக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் அன்­றைய தினமே மேன் முறை­யீட்டு மனுவை உரிய விதி­களின் பிர­காரம் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­தனர். இந்த மனு தொடர்பில் கடந்த 19ஆம் திகதி விசா­ரணை இடம்­பெற்­ற­போதும் சட்ட மா அதிபர் சார்பில் எவரும் ஆஜ­ரா­காத நிலையில், அந்த மேன் முறை­யீட்டு மனுவை ஆராய்­வது நேற்­றைய தினம் வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது.

இதன் பின்­ன­ணி­ய­லேயே நேற்று வரை ஞான­சார தேரர் தொடர்ந்து சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

 இந் நிலை­யி­லேயே ஞான­சார தேரரின் மேன் முறை­யீட்டு மனு நேற்று பிர்­பகல் 2.00 மணிக்கு மீள ஆரா­யப்­பட்­டது. இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வரு­வ­தை­யொட்டி, ஹோமா­கம நீதி­மன்ற வளா­கத்தின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஹோமா­கம உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் இந்த பாது­காப்பு பணி­க­ளுக்­காக ஹோமா­கம மற்றும் மேலும் மூன்று பொலிஸ் நிலை­யத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் கலகத் தடுப்புப் பொலி­ஸாரும் வர­வ­ழைக்­கப்­பட்டு தயார் நிலையில் வைக்­கப்ப்ட்­டி­ருந்­தனர். இத­னை­விட தண்ணீர் பீய்ச்­சி­ய­டிக்கும் இரு வான­கங்­களும் அப்­ப­கு­திக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் வீதித் தடை­களை ஏற்­ப­டுத்­தவும் ஆயத்­தங்கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

நீதி­மன்­றத்­துக்குள் நுழையும் அனை­வரும் பூரண சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின்­ன­ரேயே அனு­ம­திக்­கப்­பட்­டனர்.  வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்க நீதிவான் அனு­ம­தித்தார். 

 அழைத்து வரப்­பட்ட ஞான­சார தேரர்

இந் நிலையில் நீதி­வானின் அனு­மதி தொலை நகல் ஊடாக வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு ஹோமா­கம நீதி­மன்றின் பதி­வாளர் ஊடாக அறி­விக்­கப்­ப­டவே, பிணை நிபந்­த­னை­களில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­காக உட­ன­டி­யாக ஞான­சார தேரர் வெலிக்­கடை சிறையில் இருந்து ஹோமா­கம நீதி­மன்­றுக்கு சிறைச்­சாலை வேனில் அழைத்து வரப்­பட்டார். 

 அதன்­பின்னர் அங்கு அவர் பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்த பின்னர், ஒரு வார கால கடூழிய சிறை வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்டு, அங்கிருந்த நூற்றுக்கணக்கான தேரர்களுடன் நீதிமன்றிலிருந்து வெளியேறிச் சென்றார்.

 பிணை கிடைத்த பின்னர் உடனடியாக தேரர்களால் ஞானசார தேரர், அருகில் உள்ள விகாரை ஒன்றுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வழிபாடுகள் இடம்பெற்றன.

  தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரரின் மேன் முறையீடு தொடர்பில் விரைவில் மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-23#page-1

 

 

 

பிணையில் விடுவிக்கப்பட்ட ஞான­சார தேர­ரை- ஊர்வலமாக அழைத்துச் சென்ற பிக்குகள்!!

