Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்: யாழ்.மாநகரசபை ஊழலில் ஈ.பி.டி.பியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா தவராசா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்: யாழ்.மாநகரசபை ஊழலில் ஈ.பி.டி.பியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா தவராசா?

June 22, 2018
23167799_1960035277577412_13056041127277

யாழ் மாநகரசபையின் முன்னாள் நிர்வாகத்தின் ஊழல் மோசடிகளை பாதுகாக்கும் முயற்சியில் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை குழுவிலுள்ள மற்றைய உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

ஈ.பி.டி.பியின் முன்னைய நிர்வாகத்தில் யாழ் மாநகரசபை இருந்தபோது பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு இருந்தது. அப்போதைய முதல்வர் யோகேஸ்வரி பற்குணநாதன் உள்ளிட்டவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள்.

 

இந்தநிலையில், மாநாகரசபை ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க முதலமைச்சரால் இரண்டு விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வசந்தசேனன், அரியரட்ணம் தலைமையிலான அந்த குழுவினர் விசாரணைகளை நடத்தி விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்தனர்.

அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை செய்ய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்தார். அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் விஜயலக்சுமி, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரை கொண்ட இந்த குழு கடந்த சில நாட்களில், சில அமர்வுகளை நடத்தியிருந்தது.

இந்த அமர்வுகளில், முன்னைய ஊழல்களை அப்போதைய ஆணையாளர் யோகேஸ்வரி பற்குணநாதன் மீது சுமத்த முடியாது, அந்த சபையே பொறுப்பேற்க வேண்டுமென சி.தவராசா வலியுறுத்தி வருகிறார். இந்த குழுவில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் தமது விசனத்தை தமிழ்பக்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளனர். இது முன்னைய ஊழல் மோசடியாளர்களை காப்பாற்றும் முயற்சியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழ்பக்கம் தேடல்களை மேற்கொண்டபோது- ஈ.பி.டி.பியின் இரண்டாம் நிலை தலைவர்கள் மாநகரசபை ஊழல் குற்றச்சாட்டு அறிக்கை தொடர்பான ற்போதைய நிலைப்பாடு குறித்து, முதலமைச்சர் நியமித்த தற்போதைய குழு உறுப்பினர்களுடன் பேசியதை உறுதிசெய்துள்ளது. அதில் தவராசாவுடம் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

மாநகரசபை ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் ஈ.பி.டி.பி, பகிரங்கமாக அது குறித்த சவடால் கதைகளை பேசி வருகிறது. அதேநேரம், விசாரணைக்குழு அறிக்கையை ஆராயும் உறுப்பினர்களை இரகசியமாக தொடர்பு கொண்டு, சமரச முயற்சிக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்த குழுவில் அரச உத்தியோகத்தர்களும் இடம்பெற்றுள்ளதால், அவர்கள் அரசியல் தலையீட்டிற்கு அடி பணிந்து விடும் அபாயமும் உள்ளது.

மாகாணசபைக்குள்ளும் வெளியிலும் எல்லா விடயத்திலும் நீதி நியாயம் பேசும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க முயற்சிப்பது மிக மோசமான நடவடிக்கையாகும்.

வடக்கில் ஊழல் மோசடிகளிற்கு எதிராக அழுத்தம் கொடுக்க “முன்னோக்கி நகர்வோம்“ என்ற அமைப்பை எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/9206/

  • கருத்துக்கள உறவுகள்

தவ(றான)ராசா  ஏற்கெனவே.... ஈ.பி.டி.பீயில் இருந்த ஆள் தானே... ✔️
இப்ப.. என்னத்தை, கண்டு பிடித்து விட்டாராம்? ?
லண்டனிலை   இருந்த,   இந்த ஆளை... ஊருக்கு  "எலக்சன்"  ?️ கேட்க கூப்பிட்டு.... 
நாற  வைத்தது,  டக்ளஸ்  தேவானந்தா தான்.  ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.