1371-ganasara-thero-released-on-bail-aft
 
 

 

 

கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லா­ளர் பிர­கீத் எக்­ன­லி­கொ­ட­வின் மனைவி சந்­தியா எக்­ன­லி­கொ­டவை, ஹோமா­கம நீதி­வான் நீதி­மன்­றில் வைத்து அச்­சு­றுத்­தி­யமை தொடர்­பில் ஓராண்டு கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு அதனை 6 மாதத் தில் அனு­ப­விக்க உத்­த­ர­வி­டப்­பட்ட பொது பல சேனா அமைப்­பின் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், தண்­டனை விதிக்­கப்­பட்டு ஒரு வாரத்­தி­னுள்­ளேயே நேற்­றுப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

ஹோமா­கம நீதி­வான் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­துள்ள மேன் முறை­யீட்டு மனு மீது நேற்று இரண்­டாம் தட­வை­யாக விசா­ர­ணை­கள் இடம்­பெற்­ற­போது அவ­ரைப் பிணை­யில் செல்ல ஹோமா­கம நீதி­வான் உதேஷ் ரண­துங்க அனு­மதி வழங்­கி­னார்.

5 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான இரு ஆள் பிணை­க­ளில் செல்ல ஞான­சார தேர­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அவ­ரது வெளி­நாட்­டுப் பய­ணங்­களை நீதி­மன்­றம் தடை செய்து அவ­ரது கட­வுச் சீட்­டை­யும் முடக்­கி­யது.

 

ஞான­சார தேர­ருக்கு கடந்த 14ஆம் திகதி கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அவ­ரது சட்­டத்­த­ர­ணி­கள் அன்றே மேன் முறை­யீட்டு மனுவை ஹோமா­கம நீதி­வான் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­த­னர். இந்த மனு தொடர்­பில் கடந்த 19ஆம் திகதி விசா­ரணை இடம்­பெற்­ற­போ­தும் சட்ட மா அதி­பர் சார்­பில் எவ­ரும் முன்­னி­லை­யா­க­வில்லை. அந்த மேன் முறை­யீட்டு மனுவை ஆராய்­வது நேற்­று­வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது.

நேற்று வரை ஞான­சார தேரர் தொடர்ந்து சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. ஞான­சார தேர­ரின் மேன் முறை­யீட்டு மனு நேற்று பிர்­ப­கல் 2 மணிக்கு மீள ஆரா­யப்­பட்­டது. வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­தால் ஹோமா­கம நீதி­மன்ற வளா­கத்­தின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்க நீதி­வான் அனு­ம­தித்­தார்.

வந்­தார் ஞான­சா­ரர்
நீதி­வா­னின் அனு­மதி தொலை நகல் ஊடாக வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு ஹோமா­கம நீதி­மன்­றின் பதி­வா­ளர் ஊடாக அறி­விக்­கப்­பட்­டது. பிணை நிபந்­த­னை­க­ளில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­காக உட­ன­டி­யாக ஞான­சார தேரர் வெலிக்­கடை சிறை­யில் இருந்து ஹோமா­கம நீதி­மன்­றுக்கு சிறைச்­சாலை அழைத்து வரப்­பட்­டார்.

அங்கு பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்த பின்­னர், ஒரு வார கால கடூ­ழிய சிறை வாழ்க்­கைக்கு விடை­கொ­டுத்­து­விட்டு, அங்­கி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான தேரர்­க­ளு­டன் நீதி­மன்­றி­லி­ருந்து வெளி­யே­றிச் சென்­றார்.

பிணை கிடைத்த பின்­னர் உட­ன­டி­யாக தேரர்­க­ளால் ஞான­சார தேரர், அரு­கில் உள்ள விகாரை ஒன்­றுக்கு ஊர்­வ­ல­மாக அழைத்­துச் செல்­லப்­பட்­டார். அங்கு வழி­பா­டு­கள் இடம்­பெற்­றன. தற்­போது பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கும் ஞான­சார தேர­ரின் மேன் முறை­யீடு தொடர்­பில் விரை­வில் மேல் நீதி­மன்­றில் விசா­ர­ணை­கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

03-2-1-300x261.jpg

http://newuthayan.com/story/09/பிணையில்-விடுவிக்கப்பட்ட-ஞான­சார-தேர­ரை-ஊர்வலமாக-அழைத்துச்-சென்ற-பிக்குகள்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.